Wednesday, February 15, 2006

நினைவுகள் - ராஜம் மேன்சன்




கார்த்திக்
ராஜம் மேன்சன்,
ரூம் # 22,
14, HMA தெரு,
திருஅல்லிகேனி,
சென்னை 5.

உலகத்தில் எந்த மூலைக்குப் போனாலும், எத்தனை வருடங்கள் ஆனாலும் என்னால் மறக்க முடியாத முகவரி.எனக்கு யதார்த்த வாழ்க்கையின் அத்தனை முகங்களையும் புரியவைத்த / காட்டிய முகவரி...இது சத்தியமா என்னோட சுயபுரணம் மட்டுமே. வேலை வெட்டி இல்லாதவர்கள் தொடரவும். போர் அடித்தால் மன்னிக்கவும்.

##################

அது ஒரு மிகக் குறுகிய சந்து.ஆனால் அதிலும் அசால்ட்ட கார் ஓட்டிகொன்டு வருவான் என்னோட மேன்சன்மேட் ராஜாமணி.[அவனை பத்தி பின்னால்]. அந்த தெருவில் பழைய & புதிய வீடுகள் எல்லாம் சமவிகித்தில் இருக்கும்,ஆனால் எல்லாம் மிகவும் சிறிய வீடுகள். அந்த சிறிய வீட்டில் எப்படி இத்தனை பேர் வசிக்கமுடியும் என்ற எனது ஆரம்ப கால ஆச்சரியம் விரைவில் காணமல் போனது. காலை நேரத்தில் மேன்சனுக்கு தண்ணி கொண்டு வரும் லாரி & மேன்சனுக்கு பின்னால் இருக்கும் வாழகாய் மண்டிக்கு லோடு கொண்டு வரும் லாரி மதிய, மாலை & இரவு நேரத்தில் விளக்கு கம்ப மண்ணின் மைத்தர்கள் என HMA தெரு களை கட்டியிருக்கும்.
###############
நான் வந்த புதிதில் இதை கவனிக்கவில்லை. அப்போ எல்லாம் என்னோட உலகம் எல்லாம் வேர.[JAVA & US]. ஆபிஸ், எதோ ஒரு மெஸ், Java Complete Reference புத்தகம். எப்படியோ கம்பெனியில் H1B விசா வேறு.[கால் தரையிலே இல்லை எனலாம்]. ஒரு சுபயோக சுபதினத்தில் கிளம்பவேன்டியதுதான் பாக்கி. கம்பெனிகாரன் வச்சான் ஒரு ஆப்பு. US போக இப்போதைக்கு முடியாதுன்னு, சரின்னு மனசை தேத்திக்கிட்டு இருந்தேன். என்னோட நன்பர்கள்கிட்ட, 2001ல கண்டிப்ப இந்த கார்த்தி US-ல இருப்பான்டானு சவால் விட்டுருதேன் பின்னால நடக்கபோற மேட்டர் தெரியாம. அந்த சமயத்தில் என்னொட நினைவுக்கு வந்த வசனம் - தன்னோட விடாமுயர்ச்சி & தன்னம்பிக்கையில் மனம் தளராத விக்ரமாதித்தன் மறுபடியும்... நான் அவனோட குரு இந்த மேட்டர்லனு, இதை என்னோட சகாகள் கிட்ட முதல் தடவை சொன்னேன். இப்பவும் எந்த மேட்டர்ல ஆப்பு ஆனாலும் எனக்குள் சொல்லும் வசனம் இதுதான். US போகவில்லை என்ட்றதும் வீட்டில் & ரிலேடிவ்ஸ் கிட்ட இருந்த 1 % மருவதியும் போச்.[இல்லைனாலும் மருவதி எல்லாம் இல்லை] & வந்தது இலவச ஆலோசனை ரம்பம். இந்த அடியில் இருந்து நான் தெரித்த பாடம் பல.

அதுக்கு அப்புரம் 01ல இருந்த கொஞ்ச ஆசையும் சுத்தமா நிரவிவிட்டது 911 சம்பவம். பின்னலயே வந்தது சூப்பர் ஆப்பு கம்பெனி மூடல் வைபவம். நம்மளை கண்டுகிரதுக்கு சுத்தமா ஆள் இல்லை. வேலை ஒன்னும் கிடைக்கவில்லை. எப்படியோ 2 மாசம் ஆச்சி. வந்தது சவுதிஏர்லைன்ஸ்ல வேலை Ad. எப்படியோ Aptitude, Attitude & Altitude இன்னும் இருக்குர எல்லா 'tude' ப்ரசஸ் எல்லாம் clear பண்ணி நம்ம technical ஏரியாவுல என்ட்ரிய குடுத்து அவன் கேட்ட கேள்விக்கு எல்லாம் என்னமோ Lawrence J. Ellison (Oracle corporation) ரேஞ்ச்க்கு பதில் சொல்லி, கடைசி ஆளை போய் பாத்த அவனும் அவன் பங்க்கு 10- 15 கேள்விய கேட்டு ' your profile is very impressive but your primary skillset is java not oracle.At this time we are looking for Oracle professionals.you would be given first preference for future jobs.thanks for your time ' னு சொல்லிடான்.
அடுத்த மாதம் அப்படி இப்படினு ஒரு இன்டர்வியுல எல்லாம் ஓகே ஆகி கடைசில ஜெர்மன் தெரியாத காரனத்தால் ரிஜெட்டு ஆனது.சரின்னு உக்கந்து யோசிச்சதுல வந்துச்சி யோசனை.ஜெர்மன் படிச்சி அடுத்த வேலைய வங்கிட்டுதான்டா அடுத்த பேச்சுனு சொல்லிட்டு விசாரிச்சி Maxmuller Bhavan[Goethe Institut]ல சேந்தாச்சு. நடுவால [ நம்ம சகா அவனும் மதுரைதான்] கமலகண்ணண் அவனோட அண்ணண் பாலசுப்ரமணியம் வேர இதுல கூட்டாளி ஆகிடாங்க. அப்புரம் மேன்சன் எல்லாம் ஜெர்மன் எலக்கியம்தான். மேன்சன்னே ரணகளம் ஆகிடுச்சி. ஆனா வேலை என்னமோ வரலை.
இப்படி போய்கிட்டு இருக்குரப்ப நமக்கு புது சகா வேர கிடச்சுடான். அவந்தான் Mr. ஏழ்மை. எப்படி வரம இருக்கும். அத பத்தி எல்லாம் கவலை படுற நிலைமைல இல்ல. கோர்ஸ் முடிச்ச நேரத்துல என்னோட சகா சேவியர்[ரூம் 29] காண்டக்டுல ஒரு ஜெர்மன் இன்டெர்வியு சிக்கிடுச்சி. அப்பத்தான் என்னோட இன்னுமொரு சகா & என்னோட பள்ளி சூப்பர் சினியர் லீயாசத் வேர கால உடச்சிகிட்டாரு.அது ஒரு பெரிய்ய சோககதை.வேலை வேர போச்சி. சரினு அவருக்கும் ஜெர்மன் எலக்கியதை சொல்லி, படிக்கவச்சி எல்லாருமா கடவுள் புண்ணியத்துல வேலை வாஙகியாச்சு.விசா பேப்பர் வரதுக்கு 5 நாள் இருக்கும் போது மருபடியும் ஆப்பு.இந்த மாதிரி அடுத்தடுத்து வரிசையா 4-5 ஆப்பு. சரி நமக்கும் வெளி நாடுக்கும் ஒத்துவராதுனு சொல்லிட்டு. வயித்துபொளப்புக்கு ஒரு சின்ன வேலைய்ய தேடிகிட்டேன்.
இந்த காலகட்டத்தில் சென்னைல இன்டர்வியுனாலே அது ஒரே நடைதான்.சகாகள் எல்லாம் பேப்பர்ல போட்டு இருக்குனு சொல்லிட்டு இப்படி நடத்தே போரயே கார்த்தி அப்படியும் ஒருத்தனும் கண்டுகரலயே !!!
இந்த காலகட்டத்தில் ரொம்ப பாப்புலர் டயலாக் '30 ரூபாய், 30 ரூபாய் டா குடுத்தா 3 நாள் கண்ணு முயிச்சி வேலை பார்பாண்டா இந்த கார்த்தி'

இந்த சில மாதத்தில் பணம் இல்லாமல் வாயைக் கட்டி, பல நேரத்தில் வயித்தை கட்டி நாட்களைத் தள்ளியது நான் அனுபவித்த முதல் ஏழ்மை
இப்பவும் நண்பர்கள் பேசிகிட்டா ராஜம் மேன்சன் பத்தி ஒரு வார்த்தை கன்டிபாக இருக்கும்.

9 Comments:

Blogger Karthik Jayanth said...

Comment moderation testin

2/15/2006 06:26:00 PM  
Blogger Santhosh said...

கார்த்திக் உனக்கு ராஜம் மேன்ஷனா எனக்கு மாஸ் மேன்ஷன் என்னை அப்படியே மாஸ் மேன்ஷனுகே போயிட்டு வந்த மாதிரி இருக்கு.

2/15/2006 06:28:00 PM  
Blogger Jayaprakash Sampath said...

நல்லா எழுதறீங்க... தப்பா நினைக்கலேன்னா ஒரு சின்ன ஆலோசனை. எழுதி முடிச்சதும், போஸ்ட் பண்றதுக்கு முன்னாலே, ஒருதரம், proof read பண்ணீங்கன்னா நல்லா யிருக்கும். ஆசையா படிக்கும் போது, குறுக்க குறுக்க, இந்த typo எல்லாம் வந்து, ஒரே இம்சை...

2/16/2006 07:32:00 AM  
Blogger Karthik Jayanth said...

சந்தோஷ் ,

நேத்து chat பண்ணியதில் சந்தொஷம். pls let me know for any kind of help.

வாங்க ப்ரகாஷ் சார் ,

முதல் முறையா என் வலைப்பூவிற்கு வருகிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி. இதுல என்ன இருக்கு தப்ப நினைக்க. ஆலோசனைகள் இம்ப்லிமென்ட் செய்றேன்

2/16/2006 09:04:00 PM  
Blogger Pavals said...

நம்மெள்ளாம் அப்போ டி.நகர் நடேசன் ஸ்ட்ரீட் மேன்ஷன்..
மேன்ஷனுக்கு மேன்ஷன் வாசப்படி :-)

2/16/2006 10:18:00 PM  
Blogger Karthik Jayanth said...

வாங்க கொங்கு நாட்டு தங்கமே !!!

முதல் முறையா என்னோட மேன்சனுக்கு சாரி, வலைப்பூவிற்கு வருகிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி.

ஆகா நானும் டி.நகர் J.K மேன்சன்ல கொஞச நாள் இருதேனே.

எப்படியோ நம்மலோட சரித்திர முக்கியத்துவம்(?) meeting வாய்ந்த மீட்டிங் ஆச்சோ.

2/17/2006 06:37:00 AM  
Blogger கைப்புள்ள said...

கலகலப்பா எழுதறீங்க கார்த்திக். நீங்க சொல்ற HMA street - முஃப்தி அமீருல்லா சாகிப் தெருவா (by any chance?), தணிகைவேலன் பக்கோடா கடைக்கு பின்பக்கமோ? இந்த மேன்சன் திருவல்லிக்கேணியின் பழம்பெரும் மேன்சன்களில் ஒன்று எனக் கேள்வி. நான் மேன்சன்ல இருந்து பாக்கலைன்னாலும் நம்ம வீடே மேன்சன்களுக்கு நடுவுல தான் இருந்துச்சு திருவல்லிக்கேணி(சேப்பாக்கம்) ஏரியாவுல. லுங்கி கட்டிய வருங்கால இந்தியாவின் மன்னர்கள் கையில பாட்டிலும்(குடிதண்ணி) கலர் கலரா டோக்கனும் வச்சுக்கிட்டு கும்பலா மெஸ்ஸூக்கு போறதை பலமுறை பாத்திருக்கேன். பதிவை ரொம்ப ரசிச்சேங்க. தொடர்ந்து கலக்குங்க. கொஞ்சம் கொசுவத்தி நீங்களும் காட்டுங்க:)-

3/05/2006 07:59:00 PM  
Blogger கைப்புள்ள said...

என்னங்க பதிலே காணோம்?

3/07/2006 07:26:00 PM  
Blogger Karthik Jayanth said...

தல மண்ணிச்சுகோங்க,

இல்ல தல. எங்க மேன்சன் 2K ல கட்டுனது. தெரு பேரு மறத்துபோச்சி. எங்க மேன்சன் திருஅல்லிகேணி போலிஸ் ஸ்டேசன் பக்கத்துல இருக்கு. நீங்க சொல்லுற பக்கோடா கடை எல்லாம் நினப்பு இருக்கு..

சேப்பாக்கம் பக்கத்துல இருக்குற அம்பாள் மெஸ்தான் எங்க ஆஸ்தான மெஸ்.

3/07/2006 08:25:00 PM  

Post a Comment

<< Home