இதயதிருடன் & பரமசிவன்
முன்னுரை
அப்படி இப்படினு மண்டபத்துல அதாப்பு தமிழ்மணத்தில் பதிந்து விட்டேன்,எதுக்குனா நம்மலோட பங்குகளிப்பும் தமிழ் சமுதயத்துக்கு வேனுமுன்னு 'எலக்கியவாதிகள்' கிட்ட இருந்து ஒரே வேண்டுதல்
ஆனால் என்னுடைய புது இடுகைகளை எப்படி வெளியிடடுவது என்று தெரியவில்லை. சரி ஆபிஸ் வேலைய ஆரம்பிக்கும் முன்னால் கொஞ்சம் முயற்சி செய்கிறேன். எத பத்தி சொல்லுரதுனு தெரியல.சரி நேத்து நான் பட்ட இம்சைய நீங்க யாரும் படகுடாதுங்குற நல்ல எண்ணதுல, என்னொட சோக கதைய சொல்லுறேன். நேத்து கைப்பு போட்ட 3D படத்தை பல அங்கிள்ல சாப்பாடு செய்ய மறத்து போய், மொறச்சி பாத்ததுல சத்தியமா வவுத்துபசிதான் வந்தது. சரினு ரெஸ்டரென்ட்டுல எப்பவுமே சுடவச்சிருக்குற இம்சைய தின்னுட்டு, வழக்கம்போல பாஷை தெரியாம ஹிந்தி டிகெட்டுகிட்ட பல்ல காட்டியே சமாளிச்சிட்டு, சும்மா வரம நமக்கு நாமே திட்டதுல வேட்டு வச்சிகிட்டேன்.
பாகம் - 1 இதயதிருடன்
வழக்கம் போல இதுவும் லாஜிக் இல்லாத காதல் கதை. வாணி விஸ்வநாத், அந்த கம்பீரம் அசர வைக்கிறது
கேள்விகள்
1)பார்பர் ஷாப்பில் தலையை கொடுத்துவிட்டு கண்களை மூடி நித்திரையில் இருக்கும் போது அவ்வப்போது அரைகுறை ஆடையில் வந்து முகத்தில் வாட்டர் பம்ப் செய்கிற காம்னா மட்டும் புத்துணர்ச்சி. ஆனால் இந்த ட்ரெஸ்சில் எந்த டிகெட்டு காலேஜ்க்கு வருதுனு சத்தியமா தெரியலப்பு. யாருகாச்சி தெரித்தால் கண்டிப்பா சொல்லவும்.
2)எதுக்கு எல்லா தமிழ் படத்துலயும் வாத்தியர், ப்ரொப்ரெஸ்சர் போன்ற மரியாதைக்கு உரிய கரெக்டர் எல்லாம் கிண்டல் பண்ணுறங்க.
3)இந்த அவுட் அன்ட் அவுட் காதல் கதையில் நாசரும்[பாவம் நல்ல நடிகர் வேற], அந்த தலை நரைத்த தொழில் அதிபரும் எதற்கு ரகசியமாக நடமாடுகிறார்கள் என்பதுதான் கடைசி வரைக்கும் புரியவேயில்லை.
4) அப்பு சந்தானம் இந்த இன்டர்வெல் மேட்டர தவிர வேற எதுவுமே தெரியாதா.முடியலப்பு சொல்லிடேன்.
அறிவுரை
1) என்னக்கு என்னமோ ஜெயம் ரவி = பயம் ரவி மாதிரி இருக்கு. பாத்துப்பு இப்படி படமா நடிச்சி உனகே ஆப்பு வச்சிகாத சொல்லிடேன்ப்பு.
2) ஞானசம்பந்தன் சார் நாம லெவல் என்ன. நம்ப போய் !!! [நம்ம பக்கத்துவீட்டுகாரரை ரொம்ப குத்தம் சொல்ல கூடாதுல்ல]
3) வைரமுத்து, கிரேசி மோகன், சுரேஷ் அர்ஸ், விக்ரம் தர்மா போன்ற பலமான பின்புலங்கள்!!!!! ம்ம்ம்ம்....
பாகம் - 2 பரமசிவன்
"குயில புடிச்சு கூண்டில் அடைச்சு கூவ சொல்லுகிற உலகம். மயில புடிச்சு கால உடைச்சு ஆட சொல்லுகிற உலகம்...."
இந்த நிலமை பாவபட்ட ரசிககண்மணிகளுக்கும் & அஜித்க்கும் தான். கதைய மண்டபத்துல எல்லாரும் அலசி, காயபோட்டுடதால அந்த ஜோக்கு நோ ஒன்ஸ்மோர். வாசு சித்தப்பு நீங்க நக்மா தொபுள்ல ஆம்லெட்டு போடதுக்கு அப்புரம் உங்க படம் தலைய வைககூடதுனு கொள்கை முடிவுலதான் இருந்தேன். அதை சமீபத்தில் உடச்சதுக்கு 'சந்திரமுகி' ல வலது கன்னத்தில் அறைசிங்க. மறுபடியும் இரக்கமே இல்லாம 'பரமசிவன்' ல இடதுகன்னத்துலயுமா. சத்தியமா முடியலப்பு சொல்லிடேன்.
கேள்விகள்
1)டைட்டில்பார்க்கிலருந்து போன் பேசிமுடிக்கும் முன் ஊட்டிக்கு வர்ர ரோடு எது ? கொஞ்சம் சொன்ன நல்ல இருக்கும். இல்ல அம்புட்டு நேரம் சார்ஜ் இருக்குற மொபைல் எதுப்பு ? காதலர்கள் நலன் கருதியவது ..
2)விவேக் காமெடி எல்லாம் இருக்குன்னு சொன்னங்க. கடைசி வரைக்கும் கானோம் ?
அறிவுரை
அஜித் நல்லா நடிக்கணும், அப்படினு இருக்குறப்ப சுதானமா பாத்துப்பு. த(றுத)ல மாதிரி படுத்தாப்பு. உன்னோட கரியர் பாத்து சொல்லிடேன்.
ஒரு ஆறுதல் என்னனா
'ஆறிலும் சாவு.. நூறிலும் சாவு.. ஆதி பாத்தால் அன்றே சாவு'னு என்னொட சகா சொன்னதாலும், அதன் ஒரிஜினல் தெலுங்கு படம் பாத்தால் தப்பிசேன்
8 Comments:
"அந்த மாதிரி" இருக்கு.
பரமசிவனில எனக்கு ஆறுதல் அளிச்சது, துப்பாக்கியை ஓரளவுக்கு நிசத்துக்குக் கிட்டவாகக் காட்டியிருப்பதுதான்.
அதில அசீத்தின்ர உடம்பைப் பற்றிச் சொல்லவேயில்ல??
சந்திரமுகியில வாசு வலது கன்னத்தில அறைஞ்சாரா?
தமிழ்வலைப்பதிவுகளில் சந்திரமுகிக்குத் தூக்கின காவடிகளை வாசித்திருப்பீர்களோ தெரியாது. கவனம்.
என்னாலான காவடியொன்று.
வாங்க வசந்தன் ,
தங்கள் வரவு நல் வரவு ஆகுக :-)
//"அந்த மாதிரி" இருக்கு //
எந்த மாதிரி ?. எனக்கு புரியல
உடம்ப பத்தி -ve கமென்ட்ஸ் இல்ல. அப்புரம் சிடிசன் அஜித்கு இது நல்லாதான் இருக்கு.
'சந்திரமுகி' என்ன கேட்டா மலையாளத்தில் சூப்பர். தமிழ்ல சித்தப்பு கொன்னுடார்!!!.
மத்தபடி ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைபூதான்.
கார்த்திக்,
அங்கங்க பின்னூட்டங்களில் உங்கள் பெயரை பார்த்துள்ளேன்.வாங்க.ஜோதியில் ஐக்கியமாகுங்க..
வாங்க முத்து( தமிழினி),
தங்கள் வரவு நல் வரவு ஆகுக :-) உங்கள மாதிரி பெரியவங்க வேற சொல்லிடிங்க. அப்புறம் இங்க வேர என்ன வேலை .
'உள்குத்து மேட் இஸி' எப்போ வருது ? சும்மா ஒரு GK தான் .
நானெல்லாம் பெரிய ஆள்னா பெரிய ஆளை என்ன சொல்லுவீங்க?
நீங்களும் மதுரையா? மதுரையா? மதுரையா?
முத்து(தமிழினி),
நம்ம பொறுத்தமட்டில் எல்லாரும் பெரிய ஆள்தான்.
அதுவும் 'உள்குத்து மேட் இஸி' புத்தகம் & அருமைநாயகம் வேர உங்க நண்பன் :-) சொல்லவா வேணும் :-)
நானும் மதுரை, மதுரை, மதுரை தான்
எங்கட வழக்கில "அந்த மாதிரி" எண்டா (அந்த என்பதைக் கொஞ்சம் அழுத்திச்சொல்ல வேணும்) உங்கள் பாசையில் "சூப்பர்" என்று மொழிபெயர்க்கலாம்.
தகவலுக்கு நன்றி.. புதிய விஷயங்களை கற்று கொள்கிறேன். ஆனால் இங்கு தமிழில் 'அந்த மாதிரி' என்றால் 'எந்த மாதிரி' என்று உங்களுக்கே தெரியும், அதிலும் அழுத்தி வேறு சொன்னால் :-)
Post a Comment
<< Home