Tuesday, February 21, 2006

நேத்து ராத்திரி




வழக்கம் போல இதுவும் ஒரு பொலம்பல் பதிவுதான். சரி ஒரு 3 வாரமா ஒக்கா மக்கா வேலை போடுவாங்கிடுச்சி. சரின்னு நேத்து எதாவது கொஞ்சம் நல்ல சமைச்சி சாப்பிடலாமுன்னு சொல்லிட்டு, சிக்கிரம் வீட்டுக்கு வந்து ஒரு ரேஞ்சா சமைக்க ஆரம்பிச்சேன். என்னோட ரூம்மேட் வந்து பாஸ் இன்னக்கி நான் சமைக்கிரேன், நான் வந்ததுல இருந்து நீயே சமைக்குற "so u take rest, i will take care of every thing. dont worry i am a good cook" னு சொன்னான்.

சரி பாதி வேலை ஆச்சு இனி ரசம் & குளம்பு கொதிக்குரது தானே பாக்கி இதுல போய் "he cant screw things" சொல்லிட்டு ஒகேடா "take care " நு தூங்கிடேன்.

ஒரு 10 மணி வாக்குல எந்திரிச்சி,நல்ல பசிக்குதே இவன் இன்னுமா சமைக்குறான்னு நினைச்சிகிட்டே "what's up buddy, is dinner ready" னு கேட்டேன்

என்னமோ 5 வருச ப்ரஜெக்ட்ட 5 நாள்ல முடிச்சவன் மாதிரி ஸ்டில் குடுத்தான். என்னடா ஆச்சினு கேட்டா "every thing is ready, just waiting for you dude" நு சொன்னான்.

சூப்பரப்புனு சொல்லிட்டு ஒருவாய் வச்சா .........

நன்பன் பாரபட்சமே இல்லாம ரசம் & சிக்கன் கிரேவில போட்ட

பொடி & பேஸ்ட் லிஸ்ட்

சாம்பார் & ரச பொடி, கரம் மசாலா, மிளகா பொடி, சிக்கன் மசாலா, ginger, garlic & tamarind paste, ப்ரிஜ்ல இருந்த சல்சா கொஞ்சம், உப்பு ரொம்ப போட்டதால 2 எலுமிச்சம் பழம் வேற

போடத பொடி & பேஸ்ட் லிஸ்ட்

பினாயில், டூத் பேஸ்ட், ஷேவிங் கீரிம், பல்லி உருண்டை,அழகு சாதன கீரிம்கள் & பாத் லிகுட்

இந்தியால இருந்து இந்த இம்சையன் வந்து 4 மாசம்தான் ஆச்சி. இவன திட்டி என்ன ஆகபோகுது.

எவன்டா இந்தியால பசங்க எல்லாம் சமயல் செய்யகூடாதுனு சொன்னனோ அவனை மனசுகுள்ள திட்டிகிட்டே McD ல தின்னுட்டு கம்முனு மறுபடியும் தூங்கிடேன்

6 Comments:

Blogger G.Ragavan said...

ஐயோ பாவம்....உங்க கதை இப்பிடியா போகனும்....ம்ம்ம்ம்...அடுத்த வாட்டியாவது நீங்க கரண்டிய கையில எடுத்துக்கோங்க. கூடிய சீக்கிரம் அசைவம் சாப்பிடுறவங்களுக்கு ஒரு பிளாக் போடனும்.

2/21/2006 08:30:00 PM  
Blogger Karthik Jayanth said...

வாங்க ராகவன்,

இங்க இம்சையே கரண்டி எங்கைல மட்டுமே இருக்குறதுதான்.உங்கள மாதிரி ப்ளொக் வச்சி சமையல் வளக்குற அளவுக்கு இருக்குறவங்க கூட எல்லாம் ரூம்மேட்டா இருக்குற அளவுக்கு நமக்கு குடுத்துவைக்கல :-(

ப்ளாக்ல போடுற அளவு எல்லாம், இங்க சரக்கு ஒண்ணும் இல்ல. ஏதோ வயித்துபொளப்புக்கு வண்டி ஓட்டுறேன் :-)

2/21/2006 09:06:00 PM  
Blogger ilavanji said...

உம்ம ரூமி செஞ்சு நீர் சாப்புட்ட ஐட்டத்துக்கும் போட்டிருக்கற படங்களுக்கும் என்னா மேன் சம்பந்தம்?!

பார்த்தால் பசிதீரும் மாதிரியா?!

2/21/2006 09:24:00 PM  
Blogger Karthik Jayanth said...

வாங்க இளவஞ்சி சார்,

// பார்த்தால் பசிதீரும் மாதிரியா?!//
அதே.. அதே..

படத்துல இருக்குற மாதிரி செஞ்சி சாபிடனுமுன்னுதான் ஆரம்பிச்சது,கடைசில இப்படி ஆகிபோச்சி:-(

இந்தியால உருப்படியா சமையல் செய்றவங்கலே கம்முனு இருக்கங்களமே bird flu இம்சையால.பாத்து இருங்க.இன்னும் ஒரு சோக பத்துபாட்டு & எட்டுதொகை போடாதிங்க
:-)

2/22/2006 08:03:00 AM  
Blogger குமரன் (Kumaran) said...

அடப் பாவமே....

2/22/2006 01:57:00 PM  
Blogger Karthik Jayanth said...

இந்த சில இம்சைய எப்பயாவது பண்ணுவான் :-). அன்னக்கி ரொம்ப நொத்துபோனதால பதிவா போட்டேன்

2/22/2006 05:19:00 PM  

Post a Comment

<< Home