Wednesday, February 22, 2006

சுப்ரமணிய பாரதி

அடிக்கடி நமக்கு நாமே படித்துக்கொள்ள வேண்டிய மகாகவி பாரதியின் வரிகள்

தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்
மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ


- மகா கவி சுப்ரமணிய பாரதி






இந்த வரிகளை படிக்கும் போதோ, இல்லை எங்கோ யாரோ சொல்லும்போது, எனக்கு என் அம்மாவின் நியாபகம்தான் வரும். எனது மிகசிறு வயதில்[1 வகுப்பு], அம்மா இந்த வரிகளை சொல்லசொல்லுவார்கள், பிறகு வரிகளின் அர்த்தம் மனதில் பதியும் படி சொல்லுவார்கள்.

பாரதி என்ற மகா கவி எனக்கு அறிமுகம் ஆனது இப்படித்தான்.

அம்மாகிட்ட நேத்து தொலைபேசியதில் இருந்து, அவர்களின் நினைவாகவே இருந்தது.[பல நல்ல விசயங்களை என் சிறு வயதில் ஆசானாக சொல்லியது, பதின்ம வயதில் இருந்து நல்ல நண்பனாக இருப்பது... இப்படி பல நினைவுகள்]

என் அம்மாவின் நினைவுகளுடன்,
கார்த்திக்

2 Comments:

Blogger குமரன் (Kumaran) said...

கார்த்திக். எல்லோருக்கும் தாய் தான் முதல் குரு. நல்ல பாடலைத் தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். பாரதியை அறிமுகப் படுத்த பொருத்தமான பாடல்.

என் 'பாட்டுக்கொருவன் பாரதி' வலைப்பூவைப் பார்த்திருக்கிறீர்களா? உங்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

2/22/2006 01:52:00 PM  
Blogger Karthik Jayanth said...

குமரன்,

//எல்லோருக்கும் தாய் தான் முதல் குரு. //

நீங்கள் சொல்வது 100 % சரியே

//'பாட்டுக்கொருவன் பாரதி' வலைப்பூவைப் பார்த்திருக்கிறீர்களா?//

பார்த்ததில்லை. கண்டிபா விசிட் அடிக்குறேன். :-).

2/22/2006 05:14:00 PM  

Post a Comment

<< Home