Friday, February 24, 2006

நினைவுகள் - 5 ரூபாய்





மதியம் SubWayல பில் கொடுக்க பர்ஸ்ச திறந்தா பணம் இல்லை.(5 டாலர் இருந்ததாக ஞாபகம்), இந்த ஊருக்கு வந்ததுக்கு அப்புறம் சில சமயத்தில் இவ்வாறு நிகழ்கிறது, 3 கழுதை வயசு ஆச்சினு எங்க அப்பா சொல்லுற மாதிரி ஒரு குரல் மனசுக்குளே.(இல்லைனாலும் நிஜம் அதான்டானு சொல்லுறது நீங்க சொல்லுறது கேக்குது. அடங்கிடேன்). சரி ஒரு கழுதைக்கு எத்தனை வயசு ?.

சரி சொல்ல வந்ததை மறத்துட்டு, என்னமோ வெட்டிபேச்சு வேற...

சரின்னு கடங்கார அட்டைய இழுத்துட்டு சாப்ட்டு இருக்கும் போது ஒரு கொசுவத்திசுருள் வந்துடுச்சி. சரி வேலை வேற இல்லையா, அதான் அப்படியே. இது நான் காலேஜ் படிக்கும் போது நடத்தது. (இந்த வெட்டி கதைய சொல்லவா இம்புட்டு பில்ட்டப்பு).

நம்ம காலேஜ் சேந்த ஒரு செமஸ்டர் வரைக்கும், எல்லாம் காசுக்கு அவ்வளவு பஞ்சம் இல்லை.என்னா சரியான செட்டு சேரல. எனக்கு ரூம் நம்பர் போட்டவன் எதோ பழக்கூட்டத்தில் மாட்டிவிட்டுடான்.(ஆனா காலேஜ் முடிக்கும் என்னோட முதல் ரூம்மு, நீயெல்லாம் என்னோட ரூம்முன்னு வெளிய சொல்லி, எம்மானத்தை வாங்காதனு சொல்லுற மாதிரி ஆனது வேற நிலமை) இது பத்தி பின் வரும் நாளில் எழுதப்படும்

மெல்ல மதுரைகார பயலுகலா செட்டு சேத்திச்சி.பணத்தட்டுபாடும் வந்துருச்சி. ஒக்கமக்கா ஒரு நாளு வீட்டுக்கு போககூட காசு இல்ல. சரி ஹாஸ்டலயே இருக்கலாமுன்னு சொல்லுர அளவுக்கும் நிலமை இல்லை. சரின்னு ரூம்ல Bond வேலை பாத்ததுல ஒரு 20 ரூபா தேரிச்சி. இன்னும் ஒரு 15- 20 ரூவா கிடைச்சா சுகவாசியா வீட்டுக்கு போகலாம்.(நான் படிச்ச ஊர்ல இருந்து மதுரைக்கு 25 ரூவா டிகெட்டு காசு). சரின்னு என்னோட கூட்டாளி கனிராஜ்(ரொம்ப பாசகார பய. பசின்னு சொன்ன போதும், எப்படியாச்சும் ஒரு முட்டைபரோட்டாவாச்சும் வாங்கி குடுப்பான். இப்ப கப்பல்ல நாடு, நாடா சுத்துறான். கெரகம் நான் இங்க கெடக்கேன்) கிட்ட கேட்டேன். அவன் என்னடானா "பங்கு நானே உங்கிட்ட கேக்கலாமுன்னு இருக்கேன், மதுர வரைக்கும்தான்டா எங்கிட்ட ரூவா இருக்கு; உசிலம்பட்டி போகணுமே அப்படினான்".

எல்லா பயவகலும் ஊருக்கு போய்ட்டே இருக்குராங்க. ஒரு 30 ரூவாவாச்சும் தேத்தனும்ன்னு சொல்லிட்டு ஒவ்வொறுத்தன்கிட்ட போய் "மாப்பு ஒரு 50 ரூவா குடுடானு சொன்னா எல்லாரும் 50 ரூவா இல்லடானு சொல்லிட்டு 5 - 10 ரூவா குடுத்து சாரிடானு சொன்னானுக" சரி இப்படியே ஒரு 70 ரூவா தேரிடுச்சி.

சரின்னு சந்தோசமா மதுரைக்கு போய் ஆரபாளையத்துல ஆளுக்கு 2 முட்டபரோட்டா & டபுள் ஆம்லேட் தின்னுட்டு, நேரா நாம்ம வீட்டுக்கு போய், மறுபடியும் நல்லா வீட்டு சாப்பாடு சாப்ட்டுட்டு, அம்மா கிட்ட ஒரு 50 ரூவா வாங்கி நம்ம கூட்டாளிய பஸ் எத்திவிட்டுட்டு வந்தேன்.

அதுக்கு அப்புரம் காலேஜ்ல எப்ப காசு தட்டுபாடுனாலும், இந்த 5 ரூவா டெக்னீக்க வச்சி ஒரு 2, 2.1/2 செமெஸ்டர ஓட்டுனோம்.அதுக்கு அப்புரம் இந்த டெக்னிக் எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சி.அதுக்கு அப்புறம் பயலுக ரொம்ப உஷ்ரா "மாப்பு 100 ரூவா குடுக்குரேன்.அப்புறமேட்டு கண்டிப்பா குடுத்துடுடா கன்டிசனா சொல்லிடுவாங்க"

இது மாதிரி யாருக்காவது 'உழைத்து உயர்த்த உத்தமர்கள் :-) ?' கொசுவத்தி இருந்தா சொல்லுங்க.

2 Comments:

Blogger குமரன் (Kumaran) said...

எந்தக் காலேஜூல படிச்சீங்க கார்த்திக். நான் படிச்சது கலசலிங்கத்துல.

உங்க அளவுக்கு செட்டு சேரலையோ என்னவோ ஊருக்குப் போக காசு தட்டுப்பாடு வந்ததில்லை. உங்க கொசுவர்த்தியைப் படிச்சப்ப எனக்கு வேற ஒரு கொசுவர்த்தி வந்தது.

வாராவாராம் மதுரைக்குப் போயிட்டு வர்றப்ப மதுரையில இருந்து சாப்புடறதுக்குத் தீனி கொண்டு வரணும். எவ்வளவு கொண்டு வந்தாலும் எனக்கு கொஞ்சமாத் தான் கிடைக்கும். அதனால ஆரம்பத்துல கொண்டு வந்ததை எல்லாம் கொட்டிக் கொடுத்த்தை நிறுத்திட்டு, மக்களுக்கு ஒரு பாக்கெட் எனக்கு ஒரு பாக்கெட்டுன்னு கொண்டு வந்து என் பாக்கெட்ட எல்லாரும் தூங்கிகிட்டு இருக்கிறப்ப பகவத் கீதையோ பாரதியோ ஏதோ ஒன்னு படிச்சுக்கிட்டே தனியா சாப்புடுவேன்.

இப்பவும் அந்த புத்தி இருக்கு. கடைக்குப் போயி ஏதாவது தீனி வாங்கிட்டு மகளுக்குக் கொடுத்துட்டு ப்ளாக் படிக்கிறப்ப தனியா எடுத்து வச்ச என் பங்கை தின்னத் தொடங்கிடுவேன். வீட்டம்மாக்கிட்ட கையும் களவுமா நெறைய தடவை பிடிபட்டிருக்கேன். அவங்களுக்கும் பங்கு கொடுத்துட்டா ஒன்னும் சொல்லாம விட்டுடுவாங்க. இல்லாட்டி நல்லாத் திட்டு கிடைக்கும். அதுக்கெல்லாம் பயந்தா முடியுமா?

2/24/2006 11:29:00 AM  
Blogger Karthik Jayanth said...

வாங்க குமரன்,

உங்க கொசுவத்திக்கு நன்றி.

நான் படிச்சது கோயமுத்துர்ல. பஸ்ன நீங்க எதோ KPN ரேஞ்ச்ல நினைக்க வேண்டாம். பாண்டியன், சேரன் போக்குவரத்து கழகம்தான் :-)

படிக்குற காலத்துல எங்கூட்டாளிக எல்லாரும் அப்படி சாப்பிடுவோம், ஒரு படம் விடாம பாப்போம். அது ஒரு காலம்

2/24/2006 05:16:00 PM  

Post a Comment

<< Home