நண்டு கதை - சில கேள்விகள்
வெங்கட்ரமணி சார் ஒரு சிறுகதையை சொல்லி இருக்குறார்.. இந்த நண்டு நீதி கதையில் சில கேள்விகள் எனக்கு தோன்றியது.. இந்த பதிவு ஒரு கமென்ட் அளவுக்குத்தான் இருந்தாலும் அங்கேயே கமென்ட்டாக போடாமல் ஒரு தனி பதிவு கணக்கு ;-)
கேள்விகள்
1) முதல்ல எத்தனை தமிழ் நண்டுகள் கூஜாவில் இருந்தன ?
2) முதலில் எந்த நண்டு எதனால் வெளியே வர முயர்ச்சி செய்தது ? அதை எந்த நண்டு அதன் காலை பிடித்து இழுத்தது ? ஒரு நண்டு இழுத்ததா ? இல்லை ஒரு கூட்டமாக சேர்ந்து இழுத்ததா ?
3) அடுத்த நண்டு தனியாக வர முயர்ச்சி செய்த்ததா ? இல்லை கூட்டமாக வெளியே வர முயர்ச்சி செய்த்ததா ? அதை எந்த நண்டு அதன் காலை பிடித்து இழுத்தது ? ஒரு நண்டு இழுத்ததா ? இல்லை ஒரு கூட்டமாக சேர்ந்து இழுத்ததா ?
4) 2 வது & 3 வது கேள்விகள் ரீவிட் சே ரீபிட்டு..எத்தனை நண்டுகள் இருந்ததோ அத்தனை நண்டுகளுக்கும் ஹி ஹி..
5) நண்டுகள் ஒரு குழுவாக இருந்தால் அதன் குழு மனபான்மை பற்றி எதற்க்கு ஒரு வார்த்தை கூட இந்த கதையில் சொல்லவில்லை.. வாழ்க குழு மனபான்மை..
5 அ) எதாவது நல்ல கருத்துகள் எந்த குழு நண்டுகளால் சொல்லபட்டாலும் எப்படி மற்ற நண்டுகள் வாய் வலிக்காமல் எதிர் கருத்துகளை சொல்லி கொண்டே இருக்க முடிகிறது. இது தமிழ் நண்டுகளின் தனி தன்மையா / இல்லை வாங்கி வந்த வரமா - சாபமா ?
6) மத்த நண்டுகள் எல்லாம் வெளியே சென்றதால் கூஜாவுக்குள்ள எதாவது புது நண்டுகள் வந்ததா ? ஆம் என்றால் எத்தனை ஹி.. ஹி..
7) அப்படி வந்த நண்டுகள் எட்டி பார்க்கும் போது தெரியாமல் வழுக்கி விழுத்த நண்டுகளா ? இல்லை உள்ளே வந்து இருப்பதை மேலும் ரணகளப்படுத்தவா ?
8) இல்லை இருக்கும் சண்டையை சரி செய்யவா ? இந்த நண்டுகளின் தற்போதைய நிலை என்ன ?
9) இந்த நண்டுகளின் சண்டைகளை வேடிக்கை பார்க்கும் நண்டுகள் எத்தனை.. அவற்றின் மன நிலை என்ன ?
10) எப்பத்தான் இந்த நண்டுகள் சண்டை முடியும் ?
இன்னும் சில கேள்விகள் இருந்தாலும், இப்போதைக்கு இது போதும் .. கடைல கடமை அழைக்கிறது..
கேள்விகள்
1) முதல்ல எத்தனை தமிழ் நண்டுகள் கூஜாவில் இருந்தன ?
2) முதலில் எந்த நண்டு எதனால் வெளியே வர முயர்ச்சி செய்தது ? அதை எந்த நண்டு அதன் காலை பிடித்து இழுத்தது ? ஒரு நண்டு இழுத்ததா ? இல்லை ஒரு கூட்டமாக சேர்ந்து இழுத்ததா ?
3) அடுத்த நண்டு தனியாக வர முயர்ச்சி செய்த்ததா ? இல்லை கூட்டமாக வெளியே வர முயர்ச்சி செய்த்ததா ? அதை எந்த நண்டு அதன் காலை பிடித்து இழுத்தது ? ஒரு நண்டு இழுத்ததா ? இல்லை ஒரு கூட்டமாக சேர்ந்து இழுத்ததா ?
4) 2 வது & 3 வது கேள்விகள் ரீவிட் சே ரீபிட்டு..எத்தனை நண்டுகள் இருந்ததோ அத்தனை நண்டுகளுக்கும் ஹி ஹி..
5) நண்டுகள் ஒரு குழுவாக இருந்தால் அதன் குழு மனபான்மை பற்றி எதற்க்கு ஒரு வார்த்தை கூட இந்த கதையில் சொல்லவில்லை.. வாழ்க குழு மனபான்மை..
5 அ) எதாவது நல்ல கருத்துகள் எந்த குழு நண்டுகளால் சொல்லபட்டாலும் எப்படி மற்ற நண்டுகள் வாய் வலிக்காமல் எதிர் கருத்துகளை சொல்லி கொண்டே இருக்க முடிகிறது. இது தமிழ் நண்டுகளின் தனி தன்மையா / இல்லை வாங்கி வந்த வரமா - சாபமா ?
6) மத்த நண்டுகள் எல்லாம் வெளியே சென்றதால் கூஜாவுக்குள்ள எதாவது புது நண்டுகள் வந்ததா ? ஆம் என்றால் எத்தனை ஹி.. ஹி..
7) அப்படி வந்த நண்டுகள் எட்டி பார்க்கும் போது தெரியாமல் வழுக்கி விழுத்த நண்டுகளா ? இல்லை உள்ளே வந்து இருப்பதை மேலும் ரணகளப்படுத்தவா ?
8) இல்லை இருக்கும் சண்டையை சரி செய்யவா ? இந்த நண்டுகளின் தற்போதைய நிலை என்ன ?
9) இந்த நண்டுகளின் சண்டைகளை வேடிக்கை பார்க்கும் நண்டுகள் எத்தனை.. அவற்றின் மன நிலை என்ன ?
10) எப்பத்தான் இந்த நண்டுகள் சண்டை முடியும் ?
இன்னும் சில கேள்விகள் இருந்தாலும், இப்போதைக்கு இது போதும் .. கடைல கடமை அழைக்கிறது..
29 Comments:
அடி தூள் கிளப்பிட்டீங்க.. இத்தனை உள்குத்துக்கு அர்த்தம் கண்டுபிடிக்கவே இன்னும் 2 மாசம் ஆகும் போலிருக்கே..
//எத்தனை நண்டுகள் இருந்ததோ அத்தனை நண்டுகளுக்கும் ஹி ஹி..//
என்ன loopல போட்டு அடிக்கறீங்களா ;-)
வெங்கட்ரமணி சார்,
முதல் வரவு.. நல் வரவு ஆகுக..
நீங்க வேற சார்.. நீங்க சொன்ன கதைல எனக்கு வந்த சில சந்தேகங்களை கேட்டேன். அப்புட்டுத்தேன் ;-) சிவ. சிவா..
//என்ன loopல போட்டு அடிக்கறீங்களா ;-)
ஒரு அப்பரசண்டி ப்ரோகிராமரா இருந்துகிட்டு இந்த சப்பை கோடு கூட எழுதலைன்னா எப்படி ;-)
இதுவரையில் நான் படித்த பதிவுகளிலேயே எந்தவித உள்குத்தும் இல்லாமல் வந்த அக்மார்க் அறிவியல் பதிவு இதுதான்.
நண்டுகளின் பழக்கவழக்கங்களைப் பற்றி மிகத் தெளிவாக ஆராயவேண்டும் என்று நினைக்கும் அனைத்து ஆராய்ச்சி மாணவர்களுக்கும இந்தப் பதிவு ஒரு வரப்பிரசாதமாகும்.
இப்படி ஒரு அறிவியல் பதிவு படித்து எவ்வளவு நாளாயிற்று.
பி.கு:
எனது பின்னூட்டமும் ஒரிஜினல் அக்மார்க் அறிவியல் விமர்சனம்.எந்தவிதமான உள்குத்தும் கிடையாது.
அய்யா கார்த்திக்கு,
அதுக்காக இப்பிடியா சந்தேகம் கேக்கறது. எத்தன பேர் ராத்திரி தூக்கம் இல்லாம இதுக்கெல்லாம் மண்டையை குழப்பிக்கப்போறாங்களோ..
அது சரி, தெரியாம காசிக்கும் இன்னும் சிலருக்கும் சார் போட்டேன். அதுக்காக எல்லாரும் சேர்ந்து வரிக்கு வரி எனக்கு சார் போடறீங்களே.. இது நியாயமா? எனக்கு ரொம்ப சின்ன வயசுதான். 30 தான். ;-)
கல்வெட்டு சார்,
முதல் வரவு.. நல்வரவு ஆகுக.. பெரியவங்க நீங்க வேற என்ன சொல்லுறது..
உங்களை போன்றவர்கள் கொடுக்கும் உற்சாகத்தினால், இன்னும் அக்மார்க் அவியல் ச்சே அறிவியல் கட்டுரைகள் எழுத என்னால் ஆன மட்டும் முயர்ச்சி செய்வேன்.
ஹி ஹி.. சுய தம்பட்டம்ன்னு வந்துட்டா..
யப்பா!!!!!!!!!!!!!!!
உள்குத்து இல்லாமல் ஒரு பின்னூட்டம் :)
" முதலில் எல்லா நண்டும் தம்மை தமிழ் நண்டு என்று ஒத்துக்கொண்டதா"
ஹிஹி
வெங்கட்ரமணி சரி இந்த வாட்டி சார் போடல போதுமா ;-)
ஒரு சாதா (சோதா) கேள்விகளுக்கு நீங்களே பில்ட்டப்பு கொடுத்து, என் முதுகுல டீன்னை கட்டிடுவீங்க போலயே ;-)))
சார் போட்டு கூப்பிடுறது ஒரு பழக்கமாகவே ஆகிடுச்சி.. ரொம்ப பேரு சொல்லிட்டங்க.. மாத்த பார்க்குறேன்.. முடியல..
உஷா மேடம்,
முதல் வரவு.. நல்வரவு ஆகுக..
இப்படி ஒரு பதிலா :-)))))))))))
முத்து (தமிழினி),
சபாஷ் சரியான் கேள்வி ;-) இதில் எந்தவிதமான உள்குத்துகளும் இல்லை
**************
ஒரு அறிவிப்பு
**************
தன்னை தன்மானமுள்ள தமிழனாக கருதும் எல்லா தமிழ் நண்டுகளும் வந்து என்னுடைய பதிவில் கமென்ட்களை அளித்து நாங்கள் தமிழ் நண்டுகள்தான் என்று உறுதி படுத்துமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள்.
(கமென்ட்டுக்கு என்ன எல்லாம் பல்ட்டி அடிக்க வேண்டியதா இருக்கு)
கார்த்திக்,
தனிப்பதிவு போடணும் அதுக்கு :))
யோவ் கார்த்திக்கு, தமிழ்ல எழுதுகிற நண்டுகள் எல்லாமே, தமிழர்கள் என்ற நெனைப்பில்தான் எழுதுதுங்க. ஆனா, மத்தவங்க சாதி சான்றிதழ் பார்க்காம அதை ஒத்துககிறதில்லையே?அதுதானே பிரச்சனை. என்னா முத்து சாரூ, சர்தானே?
1.அதுல எத்தனை நண்டு ஆண் நண்டு - எத்தனை நண்டு பெண் நண்டு
2.நண்டுகளிடையே சாதி மதம் எல்லாம் உண்டா ? அப்படின்னா அந்த கணக்கு என்ன ? ( ஆரிய நண்டு எத்தனை / திராவிட நண்டு எத்தனை அந்தமாதிரி..)
3.எத்தனை நண்டுக்கு போலி நண்டு இருக்கு ?
4.இந்த கட்சி நண்டு எத்தனை ? அந்த கட்சி நண்டு எத்தனை ?
ஏதோ நம்மால முடிந்தது...
தோழரே!
உன் சந்தேகங்களை தீர்த்து வைப்பது என் கடமை. நீ கேட்ட எல்லா கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த வரை பதில் சொல்கின்றேன். புரிச்சா எல்லாருக்கும் விளக்கி சொல்லு, புரியாவிட்டால் அப்படியே விட்டு விடு.
1, 900 நண்டுகள் இருப்பதாக சொல்கின்றார்கள்.
2, முதல்ல இந்த பா.நண்டுகள் த. நண்டுகள் மேல் ஏறி வெளியே வர முயற்சி செய்தாம். தான் மட்டும் நல்லா இருக்க. அத த.நண்டுகள் கூட்டமாக சேர்ந்த தடுக்காமல் தனி தனியாக போயி தடுத்தாம். அதனால பா. நண்டுகள் ரொம்ப ஈ.சியாக வெளியே வந்து விட்டது.(வெளியே வந்த கொஞ்சம் தமிழ் நண்டுகளை மணிவண்ணன் பார்க்கவில்லை என்று நினைக்கின்றேன்)
3, எல்லாம் த.நண்டும் பா. நண்டு வெளியே போயிவிட்டது என்று கூட்டமாக வெளியே போக நினைத்தது. அங்க இருந்த மிச்ச பா.நண்டுகள் காலை பிடித்து இழுத்தது. த. நண்டுகளும் தன் பங்குக்கு அடுத்த த.நண்டின் காலை பிடித்து இழுத்தது.
4, நமக்கு இந்த LOOP எப்பவுமே தகராறு, இது ஒழுங்கா வந்த இருந்தா தான் இன்நேரம் MCA முடித்து இருப்போமுல.
5, குழுவாக இருந்தாலும் அடுத்தவன் காலை வாருவதிலே கவனமாக இருந்தால் குழு மனபான்மை வெளியே வரவில்லை.
5-அ, இது தமிழ் நண்டுகளின் தனித்தன்மை என்று ஆணித்தரமாக ஆணியை சுத்தியல் கொண்டு அடித்து சொல்கின்றேன். இது ஒரு சிலருக்கு வரம், ஒரு சிலருக்கு சாபம்.
6, ஏகப்பட்டது வந்துச்சுங்க.ஹி....ஹி....
7,பாதி எட்டி பாக்குறேனு உள்ளே தவறி விழுந்த நண்டுகள். மீதி ரணகளபடுத்த வேண்டும் என கங்கனம் கட்டி கூஜாவில் குதித்தவை.
8, சண்டையை சரி செய்வதா, சீரியஸா இருக்கும் போது காமெடி பண்ணாதீங்க.. எல்லாம் ஒன்னுக்கு ஒன்னு கூட்டு சேர்ந்துகிட்டு அடிச்சிகிட்டு இருக்குங்க.
9, இந்த நண்டுகளின் சண்டைகளை வேடிக்கை பார்க்கும் நண்டுகளின் எண்ணிக்கை மொத்தத்தில் பாதிக்கும் மேல். ஆனால் ஒரு சில நண்டுகளின் மேல் சண்டையிடும் நண்டுகள் இவன் பா.நண்டு, இவன் த.நண்டு என முத்திரை குத்தி சண்டைக்கு இழுக்க பார்க்கின்றன. மனநிலை... "நெஞ்சு பொறுக்குதில்லை... இந்த நிலை கெட்ட மானிடரை நினைத்து விட்டால்..."
10, ஒரு வேளை... 3004யில் ....???
என்ன அப்பு, எதாவது புரிச்சிசா.... வேற எதுவும் டவுட் இருந்தால் நம்மகிட்ட கேளு... பாவம் ரமணி சாரை தொல்லை பண்ணாத... அவரே... உண்ட நண்டு இன்னும் செரிக்கவில்லை என ஆத்திகத்தை தேடி அலைந்து கொண்டு இருக்கின்றார்.
இந்த கேள்விக்கு எல்லாம் பதில் தெரிஞ்சி என்ன பண்ணப்போறீங்க கார்த்திக்....
இப்படி நாமே நம்மை கேள்வி கேட்டுகறது நல்லாவா இருக்கு சொல்லுங்க.. நம்ம பத்தி நமக்கு தெரியாதா என்ன??
கார்த்திக் - கூடையைவிட்டு வெளியே வராத நண்டுகள்தான் சட்டியில பொரியலாகுங்கிறதில்லியா இங்கே நீதி? :-)
//10) எப்பத்தான் இந்த நண்டுகள் சண்டை முடியும் //
தலைவா, பாசமலர் க.கார்த்திக்!, சண்டை முடிஞ்சிட்டா த. நண்டெல்லாம் வேற மொழிக்கு கன்வர்ட் ஆய்டுமே !!!
ஒரு நண்டு 'விடுங்கப்பா போறேன்னு' சொன்னாக் கூட, மத்த நண்டுங்க "அதெப்படி போகலாம்.. மறுபடி ரெண்டு வருசத்துக்கு வரமாட்டேன்னு அக்ரிமென்ட் போட்டுட்டு போ"ன்னு காலைப் பிடிச்சி இழுக்குமே!!
பை த பை, இதெல்லாம் உட்கார்ந்து பார்த்து கேள்வி கேட்டுகிட்டே இருக்குமே அந்த நண்டை விட்டுட்டியேப்பா !! ;)
தனி பதிவு (அ) பதிவுகள் எழுத ஐடியா தந்த (தொடர் சிந்திரம் எழுதும் அன்பர்களே நோட் பண்ணுங்கப்பா) அண்ணன் முத்து(தமிழினி) வாழ்க ! வாழ்க !
அய்யா / அம்மா அனானி,
உங்க கருந்துக்கு ரொம்ப நன்றிங்க.. மத்தவங்கன்றது எதாவது ஒரு குழு நண்டுகளா ? இல்ல தனி நபர் நண்டா ? . ஆனாலும் நண்டுகளுக்குள்ளையும் சாதி, அதுக்கு ஒரு சான்றிதழ், அதுக்கு ஒரு சர்டிபையிங் அத்தாரிடிகள் வேறயா சிவ. சிவா..
செந்தழல் ரவி,
முதல் வரவு.. நல் வரவு ஆகுக..
//அதுல எத்தனை நண்டு ஆண் நண்டு - எத்தனை நண்டு பெண் நண்டு
ஓ..இது வேற இருக்கா :-)) பெரும் பஞ்சாயத்தா இருக்கும் போலயே ;-)
//நண்டுகளிடையே சாதி மதம் எல்லாம் உண்டா ? அப்படின்னா அந்த கணக்கு என்ன
பார்த்து ரவி.. இப்படி கணக்கு கேட்டதனாலதான் பல பிரச்சனை ஆரம்பிச்சிருக்கு.. இதுக்கு எற்கனெவே சரித்திர ஆதாரம் இருக்கு ;-) . வளைல இருக்க போறது கொஞ்ச நாளுதான். அதுக்குள்ள இந்த நண்டுக போடுற ஆட்டம் என்னமோ ரொம்பத்தான்
:-))))) எவ்வளவு பெரிய நண்டா இருந்தாலும் ஒரு நாளு விரிச்ச வலைல மாட்டுனா சங்குதான்.
//எத்தனை நண்டுக்கு போலி நண்டு இருக்கு ?
ஓ.. இது கேள்வி ஒரு நல்ல கேள்வி.. ஹி ஹி
//இந்த கட்சி நண்டு எத்தனை ? அந்த கட்சி நண்டு எத்தனை ?
அப்ப மொத்தமே 2 தானா ? .. இது சின்ன புள்ளதனமால்ல இருக்கு ;-)
நாகை சிவா,
//900 நண்டுகள் இருப்பதாக சொல்கின்றார்கள்
அத்தாடி அத்தனை பெரிய கூஜாவா அது ?.
//முதல்ல இந்த பா.நண்டுகள் த. நண்டுகள்...
தல நண்டுகளுக்குமா இனிசியல். அதுசரி 2 வகை நண்டுகள்தான் இருந்ததா. இதுல 3 வது அணி, இடது வலது சாரி நண்டுகள், நடுநிலமை நண்டுகள் இப்படி ஏதாவது ஹி ஹி. சரி மணிவண்ணனுக்கு வேற வேலை இருக்குது.. அவர் அத பார்க்க போய் இருப்பாரு..
//எல்லாம் த.நண்டும் பா. நண்டு வெளியே போயிவிட்டது என்று..
அது சரி நண்டுகளுக்கு ஏது சுய புத்தி. ஆட்டு கூட்டம் மாதிரி யாரு பின்னாலையாவது போகுறதே பிழைப்பா இருக்குது.. மத்த படி அடுத்த நண்டை பார்த்து காலை இழுப்பது அப்பட்டமான குழு மனபான்மை.
//நமக்கு இந்த LOOP எப்பவுமே தகராறு, இது ஒழுங்கா வந்த இருந்தா
வுடு பங்கு.. படிச்சி மட்டும் என்ன பண்ணிட்டோம் இப்ப..
// குழுவாக இருந்தாலும் அடுத்தவன் காலை வாருவதிலே கவனமாக இருந்தால்
அப்படிங்கற.. இருந்தாலும் இது சின்னபுள்ளதனமால்ல இருக்கு
//இது தமிழ் நண்டுகளின் தனித்தன்மை என்று ஆணித்தரமாக ஆணியை சுத்தியல் கொண்டு அடித்து சொல்கின்றேன்
கொள்கைல கொம்பனா இருக்குறயே பங்கு.. உன்னை நினைச்சி எனக்கு ஆனந்த கண்ணிர்தான் வருது.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
எல்லார்ப்போட்ட கணக்கும் தப்புப்பா ,அந்த ஜாடில மொத்தமே இரண்டு நண்டு தான் இருந்துச்சு அதனாலா தான் நண்"TWO" சொல்ராங்க :-))
நாகை சிவா,
//ஏகப்பட்டது வந்துச்சுங்க.ஹி....ஹி....
என் பங்கு.. அப்படி என்னதான் இருக்கு அந்த கூஜாவுல ?. இருந்தாலும் இந்த நண்டுகளுக்கு ரொம்பதான் கூஜா ஆர்வம்.. ;-)
//பாதி எட்டி பாக்குறேனு உள்ளே தவறி விழுந்த நண்டுகள். மீதி
தெரியாம விழுந்த நண்டுகளோட நிலமைய நினைச்சா பாவமா இருக்கு.. இனிமே கூஜா அதுகளேட உலகமா இருக்கும்.
//சண்டையை சரி செய்வதா, சீரியஸா இருக்கும் போது காமெடி பண்ணாதீங்க
இந்த நண்டுகளோட சண்டையே ஒரு பெரிய காமெடி. இதுல நான் என் பங்கு தனியா காமெடி பண்ணபோறேன்..
//நெஞ்சு பொறுக்குதில்லை... இந்த நிலை கெட்ட மானிடரை நினைத்து விட்டால்..."
நண்டுகளுக்கும் சரியா வரிற மாதிரி சிச்சுவேஷன் பாட்டா போடு தாக்குறயே பங்காளி..
//ஒரு வேளை... 3004யில் ....???
Looks like a long way ahead ;-)
***
பங்காளி கடைசில ஒரே ஒரு கேள்வி.. சூடான்ல நீ நிறைய டிஸ்கவரி சேனல், NGC பார்க்குறயா ? நண்டு ஆராய்ச்சில இப்படி பிண்ணுற :-)))
கவிதா,
//இந்த கேள்விக்கு எல்லாம் பதில் தெரிஞ்சி என்ன பண்ணப்போறீங்க
கேள்விகள் கேட்டா அறிவு? வளரும்ன்னு எங்க வீட்டுல சொல்லுவாங்க.. பதில் சொல்லுறது அவரவர் பிரியம்..
//நம்ம பத்தி நமக்கு தெரியாதா என்ன??
நீ உன்னையறிந்தால் உலகத்தில் போரடலாம் அப்படின்னு ஒரு பாட்டு சின்ன புள்ளைல கேட்டுருக்கேன்
//கூடையைவிட்டு வெளியே வராத நண்டுகள்தான் சட்டியில பொரியலாகுங்கிறதில்லியா
இதனால என்ன சொல்ல வர்றிங்க நீங்க ?
//சண்டை முடிஞ்சிட்டா த. நண்டெல்லாம் வேற மொழிக்கு கன்வர்ட் ஆய்டுமே !!!
உங்க கவலை உங்களுக்கு ;-)
//அதெப்படி போகலாம்.. மறுபடி ரெண்டு வருசத்துக்கு வரமாட்டேன்னு அக்ரிமென்ட் போட்டுட்டு போ"ன்னு காலைப் பிடிச்சி இழுக்குமே!!
இது கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு ;-)
//உட்கார்ந்து பார்த்து கேள்வி கேட்டுகிட்டே இருக்குமே அந்த நண்டை விட்டுட்டியேப்பா !! ;)
யாரு அந்த நண்டுன்னு சொல்லுங்க . அந்த நண்டுக்கும் கேள்விய ரெடி பண்ணிடலாம். ;-)
//பங்காளி கடைசில ஒரே ஒரு கேள்வி.. சூடான்ல நீ நிறைய டிஸ்கவரி சேனல், NGC பார்க்குறயா ? நண்டு ஆராய்ச்சில இப்படி பிண்ணுற :-))) //
சூடானில் இல்ல பங்காளி. இந்த ஆராய்ச்சி எல்லாம் நாகப்பட்டினத்தில் பண்ணியது.
Long Term ஆராய்ச்சி.......
போயிகிட்டே இருக்குது.
Post a Comment
<< Home