Monday, May 29, 2006

நினைவுகள் - கால்பந்தாட்டம் - 2

பாகம் 1

இதை போன பதிவிலேயே எழுதி இருக்க வேண்டும்.. மறந்து விட்டேன்..சில விஷயங்களின் மதிப்பு அர்ஜென்டினாவில் குறைவதே இல்லை என்று நான் போன வருடம் சந்தித்த அர்ஜென்டினிய தோழி சொன்னது இந்த படம் குறித்துதான்..



***

Italia 90




இத்தாலி நடத்திய முதல் உலக கோப்பை இது.. இந்த சீரிஸில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்

கேமரூனின் ஆப்ரிக்க சிங்கங்கள் தந்த Royal Treatment ஐ வாங்கிய டீம்கள் அர்ஜென்டினா, ருமேனியா, கொலம்பியா. 38 வயதான Roger Milla(semi-retired) substitute ஆக இறங்கி ருமேனியாவுக்கு எதிரான் மேட்சில் 3 நிமிடந்தில் அடித்த 2 கோல்கள் சிம்பிளி சூப்பர் என்றுதான் சொல்லவேண்டும்.. Roger Milla தான் கோல் அடித்தவுடன் மைதானத்தின் கார்னரில் நின்று டான்ஸ் ஆடும் பாரம்பரியத்தை ஆரம்பித்து வைத்தார் என்று நினைக்கிறேன்..

குவாட்டர் பைனலில் நடந்த இங்கிலாந்து - கேமரூன் மற்றும் செமி பைனலில் நடந்த ஜெர்மனி - இங்கிலாந்து இடையேயான மேட்ச்கள்

தென் அமெரிக்காவின் 2 சிங்கங்கள் அர்ஜென்டினா - பிரேசில் சந்தித்த மேட்ச்.. Maradona-Caniggia கூட்டணியே பிரேசிலை வெளியேற்ற போதுனாதாக இருந்தது..

சீரிஸில் அதிகம் கார்ட் வாங்கியது அர்ஜென்டினா டீம். 22 மஞ்சள் 3 சிகப்பு.. சீரிஸ் முழுவதும் Maradona எப்பொழுதும் 5 பேர்களால் கவர் செய்யபட்டிருந்தார்.. இது போக அவர் டீம்க்காக பிகிலு அண்ணணிடம் எப்போதும் பேச வேண்டியது வேறு..இதை தாண்டி விளையாடுவதே அரிதாக இருந்தது.இதை தாண்டி விளையாடுவதே அரிதாக இருந்தது.








தமிழ்மணம் போல உள்குத்துகள் இல்லாமல், நேரடியாகவே கமென்ட்களையும் அடிதடிகளையும் அதிக அளவில் பார்த்தது இந்த சீரிஸ்.

சீரிஸில் மொத்தம் 16 பேர் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றபட்டனர்.. இதில் பைனல் மேட்ச்சில் முதலில் சிகப்பு அட்டை காட்டபட்டு வெளியேறிய பெருமை பெற்றவர் அர்ஜென்டினாவின் Pedro Monzon, 5 நிமிடத்தில் பின்னால் வந்து கம்பெனி கொடுத்தவர் Dezotti. பைனனில் அர்ஜென்டினா 9 பேருடன் விளையாடியது.


பிரேசில் அதிக அளவில் five out-and-out defendersகளை பயன்படுத்தியது. Its an irony that most teams played to avoid losing rather than to win. This was especially evident in the knock-out stage, when half the matches went to extra-time and/or penalties.

எப்படி அப்பா இப்படி எல்லாம் பண்ணுறாங்க என்று நான் அடிக்கடி கேட்டவர்கள் கொலம்பியாவின் கேப்டன் Carlos Valderrama & ஒரு செத்த கடின விசிறி..





முதல் ரவுன்டில்

Biyick கோல் அடிக்கும் காட்சி



USSRக்கு எதிரான மேட்சில் கோல்கீப்பர் Nery Pumpido காலை உடைத்துகொண்ட காட்சி..sustitute ஆக வந்த Sergio Goycoechea சீரிஸின் சிறந்த கோல்கீப்பர் ஆக தேர்வு செய்யப்பட்டர்



ருமேனியாவுக்கு ஆப்படித்த சிங்கம் Roger milla வெற்றி களிப்பில்




சிக்குனான்டா என்று வந்த சான்ஸில் மேற்கு ஜெர்மனியின் Rudi Völler யூகோஸ்லோவியாவுக்கு எதிரான மேட்சில் 4- 1 கோல் அடித்து வென்ற காட்சி





இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையே நடந்த மேட்சின் போது..











2- வது ரவுன்டில்

பிரேசிலை ஜெயித்த போது Maradona.Caniggia அடித்த ஒரு கோலே போதுமானதாக இருந்தது. இந்த மேட்சில் Maradona பிரேசிலின் Out a & out 5 defender களால் கவர் செய்யப்பட்டிருந்தார்..




கொலம்பியாவுக்கு எதிரான மேட்சில் கேமரூனின் Roger MIlla





இந்த படத்தில் இருக்கும் ஹாலந்தின் Frank Rijkaard ம் ஜெர்மனியின் Rudi Völler ம். இந்த மேட்ச் முழுவதும் பங்காளிகள் போல சண்டையிட்டு கொண்டே இருந்தனர்.. இந்த படம் எடுத்த அடுத்த வினாடியில் Frank Rijkaard, Rudi Völler ன் முகத்தில் துப்பியதால் வெளியேற்றபட்டார். Rudi Völler க்கும் 2 வது மஞ்சள் அட்டை காட்டபட்டு வெளியேற்றபட்டார்





கால் இறுதியில்

இத்தாலிக்கும் அயர்லாந்துக்கும் இடையே நடந்த போட்டியில் கோல அடித்த வெற்றி களிப்பில் Salvatore Schillaci. இந்த சீரிஸில் மிக அருமையாக விளையாடியவர்.



கேமரூன்க்கு எதிரான மேட்சில் ஜெயித்த போது Paul Gascoigne .. இந்த சீரிஸ் முழுவதும் இங்கிலாந்து எல்லா மேட்சிலும் உயிரை குடுத்து விளையாடியே ஜெயிக்க முடிந்தது..




அரையிருதியில்


அர்ஜென்டினா - இத்தாலி.. அர்ஜென்டினா penalty shoot outல் வென்றது..




"Why the F**k didn't I get the ball??" Schillaci is furious after yet another missed chance by Italy.





ஜெர்மனி - இங்கிலாந்து. ஜெர்மனி penalty shootout ல் வென்றது

Chris Waddle யை தேற்ற முயர்ச்சிக்கும் ஜெர்மனியின் கேப்டன் Lothar Matthäus



Paul Gascoigne




இறுதி போட்டியில்

Luciano Pavarotti



Brehme அடித்த ஒரே பெனால்டி கோல்







23 Comments:

Blogger வசந்தன்(Vasanthan) said...

நல்ல தொகுப்பு.
தொடரட்டும்.

1998 இறுதிப்போட்டியிலும் பிரான்ஸ் பத்துப்பேருடன் விளையாடி வென்றது. சரிதானே?

5/29/2006 04:27:00 PM  
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அடுத்த இடுகை எப்போ-ன்னு தேடியது இதற்காகத்தான். 90-இல் காமரூன் அசத்திட்டாங்க இல்ல? அந்தப் போட்டிகளின்போது எல்லோரும் ரோஜர் மில்லாவின் விசிறிகளானோம். கூடவே காமரூன் வென்றால் தனா அண்ணா வாங்கித் தரும் ஐஸ்கிரீமும். :)

ஊர்ல இருந்தா எப்படியிருக்கும் என்று நினைக்க வைக்கின்றன உங்களின் இடுகைகள்.

நானிருக்கும் ஊரில் இத்தாலிய பப்களில் பெரிய சைஸ் டிவிக்களில் ஆட்டத்தைப் பார்ப்பதற்காகவே மக்கள் கூடுவார்கள். இந்த முறை ஒரு ஆட்டமாவது பார்க்கும் எண்ணமுள்ளது. இன்ஷா அல்லா.

5/29/2006 05:12:00 PM  
Blogger Karthik Jayanth said...

வசந்தன்,

நன்றி..

பொறுமையா இருங்க..

(இப்படி ஏதாவது சொன்னாத்தான் நீங்க அடிக்கடி வந்துட்டு போவிங்க :-))

5/29/2006 05:23:00 PM  
Blogger இலவசக்கொத்தனார் said...

நல்லா இருக்கே இந்தத் தொடர். அடுத்தது இந்த மாதிரி கிரிக்கெட் உலகக் கோப்பைக்கும் ரெடி பண்ணி வச்சுக்குங்க.

5/29/2006 05:28:00 PM  
Blogger Karthik Jayanth said...

மதி,

சரியா சொன்னிங்க.. அதுவும் துவக்க மேட்சில் அர்ஜென்டினா யாருடா இவனுக.. நம்ம கிட்டயேவான்னு தெனாவட்ட வந்ததுக்கு சரியான Royal treatment :-)

Roger milla விடம் நான் இன்றளவும் வியக்கும் விஷயம் இதுதான்.. அந்த வயதில் மனுசன் எப்படி இவ்வளவு ப்சிகல் பிட்னஸுடன் ஓட முடிந்தது என்றுதான்.. நான் ஸ்கூல் டீமில் இருந்த கால கட்டத்திலயே 70 - 80 நிமிடந்தின் ஆரம்பத்திலயே அயர்ந்து விடுவேன்.. அதுவும் Penalty shoot out என்றால் அய்யோ சாமி என்று ஆகிவிடும்..

நான் இந்த கால்பந்தாட்ட சீசனில் மிகவும் மிஸ் செய்வது எனது அப்பா -இருவரும் எந்த நேரமும் இதை பற்றியே பேசிக்கொண்டு இருப்போம்.. & அம்மா - உங்களுக்கு வேறு வேலையே இல்லையா என்ன என்று சொல்லிவிட்டு "டே கார்த்தி இன்னைக்கு யாரும் யாரும்டா விளையாடுறங்க" அப்படின்னு கேப்பாங்க..

உங்கள் எண்ணம் நிறைவேறட்டும் :-)

5/29/2006 05:36:00 PM  
Blogger Unknown said...

கார்த்தி ஸ்கூல் நாட்களில் இது பற்றி பேசுவதற்கும் சண்டைப் போடுவதற்கும் நிறைய நண்பர்கள் இருந்தார்கள்.. இப்போதைய அலுவலகத்தில் கிரிக்கெட் ரசிகர்களே அதிகம்... வசதியாப் போச்சு உங்க பதிவு போதும் நம்ம விளையாடுறதுக்கு

தேர்தலுக்கு ஒரு இட்லி வடை பதிவு மாதிரி கால்பந்துக்கு கார்த்தி பதிவு....

வீட்டுல்ல முதல்ல செட் டாப் பாக்ஸ்க்குச் சொல்லணும்.. எந்த சேன்ல்ல காட்டுவான்னு தெரியல்ல?

5/30/2006 12:25:00 AM  
Blogger பரஞ்சோதி said...

1990 போட்டியின் முக்கியமான போட்டிகள் அனைத்து பார்த்தேன்.

போட்டியில் பல சுவாரஸ்யமான விசயங்கள் நடந்தன, நீங்க சொன்ன மாதிரி கேமரூன் ஒரு கலக்கு கலக்கியது.

அர்ஜெண்டினாவுக்கு அதிஷ்டமே அவர்களது மெயின் கோல்கீப்பர் அடி வாங்கி வெளியேறியது தான், அடுத்து வந்தவர் கலக்கிபுட்டார், போட்டி முடியும் வரை அவருக்கு தனி ரசிகர் மன்றமே வைத்திருந்தோம். அவரால் தான் இறுதிப்போட்டி வரை அர்ஜெண்டினா வந்தது.

கொலம்பியா கோல்கீப்பரை ஏமாற்றி காமரூன் ரோஜர் போட்ட கோல் சூப்பர் கோல்.

இத்தாலி சிலாச்சி, எதிரணி கோல் போஸ்ட் கிட்டவே காவல் கிடப்பார், பந்து வந்ததும் கோல் போடுவார் என்று நாங்க சொல்லி சிரிப்போம் அது மாதிரியே அவர் நிறைய கோல் போட்டார்.

இறுதிப்போட்டியில் மரடோனா அழுதது நினைவில் நிற்குது. அவர் ஒவ்வொரு முறையும் நடுவரிடம் போய் முறையிட்டது, அவரது ஆட்கள் வெளியேற்றப்பட்டது எல்லாம் பார்க்க பாவமாக இருந்தது.

5/30/2006 12:49:00 AM  
Anonymous Anonymous said...

//இந்த படத்தில் இருக்கும் கொலம்பியாவின் Frank Rijkaard ம் ஜெர்மனியின் Rudi Völler ம்.//

Frank Rijkaard is from Holland .

5/30/2006 01:01:00 AM  
Blogger உங்கள் நண்பன்(சரா) said...

படித்தேன் ரசித்தேன்....
மிகவும் நல்ல பதிவு....
தொடர வாழ்த்துக்கள்....

அன்புடன்...
சரவனன்

5/30/2006 01:02:00 AM  
Blogger Karthik Jayanth said...

தேவ்,

ஒத்த சிந்தனையுள்ள நண்பனை சந்தித்ததில் சந்தோஷம் :-) . நான் இந்தியாவில் இருந்த போதும் இதே பிரச்சனைதான்.. இங்கு வந்த பிறகு.. Football க்கு பேர் இங்க Soccer..

மத்த மடி நான் இட்லி வடை மாதிரி எல்லாம் அப்டேட் குடுக்க முடியுமா என்று தெரியவில்லை.

5/30/2006 11:04:00 AM  
Blogger Karthik Jayanth said...

பரஞ்சோதி,

நீங்க சொன்னது எல்லாமே சரிதான். சிலாச்சி என்ன பண்ணுவார். அவர் ஒரு அதிகமாக ஸ்டிரைக்கர் மட்டுமே.. மிட்பீல்டரா இருந்திருந்தா தல Zidane மாதிரி கலக்கி இருப்பாரோ என்னவோ...

பரணீ,

முதல் வரவு.. நல் வரவு ஆகுக..

Frank Rijkaard is from Holland

நீங்க சொன்னது சரிதான்.. இப்ப பதிவுல எப்படி சரி பண்ணுறதுன்னு எனக்கு தெரியல..

சரவணன்

முதல் வரவு.. நல் வரவு ஆகுக..

நன்றி

5/30/2006 11:18:00 AM  
Blogger Unknown said...

Hey Karthick,

This is when Brasil plays
14th June against Croatia
18th June against Australia
23rd June against Japan.

I guess croatia should be able give some fight to Brasil.

Others should be easy for Brasil.

The toughest part two of these matches are in the middle of the night that too week days.. But still cant miss Brasil in action maa:)

6/02/2006 01:02:00 AM  
Blogger கைப்புள்ள said...

பட்டையைக் கெளப்புறீங்க கூட்டாளி...படங்களும் விவரிச்சிருக்குற விதமும் அருமை. இடாலியா90 நடக்கும் போது நான் ஸ்கூல் படிச்சிட்டு இருந்தேன்...அப்போ ஃபுட்பால் ஸ்டார்ஸ் படம் போட்ட கார்டுகள் எதோ பபுள்கம் வாங்குனா கெடக்கும்...Caniggia படத்துக்கும் Goycoechea படத்துக்கும் எப்பவும் கிராக்கி. கால்பந்து இந்த மாதிரி பெரிய அளவுல நடக்கும் போது தான் பாக்குறதுன்னாலும்...பாக்க ஆரம்பிச்சாச்சுன்னா த்ரில்லிங்கா போவும். எங்க வீட்டுலயும் எங்க அப்பாவும் விரும்பிப் பாப்பாரு...90ல Holland வீரர் Ruud Gullitஐ அப்ஸ் ஃபாலோ பண்ண சொன்னாரு...அப்பவே அவருக்கு வயசாயிட்டதாலயும்...மரடோனா போலவே "Marked player"ன்ங்கிறதால சிறப்பா அவரால ஆட முடியலை. மத்தபடி நல்ல மலரும் நினைவுகள். Keep up the good work.

6/02/2006 08:58:00 AM  
Blogger Karthik Jayanth said...

தேவ்,

//I guess croatia should be able give some fight to Brasil.

Others should be easy for Brasil.


நானும் இப்படித்தான் நினைக்கிறேன்.. ஆனா ஆப்பு எந்த நேரத்துல எப்படி வரும்ன்னு சொல்லமுடியாது :-).

GO BRAZIL GO ! FOOTBALL IS MY RELIGION !

6/02/2006 04:00:00 PM  
Blogger Karthik Jayanth said...

கூட்டாளி,

Caniggia ஒரு எக்சலன்ட் டீம் பிளேயர்.. நானும் அப்ப ஸ்கூலு பையன் தான்.. நானும் அந்த மாதிரி காசை எல்லாம் பபுள்கம் வாங்கியே கரைச்சிருக்கேன்.. நல்ல பிளேயர் வர்றதுக்கு பெட்டிகடைலயே பழியா இருப்பேன்..

சொந்த ஊருக்கு போனா அம்மாவை கூட்டிகிட்டு போய் ஒவ்வொரு பிளேயர் கார்ட்டா பாத்து எடுப்பேன்.. கடைகாரர் ஒண்ணும் சொல்ல முடியாம முழிச்சிக்கிட்டு இருப்பார்..

ஸ்கூல் மேட்ச்ல எல்லாம் மரடோனா மாதிரி மேனரிசம் பண்ணிக்கிட்டு.. ஹும் அது ஒரு காலம் கூட்டாளி..

6/02/2006 04:14:00 PM  
Blogger Syam said...

Karthik, excellent posts, world cup ku munnadi palaya nenaivukal flashback super...

6/03/2006 10:01:00 AM  
Blogger தருமி said...

கார்த்திக்,
நானும் ஒரே ஒரு பதிவு போட நினச்சிருக்கேன். உங்கள மாதிரி டீம் பேரெல்லாம் கரெக்டா ஞாபகம் வச்சுக்க முடியறதில்லை. ஆனால் 1986 மேட்ச் பார்த்த அனுபவமே தனி. அதைப் பற்றி எழுதணும். நம்ம ஊர்ல எந்த டைம்ல மேட்ச் நடக்கும்னே இன்னும் தெரியலை.

ஆளுகளோட ஒண்ணா உக்காந்து மேட்ச் பார்க்கிற ஜாலியே தனி. சொல்றதப் பாத்தா பேசாம உங்க அப்பாகூட கூட்டணி வச்சுக்கலாம்போல இருக்கு...

6/03/2006 10:41:00 AM  
Blogger Karthik Jayanth said...

ஊர் பெரியவங்களே,

வணக்கமுங்க !. 86 மேட்ச்தான் நான் முதலில் ரூல்ஸ் தெரிஞ்சி பார்த்த சீரிஸ்.. www.bbc.co.uk -> sports section -> world cup 2006ல ஒரு downloadable PDF இருக்கு. அதுல நேரம் BST, எங்க நடக்குது, யார் யார் கூட விளையாட போறங்கன்னு எல்லாமே இருக்கு. அது உங்களுக்கு உதவியா இருக்கும் :-) . கண்டிப்பா எழுதுங்க .. நான் படிப்பேன்.

//அப்பாகூட கூட்டணி வச்சுக்கலாம்போல இருக்கு...

கொள்கைக்கான கூட்டணி வாழ்க! :-)

6/03/2006 11:03:00 AM  
Blogger Karthik Jayanth said...

Syam ,

Thanks for u r comments .. BTW welcome to my blog ! have fun !

6/03/2006 11:04:00 AM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

கார்த்திக்,
அருமையான காலத்திற்கேற்ற பதிவு.
கலக்குறீங்க.

நம்மூருல எந்த சானல்ல உலகக்கோப்பை கால்பந்துகாமிக்கிறாங்க?

6/03/2006 02:06:00 PM  
Blogger ab said...

Live telecast in Univision.
Recorded matches in Telefutura. Commentary is in Spanish. Soccerrukku ethu language problem?

Long live Spanish Channels.

6/06/2006 03:32:00 PM  
Blogger Karthik Jayanth said...

சிறில் அலெக்ஸ் சார்,

நம்ம ஊர்ல இந்த டிஷ் நெட் ஒர்க்ல எதோ பேரு தெரியாத ஸ்பானிஷ் சேனல்ல வருது.. இல்ல காம்காஸ்ட்ல கோல்டிவின்னு ஒரு சேனல் 602 வருது. அதுலயும் வருது.. இது போக ஒரு பிரேசில் வெப்சைட் இருக்கு.. அதுல மேட்ச் முடிஞ்சதும் எல்லாரும் பார்க்குற மாதிரி இருக்குமாம்.. மேட்ச் நடக்கும் போதே பார்க்குறதுக்கு அந்த சைட்ல மெம்பர் ஆகணும்ன்னு இருக்கு..

6/06/2006 03:50:00 PM  
Blogger Karthik Jayanth said...

Ganesh,

Thanks for the Info and comments :-)

6/06/2006 03:52:00 PM  

Post a Comment

<< Home