Sunday, June 04, 2006

யோசிச்சிதான் பேசுறாங்களா ?

மேட்டர் என்னன்னா நேத்தோ இல்ல இன்னைக்கோ தமிழர்களின் பாசறையாம் சென்னை பட்டனத்தில், பகுத்தறிவு டிப்போவில் கிட்டத்தட்ட 50 - 60 வருசங்களாக அண்டா அண்டாவாக பகுத்தறிவு பாலை குடித்த பின்னும் எதுவும் சிந்தாமல் இருப்பதற்க்காக அதை சேர்ந்து வைக்க மஞ்சள் துண்டு போட்டிருக்கும் பகலவன் நேத்து கண்ணகி சிலைய தொறந்து வைச்சி இருக்குறார் - இது செய்தி

***

வைரமுத்து

"கண்ணகி சிலை வெறும் உலோகம் இல்லை, எங்கள் உலகம்"

சரி கரெகட்டு !

"தலைவிரி கோலத்துடன் கண்ணகி சிலை இருப்பது சென்னை நகரத்திற்கும் தமிழகத்திற்கும் அபசகுணம் என்பதால் அகற்றப்பட்டதாக கூறப்பட்டது"

சரி மைக்கை புடிச்சிட்டிங்க ! முழுங்காம வுடமாடிங்க! அதுனால இதையும் பொறுத்துகிடுறோம் (ஹி ஹி இந்த காமெடிக்கே அசந்துட்டா எப்படி !)

"கண்ணகி சிலை அகற்றப்பட்ட பிறகு தான் வங்கக்கடல் சீறி சுனாமி வந்தது"

எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இந்தோனேஷியாவுல பூமி லைட்டா ஷேக் ஆனதுனால அதோட தொடர்ச்சியா அது தமிழ் நாட்டையும் தாண்டி ஆடிட்டுத்தான் நின்னுச்சி. ஒருவேளை சிலை அங்க இருந்திருந்தா அந்த சிலை என்ன டிராபிக் போலிஸ் மாதிரி சுனாமிய திருப்பிவிட்டு இருக்குமா ?

இதுதான் அண்ணன் பேசுனதுலயே டாப் காமெடி.. இங்க எத்தனை ஸ்மைலி போடுறதுன்னே எனக்கு தெரியல.. படிச்சிட்டு சிரிப்பா இருக்கு காலைல இருந்து.. முடியலப்பா.



***


1)இது தவிர கண்ணகி பாண்டிய மன்னன் செய்த குற்றத்திற்க்கு அவனையும், அந்த குற்றம் சம்மந்தபட்ட அனைவரையும் கொன்ற பிறகும், எந்த பாவமும் செய்யாத குடிகளையும் கொன்றது எந்த வகை நியாயம் ?

2) பாண்டிய மன்னன் செத்தவுடன் அவனின் மனைவியும் செத்துபோய்ட்டங்க.. அப்படி இருந்தும் யாரும் அவங்களை கண்டுகொள்ளடவில்லை

3) கோவலன் மாதவி பின்னாடி போன போதெல்லாம் ஒண்ணும் செய்யாமல், சொத்து, பணம், மானம் இவை எல்லாம் இழந்த போதும் கோவலனை கண்டிக்காமல் கண்ணகி சும்மா இருந்தது ஏன் ? . இப்படி பட்ட பிற்போக்கு சிந்தனைகளோடுதான் பெண்கள் இருக்கவேண்டும் என்று சொல்லுகிறார்களா ?

இப்படிபட்ட கண்ணகிக்கு எதுக்கு கற்பின் மறு உருவம், அப்படி இப்படின்னு வேண்டாத பில்டப்பு கொடுக்கிறார்கள்

11 Comments:

Anonymous Anonymous said...

Nalla kelvi, badhil solladhaan yaarum illa pola irukke??!! Naan school'la padikkumpodhey indha kelviya kettu bench mela ninnaen :-(

Yaarum urupadara maadhiri theriyala

6/05/2006 06:14:00 PM  
Blogger Santhosh said...

தமிழனுக்காக கழுவேற தயாராக இருக்கும் தங்கத்தலைவனை பார்த்து கண்டனக்குரல் எழுப்புவதை நான் கண்டிக்கிறேன்(எப்பா எங்களை நிம்மதியா அரசியல் செய்ய உடமாட்டியா? மதுரையில் ஊடு எங்க நம்ம சின்ன தலை அங்கன தான் இருக்காரு ஆட்டோ அனுப்பனுமா?).

ஓ நமக்கு சொந்த ஊரு மதுரையா அதுதான் ஊரை எரிச்சிடாங்கன்ற கோபம். :))

6/06/2006 03:17:00 PM  
Blogger Karthik Jayanth said...

Anony,

Thanks for comments.

//kettu bench mela ninnaen :-(

Oh boy.. welcome to the gang :-)

6/06/2006 03:56:00 PM  
Blogger Karthik Jayanth said...

சந்தோஷ்,

இதுக்கேவா ? :-)))..

யாருமே யோசிக்கலைன்னாலும் நீயே ஆரம்பிச்சி வைச்சுடுவபோலயே :-)))

6/06/2006 07:06:00 PM  
Blogger Unknown said...

கண்ணகி பற்றி இந்த வார இறுதியில் பதிவு போட உள்ளேன் கார்த்திக்.இதுபற்றி விவரமாக எழுதலாம் என்று இருக்கிறேன்

6/06/2006 07:24:00 PM  
Blogger Karthik Jayanth said...

செல்வன்$

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

நீங்கள் இதை பற்றி உங்க முதல் பதிவில் எழுதியதிலிருந்து ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

All the best !

6/06/2006 07:51:00 PM  
Blogger அருள் குமார் said...

நல்ல கேள்விகள் கார்த்திக்.

//இப்படிபட்ட கண்ணகிக்கு எதுக்கு கற்பின் மறு உருவம், அப்படி இப்படின்னு வேண்டாத பில்டப்பு கொடுக்கிறார்கள்// கண்ணகிக்கு மட்டுமா? இன்னும் எத்தனை பேருக்கு எத்தனை பில்டப்புகள் என கணக்குப் போட்டால் தமிழ்மணம் தாங்காது! இவற்றையெல்லாம், யோசிக்கத்தெரியாத வயதிலேயே நமக்கு போதிக்கும் நம் கல்வியாளர்களை என்ன சொல்ல?!

6/06/2006 09:55:00 PM  
Blogger ilavanji said...

//கண்ணகி சிலை அகற்றப்பட்ட பிறகு தான் வங்கக்கடல் சீறி சுனாமி வந்தது"
//

வைரமுத்துவா?! மைக்கைப்புடிச்சிட்டா எல்லாரும் ஒரே ரகம்தான் போல...

இதையெல்லாம் படிக்கறப்ப எவ்வளவோ சான்சு குடுத்தும் மைக்கை பிடிச்சிக்கிட்டு பாட்டுக மட்டுமே பாடறமாதிரி ந(க)டிச்சிட்டுப்போன மோகன் தெய்வம்க! :)

6/07/2006 06:35:00 AM  
Blogger Karthik Jayanth said...

அருள்குமார்,

முதல் வரவு.. நல்வரவு ஆகுக..

"டீச்சர் கோவலன் ஊர்லயே பெரிய பணக்காரன். கண்ணகியும் பெரிய பணக்கார வீட்டுல இருந்து வந்தவங்க.சீதனம் வேற நிறைய கொண்டு வந்தவங்கன்னு போன கிளாஸ்ல சொன்னிங்க. இவ்வளவு பணத்தையும் ஒரு சின்ன வீட்டுக்கா கோவலன் கொடுத்தான். கண்ணகி ஒண்ணுமே சொல்லலையா டீச்சர்".

இப்படி கேட்ட 1 கேள்விக்கு தமிழ் டீச்சர், கிளாஸ் மிஸ், ஹெட்மிஸ்டஸ், ஹாஸ்ட்டல் வார்டன், போற வர்ற வாத்தி, வீட்டுல ந்னு எவ்வளவு ரீவிட்டு வாங்கி இருப்பேன்னு நான் சொல்லித்தான் உங்களுக்கு புரியவைக்கணுமா :-))))))))))))))))))))))

இந்த மாதிரி பல கேள்விகளை கேட்டு சின்ன வயசுலயே டிப்போ வைக்குற அளவுக்கு ரீவிட்டுகளை வாங்கி இருக்கிறேன்.

6/08/2006 02:18:00 PM  
Blogger Karthik Jayanth said...

இளவஞ்சி வாத்தியார்,

எய்தவனிருக்க அம்பை நோவனேன் ? :-)

அவரு என்ன செய்வாரு.. சொன்ன வேலைய சுத்தமா முடிச்சவரு.. என்ன கொஞ்சம் சுதாரிச்சிருக்கலாம்.

6/08/2006 04:07:00 PM  
Anonymous Anonymous said...

"கண்ணகி சிலை அகற்றப்பட்ட பிறகு தான் வங்கக்கடல் சீறி சுனாமி வந்தது"

pagutharivu paasaraiyilirundhu oru seeriya sindhanai!!!

paguthu aridhal enbadhu enna enbadharku oru sirandha udharanam!!!

Vairamuthu maadhiriye sollavendum endraal, "Kannagi silayai meendum vaithu, Maduraiyai marrum oru murai erikkiralgal!"

Anbudan,
Saravanan ( Oru Maduraikaran! )

6/18/2006 08:59:00 PM  

Post a Comment

<< Home