Saturday, June 03, 2006

நினைவுகள் கால்பந்தாட்டம் - 3

பாகம் - 1 , பாகம் - 2
கால்பந்தா ? எங்களுக்கு தெரியாதா என்ன ?.. ஒரு 10 பேரு கிளாடியேட்டர் மாதிரி டிரஸ் போட்டுகிட்டு மூஞ்சுறு முகம் மாதிரி இருக்குற பந்தை எடுத்துகிட்டு ஒரு கோட்டை பாத்து ஓடும்போது, அடுத்த பக்கம் இருக்குற 10 பேரும் 'மாப்பிள்ள.. அவன் தான்டா, அமுக்குடான்னு சொல்லிகிட்டு மடக்கி அவன் மேல அம்முவாங்களே' அந்த விளையாட்டுத்தானே என்று சரியாக தப்பா சொல்லும் அமெரிக்காவில்தான் 94 உலக கோப்பை நடந்தது..

எங்க எல்லா மேட்ச்சும் காத்தாட போகுது ! இதுதான்டா FIFA World cup சூப்பர் பிளாப் அப்படின்னு சொன்ன / நினைத்த எல்லாரும் அது தப்பு அப்படின்னு கடைசில ஒத்துகொண்டார்கள்.. (மேட்ச் ஒன்றுக்கு 70000 பேர் - சராசரியாக - இதை நான் படித்த நினைவுகளிலிருந்து எழுதுகிறேன்.. தவறாகவும் இருக்கலாம்.).

இந்த துவக்க உரையாற்றி ஆரம்பித்து வைத்தவர் உலக அண்ணாத்தே ரசீது அவர்கள் - Bill Clinton :-) . அப்ப பார்க்கும் போது இன்னும் ஸ்லிம் ஆக இருந்ததாக ஞாயபகம்..

***

இந்த சீரிஸில் சில முக்கிய நினைவுகள்


தல Diego Maradona banned substance உபயோகித்தார் என்று சொல்லி, அவரை இனி வரும் ஆட்டங்களிலிருந்து விலக்கியற்க்கு முன்னர் நைஜிரியா உடன் ஆடிய மேட்ச்சில் Maradona வின் தனிதிறமை பார்த்து நான் அதிர்ந்தது உண்மை..82 , 86 பார்த்த மாதிரியே இருந்தது. கால் பந்து போன்ற Higly demanding விளையாட்டில் 12 வருடங்களாக அதே கன்சிஸ்டன்ஸி காட்டுவது எல்லாருக்கும் வராது.. நான் மதிக்கும் Gabriel Batistuta, juan sebastian veron, Ariel Ortega போன்ற பல வீரர்கள் இருந்தும் Diego Maradona இல்லாத அதிர்ச்சியில் யாருமே சரியாக விளையாடவில்லை என்பதே உண்மை :-(

Back pass என்று சொல்லபடும் முக்கிய ரூல கொண்டு வரப்பட்டது இன்ஸ்டன்ட் சக்சஸ்தான்.. இந்த ரூல் அழுகுனி ஆட்டம் ஆடும் Defender களை நிறைய attacking கேம் ஆடும்படி நிர்பந்தம் செய்தது.. ஆட்டத்தின் விறுவிறுப்பும் கூடியது :-)

ஜெர்மனி டீமில் எல்லாரும் கிழட்டு சிங்கங்கள் ஆகியிருந்தார்கள் அல்லது விளையாட தெரியாத சின்ன பசங்களா இருந்தார்கள். எனக்கு தெரிந்து அந்த டீம் குவாட்டர் பைனலில் வெளியேறபோது Klinsmann கிரவுன்டில் அழுதது மனதை தைத்தது.ரஷ்யாவின் Oleg Salenko 5 கோல் அடித்தும் அது அவரின் தனிப்பட்ட ரெக்கார்ட்டை வளர்க்க மட்டுமே உதவியது..
நம்ம கேமரூனின் சிங்கம் Roger Milla தனது 42 வது வயதில் கடைசி முறையாக ரஷ்யாவுக்கு எதிரான மேட்சில் 1 முறை கர்ஜித்தது..சவுதி அரேபியாவின் Saeed Owairan பெல்ஜியத்துக்கு எதிரான மேட்ச்சில் தனியாக அடித்த 1 கோல் சூப்பர்.

இந்த சீரிஸில் 2 சூப்பர் ஸ்டார்கள் 1)Roberto Baggio (Italy) & 2) Romareio & Bebeto (Brazil) இதில் Romareio வுக்கும் டீம் மேனஜருக்கும் ஒத்து வராது..FC Barcelona இல் Romareio தான் கீ பிளேயர் அப்போது.

குவாட்டர் பைனலில் நடந்த ஹாலந்து - பிரேசில் மேட்சில், Branco ப்ரீ கிக்கில் அடித்த கோல் சூப்பர்.

70-பதுகளுக்கு பிறகு, பிரேசில் ஜெயித்த உலககோப்பை இது.. செமி & பைனல் மேட்ச்சில் பிகிலு ஊதுபவர் ஒரு தலை பட்ச்சமாக நடந்தது வேறு இதற்க்கு உதவியது.

சுவீடனின் Dahlin, Brolin and Andersson கூட்டணி மிகவும் நன்றாக விளையாடியது,அந்த டீமிற்க்கு வெண்கல பதக்கத்தை பெற்று தந்தது.. குறிப்பாக பல்கேரியாவும் சுவீடன்னும் விளையாடிய அந்த கடைசி மேட்ச் சிம்பிளி சூப்பர்..

***

முதல் ரவுண்டில்


பிரேசிலின் Legend Dr Socrates - Mid fielder இன் தம்பி Rai கேமரூனுக்கு எதிரான மேட்ச்சில் - ஆனால் இவர் ஒரு Substitute மட்டுமே.கிரீஸ்க்கு எதிரான இந்த மேட்ச்சில் கோல் அடித்த மகிழ்ச்சியில் Diego Maradona.. இதுவே உலககோப்பையில் Maradonaஅடித்த கடைசி கோல். A beautiful left-footed shot from outside the penalty area.நைஜிரியாவுக்கு எதிரான இந்த மேட்ச்சில் தல Diego Maradona காட்டிய ஜிம்மிக்ஸில் நானெல்லாம் திறந்த வாயை மூடாமல் :-), ஆடாமல் அசையாமல் இருந்தேன். 15 வருடங்களாக தனது தனிதிறமையால் கால்பந்து ரசிகர்களை கட்டிபோட்டு வைத்திருந்த Diego Maradona க்கு இது ஒரு சோகமான முடிவு..பல்கேரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் Diego Siemeone, Disgraced captain Diego Maradona இல்லாமல். இந்த ஆட்டத்தில் பல்கேரியா 2 - 0 என்ற கணக்கில் வென்றதுஅயர்லாந்திடம் ஆப்பு வாங்கிய பிறகு Dino Baggio (blue shirt far right) அடித்த இந்த 1 கோலின் காரணமாக இத்தாலி அடுத்த ரவுண்டுக்கு சென்றது.. இந்த மேட்ச்சில் இத்தாலி 10 பேருடனே விளையாடியது.

2- வது ரவுன்டில்


ருமேனியாவுக்கு எதிரான ஆட்டத்தில் Gabriel Batistuta . இந்த மேட்ச்சில் ருமேனியா 3 ௨- 2 என்ற கணக்கில் வென்றது.அமெரிக்காவுக்கு எதிரான இந்த மேட்ச்சில் Leonardo பவுல் செய்து வாங்கிய போது.. பிரேசில் வெற்றி பெற்றது. ஆனாலும் அமெரிக்கா ஒரு பாதி வரை நன்றாகவே விளையாடியது.நைஜிரியாவின் கொடுத்த Rasheed Yekini(center-forward ) டார்ச்சரில் இத்தாலி டீமில் Paolo Maldini தவிர எல்லோருமே திணறினார்கள்.
காலிறுதியில்


Roberto Baggio அடித்த இந்த கோல் ஸ்பெயினுக்கு ஆப்படித்து வெளியேற்ற போதுனதாக இருந்தது.. Roberto Baggio தான் ஒவ்வொரு மேட்ச்சிலும் வின்னிங் கோல் அடித்தார். அதாவது கடைசியில் சொதப்பும் வரை :-(ஹாலந்துக்கு எதிரான இந்த மேட்ச்சில் Bebeto இந்த கோலை அடித்ததையே முதலில் ஒத்துகொள்ள முடியாது. அப்போது Romario offside இல் இருந்தார். பிகிலு ஊதுபவர் பொட்டி வாங்கிடார் என்றே எல்லொரும் சொன்னார்கள்ஆனால் Branco அடித்த இந்த Free kick கோல் சூப்பரப்பு :-)ஜெர்மனி டீம்மை மொத்திய மகிழ்ச்சியில். இதற்க்கு முன்னால் பல்கேரியா உலக கோப்பை மேட்ச்சில் ஒன்றில் கூட வெற்றி பெற்றது கிடையாது.
அரையிறுதியில்

பல்கேரியாவுக்கு எதிரான இந்த மேட்ச்சில் Roberto Baggio 2 கோல் அடித்தார்.முதல் ரவுன்டில் சரியாக விளையாடத போது அவரை மீடியாக்கள் ரவுன்டு கட்டி கிழித்தது வேறு கதை.இத்தாலியின் Iron wall of defense நோ கமென்ட்ஸ். பாவம் Emil Kostadinov (Bulgeria)டே வர்ரான்டா.. சுத்துடா அவனை !.. இந்த மேட்ச்சில் Romarioவை இப்படித்தான் சொல்லி வைத்து ரவுன்டு கட்டினார்கள் சுவீடனின் வீரர்கள்இந்த சிரீஸ் முழுவதும் சுவீடனின் Tomas Brolin நன்றாக விளையாடினார் என்று சொன்னால் அது சாதாரண வார்த்தையாக இருக்கும்.. Tomas Brolin was one of the best players in the World Cup and appeared on many Best XI's after the tournament.விளையாட்டின் 80 வது நிமிடம் சுவீடனின் வீரர்கள் அசந்த நேரம் Romario அடித்த மேட்ச் வின்னிங் கோல்
இறுதியில்

இந்த மேட்ச்சில் Romario க்கு சிறிதளெவே வாய்பளிக்கபட்டது.. அதை திறமையாக செய்த்தது இத்தாலியின் Defense டீம்Franco Baresi clears away the ball before Romario. The Italian captain played the game of his life in the final. He got injured in a first round match and missed every game leading up to the final, but in the final itself Baresi proved to be the classy defender everyone knew he was.Roberto Baggio followed closely by Cafu. The quality of defensive play was extremely high in the final, and Baggio wasn't the only attacker who had problems.The moment of truth. Roberto Baggio fires his penalty over the bar in the shoot-out and Brazil are the new world champions.

பெனால்ட்டி -ஷாட்டுக்கு முன்னால்

Roberto Baggio and Franco Baresi with silvermedals. Both had played outstanding throughout the tournament, but missed in the penalty shoot-out.
பிரேசில் டீம் - 94


நிற்பது (இடமிருந்து வலம்): Taffarel, Jorginho, Aldair, Mauro Silva, Marcio Santos and Branco.அமர்ந்திருப்பது(இடமிருந்து வலம்): Mazinho, Romario, Dunga, Bebeto and Zinho.
* இங்கு இருக்கும் சில ஆங்கில வார்த்தைகள்தான் நான் நினைத்தது.. ஆனால் அதை அப்படியே தமிழில் கொண்டு வரமுடியாததால் அப்படியே ஆங்கிலத்தில் இட வேண்டியதாயிற்று.

5 Comments:

Blogger தேவ் | Dev said...

Hey Karthick,

That famous craddle gesture by Bebeto and Romario..

U havent mentioned about that buddy

6/05/2006 02:36:00 AM  
Blogger Ganesh said...

Karthik,

Good Work.
I want to mention Bulgaria's Letchkov's goal from free kick.

Regards
Ganesh

6/06/2006 03:40:00 PM  
Blogger Karthik Jayanth said...

Dev,

I am not able to recollect which gesture u meant to say.. Its been ages since i saw these matches.

Let me know about it..

6/06/2006 05:03:00 PM  
Blogger Karthik Jayanth said...

Ganesh,

Thanks for your inputs.

I had some set of picutures from each FIFA world cup, from which I try to write to the best of my knowledge..

6/06/2006 05:05:00 PM  
Blogger தேவ் | Dev said...

Karthick,

It was the time when bebeto's wife had delivered a baby.. so each time brasilians scored a goal similar to Roger milla's gesture the brasilian stars went to the corner of the field and did that cradling gesture..

u know holding the baby in the hand and cradling it..

6/06/2006 09:24:00 PM  

Post a Comment

<< Home