நினைவுகள் கால்பந்தாட்டம் - 1
கால் பந்து அப்படின்னு சொன்னதும், எது ஒரு பெரிய மைதானத்துல ஒரு பந்துக்காக அடிச்சிகிவாங்களே / இந்த கால்லயே உதைச்சிகிட்டு ஓடுவாங்களே / ஒரு வலைல பந்தை தள்ளிவிட்டுட்டு என்னமோ தலைகால் தெரியாமா குதிபாங்களே / இதுல எதுக்கு ஓடுரோம்ன்னே தெரியாம ஒருத்தர் பிகிலு வச்சிக்கிட்டு ஒயாம ஊதுவாரே அவரு யாரு ? அந்த விளையாட்டான்னு பார்த்திபன் மாதிரி அறிவு (?) பூர்வமா கேட்கும் ஆளுங்களா நீங்க அப்படின்னா தயவு செஞ்சி இதுக்கு மேல படிச்சி உங்க நேரத்தை வீணடிக்க வேண்டாம் சொல்லிட்டேன்..
அல்லது இன்னும் 2 மாதத்துக்கு என் பதிவு பக்கம் எட்டிப்பார்க்காலும் இருக்கலாம்.. (ஆமா இப்ப அப்படி எத்தனை பேரு வந்துட்டாங்கன்னு இப்படி பிலிம் காட்டுறன்னு நீங்க சொல்லுறது எனக்கு கேக்குது)
உலக திருவிழாவுக்கு இன்னும் 10 நாள்களே இருக்கிறது.. கால் பந்து விளையாட்டுக்கு நான் ஒரு செத்த கடின விசிறி.. சிறு வயதில் எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் நான் ஆர்வத்துடன் பார்த்த முதல் விளையாட்டு என்றால் அது கால் பந்து / உதை பந்து தான். எனக்கு இந்த பழக்கம் எனது அப்பாவிடம் இருந்து வந்திருக்கலாம்.. எப்ப கால்பந்து திருவிழா ஆரம்பிக்குதோ அதுக்கு 2 மாசத்துக்கு முன்னாலயே எங்க வீட்டுல ஸ்போட்ஸ் ஸ்டார் & மேட்ச் ஆரம்பிக்கிறதுக்கு 10 நாள் முன்னாலயே ஹிண்டு, எக்ஸ்பிரஸ் எல்லாமே எங்க அப்பா வாங்குவார்.
இப்பொழுது போல் நான் சிறுவனாக இருந்த 80- களின் கால கட்டத்தில் டீவி ஒரு அதிசய பொருள்.. 80-களின் தொடக்கத்தில் நடந்த உலககோப்பையை அப்பாவின் நண்பர் வீட்டில்தான் பார்த்திருக்கிறேன். எனக்கு முதன் முதலில் மேட்ச் பார்க்க போனது இன்னும் நினைவில் நன்றாக இருக்கிறது.. அம்மாவுடன் சேர்ந்து பேங்க் கேம் விளையாடிக்கொண்டு இருந்தேன்.. அப்பா வந்து கார்த்தி கிளம்பு நம்ம வெளிய போய் சாப்பிட்டுவிட்டு சீனி மாமா வீட்ல போய் புட்பால் மேட்ச் பார்க்கலாம் என்று சொன்னர்கள்.. அப்ப நான் உடனே கிளம்பியதுக்கு 2 காரணம்.
1. வெளிய போனால் பை- பாஸ் கடைல சூடா பரோட்டாவும், சுக்கா வருவலும் சாப்பிடலாம்.
2. காலையில் சீக்கிரம் எழுந்து பைப்பில் தண்ணிர் அடிக்க வேண்டாம்.
இந்த மேட்சின் போது நான் ரொம்ப சின்ன பையன். பாதி மேட்ச் நடக்கும் போதே தூங்கிடுவேன்.. அடுத்த நாள் என்ன ஆச்கின்னு அப்பா கிட்ட நச்சு பண்ணிகொண்டு இருப்பேனாம். ஆனால் இந்த சீரிஸின் போது நான் கத்துகிட்ட சில ஆங்கில வார்த்தைகள் - Hooligans, hat trick, well Placed Shot, Injury, Half time, Penalty Extra ordinary, Fanstastic, Black Panthers..
Cameroon (பின்னாலதான் இது ஒரு நாடுன்னு தெரிஞ்சது),
Paulo Rossi(Italy), Diego Armando Maradona(Argentina), Zico, Socrates, Junior, Falcao(Brazil) - இது எல்லாம் முதல்ல இங்கிலீஸ் வார்த்தைன்னு நினைச்சிகிட்டு இருந்தேன்.. பின்னாலதான் தெரியும்.. இவங்க பேரை எல்லாம் தமிழ்ல எழுதி படுகொலை பண்ண சத்தியமா விருப்பம் இல்லை
82- ல் நடந்த சில முக்கிய மேட்ச் காட்சிகள் - நடந்த இடம் ஸ்பெயின்
இது 2-வது ரவுன்டில் அர்ஜென்டினாவுக்கும் பிரேசிலுக்கும் இடையே நடந்த மேட்சில் Batista வை உதைத்ததால் ரெட் கார்ட் காட்டி Maradona(தாடியுடன்) வெளியே அனுப்பட்ட போது எடுத்த படம்.. கைதட்டி வரவேற்பது Eder. இந்த சீரிஸில் Most fearsome player ஆக கருதப்பட்டது Diego maradona தான். இந்த மேட்சில் வெற்றியடைந்தது பிரேசில்.
பிரேசிலுக்கும் இத்தாலிக்கும் இடையே நடந்த மேட்சில்.. பல திறமையான வீரர்கள் இருந்தும் இத்தாலி 3 - 2 என்ற கணக்கில் ஜெயித்தது.. ஆட்ட நாயகன் Paolo Rossi.
செமி பைனலில் ஜெர்மனிக்கும் பிரான்ஸ்க்கும் இடையே நடந்த மேட்சில் பிகிலு வைத்திருக்கும் ரெப்ரி செய்த மிக பெரிய மடத்தனம் இது.. இல்லை என்றால் ஆட்டத்தின் போக்கே மாறி இருக்கும்(இது கால் பந்து விசிறிகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று).. ஆட்டத்தின் போக்கை மாற்றிய காட்சி.Patrick Battiston(France) ஜெர்மனியின் கோல்கீப்பர் Toni Schumacher ல் தாக்கபட்டு வெளியேரும் காட்சி
Karl heinz Rummennigge substituteஆக களமிறங்கிய இந்த மேட்ச் . ஜெர்மனி penalty shootout ல் வெற்றியடைந்தது
பைனலில் - Glimpse
Paolo Rossi - செயலில்
இத்தாலி டீம்
நின்றிருப்பது(இடமிருந்து வலம்) - Dino Zoff, Francesco Graziani, Giuseppe Bergomi, Gaetano Scirea, Fulvio Collovati and Claudio Gentile. அமர்ந்திருப்பது(இடமிருந்து வலம்) - Bruno Conti, Paolo Rossi, Gabriele Oriali, Antonio Cabrini and Marco Tardelli.
*******
80-களின் பின் பகுதியில் நடந்த மேட்ச் அப்ப நான் ஸ்கூல் படிச்சிகிட்டு இருந்தேன்.. அப்ப எங்க வீட்டிலயே டீவி இருந்தது.. ஒரு நேஷனல் VCR ந்னு ஒண்ணு இருக்கும்.. முதல் பட்டனை தட்டுனா கேசட் டெக் எஜெக்ட் ஆகி மேல வரும்.. அதுல எல்லா மேட்சும் ரெக்கார்ட் பண்ணுவாங்க.. அதுல மேட்ச் வாரியா அழகா நோட்ஸ் எழுதி வைச்சிருப்பார். (இப்பவும் என்னோட ரூம்ல இந்த கேசட் எல்லாம் இருக்கு.. ஆனா அதை பாக்குறதுக்குத்தான் பழைய கேசட் VCR இல்ல)
இந்த தடவை நம்ம பெரிய பையனங்கிறதுனாலயும், அறிவு வேற நிறையவே இருக்குறதுனாலயும் அப்பா சொல்லிகுடுத்ததாலயும், முதல் தடவையா விளையாட்டின் விதி முறைகளை தெரிந்து பார்த்த சீரிஸ்ன்னா அது இதுதான்.. அந்த 2 மாசம் வீட்டுல எந்த நேரம் பார்த்தாலும் கால்பந்து பற்றிய விவாதம்தான்..கிட்டதட்ட ஒரு நான் ஒரு முழு கால்பந்து விசிறியாகவும் ஆனது இந்த காலகட்டத்தில்தான். இந்த காலகட்டத்துல எனக்கு பிடிக்காத ஒரே விஷயம் என்னனா அது பள்ளிக்கு செல்வது, அப்புறம் தினமும் மாலை வேளையில் இருக்குற நாளிதழ் எல்லாத்தையும் சத்தமா வாசிக்க சொல்லுவார் எங்க அப்பா.. தப்பா சொன்னா அதுக்கு ஆப்பு உண்டு..
இந்த சீரிஸில் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால்
1) Gifted Marks man - Micheal Platini captain (France)
2) Deadly Gentleman Gary Linekar - Center Forward (England)
3) Elegant Midfield General Socretes - Midfield (Brazil)
4) Karl-Heinz Rummenigge - captain (Germany)
4) Master Monster - Diego Maradona - Captain (Argentina)
86- ல் நடந்த சில முக்கிய மேட்ச் காட்சிகள் - நடந்த இடம் மெக்சிகோ
முதல் ரவுன்டில்
அர்ஜென்டினாவும் கொரியாவும்.. இந்த சிரிஸில் நடந்த எல்லா மேட்ச்களிலும் maradona குறைந்த பட்சம் 3 defenfer-களால் எப்பொழுதும் கவர் செய்யபட்டிருந்தார்.
2 - ரவுன்டில்
உருகுவே Iron wall of defense என்று கூறப்பட்டது. அது உண்மையும் கூட.. அர்ஜென்டினா 1-0 என்று வெற்றி பெற்றது
கால் இறுதி சுற்றில் ஜென்ம பகைவர்களான அர்ஜென்டினாவும் இங்கிலாந்தும்.. இந்த மேட்சில்தான் சர்ச்சைகுள்ளான 'கடவுளின் கரம்' என்று கூறப்பட்ட கோல் அடித்த 4 வது நிமிடந்தில் கால் பந்து வரலாற்றின் இணையற்ற கோலை அடித்தார். அர்ஜென்டினா 3 - 2 என்ற கணக்கில் வென்றது. இந்த கணக்கை நிகர் செய்ய கிட்டதட்ட 12 வருடங்கள் ஆகும்.. அதாவது David beckham வரும் வரை
அறையிறுதியில் பிரான்ஸ் ஜெர்மனி.. ஜெர்மனி 2- 0 என்ற கணக்கில் வென்றது..86 அதிசயம் எதுவும் நிகழவில்லை :-(
இறுதி ஆட்டம்
அடித்த இந்த கோலின் ஆறவது நிமிடத்தில் அர்ஜென்டினா 3 - 2 கணக்கில் வெற்றி பெற்றது.
அர்ஜென்டினா டீம்
நின்றிருப்பது(இடமிருந்து வலம்) - Batista, Cuciuffo, Olarticoechea, Pumpido, Brown, Ruggeri and Maradona.அமர்ந்திருப்பது(இடமிருந்து வலம்) - Burruchaga, Giusti, Enrique and Valdano.
நினைவுகள் தொடரும்..
15 Comments:
Karthick,
Thats a great writeup...
It rekindles the golden moments of watching Football worldcups
Charged up to watch this year's Football festival..
By the way whos ur favourite?
கார்த்திக்
அருமையாக எழுதியிருக்கீங்க.
பழைய போட்டிகளை நேரில் பார்த்த மாதிரி இருக்குது. இரவு எல்லாம் விழித்திருந்து விருப்பமான அணி வென்றதும் தெருவில் கத்திக் கொண்டு ஓட, நாய்கள் விரட்டிய சம்பவம் பல உண்டு.
மறக்க முடியாதது கடந்த உலககோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தை எங்கள் தலைமை அலுவலகத்தில் அனைவரும் பார்க்க ஏற்பாடு செய்தது தான். இந்த முறையும் வாய்ப்பு உண்டா என்று பார்க்கணும்.
கால்பந்து பார்வையிடுவதில் சுகமுண்டு, கிரிக்கெட் விளையாடுவதில் சுகமுண்டு, இரண்டையும் அனுபவித்தவன் நான். தொடர்ந்து எழுதுங்க. படித்து இன்புற நான் இருக்கிறேன்.
அப்போ உங்க அப்பாட்ட போய் காஸெட் வாங்கிட்டு வந்திட வேண்டியதுதான். சிடி-யா மாத்திடலாமே...
கார்த்திக் நல்ல பதிவு, நாங்களும் கூட..கால்பந்து 2006 க்காக காத்திருக்க ஆரம்பித்துவிட்டோம். உங்களின் இந்த பதிப்பில் உள்ள அத்தனை தகவலும் என் அருமை புத்திரனுக்கு பயன்படும் என நினைக்கிறேன்.. என் அப்பா ஒரு கால்பந்து விளையாட்டு வீரர்(அந்த காலத்தில் பள்ளியில், அலுவலகத்திலும்),அதற்கு பிறகு என் அண்ணன், இப்போது..அது என் மகனிடம் தொடருகிறது..அவனால் முழுநேர பயிற்சி செய்ய முடியாது அவன் படிப்பு முட்டிகட்டை போட்டுவிட்டது.. எனது ஆர்வமும் இவர்களால் வந்துவிட்டது என நினைக்கிறேன்.. இரவில்கூட அவர்களுடன் சேர்ந்து கண்விழித்து விசில் அடித்து..(ம்ம் கொஞ்சமா நம்ம ரஜினிக்காக அடிக்க கற்றுக்கொண்டது)
Hey Dev,
Thanks for your comments..
Keep coming :-)
பரஞ்சோதி,
முதல் வரவு.. நல்வரவு ஆகுக..
இங்கையும் அதே கதைதான்.. ஆர்வத்துல கத்தி கத்தி அடுத்த நாள் பேச்சே வரம பே பே ந்னு எல்லாம் பேசி இருக்கேன்... அது ஒரு காலம்.. கண்டிப்பா எழுதுகிறேன்.. வந்து படிங்க..
ஊர் பெரியவங்களே,
You are always welcome sir !
நானும் இப்படி நினைத்துக்கொள்வேன்.. இன்னும் நடக்கவில்லை.. இங்கு நான் போட்டிருக்கும் சில படங்கள் என் ரூமில் இருந்த போஸ்ட்டரை ஸ்கேன் செய்து எடுத்தது.. (எல்லாம் ஆபிஸ் செலவில். இந்தியாவில் இருக்கும் போது..)
கவிதா,
நானும் கூட ஸ்கூல் & காலேஜ் டீமில் இருந்தேன்.. காலேஜில் 2 வருடம் படிப்பின் காரணமாய் விட வேண்டியது ஆகிற்று..
கார்த்திக்,
வெள்ளாளன் விளையில் எங்க பள்ளி மைதானம் முழுவதும் தேரி மண், அதாவது பாலைவனம் மண் மாதிரி சிவப்பாக இருக்கும். கால் புதைத்தால் மூட்டுக்கு கீழே பாதி மண்ணில் போய் விடும்படியான மைதானம்.
விளையாட்டு பீரியடில் எங்க வாத்தியார் A & B வகுப்பு மாணவர்களை அழைத்து மைதானத்தில் போய் நிற்கச் சொல்லுவார், 5 நிமிடம் ஒவ்வொருவரின் கைகளையும் நீட்டச் சொல்லி, யாராவது நகம் வளர்த்து வைத்திருந்தால் கையில் இருக்கும் குச்சியால் இரண்டு அடி கொடுத்து ஓரமாக போய் நிற்கச் சொல்லுவார், மீதி பேரிடம் ஒரே ஒரு பந்தை கொடுத்து (நாங்க 30+30) போய் ஆடுங்கடா என்பார்.
ஒரு பந்துக்கு அவன் அவன் ஒருவன் மேல் ஒருவன் ஏறி விழுந்து விழுப்புண் வாங்கி, மரத்தடிக்கு போய் ஒதுங்கி விடுவாங்க. அப்புறம் பார்த்தால் 20 பேர் முதல் 30 பேர் கடந்து பந்தை உதைச்சிட்டு அழைவாங்க, நான் பேசாம கோல் கீப்பராக போய் நின்றுக் கொள்வேன், சத்தியமாக என் பக்கம் பந்தே வராது. எப்போடா வரும் என்று இருப்பேன். நேரம் போக போக கை, கால் அடிபட்டு வருபவர்கள் அதிகரிப்பாங்க, விளையாட்டு நேரமும் முடிய சரியாக இருக்கும்.
இப்படி தான் எங்க பள்ளி கால்பந்து இருந்தது, கிரிக்கெட் விளையாடவும் அதே மைதானம் தான், ஆனால் ஓரமாக கெட்டியான மைதானம் இருக்கும், அங்கே தான் குச்சியை நட்டு வைத்து அடிப்போம், பந்து எங்கே போய் விழுதோ, அங்கேயே கிடக்கும், அதனால் காட்டு அடி அடிக்கிறவங்க (என்னை மாதிரி) ஆட்களுக்கு அதிக மதிப்பு.
உருப்படியாக கால்பந்து நான் விளையாடியதே இல்லை. எங்க ஊரில் நாசரேத், காயல்பட்டிணம் பள்ளி அணிகள் புகழ்பெற்ற அணிகள். அவர்கள் ஆடும் போட்டிகளை போய் ரசிப்பதுண்டு.
நல்ல இடுகை.
ரொம்ப சின்ன வயதில் கொழும்பிலும் புங்குடுதீவிலும் பிறகு சென்னையிலும் விளையாடிய நினைவுகளும் வருகின்றன. :)
உங்களுக்கு அப்பாவின் நண்பர் வீடுன்னா எங்கள் வீட்டாருக்கு தனா அண்ணா வீடு. கால் பந்திலிருந்து டென்னிஸ் வரை பார்க்கக் கற்றுக்கொண்ட இடம். காமரூன் என்றொரு நாடு இருப்பதை நானும் உலகக்கோப்பை சமயத்தில்தான் தெரிந்துகொண்டேன். :)
அடுத்த இடுகை எப்போ?
மதி கந்தசாமி (mathy),
முதல் வரவு.. நல் வரவு ஆகுக..
அடுத்த பதிவு இங்கே
அய்யோ எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?
வலையிலே இம்புட்டு கால்பந்து ரசிகர்களா? ம்ம்ம்ம் ஒண்ணு கூடிட்டோம்ய்யா ஒண்ணு கூடிட்டோம்..
கார்த்தி ..Which is ur Fav?
AS ALWAYS GO BRASIL GO
//ஒருத்தர் பிகிலு வச்சிக்கிட்டு ஒயாம ஊதுவாரே அவரு யாரு //
என்னவோ என்பேரைச் சொல்லி கூப்பிட்டிருக்கியேன்னு பார்த்தா!! ம்ஹும்.. பார்த்தி, வாப்பா, நீயும் நானும் சேர்ந்து பல்லாங்குழி, ஆடு புலியாட்டம் எல்லாம் ஆடலாம்.. இதுங்க தேறாது :)
தேவ்,
நானும் GO BRAZIL GO தான்.. Football is the religion in brazil :-)
இருந்தாலும் எனக்கு ஒவ்வொரு டீமிலும் ரசிக்கும் வீரர்கள் இருக்கிறார்கள்.
அக்கா ஆற்றரலசி,
என்ன இப்படி சொல்லிடிங்க.. நீங்க புதரகம் (வடக்கு) வந்ததுக்கு தெக்க போயிருந்திங்கன்னா இந்த நேரம் கால் பந்தாட்ட அரசி ஆகி இருப்பிங்க..
Post a Comment
<< Home