Monday, September 11, 2006

ஜனனி

ஜனனி ஜனனி ஜகம் நீ, அகம் நீ
ஜகத் காரணி நீ, பரிபூரணி நீ ..

ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடைவார் குழலும் பிடை வாஹனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே

ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ, அகம் நீ
ஜகத் காரணி நீ, பரிபூரணி நீ ..

சதுர் வேதங்களும் பஞ்ச பூதஙளும்
ஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்குழலே மலைமாமகளே

அலைமாமகள் நீ கலைமாமகள் நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ, அகம் நீ
ஜகத் காரணி நீ, பரிபூரணி நீ ..

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபினியே மூகாம்பிகையே
பல தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்
பணிந்தே துவதும் மணி நேத்திரங்கள்

சக்தி பீடமும் நீ.. ஸர்வ மோக்ஷமும் நீ...

ஜனனி ஜனனி ஜகம் நீ, அகம் நீ
ஜகத் காரணி நீ, பரிபூரணி நீ ..

3 Comments:

Blogger கைப்புள்ள said...

நல்ல பாடல் கார்த்திக். பதிவிட்டமைக்கு நன்றி. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

10/20/2006 10:58:00 PM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

எங்கையா போனீங்க இவ்வளவு நாளும்..
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

10/20/2006 11:44:00 PM  
Blogger Karthik Jayanth said...

கைபுள்ள,

தீபாவளி வாழ்த்துக்கள்.

சிறில் அலெக்ஸ்,

இங்கதான் இருக்கேன்..ஆனா என்னோட தமிழ் ஆர்வத்துக்கு(?) தடா போடுற மாதிரி கடைல வேலை இருக்கு :)

10/22/2006 07:54:00 PM  

Post a Comment

<< Home