Monday, July 03, 2006

F1 - 2006 ன்னும் நானும்

நேத்து நானும் என்னோட கூட்டாளியும் ஸ்பிட்வே - இன்டியானாபோலிஸ் போனோம். மேட்டர் என்னன்னா மைக்கேல் ஷூமாக்கர் 'கார்த்தி நீயும் அலெக்ஸும் வரலன்னா நான் வண்டி ஓட்ட மாட்டேன். நீ வந்து ஆசிர்வாதம் செஞ்சாத்தான் நான் ஜெயிப்பேன்ன்னு ஒரே அழுவாச்சி :-)' (சரி அடங்கிட்டேன்)

ஏகப்பட்ட படம் எடுத்தாலும் , பார்க்குற மாதிரி இருக்குற ஒண்ணு ரெண்டு படம் இங்கே..








இவ்வளவு Porsche இருக்குதே, ஒண்ணு கொடுடான்னு கேட்டேன். தரமுடியாது உம்பேச்சு கான்னு சொல்லிடாங்க :-(



நானும் எங்கூட்டாளியும் இருந்த இடத்துக்கு வலது கைபக்கம் இடது கைபக்கம்

























இது திரும்பி வரும்போது இருந்த டெம்ப்ரேச்சர்.. எங்கூட்டாளி நம்ப மாட்டான்னு படம் புடிச்சது :-)





இது எங்கூட்டாளிக்கு புடிச்ச Hummer H1



இந்த படம் புடிச்ச கொஞ்ச நேரம் கழிச்சி ஹைவேஸ்ல வந்துகிட்டு இருக்கும் போது 2 Porsche GT மின்னல் மாதிரி போச்சி. வண்டிய முழுசா கூட பார்க்கமுடியல.. தூரத்துல Porsche வரும்போதே ஒரு சத்தம்..

'Hey Alex check this' சொல்லி முடிச்சி என்னோட கூட்டாளி கண்ணு முழிச்சி பார்க்குறதுகுள்ள வந்த 2 Porsche GT ம் எங்க வண்டிக்கு முன்னால போய்டுச்சி.. அதுலயும் எங்க வண்டிக்கு இடது பக்கம் வந்த Porsche GT இருக்குற எமர்ஜென்சி புல் ஓவர் ல புகுந்து போய்ட்டான்..

இத பார்த்ததும் எனக்கு ஒரு டவுட்.. நானே ஸ்பிட் லிமிட்ட தாண்டகூடாதுன்னு 65 ல வண்டிய உருட்டிகிட்டு இருந்தேன், காப் மாமா பார்த்துட்டா ஒடனே லவ் லெட்டர் கொடுத்துடுவாரு அதனாலதான்.. எதுக்கு இந்த வண்டிகளுக்கு மட்டும் லெட்டர் கொடுக்கலன்னு வந்த எரிச்சல்ல நம்ம Southpark, Beavis and Butthead சீரியல ஸ்ட்டார்ட் பண்ணுனா எங்கூட்டாளி அதை முழுசா தி என்ட் டைட்டில் கார்ட் போட்டுட்டுத்தான் நிப்பாட்டுனான் :-)

சரி அந்த வண்டியதான் படம் புடிக்க முடியல.. அதனால மெதுவா போன ஒரு Porsche Boxter உங்களுக்காக :-)

13 Comments:

Blogger கவிதா | Kavitha said...

கார்த்திக், நீங்க போடற எல்லா பதிவுமே என்னைவிட என் பையனுக்கு பிடிக்கறமாதிரியே இருக்கு... பேசாம. link ஐ அவன் மெயில்லுக்கு அனுப்பிட வேண்டியது தான்....

என்னென்னவோ படம்' காட்டியிருகீங்க.. உங்க படத்தையும் சேர்த்து போட்டிருந்தா.. உங்க பதிவுக்கு சுத்தி போட சவுகரியமா இருந்திருக்கும் இல்ல..

7/04/2006 12:38:00 AM  
Blogger நாகை சிவா said...

என்னமோ பங்காளி, நல்லாவே படம் காட்டுற......

7/04/2006 12:44:00 AM  
Blogger கைப்புள்ள said...

நீ போன ராசியோ என்னமோ ஷூமாக்கர் செயிச்சிட்டாப்புல...ஆமா இந்த ஆட்டத்துல அம்பயர்வ எங்க நிப்பானுவன்னு சொல்லவே இல்ல?

7/04/2006 01:46:00 AM  
Blogger நாகை சிவா said...

//நீ போன ராசியோ என்னமோ ஷூமாக்கர் செயிச்சிட்டாப்புல//
இத என்ன புது கதையா இருக்கு. தல, எல்லாம் என்கிட்ட ஐடியா கேட்ட நேரம்......

7/04/2006 09:24:00 AM  
Blogger நாகை சிவா said...

//கார்த்திக், நீங்க போடற எல்லா பதிவுமே என்னைவிட என் பையனுக்கு பிடிக்கறமாதிரியே இருக்கு... பேசாம. link ஐ அவன் மெயில்லுக்கு அனுப்பிட வேண்டியது தான்.... //
இது எல்லாம் யூத் மேட்டர். அதான் உங்களுக்கு ஏதும் புரியல. நீங்க ஒதுங்கிட்டு இளைய சமுதாயத்துக்கு(உங்க பையன்) வழி விடுங்கனு உங்க அணில் குட்டி அங்க கத்துறது இங்க கேட்குது.

7/04/2006 09:25:00 AM  
Blogger Karthik Jayanth said...

// உங்க பதிவுக்கு சுத்தி போட சவுகரியமா இருந்திருக்கும் இல்ல..

ஒரே இடத்துல எல்லா நல்ல விஷயத்க்தையும் சொல்ல கூடாதுன்னுதான் :D

7/04/2006 09:30:00 AM  
Blogger Karthik Jayanth said...

//என்னமோ பங்காளி, நல்லாவே படம் காட்டுற......

நேத்து கடைல லீவ்வு தரல. அதனால சீக்கிரம் வரவேண்டியதா போச்சி..ரேஸ் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி 3 F-16 போச்சி. படம் புடிச்சேன். சரியா வரல :-(

7/04/2006 09:36:00 AM  
Blogger Karthik Jayanth said...

//ஆமா இந்த ஆட்டத்துல அம்பயர்வ எங்க நிப்பானுவன்னு சொல்லவே இல்ல?

தல.. இந்த வண்டிகளோடவே ஒருத்தர் ஓடி போய் பாத்து சொல்லுவாரு.. இந்த வண்டிகள் போனதயே சரியா படம் புடிக்க முடியல.. இத விட வேகமா ஓடுற அவர எப்படி படம் புடிக்குறது.. நோ சான்ஸ் அதான். ஆனா நாட்டாமை மாதிரி அவர் சொல்லுறதுதான் தீர்ப்பு :D

7/04/2006 09:39:00 AM  
Blogger Karthik Jayanth said...

//தல, எல்லாம் என்கிட்ட ஐடியா கேட்ட நேரம்......

கூட்டாளி இத எல்லாம பொதுவுல சொல்லிகிட்டு, என்னமோ போ நீ :D

7/04/2006 09:40:00 AM  
Blogger Karthik Jayanth said...

//நீங்க ஒதுங்கிட்டு இளைய சமுதாயத்துக்கு(உங்க பையன்) வழி விடுங்கனு உங்க அணில் குட்டி அங்க கத்துறது இங்க கேட்குது.

அதே.. அதே..

7/04/2006 09:41:00 AM  
Blogger பெத்தராயுடு said...

போன வருஷம் நம்மாளுக்காக போயிருந்தோம். கடைசீல ரேஸ் கேவலமா முடிஞ்சது. ரெனோ ரசிகர்களெல்லாம் பணத்த திருப்பி கொடுண்ணு ஒரே ரகளை.

இப்பயும் ஒரு 9,10 வண்டிகதான் முடிச்சாப்புல இருக்கு. அந்த 1 lap ஆக்சிடெண்ட் பாத்தீங்களா?

7/04/2006 11:46:00 AM  
Blogger Karthik Jayanth said...

//இப்பயும் ஒரு 9,10 வண்டிகதான் முடிச்சாப்புல இருக்கு. அந்த 1 லப் ஆக்சிடெண்ட் பாத்தீங்களா?

நீங்களும் நம்மள மாதிரி F-1 ரசிகரா.. சந்தோஷம் :-) ஆமாம்.. lap 1 ஆக்சிடென்ட் பயங்கரம்.. அதுல வந்த Safety car படம்தான் மேல போட்டு இருக்கேன்..

7/04/2006 11:54:00 AM  
Blogger கவிதா | Kavitha said...

//நீங்க ஒதுங்கிட்டு இளைய சமுதாயத்துக்கு(உங்க பையன்) வழி விடுங்கனு உங்க அணில் குட்டி அங்க கத்துறது இங்க கேட்குது.

அதே.. அதே.. //

ஒரு முடிவுல தான் இருக்கீங்க போல இருக்கு நீங்களும் சிவாவும்.. ஆமா..இந்த வயசாயிட்டா கையில ஒண்ணு வச்சிக்கிட்டு நடப்பாங்களே... அது என்ன.. ?!! அது கொஞ்சம் எனக்கு வாங்கி அனுப்புங்க..

7/04/2006 08:54:00 PM  

Post a Comment

<< Home