சில சிந்தனைத் துளிகள் !
Awake, Araise, Stop not until the goal is reached - swami vivekananda.
இன்று சுவாமி விவேகானத்தரின் நினைவு நாள்.
அவரின் புகழை உலகறியச் செய்தது சிகாகோவில் Sept 11, 1893 அன்று அவர் ஆற்றிய ஆன்மீகம் குறித்த உரைதான். அவற்றின் ஒலிவடிவம் இங்கே
அவருடைய எண்ணங்கள் எல்லாமே பெரும் பொக்கிஷங்கள் என்றாலும் அவற்றுள் சில.
"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்."
"பலவீனத்திற்கான பரிகாரம், பலவீனத்தைக் குறித்து ஒயாது சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பது தான்."
"தனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால், தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும்."
"உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன".
"தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். இவை அனைத்திற்கும் மேலாக, அன்பு வேண்டும்."
"எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், இனியும் தூங்க வேண்டாம். எல்லா தேவைகளையும் எல்லா துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது."
"முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி பிறகு உனக்குத் தானாக வந்து சேரும்."
"பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே மதம்".
"அடுத்தவனின் பாதையைப் பின்பற்றாதே. ஏனெனில் அது அவனுடைய பாதை, உன்னுடையது அல்ல. உன்னுடைய பாதையைக் கண்டுபிடித்து விட்டாயானால், அதன்பிறகு நீ செய்ய வேண்டியது எதுவும் இல்லை; கைகளைக் குவித்த வண்ணம் சரணடைந்து விடு. பாதையின் வேகமே உன்னை உனது லட்சியத்தில் சேர்த்து விடும்."
6 Comments:
நல்ல கருத்துக்களை நீண்ட நாளுக்கு பிறகு படிக்கும் வாய்ப்பை கொடுத்த கார்த்திக்..கு... என் நன்றி'கள்
நல்ல கருத்துகளைக் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.
நல்ல கருத்துகள் கொடுத்ததற்கு நன்றி, சிகாகோவின் புதிய சாமியாரான கார்த்திகானந்தாவின் கருத்துக்கள்/சொற்பொழிவு எப்போதோ?
நல்ல கருத்து கார்த்திக், உன் ஆளு சினேகாவோட பிறந்த நாளை மட்டும் தான் நினைவு வச்சிருப்பேன்னு நின்னைச்சேன் கலக்கிட்ட...
பதிவை படித்த பெரியவர்கள் கவிதா , மோகனா மாம்ஸ், ஆற்றலரசி பொன்ஸ் , சந்தோஷ் மாமு எல்லாருக்கும் என் நன்றி..
பொன்ஸ்,
கருத்துக்கள்/சொற்பொழிவு எல்லாம் ஆத்துற அளவுக்கு இங்க சரக்கு ஒண்ணும் இல்ல..
சந்தோஷ்
அடங்க மாட்டேங்குற நீ ;-).
//உன் ஆளு சினேகாவோட பிறந்த நாளை மட்டும் தான் நினைவு வச்சிருப்பேன்னு நின்னைச்சேன் கலக்கிட்ட... //
புது நியூஸ் ஆ இருக்கு?!! அப்படியா கார்த்திக்..?! சொல்லவே இல்ல.. (எங்க வீட்டுல அந்த அம்மனிக்கு நாங்க வச்ச பேர்.... வேணா சொன்னா வருத்தபடுவீங்க)
Post a Comment
<< Home