Wednesday, March 29, 2006

நினைவுகள் 1 - Shogun

எங்க பக்கத்து கியுபிகல்ல இருக்குறவர் கிட்ட பேசிகிட்டு இருக்கும் போது, பைக் பற்றியும், இளவயதில் முதன்முதலில் பைக் ஓட்டிய அனுபவங்களையும் பற்றி பேச்சு திரும்பியது. பைக் பத்தி பேச்சு வந்ததும் அவர் சொன்னது 'எனக்கு ஒரு 30 வயசு குறைந்த மாதிரி இருக்கு'. அது எவ்வளவு சத்தியமான வார்த்தை.


இங்க மாதிரி நம்ம ஊர்ல நிறைய பைக் இல்லை என்றாலும், நானும் எனக்கு இருக்கும் ஒரு அனுபவ அறிவை வச்சி சமாளித்துகொண்டு இருந்தேன். அப்புறம் நம்ம ஊர் பத்தி அவர் நல்லா தெரிஞ்சி வச்சிருக்கார். அதுனால எதுக்கு 500 CC, 1000 பைக் எல்லாம் உங்க ஊர்ல இல்லை என்று கேட்கவே இல்லை.நான் பள்ளிகூடம் படிக்கும் போது வந்த, பின்னாளில் காலேஜ் படிக்கும் போது என்னுடன் இருந்த, இந்த பைக்தான் மிகவும் ரசித்த, காதலித்த ஒரே பைக். இப்படி பைக் என்று எல்லாரும் சொல்லும் ஒரு சாதாரன வார்த்தையில் சொல்லி, எனது வாழ்க்கையின் எல்லா சுக துக்கத்தில் உடனிருந்த அவளை கூப்பிட மனம் ஒப்பவில்லை. அவளுக்கு நான் வைத்த பெயர் 'சரிகா'.


எல்லோரும் சொல்லுவது போல் கூப்பிடவேண்டும் என்றால் Suzuki Shogun.


வாழ்க்கைல இதுவரைக்கும் செய்யாத எதாவது ஒரு விசயத்தை செய்யனும்ன்னு தோணுதா ?. இது வரைக்கும் போகாத இடத்துக்கு, போகும் போது உங்க வழில வர்ர எல்லாரும் ஒதுங்கி வழிவிடனும்னு தோணுதா. அப்ப நீங்க Shogun ல ஒரு சுத்து சுத்துங்க..


94- 95 ல் இந்த விளம்பரம் அப்ப ஸ்கூல் ல படிச்சிகிட்டு இந்த மத்த பசங்க தூக்கத்தை காலி பண்ணுசோ இல்லையோ, என்னை முழுமையாக அதனுள் இழுத்துகொண்டது. விளம்பரம் 2 - 3 இருக்கும்.


ஒரு வீட்டுக்கு முன்னால ஒரு சேர்ல பெரியவரும், தரைல ஒரு நாயும் கண்மூடி இருப்பார்கள். தூரத்தில் கேட்டு, திடிரென பக்கத்தில் கேட்கும் அதே நேரத்தில் வீட்டில் ஒளி வெள்ளம் பரவும், சட்டென தூரத்தில் சென்று மறையும் அந்த ஒலி. அதுக்கு அப்புறம் இந்த எழுத்துக்கள். ShoGun - The Boss.


இந்த நேரம் ப்ரின்ட் மீடியால குறிப்பா ஹின்டு சன்டே பேப்பர்ல கலர்ல ஒரு விளம்பரம். முழுவதும் கறுப்பு உடை அணிந்த ஒரு உருவம் பைக் ஓட்டுவது ஒரு மாதிரியான பிளர்ர்டு இமேஜ்ல இருக்கும். அதுக்கு கீழே இந்த எழுத்துக்கள்.

fasten your seat belts and extinguish your cigarette. Suzuki Shogun.

இந்த பேப்பர் எல்லாம் இப்பவும் எங்கூட பத்திரமா வீட்டில இருக்கு..
இதுல கவனிச்சி பார்த்தா எங்கயும் ஸூசுகியோட இந்தியன் பார்ட்னர் கம்பெனியோட பேரு இருக்காது. What a Brand positioning.


என்ன கேட்டா Sensational Adverstisement இது. என்னோட ஸ்கூல் நேரத்துல. அப்பவே முடிவு பண்ணுனேன். நானா சம்பாதித்து வாங்கும் வண்டி இதுதான்னு... இப்ப ஆசை பேராசையாகி BMW - M5 ல வந்து நிக்கிது. அது வேர கதை :-)
நான் முதன் முதலில் இந்த வண்டிய ஓட்டியது நல்லா ஞாபகம் இருக்கு.. கிட்டதட்ட பைக் ஓட்டதெரியும்னாலும், அப்பதான் இந்த Wheeling ( தமிழ்ல என்னப்பா )- வீலிங் எல்லாம் செய்ய கத்துகிட்ட நேரம். இதுக்காகவே Hero Puch நு ஒரு அட்டு வண்டி இருக்கும் அதுலதான் வீலிங் பழகுனேன். என்னோட ஸ்கூல் படிக்குறப்ப ஒரு நாள் என்னோட சகா ஒருத்தனோட அண்ணன் அந்த Shogun பைக் வாங்குனதுனால, அவன் கைல கால்ல விழுந்து, அவன் அதை காலேஜ்க்கு பத்திக்கிட்டு போறதுக்கு முன்னால சகா ஒரு நாள் அத ஓட்டிகிட்டு வந்துட்டான்.. எங்க ஸ்கூல்ல பசங்க யாரும் பைக் எல்லாம் கொண்டுவரக்கூடாதுன்னு ஒரு ரூல் இருந்தது.. அதனால், எங்க ஸ்கூல் பின்னால் இருந்த ஒரு மெக்கானிக் ஷெட்ல வச்சிருந்தோம். ( படிக்கும்போது எல்லீஸ்நகர், எஸ்.எஸ். காலனில தெரியாத மெக்கானிக்கே இல்ல. அது பத்தி வேற ஒரு பதிவுல ) யாருக்கும் சொல்ல. எங்க எவனாவது வத்தி வச்சிட்டா.. நம்ம பசங்களுக்குத்தான் அடுத்தவன் பல்பு வாங்குறான்னா ஒரே சந்தோசம், அதுவும் டிக்கெட்டுங்க முன்னால வேற.


சாயந்தரம் எல்லாரும் போனதும், யாருமே இல்லைன்னு முடிவு பண்ணிக்கிட்டு, குறிப்பா எந்த டிக்கெட்டு சைக்கிள் இருக்குன்னு பாக்கணும். அதை வச்சே எத்தனை பேரு ரேடியஸ்ல இருப்பாங்கன்னு ஒரு கணக்கு பண்ணலாம்.


சைக்கிள ஷெட்ல போட்டுட்டு, நான் ஸ்கூல் முக்குல நின்னுக்கிட்டு இருந்தேன். வந்தான் சகா. ஆஹா அந்த சத்தம்.. ஒண்ணும் சொல்லுறதுக்கு இல்ல. எம்முன்னால வந்ததும் நிப்பாடுனான். நம்ம இதுக்கு முன்னால ஓட்டுன வேகமான பைக்ன்னா அந்த சாமுராய்தான்..


பைக்ல ஏறி உக்காந்து பைக்க ஸ்ட்டாட் பண்ணுனேன்..I was totally dazed at the sound the bike was making... Wow... கொஞ்சமா அந்த Throttle ல திருகுனா, அதே வேகத்துல என்னோட ஹார்ட்பீட்டும் அடிச்சிகிச்சி, அந்த எஞ்சின் ஓடுற வேகத்துல... கிளச்ச புடிச்சி, முதல் கியர போட்டு.. unforgettable roar.. i said Ohh My God...மெல்ல்லலலலல கிளச்ச விட்டு ஸ்லோவா ல குடுத்தா அ அ அ ஒரு Full Wheeling ஆச்சி பாருங்க.. அதுல வந்தது முதல் காதல்..


ஒரு வழியா அந்த எல்லீஸ் நகர் மெயின் ரோட்ல மறுபடியும் ஒரு wheeling பண்ணுனேன். ஆனா இந்த தடவை தெரிஞ்சே :-). ஒரு தடவை ஓட்டுனா போதும். அப்புறம் பைக் நம்ம சொல் பேச்சு கேக்கும். அப்புறம் பால்பூத் ஸ்டாப்ல மருக்கா பைக் ஓடும் போதே ஒரு full wheeling, அப்புறம் கடைசி ஸ்டாப்ல நிப்பாட்டுற வரை மெதுவா ஓட்டுனேன். எல்லாரும் நம்மளையே பாக்குறாங்க.. எனக்கும் என்னோட சகாவுக்கும் ஒரே ஆனந்தம்.. பரமானந்தம்.. பின்ன அந்த டையத்துல எல்லாரும் நம்மளையே பாக்குறதுன்னா சும்மாவா.. அதுவும் அப்பத்தான் எல்லாரும் கோட்டிங் கொடுக்க இத்துபோன வண்டிய வச்சி முயர்ச்சி பண்ணிகிட்டு இருக்கும் போது, 2 ஸ்கூல் பசங்க அசால்ட்டா எல்லாத்தையும் அள்ளுனா, எவனுக்குத்தான் புகை வராது..


பாலத்துகிட்ட பைக்க நிப்பாட்டிட்டு பாத்தா அப்பத்தான் அந்த தெருமுனைல ஒரு 5 - 6 வண்டி வருது.. எங்க 2 பேருக்கும் கொஞ்சம் பயம். எங்க அடி வெளுத்துட்டா.. பைக்க ஒரே திருகு.. சுத்தி பாத்தா மாப்பிள்ளை வினாயகர் தியேட்டர் வந்துடுச்சி.. எங்க மறுபடியும் அரசரடி வழியா வந்தா பிடிச்சிகிட்டான்னு, ரொம்ப சுத்தி இதுல நடுவால ரயில்வே காலனில வேற கோட்டிங்கோ கோட்டிங்.. இது சகாவுக்காக.


பைக்க ஒரு வழியா மெக்கானிக் ஷெட்டுகிட்ட நிப்பாட்டும் போது சகா கேட்டான். டே கார்த்தி பைக் எப்படி..

ஒரே அமைதி.....

மறுபடியும் ஒரே அமைதி.....

சின்னதா ஒரு பார்வை.....

ஒரு சிரிப்பு........

டேய்.. 2 வார்த்தை.. Power is Awesome.. and the sound is Maaaan...வீட்டுக்கு போறதுக்குள்ள யாரோ புண்ணியவான்/வதி பத்த வச்சிடாங்க. அம்மா ஒரே கோவமா இருந்தாங்க... அப்பவே அந்த பைக் வாங்கி தர சொல்லி ஆரம்பிச்சிடேன். அம்மா சொன்ன பதில். அப்பா வாங்கி தந்தா ஓட்டு.. யாரு வேனாம்ன்னு சொல்லுறா... நல்லவேல இந்த மேட்டர் அப்பாவுக்கு தெரியுறதுகுள்ள வேற எதோ பிரச்சனை வந்ததுனால தப்பிச்சேன். இல்ல அடி வெளுத்துருப்பார்.அடுத்த நாள் பாத்தா ஸ்கூல்லயே ஒரு டாப் டிக்கெட்டு கிட்ட இருந்து ஒரு சிரிப்பு. மதிய லஞ்ச் பிரேக்ல சொன்னது.. கார்த்தி உனக்கு இப்படி எல்லாம் பைக் ஓட்ட தெரியும்ன்னு சொல்லவே இல்லை.. நான் சொன்னது நீங்க கேக்கவே இல்லை....அப்புறம் இந்த ஒரு மேட்டர வச்சே நமக்கு செம பேரு.


இந்த மேட்டர்க்கு அப்புறம் கிட்டத்தட்ட ஒரு 3 வாரம் எங்கயும் போகல.. வீடு 2 ஸ்கூல். ஸ்கூல் 2 வீடு தான்.. அந்த 1 1/2 மணீ நேர வித்தைல ஒரு 4 எரியா பசங்க அவ்வளவு டென்சன் ஆகிட்டாங்க.. அப்பாலிக்கா எல்லாரும் கூடிக்கிட்டது வேற கதை..


கணங்கள் தொடரும்...

2 Comments:

Blogger Dharumi said...

அதுக்குத்தானப்பு 17 வயசிலேயே இதெல்லாம் பண்ணிடணும். 25 வயசில ஆரம்பிச்சா..வீலிங்காவது மண்ணாவது..ஆனா அப்பெல்லாம்(1970) யாரும் வீலிங் பண்ணிப் பார்த்ததில்லை.

3/29/2006 09:04:00 PM  
Blogger Karthik Jayanth said...

வாங்க ஊர் பெரியவங்களே,

முதல் வேலையா கும்பிட்டுகிறேனுங்க :-).

+1 & +2, காலேஜ் எல்லாம் ஒரு காலம்..இப்ப வராது.. 70 ல எல்லாம் இந்த புல்லட், ராஜ்தூத்,எஸ்டி தான் இருக்கும்ன்னு நினைக்குறேன். அது எல்லாம் சும்மா அர்னால்ட் சொந்தகாரங்க மாதிரி இருக்குறவங்களுக்கு..

நம்ம பெர்சனாலிட்டிக்கு ஒத்துவராது :-).

Profile ல இருக்குற போட்டோவ உங்க ப்லொக்ல பாத்திருக்கேன்.. இப்பதான் எல்லாத்தையும் படிக்கிறேன். அரியர் வச்ச பய மாதிரி :-)

3/29/2006 09:15:00 PM  

Post a Comment

<< Home