Saturday, March 25, 2006

பதில்




















சரி நம்ம புகழ் திக்கெட்டும் தீ போல பரவுதே, இப்படி வளர்ந்து வர்ர நேரத்துல? (இம்சை ஓவர் ஆகிடுச்சின்னு நீங்க சொல்லுறத நான் இப்படி டீசன்ட்ட சொல்லுறேன்) நீ செய்த எலக்கிய உலக பங்களிப்பு என்னவென்ற, சரித்திர உலகின் கால நிகழ்தகவினை எதிர் நோக்கி விடகூடாது என்ற யோசனையில் ஒரு கதை எழுதினேன்.

அதையும் படிச்சிட்டு நல்லா இருக்கு. என்னாப்பு இப்படி சோகமா இருக்கு. பங்கு இப்ப எப்படி இருக்குறார். அப்படின்னு கமென்ட் வேற போட்டுடாங்க. சரி நம்மக்கும் எதோ எழுத வருதுன்னு சந்தோஷமாத்தான் இருந்திச்சி..

சரி எலக்கியம்ன்னு சொல்லிட்டு கதை மட்டும் எழுதிட்டு எஸ்கேப் ஆனா எப்படின்னு ஒரு செக்கன்ட்டாவது யோசிக்கிற சமுதாயமே

வெய்ட் எ செக்கன்ட் பார் 5 மினிட்ஸ்

கவிஞன் ந்னு வந்துட்டா ஒரு பேரு வேணுமே. அதுக்காக பெயர்களை யோசித்துக்கொண்டு இருக்கிறேன். இப்போதைக்கி ஆப்பு ஆன்டனி, மதுர மன்னாரு, சீட்டுகட்டு சிலுவை, சால்னா சரவணன் போன்ற பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. இன்னும் பெயர்கள் வரவேற்கப்படுகின்றது.

-----------

இருந்தாப்புல இருந்து போன வெள்ளிக்கிழமை ஒரு சீமைல இருந்து வந்த இம்சை ஒண்ணு நாங்க எல்லாம் ஒரு கூட்டம். நீங்களும் எங்க கூட்டமா அப்படின்னு கேட்டுடாங்க.

சரி இந்த கேள்விக்கு எல்லாம் ஒரு படி இறங்கி பதில் சொல்ல வேணாம் அப்படின்னுதான் முதல்ல நினைத்தேன். எங்க மறுபடியும் வீக்டேஸ் ல வந்து மூட் அவுட் பண்ணிடுமோ என்ற எண்ணத்தில் கீழே உள்ள அறிக்கை.

" நான் நீங்க நினைக்குற மாதிரி இல்லைங்க. நான் எதோ கணினிய கட்டிக்கொண்டு அழும் அளவுக்கு படித்த ஒரு சாதாரன மனுசப்பய. இந்த மனுச பிறவியில் உங்க கூட்டத்தில் சேரும் எண்ணமோ, நிலையோ இல்லை. நீங்கள் நீங்களாகவே இருக்க கடவுளை வேண்டுகிறேன்"

3 Comments:

Blogger பொன்ஸ்~~Poorna said...

இப்போ கடைசியா என்ன சொல்ல வர்றீங்க??? ரம்யா- ஒரு கதை, நிஜமல்ல அப்டீங்கறீங்களா? ஏதோ போங்க.. வர வர, நீங்க எந்தக் கேள்விக்கெல்லாம் பதில் சொல்றீங்கன்னு புரியவே மாட்டேங்குது...

நல்லா தூங்குங்க.. பாதி தூக்கத்துல, ப்ளாக் எல்லாம் போடக் கூடாது... :)

3/26/2006 09:21:00 PM  
Blogger Karthik Jayanth said...

// ரம்யா- ஒரு கதை, நிஜமல்ல அப்டீங்கறீங்களா?

நிஜம் இல்லை என்று சொல்லவில்லை.. சில நிகழ்வுகளின் தாக்கத்தால் நான் எழுத முயன்ற ஒரு சிறுகதை. அதனால்தான் அதை சிறுகதை/கவிதை என்ற தலைப்பின் கீழ் பதிவு செய்தேன்.

// நல்லா தூங்குங்க.. பாதி தூக்கத்துல, ப்ளாக் எல்லாம் போடக் கூடாது... :)

:-) :-)

3/26/2006 09:30:00 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

//அதனால்தான் அதை சிறுகதை/கவிதை என்ற தலைப்பின் கீழ் பதிவு செய்தேன்//

இதை இப்போ தான் கார்த்திக் பார்த்தேன். நல்ல 'கதை', பாவம் சரவணன். ஆனா பாருங்க, கதைன்னு சொல்லிட்டு கார்த்திக்னு பேர் வச்சதினால தான் எல்லாருக்கும் குழப்பம்..

3/26/2006 09:42:00 PM  

Post a Comment

<< Home