Wednesday, March 22, 2006

ரம்யா ..

டெல்லியில், வந்த சொந்த வேலைகளை முடித்துக்கொண்டு, 4.55 சென்னை ஜெட் ஏர்வேஸ் விமானத்துக்கு மதியம் 2 மணிக்கே ஏர்போர்ட்டுக்கு போனதுக்கு முக்கிய காரணம், கிட்டத்தட்ட 1 வருட காலம் கழித்து என்னுடைய உயிர் நண்பன், பங்காளிய பார்க்க போகிறேன் என்பதுதான்.

இப்பொழுது சிறிது நேரம் தூங்கினால், அப்புறம் கண்ணு முழிக்க முடியும். நேத்து வேற சரியா தூக்கம் இல்ல. .எவ்வளவு விசயம் பேசணும்.

பாத்திங்களா, நாம் பாட்டு பேசிக்கிட்டே இருக்கேன். என்னோட பங்காளிய அறிமுகம் பண்ண மறந்துட்டேன்.

பங்காளி எனக்கு அறிமுகம் ஆனது. எங்க கம்பெனியில் நான் சேர்த்த 2- வது நாள் மதியம் எத்தனை வாட்டி படித்தாலும் புரியாத டிசைன் டாக்குமென்ட்ட வேற வழி இல்லாம பார்த்துகொண்டு இருக்கும் போது

Hi Dude ! அப்படின்னு ஒரு குரல்

Hi, I am Karthik - நான்

Hey, I am Saravanan. Come on let's go out for a lunch - பங்காளி

அப்படின்னு சொன்னான்.

இப்படித்தான் எங்களுக்குள் நட்பு ஆரம்பிச்சது. நம்ம எல்லாம் பஞ்சத்துக்கு ப்ரோகிராமர். ஆனா பங்கு பரம்பரை ப்ரோகிராமர். அவனுக்கு சின்ன வயசில் இருந்து கம்யுட்டர்ல கலக்கணும்ங்குறதுதான் கனவு. அவன் Code எழுதுறதே கவித எழுதுற மாதிரிதான் இருக்கும். ஆளு வேற பாக்குறதுக்கு ஆசை அஜித்குமார் மாதிரி இருப்பான்.

அப்புறம் அந்த மாசத்திலேயே நாங்க 2 பேரும் ஒரே ப்ராஜெக்ட்ல அலாட் ஆனோம். அடுத்த மாசத்திலயே பங்கு என்னோட மேன்சனுக்கு ரூம்மை மாத்திட்டான். ஆபிஸ்க்கு ரெண்டு பேருந்தான் சேத்து போவோம், வருவோம். நமக்கு கம்பெனில 'ஆன்சைட் பிரியன்' நும், பங்காளிக்கு 'ஆன்சைட் வெறியன்' நும் பட்டபேரு இருந்துச்சி. இந்த ஆன்சைட் மேட்டர் தவிர எங்க பேருக்கும் காமன் கிரவுன்ட்ஸ் ஆப் இன்ரெஸ்ட் வேற எதுவும் ஆரம்பத்தில் இல்லை. ஆனா 6 மாசத்தில் எங்களுக்குள்ள ஒருத்தன பத்தி ஒர் ஒருத்தனுக்கு தெரியாத மேட்டர்ன்னு எதுவுமே இல்ல, முதல் காதல், உட்பட :-)

2 பேருக்கும் ஒரே நேரத்துலதான் US விசா வந்திச்சி. 2 பேரும் ஒரே நாள்லதான் வர்றதா கூட பிளான். டாட்காம் கவுத்தல்ல 2 பேருக்கும் ஒரே மாதிரிதான் வேலையும் போச்சி. அப்புறம் 2 பேரும் ஒரே நேரத்துல, ஒரே ஹைதராபாத் கம்பெனில வேலை வாங்குனோம்.

------------------

எனக்கு சின்ன வயசிலிருந்து தண்ணியடிப்பது பற்றி ஒரு எண்ணம்... வாழ்க்கையில் ஏதாவது பெருசா சாதிக்கனும், அதை கொண்டாடும்போதுதான் தண்ணி அடிக்கணும். ..சும்மா ஆ .. ஊ.. ந்னா தண்ணி அடிக்கிகுறதுல எனக்கு உடன்பாடு இல்லை...

இப்படி சொன்னதும் பங்காளி சத்தியமா கோவிச்சுகபோறான்னு எதிர்பார்த்தேன். ஆனா ஒன்னுமே சொல்லாம ஒரு 5 நிமிசம் என்னய பாத்துகிட்டே இருந்தான்.

மாப்பிள கலக்கிட்ட.

அப்ப போட்ட தீர்மானந்தான் ஆன்சைட் சம்பளத்துலதான் இனிமே முதல்ல தண்ணி அடிக்கனும்னக்கறது.

-----------

எல்லாம் இப்பதான் நடத்த மாதிரி இருக்கு. அதுக்குள்ள 4 வருசம் ஆகிபோச்சி. காலச்சக்கரம் தான் எவ்வளவு வேகமாக சுத்துது.

தாகமா இருந்ததால் தண்ணிர் வாங்க போகும் தான் ஏதோச்சையா பார்த்தேன்.

ம்..ம் .. என்ன இது; என்னோட கண்ணா இது. என்னால நம்பமுடியவில்லை. ஏர்போர்ட் கேன்டீன்ல ரம்யா யாரோ ஒருத்தனோட, அதுவும் இடுப்பில் கைகோர்த்துக்கொண்டு. இருவரும் மிகவும் அன்னோன்யமாக.

கடவுளே என்ன இது. இருந்தாலும் இன்னும் ஒரு தடவை அது ரம்யா தான என உறுதியாக தெரிந்து கொள்ள, என்னையும் அறியாமல் எனது கண்கள் அவள் இருந்த இடம் நோக்கி சென்றது. ஆம் ரம்யாதான் அது.

நான் மறுபடியும் அந்த பக்கம் பார்த்த அதே வேளையில், ரம்யாவின் கண்களும் என்னை கண்டுகொண்டது. அந்த நொடியில் என் மனதில் எழுந்த ஆயிரமாயிரம் கேள்விகளை கேட்டுவிட மனது துடித்தது. இதுக்கும் மேல ஒரு நிமிடம் கூட டெல்லியில் இருக்க எனது மனம் விரும்பவில்லை.. கை தானாக செல்லில் பங்காளியின் நம்பர அழுத்தியது.

ரம்யா..
இவளை எப்படி என்னால் மறக்கமுடியும் ?

----------------

நான் டீம் லீடா இருந்த ப்ராஜெக்ட்ல குவாலிட்டி ஸ்சைட்ல ரீசோர்ஸ் கிரன்ச் இருக்குன்னு 4 மீட்டிங்ல நாயா கத்துனதுனால, சீனியர் டெஸ்டர்ரா நியு ரெக்ரூட் ரீசோர்ஸ்ல இருந்து வந்தவங்கதான் ரம்யா..

Karthik, brief about the project to Ramya, and set the expectations. BTW you know one thing, Ramya is also from TamilNadu, She is new to this city . னு பி.எம் சொன்னதுனால சரின்னு அவங்கள பாத்துட்டு, அப்படியே இத சாக்கா வச்சி HR ஸ்வேதா கிட்டயும் ஒரு 30 நிமிசமாவது கடலை போட்டுடனும்ன்னு ஒரு மெகா பிளானோடதான் போனேன்.

பார்மல் இன்ட்ராக்கு அப்புறம், ப்ராஜெக்ட்ட பத்தி ஒரு மணி நேரம் பிளேடு போட்டுட்டு, 'I heared you are from Tamilnadu and new to this city. Let me know if u need any help initially' சொல்லிட்டு வந்தேன். அதுக்கு அப்புறம் HR ஸ்வேதா கூட வேற ஒரு 45 நிமிசம் டீப் டிஸ்கசன். wow, What a long day !

நேரா பங்கு குயுபிகள்ல போய் நடத்தது எல்லாந்தையும் சொன்னேன். ரம்யாவை பார்க்கணும்ன்னு சொன்னான். அடுத்த நாள் இன்ட்ராவும் முடிஞ்ச்சது. அடுத்த வாரகடைசில பாவர்ச்சி பிரியாணி, ஐமேக்ஸ் ல ஒரு படம் வாரம் முடிஞ்சது. அதுக்கு பின்னால வேலை சம்மந்தமா ரம்யாவ பார்க்குறதோட சரின்னு ஆகிபோச்சி. எதோ 2 , 3 தடவை வெள்ளிகிழமை அமீர்பேட்ல ஆ.வி, குமுதம் வாங்கிகுடுத்ததோடு சரி.

----------


ஒருநாள் தூக்கத்தில பங்காளி ரம்யா நு சொன்னதா ஞாபகம். வேலை பளுவில் அதை பற்றி கேட்க மறந்துவிட்டேன். இது நடந்து 1 வாரம் கழித்து பங்காளி மேட்டர சொன்னான். சரிதான் பய விழுந்துட்டான்.

அதுக்கு அப்புறம் என்ன எல்லா காதலர்கள் மாதிரியே எம் பங்காளியும் ஆகிட்டான். அதான், மணிக்கணக்கில செல்ல பேசுறது, கிப்ட் கொடுக்குறது, கரடிபொம்மை வாங்க கட, கடையா ஏறி, இறங்குவது. அவனும் சாப்பிடமாட்டான், என்னையும் சாப்பிட விடமாட்டான். நாளைக்கே என்ன நடக்கும்ன்னு தெரியாம அவனவன் தலைய உருட்டிக்கிட்டு இருக்கும்போது, இவன் என்னமோ 5வது வெட்டிங் டேக்கு என்ன கிப்ட் வாங்கலாம்னும், ரம்யாவோ இவனுக்கு நான் கொஞ்சமும் சின்னவ கிடையாதுன்னு சொல்லிட்டு, சென்னைல ஷிவா (அவங்க பையன் பேராம். ஒருநா எதோ பேச்சு வாக்குல நான் சிவா ந்னு சொல்ல போக, அதுக்கு பெரிய கோவம்) / ஷில்பா (இது பங்கு பொண்ணு பிறந்தா வைக்கபோற பேராம். நான் எதுவும் சொல்லல) எந்த ஸ்குல்ல படிக்கணும், தண்ணிர் கஷ்டம் இல்லாத ஏரியாவுல லோன்ல வீடு வாங்குறது இப்படி போகும்.


இதுக்கு நடுவால எனக்கும், பங்காளிக்கும் வர இருந்த ஆன்சைட் சான்ஸ், இத்துபோன ஆபிஸ் அரசியலில் கெட்டுபோனது. இதுல நான் ரொம்ப மண்டை காஞ்சி

டே மாமா.. கொஞ்சம் தனியா பேசணும். மதியம் கோயிலுக்கு போய்ட்டு, சாயந்தரம் டேன்க்பண்ட் போறோம். உங்கிட்ட நிறைய பேசணும். ஆனா நீ மட்டும் வா. ரம்யா வேனாம், இந்த வாட்டி..

உத்தரவுடா.. மாப்பிள்ள..

------------

இப்படி சொல்லிட்டு கோயிலுக்கு போகும்போது பங்காளி, அவங்களை கூட்டிகிட்டு வந்தது எனக்கு கொஞ்சம் டென்சனாத்தான் இருந்திச்சி. சரி விடு.. சாமி தரிசனம் நல்லா ஆச்சி.. மனசுக்குள்ள பல சிந்தனை ஓடுது..

சரி ரம்யா.. நாங்க 2 பேரும் கொஞ்சம் வெளிய போறோம்... வா உன்னைய வீட்டுல இறக்கி விட்டுறேன்.

கார்த்திக்.. நீங்க எதுனா முக்கியமான டிசிசன் எடுக்கும் போது கோவிலுக்கு போவீங்கன்னு சரவணன் சொல்லிருக்கான்.. இப்ப நீங்க கோவிலுக்கு வந்தது எப்படி நார்மலா... இல்ல..

அது ஒன்னும் இல்லைங்க.. மூட் சரியில்ல.. இந்த ஆன்சைட் மிஸ் ஆனதுல கொஞ்சம் அப்செட் ஆகிட்டேன்...அதான்..

ரம்யா.. கார்த்திக் என்னமோ ஐடியா வச்சிருப்பான்.. நாங்க கொஞசம் தனியா போய்ட்டு வார்றோம்.. சரியா..

இல்ல சரவணா.. நீங்க 2 பேரும் தனியா போகவேணாம்.. எப்படி பார்த்தாலும் கார்த்திக்கு நானும் WellWisher தான்.. வாங்க மூணு பேருமே போவோம்..

சாரிங்க.. தப்பா நினைச்சிகாதிங்க... சரி நீங்களும் வாங்க.. எப்படியும் உங்களுக்கு தெரியத்தான் போகுது..

--

ஒண்ணும் இல்லைங்க... இந்த கம்பெனில இனிமே இருக்க முடியும்ன்னு எனக்கு தோனல.. இருந்தாலும் கேரியர் நல்ல இருக்காது. அதுனால நாங்க 2 பேரும் வேற கம்பெனிக்கு போகலாம்ன்னு...

கார்த்திக்.. என்ன பேசுறிங்க.. எதோ ஒரு ஆபர் மிஸ் ஆனதுக்கு... டிரை பண்ணுங்க.. மத்தபடி கேரியர் எல்லாம் வேஸ்ட்ன்னு சொல்லாதிங்க....

இல்லைங்க ... நான் டிசைட் பண்ணிட்டேன்...

Karthik.. This is stupidity..absolute stupidity... and dont drag saravanan into this stupid decisions ok..

Pls Ramya.. mind your language... I am trying to be good in evreybody's career and life here.. besides you cant decide on behalf of saravanan.. ok.. i know well about saravanan.. ok..

karthik.. this is it.. there is a limit for everything.. i cant tolerate this saravanan.. come on.. let's get out this place now..

சாரிடா பங்காளி.. நான் எதோ கோவத்துல..

மாப்பிள்ள எல்லாம் அப்புறம் ரூம்ல பேசிக்கலாம்.. ஒகே...

--------------

அதுக்கு அப்புறம், 2 மாசத்துல நான் பெங்களூர்ல ஒரு வேல வாங்கிட்டேன். நான் வந்த 3 மாசம் கழிச்சி அவங்க 2 பேரும் ஒரே கம்பெனில வேலை வாங்கிடாங்கன்னு போன் பண்ணிசொன்னாங்க 2 பேரும். அனேகமா வருச கடைசில கல்யாணம் இருக்கும்னும், நான் கண்டிப்பா வரணும்ன்னும் ரம்யா சொன்னங்க.. எப்படியோ பங்காளி நல்லா இருந்தா சரிதான். ஆனா பங்காளி எப்படி ஆன்சைட் மேட்டர லைட்ட எடுத்துகிட்டான்னு எனக்கு புரியல..

என்னா அதுதான் எங்களுக்கு உயிர்.. சுவாசம் எல்லாம்.. பிறகு ஒரு நாள் போன்ல பேசும்போது, எனக்கு வாழ்க்கை, செட்டில்மென்ட் இத பத்தி சரியா தெரியலன்னு ரம்யா குறைபட்டுகிட்டாங்கன்னும் சொன்னான்.

-------

ஜெட் ஏர்வேஸ் சென்னைல டச்டவுன் ஆகவும், பங்காளி போன் பண்ணவும் சரியா இருந்தது..ஒரு வழியா வெளிய வந்து நின்னா, ஓடிவந்து கட்டிபுடிச்சிகிட்டான்.. சரி இப்ப எதுவும் கேட்க வேண்டாம்னு சும்மா இருந்தேன்.

மாமா உங்கிட்ட ஒரு விசயம்டா... சொல்லணும்டா..

ம்.. சொல்லு... எனக்கு கொஞ்சம் மூட் அப்செட்டா இருக்குடா.. அதான் சரியா பேசாம இருகேன்..

என்ன ஆச்சி US போறவனுக்கு.. இன்னும் US 20 நாள்ல போற.. அதுகுள்ள என்ன ஆச்சிடா.. மனசு மாறுதுன்னு மட்டும் சொல்லாதடா மாமா.. சொல்லிடேன்...அதுக்கு முன்னால முதல்ல ரூம் போய் குளி.. எதாவது சாப்பிடு.. அப்புறம் பேசலாம்..ஒகே..

மாமா நீ சொன்னதுக்கு அப்புறம் நான் எதாவது மறுத்து சொல்லிருக்குறேனா..

--

வந்தவுடன் பொன்னுசாமி போனோம். வழக்கமான பேச்சு இருவரிடமும் இல்லை.. அப்புறம் பங்காளியே சொன்னான். 20 நாளைக்கு முன்னால் ரம்யா வந்தது..

"நன்கு யோசித்துதான் இந்த முடிவுக்கு வந்தேன், வீட்டில அவளுக்கு ஒரு US - N.R.Iக்கு நிச்சயம் பண்ணி இருப்பதாகவும், அவங்க காதலுக்கு இன்னும் 1 வருசத்தில் ரிட்டையர் ஆகப்போகும், ஏற்கனவே 1 தடவை ஹார்ட் அட்டாக் வந்த அப்பா ஒத்துக்கொள்ள மறுக்கிறார். மேலும் இந்த ஜென்மத்தில் பெற்றோர் சம்மதத்தோடு கல்யாணம் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.. என்னால் வீட்டை விட்டு வெளியில் வரும் திடமும் இல்லை.. நடந்தது எல்லாம் ஒரு கெட்ட கனவாக நினைத்து என்னை மறத்துவிடுங்கள்.. நான் அடுத்த மாதம் US போகிறேன். எங்க கல்யாணம் இன்னும் 10 நாள்ல இருக்கு. தயவுசெய்து அங்கு வந்து கலாட்டா செய்யவேண்டாம்.. நாம் இனிய நண்பர்களாக இருப்போம்..''

இன்னும் என்னனமோ ரம்யா சொன்னதாக சொன்னான்..

பங்காளி நான் ஒண்ணு கேட்பேன். முடியாதுன்னு சொல்லக்கூடாது. சரியா..

ம்.. சொல்லுடா..

நம்ம போட்ட தீர்மானத்தை இன்னைக்கு இல்லைன்னு நினச்சிகோடா..

கார்த்தி நியாயமா பாத்தா நாந்தான்டா தண்ணி போடனும்.. நானே சும்மா இருகேன்..

பங்கு நீ என்ன சொன்னாலும் நான் கேட்கமாட்டேன்...

---

ஏழ்ன டா நினைஷ்ழ்ட்டு ர்க்காடா அந்த ரம்யா @#$*%^*.. அவழ்ழ்ளோட அப்பன் அழ்த்த டபரா தைழ்யான் சொல்னானாம். இவழ்லும் கேழ்ட்டாலாம்.

ஷாரீடா மாம்மா.. நான் அவழ்ளள அப்டி ஸ்கோல்ட் பண்ணிழ்ருக்க கூடாதுடா..

இவழ்ளோ நடழ்ந்திருக்கு என் கிட்ட ஒருழ் வார்த்தை சொல்ழ்லல..இப்பவும் அவழ்ல திழ்ட்டாம இருக்க பாத்தியா.. மாம்மா நீ ரொம்பழ் நல்லவன்டா. youu R great

காதலுக்கு உண்மையான மரியாதை தரவன்டா.. ஆனா அவழ்க்குதான் அந்த ரம்யா $%&*@! என்ழ்த்த தகுதியும் இல்லடா.. ஆமாம் சொல்லிட்டேன்.


அப்புறம் இன்னும் என்னன்மோ உளறுனேனாம். கதவை திறக்குறேன்னு சொல்லிட்டு ஜன்னல் வழியா போக பார்தேனாம்.. ரம்யா வீட்டுக்கு போன் பண்ணுறேன்னு சொல்லிட்டு, என்னோட செல்ல உடச்சிடேனாம். எல்லாம் பங்காளி சொன்னது


----------------

அப்புறம் US வரும் போது சென்னைல கடைசி நாள் முழுவதும் பங்காளி எங்கூடவே இருந்தான்.. எங்க அப்பா, அம்மா இருந்தனால சரியாவே பேசிக்க முடியல.. எப்ப திரும்பி வருவோன்னு தெரியாது, என்னோட பங்கு இல்லாம நா மட்டும் US போற சோகம். ..

இதுனால என்னால சத்தியமா சந்தோஷமா இருக்க முடியல...

மாமா என்டா இப்படி சோகமாவே இருக்க.. இப்ப நான் என்ன வேல இல்லாம சோத்துகேவா கஷ்டபடுறேன். நல்ல வேலைலதான்டா இருக்கேன்.. 60 வாங்குறேன்.. அதுக்கும் மேல வேணும்ன்னா நீ இருக்க.. எனக்கு என்னடா கவலை..

ம்..ம்..

பாரு ஊருக்கு போற நீ சந்தோஷமா இருடா. அப்பத்தான்டா எனக்கு பெருமை.. சரி அம்மா வராங்க.. கொஞ்சம் சிரி.. கலகலன்னு இருடா..

ம்.. சரிடா

---------

ஏர்போட்டில் வைத்து அப்பா, அம்மாவிடம் சொல்லிவிட்டு கடைசியாக பங்காளிய பார்த்த போது அவன் கண்கள் கலங்கி இருந்தது..

போய்ட்டு வாறேன்டா, I am sure that, I will meet you there soon
அவன் என் கைய பிடிச்சிக்கிட்டு சொன்னது

thanks for everything . I need some time to be alone and to prepare myself for next journey.

பங்காளி கண்ணில் இருந்து 1 சொட்டு கண்ணீர் என் வலது உள்ளங்கையில் விழுந்தது...

14 Comments:

Blogger பொன்ஸ்~~Poorna said...

கார்த்திக்,
நான் என்னவோ வழக்கம் போல் ரம்பாவுக்கு பதிலா ரம்யான்னு ஒரு போட்டோ போடப் போறீங்கன்னு பார்த்தேன்... ரொம்ப பாவம் உங்க ஃப்ரெண்ட்.... இதுக்கு மேலே என்ன சொல்றதுன்னு தெரியலை..
காலங்கார்த்தால இப்படி மனசைக் கஷ்டப்படுத்திட்டீங்களே...

3/23/2006 07:35:00 PM  
Blogger துளசி கோபால் said...

இப்பெல்லாம் பொண்ணுங்க 'ரொம்ப விவரமா' இருக்காங்கன்னு சொல்றாங்களே, அது இதானா?

3/23/2006 07:57:00 PM  
Blogger Pavals said...

வுடுங்க பங்கு.. இதெல்லாம் அரசியல்ல சகஜம்..

3/23/2006 07:58:00 PM  
Blogger Unknown said...

மச்சி காலையிலே மனசை டச் பண்ணிட்டேப் போ.... பங்கு கிட்டே தெளிவாச் சொல்லு ரம்யா இல்லன்னா ஒரு திவ்யா... இலல ஒரு காவ்யா... சௌம்யா... இப்படி லாட்ஸ் ஆப் '-யாஸ் 'இருக்காங்கப்பா...'

3/23/2006 08:16:00 PM  
Blogger கைப்புள்ள said...

பாவங்க உங்க ஃப்ரெண்ட். காதலிச்ச பொண்ணுக்காகத் தன் கனவுகளைக் கூட விட்டுக் கொடுத்தவருக்கு, இந்த மாதிரி ஒரு சம்பவம் அவரோட வாழ்க்கையில ஏற்பட்டிருக்க வேணாம். ஆனா காலம் என்பது ஒரு சிறந்த மருந்து. கூடிய சீக்கிரம் இத மறக்கக் கூடிய சக்தி அவருக்குக் கிடைக்கும்னு வேண்டுவோம்.

3/23/2006 10:14:00 PM  
Anonymous Anonymous said...

paavam ramyaa. she was an idiot in the first place. Hope she finds some humans in her life instead pigs like you and your friend.

3/24/2006 07:41:00 AM  
Blogger Karthik Jayanth said...

பொன்ஸ்,

//காலங்கார்த்தால இப்படி மனசைக் கஷ்டப்படுத்திட்டீங்களே...//

விடுங்க இனிமே ஒரு 2 படம், 1 கவித இப்படியே ஓட்டிடலாம். அதுதான் ஈஸி :-)

துளசி அம்மா,

//பொண்ணுங்க 'ரொம்ப விவரமா' இருக்காங்கன்னு சொல்றாங்களே, அது இதானா? //

இதுல நான் சொல்லுறதுக்கு என்ன இருக்கு :-)

கொங்கு சிங்கமே ராசா,

// வுடுங்க பங்கு.. இதெல்லாம் அரசியல்ல சகஜம்..//

பங்கு சோகம்... நம்ம சோகம்.....

வாங்க பக்கா 'திரு'டன்,
முதல் வருகை.. நல்வரவு ஆகுக...

//நம்மை பற்றி என்ன கவலை..
ரம்யா நல்லா இருக்கட்டும்...//

என்ன இது..உங்க கிட்டயும் பங்காளி கத இருக்கும் போலயே. நீங்களும் நம்ம பங்கு மாதிரியே பேசுறீங்க...

வா பங்கு தேவ்,

//ரம்யா இல்லன்னா ஒரு திவ்யா... இலல ஒரு காவ்யா... சௌம்யா... இப்படி லாட்ஸ் ஆப் '-யாஸ் 'இருக்காங்கப்பா...//

இதே போல் ஒரு கருத்து 7-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் வாழ்ந்த காதல் மேதை, காவிய நாயகன், "வானம் போல் விரிந்த எனது இதயத்தில், ஒருத் 'தீ' க்கு மட்டும் இடம் கொடுத்து மற்றவர்களை ஏமாற்ற விரும்பவில்லை" என்று கூறியுள்ளார்.

இதே கருந்தை சம கால ஆங்கில மேதை ரம்(ஜும்)கானா Life is Beautiful என்று கூறுவதிலிருந்து அறியலாம்.


கூட்டாளி கைப்பு,

என்னாப்பு ஒரு மைல் அனுப்பசொன்னேன். மறந்துட்டாப்புல இருக்கு..

//காலம் என்பது ஒரு சிறந்த மருந்து.

ஆஹா.. இங்கயும் ஒரு பங்கு கத இருக்கும் போலயே? :-)

//கூடிய சீக்கிரம் இத மறக்கக் கூடிய சக்தி அவருக்குக் கிடைக்கும்னு வேண்டுவோம்.//

இத சங்கத்து சார்பா பண்ணிடலாம். அப்பத்தான் உலக காதலர்கள் எல்லாம் நம்ம சங்க மெம்பர் ஆகிடுவாங்க :-)

3/24/2006 10:08:00 AM  
Blogger neighbour said...

unmai thaanuga namma nanbarauku onnunaa nammakum adhu valikum.. enaku ithil neriyaa anubhavum iruku...

3/24/2006 06:22:00 PM  
Blogger கைப்புள்ள said...

//என்னாப்பு ஒரு மைல் அனுப்பசொன்னேன். மறந்துட்டாப்புல இருக்கு..//

ஆமான்யா மறந்து போயிட்டேன்! சாரி! மெயில் ஐடியை உடனே குடு அப்பு...இப்பவே அனுப்பறேன்!

3/24/2006 06:38:00 PM  
Blogger Karthik Jayanth said...

வாங்க 'நெய்'பர் பக்கத்துவீட்டுகாரரே,

முதல் வரவு. நல்வரவு ஆகுக.

பங்காளியின் சோகம். கண்டிப்பா எனக்கும் சோகம்தான் :-(

கூட்டாளி கைப்பு,
karthikpushparaj {at} gmail {dot} com

3/24/2006 06:57:00 PM  
Blogger தருமி said...

பங்கு இன்னும் அங்கு வந்து சேரலியா? சீக்கிரம் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நல்ல மூடில் 'ஒண்ணா ஒளே ழுமில உக்காள்ந்து , சன்னல் வழியா வெளிய போக' வாழ்த்துக்கள்

3/26/2006 11:32:00 PM  
Blogger Karthik Jayanth said...

// பங்கு இன்னும் அங்கு வந்து சேரலியா?

2 பேரும் Europe ல பார்த்துகிடலாம்ன்னு ஒரு யோசனை.

// சீக்கிரம் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நல்ல மூடில்

எல்லாம் பெரியவங்க ஆசிர்வாதம்

// 'ஒண்ணா ஒளே ழுமில உக்காள்ந்து , சன்னல் வழியா வெளிய போக' வாழ்த்துக்கள்

இதையும் Europe ல ஒண்ணா F1, FootBall Championship matches பாத்துகிட்டேன்னு ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்.

3/27/2006 09:06:00 AM  
Blogger நாமக்கல் சிபி said...

கொசுவைப் போக்கக் கொசுவத்திய ஏத்து!
நம்ம சோகம் தீர குவாட்டரைத்தான் ஊத்து!
உம்முன்னு இருக்கும் மூஞ்ச(மூஞ்சிய) கொஞ்சம் மாத்து!
அப்புறம் ஜம்முன்னு அடிக்கும் நம்ம பக்கம் காத்து!

காதலால ஆம்பளங்க எல்லாருமே லூஸானோம்!
பிளேடு இங்க சேல்ஸு இல்லை தாடி வெச்ச கேஸானோம்!

காதல் பொல்லாதது! நண்பா காதல் பொல்லாதது!


(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

3/27/2006 09:12:00 AM  
Blogger Karthik Jayanth said...

கோவை கோபுரமே,

// காதல் பொல்லாதது! நண்பா காதல் பொல்லாதது!

அது மிகவும் கொடியதும் கூட.. இது பங்கு சொன்னது

அவள் நினைவில் ...

குவாட்டர வாட்டர் ஊத்தாம ஆரம்பிக்கிறேன்..
650 ml லில் முடிகிறது .
நேரம் இல்லாததால்... தினம்

3/27/2006 05:02:00 PM  

Post a Comment

<< Home