Sunday, March 26, 2006

கவிதை - 1

உலகில் எண்ணத் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என 2 வகை,
2 வகைகளில் பிரிக்கமுடியும் என நம்புவோர், முடியாது என நம்புவோர்,
2 வகைகளில் பிரிக்க முடிந்தவர்கள், முடியாதவர்கள் என 2 வகை,

என்று சொன்னான்

ஒரு கணித மேதை...

***

லஞ்சம் வாங்கினேன்
சிறையில் அடைத்தார்கள்
லஞ்சம் கொடுத்தேன்
விடுதலை செய்தார்கள்


***

நான் எழுதியவை அனைத்தும் வார்தைகள்தான்......
என்றாவது இதை நீ படிக்க நேர்ந்தால் ஒரு வேளை கவிதை ஆகும்

***

உன்னை கவிதை என்று என்றோ சொன்னதன் அர்த்தம் இப்பொது எனக்கு புரிகிறது...உன்னிலும் பொய்கள்


***

ஏனக்கு உன்டான சோகம்..ம்.ம்
அது ஒரு பாட்டில் ரம் அடிச்சா சரியாகிடும்..
ஆனா உன் சோகத்துக்கு ஒரு பாட்டில் ரம் அடிச்சா
உன் உடம்பு தாங்குமா..தாங்காது...அபிராமி..அபிராமி..
அதுனால அதையும் நானே அடிச்சுடுறேன்

கவிஞர் ஆப்பு ஆன்டனி

4 Comments:

Blogger பொன்ஸ்~~Poorna said...

//ஏனக்கு உன்டான சோகம்..ம்.ம்
அது ஒரு பாட்டில் ரம் அடிச்சா சரியாகிடும்..
ஆனா உன் சோகத்துக்கு ஒரு பாட்டில் ரம் அடிச்சா
உன் உடம்பு தாங்குமா..தாங்காது...அபிராமி..அபிராமி..
அதுனால அதையும் நானே அடிச்சுடுறேன்
//

இந்தக் கவிதையப் படிச்ச எனக்குண்டான சோகத்துக்கும் சேர்த்து அடிச்சிடுங்க.. :)

3/30/2006 07:33:00 PM  
Blogger Karthik Jayanth said...

// இந்தக் கவிதையப் படிச்ச எனக்குண்டான சோகத்துக்கும் சேர்த்து அடிச்சிடுங்க.. :)

:-)

3/31/2006 08:10:00 AM  
Blogger சின்னவன் said...

கார்த்திக்கு
நல்லாதானேப்பா இருந்தே.
என்னா ஆச்சு உனக்கு?


பெளர்ணமிக்கு போட்டியாக ஒரு அமாவாசையா ?

3/31/2006 02:01:00 PM  
Blogger Karthik Jayanth said...

சின்னவனே(ரே),

முதல் வரவு. நல்வரவு ஆகுக.

முழு மதியுடன் கருத்துகளை எடுத்துரைக்கும் பெளர்ணமி பாண்டியன் எங்கே. எதோ பார்ல குவாட்டர்ர சாத்திட்டு எதோ சொல்லும் ஆப்பு ஆன்டனி எங்கே.

// பெளர்ணமிக்கு போட்டியாக ஒரு அமாவாசையா

இருந்தாலும் இத கண்டிக்குறேன் :-)

என்னோட பதிவ தொடர்ந்து படிச்ச எல்லாருக்கும் தெரியும். எதோ நான் உண்டு என்னோட கொசுவந்தி பதிவு, 2 இங்கிலிஸு கவித, 1 சினிமாகாரி போட்டோ உண்டுன்னு இருக்கேன். இங்கயும் வந்து அதையும் படிச்சிட்டு, எழுதுன நானே யோசிக்காத சாதா வார்த்தைக்கும் ஆழமான கருத்துக்களை கண்டுபுடிச்சி, நீ அந்த பதிவுல அங்க நன்றி சொன்ன, இந்த பதிவுல இவன தூக்குன, அவன இறக்குன. இது எவன் சொன்னது. அப்ப நீயும் அவனும் ஒண்ணு, அவனும் இவனும் ஒண்ணு. அப்ப நீங்க எல்லாரும் ஒண்ணு, ஆனா 7 பேரு , இப்படின்னு ஆல்பர்ல் ஐன்ஸ்ட்டீன் மாதிரி பேசுனா என்னதான் பண்ணுறது.

அதுனாலதான் இப்படி எவனுமே படிக்ககூடாதுன்னு இப்படி ஒரு பதிவு போட்டேன்.

3/31/2006 04:07:00 PM  

Post a Comment

<< Home