Tuesday, March 21, 2006

சந்தேகம்

இதனால் யாரையும் கேலி பண்ணும் எண்ணம் இல்லை

கீழே எனக்குள் எழுந்த சந்தேகம் இதுவரை, பொதுவாழ்வில் (கடையில் குப்பை கொட்டிய வருடங்கள்) என் அறிவுக்கு எட்டிய வரை கேள்விப்படாத ஒன்றாக இருப்பதால்தான்.

போன வாரம் வாரமலர்ல இது உங்கள் இடம் பக்கத்துல சாப்ட்வேர் கம்பெனில வேல பாக்குற ஒருத்தங்க அவங்க அனுபவத்தை எழுதி இருக்குறாங்க.

********************

Text from Dinamalar

' சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் பணியாற்றும் எங்கள் கம்பெனியில் சமீபத்தில் , கண்காணிப்பு கேமராக்கள்சமீபத்தில பொருத்தப்பட்டன. இதற்க்கு பிறகு பெண் உழியர்களான எங்களுக்கு ஆண்களின் உபத்திரம் கொஞ்சம் குறைந்துள்ளது.தேவையற்ற அரட்டையும், வழிசலும் கேமரா மூலம் கண்காணிக்கப்படுமே என்ற பயம் காரணமாக குறைந்துள்ளன. அப்படி இருந்தும் சிலர், பைல்களை கையில் வைத்துக் கொண்டு, வேலை விசயமாக பேசுவது போல 'கடலை' போடுகின்றனர். கருவிகளின் கண்காணிப்பு, நம் குணத்தை மாற்றுவதைவிட, இயல்பான கண்ணியமே சிறப்பு.


கண்காணிப்பு கேமராவுக்கு பயந்து, நாம் வேலை பார்ப்பதை விட, நம் மனசாட்சிக்கும், வாங்குகிற சம்பளத்துகும் பயந்து உண்மையாக உழைப்பதே நல்லது. '

நன்றி : தினமலர்


இதை பற்றி எழுதுவது சில சமயம் தேவையில்லாத சர்ச்சைகளுக்கு வழிவகுக்குமோ என எண்ணி தயங்கினேன். நம் மேல் உள்ள பிம்பம் (பெரிதாக ஒண்ணும் இல்லை என்றாலும்) உடைபடுமே என்ற எண்ணம் வேறு. இருந்தாலும் சில சந்தேகங்கள்

இதை பார்த்தால் என்னமோ இவங்க எல்லாம் காலைல சர்வர்ல லாகி இன் பண்ணி சாயந்தரம் லாக் அவுட் பண்ணூற வரைக்கும் ஹைஎண்ட் கிலஸ்டர் சர்வர்ரே திணறி போற மாதிரி code எழுதுறங்களா. அதுக்காக பசங்க எல்லாம் இப்படி பண்ணவே மாட்டாங்கன்னு சொல்ல வரலை. அதுக்காக இவங்க எல்லாம் இப்படி பண்ணுறதே / பண்ணுனதே இல்லையா என்ன ?

1 Comments:

Blogger பொன்ஸ்~~Poorna said...

உண்மைதாங்க.. 'கம்ப்யூட்டர் முன்னாடியே உக்காராதீங்க, கொஞ்சம் வெளில உக்காந்து கூட வேலைப் பாக்கறவங்களோட பேசணும்'னு தான் ரிசப்ஷன்னு சொல்லி சோபா எல்லாம் போட்டு வைக்கறாங்க. ஒருத்தரோட பேசப் பிடிக்கலைன்னா அளவா பேசி நிறுத்திக்க வேண்டியது தானே. இதுக்கு எதுக்கு கண்காணிப்பு கேமராவை எல்லாம் நம்பணும்??!!!

3/21/2006 08:11:00 PM  

Post a Comment

<< Home