Monday, March 20, 2006

நினைவுகள் - மரணம் தொட்ட கணங்கள் 1


இந்த ஞாயிறுகிழமை கூட்டாளி கூட DownTown ல தொங்குனேன்.(Hangout). அப்ப மிட்சிகன் லேக் பக்கத்துல ஒரு சப்பை ஆக்ஸிடென்ட்டு. அத பார்த்துட்டு வீட்டுக்கு வரும் போது கூட்டாளி அவனோட கொசுவத்திய சுத்துனான். நானும் சுத்துனேன். அத பத்தி உங்களுக்கும் சொல்லாம்ன்னுதான்.

தீக்குச்சி




ஒரு 3 அல்லது 4 வயது இருக்குமென்று நினைக்கிறேன். அந்த வருடம் தாத்தாவின் வீட்டுக்கு சென்ற நான், அதிக நேரம் வீட்டின் பின்னால் இருந்த தீப்பெட்டி பேக்டரிக்கு செல்வது, அதிக அளவில் தீக்குச்சிகளை எடுத்து வந்து விளையாடுவது இப்படி சில நாட்கள் நன்றாகத்தான் இருந்தது. எப்படி நடந்து என்று சரியாக நினைவில்லை. ஒரு நாள் தீக்குச்சிகளுடன் விளையாடிக்கொண்டு இருந்த போது டிரஸ்ல பட்டு நன்றாக எரிய, நான் ஓட, சத்தம் கேட்டு அம்மா வந்து கம்பளியில் உருட்டி தீயயை அனைத்து அதுக்குள்ள பெரிய கூட்டம்.(இந்த கிராமத்துல புது சட்டை போட்டாக்கூட 2 நாளு எல்லாத்துக்கும் பதில் சொல்லனும். இந்த சப்ப மேட்டருக்கு, அப்புறம் எல்லாரும் டெய்லி விசிட்தான். பாவம் நமக்கு தீக்குச்சி சப்ளை பண்ணுன அண்ணன ஊரே திட்டி குமிச்சிருச்சி)

ரெண்டு நாள் ரூம் படி தாண்டல. நான் தொழுவத்துக்கு போகததுனால லட்சுமியும் , குட்டி லட்சுமியும் கத்தி கிட்டே இருந்துச்சாம். மறுநாள் நாம தூங்குபோது ரெண்டுபேரையும், வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க. அப்புறம் 4 வது நாள்ல இருந்து அது சாப்பிடுர நேரத்துக்கு அம்மா என்ன தூக்கிகிட்டு போவங்க. அப்புறம் என்ன 2 மாசம் ராஜ வைத்தியம் தான்.(2-nd டிகிரி பர்ன் நு அப்பா சொன்னதா நினைவு) இந்த 2 மாத காலம் எங்க அம்மா சரியாக சாப்பிட, தூங்க கூட இல்லை. 24 மணி நேரமும் எங்கூடயே இருந்தாங்க. எல்லாம் சரியான பிறகு அப்பாவின் புண்ணியத்தில் காது & முதுகு வலியுடன் 2 நாள் சுத்தியது தனி கதை.


நீச்சல்



3 - வது லீவ்ல நீச்சல் கற்றுகொள்வதாக சொல்லி கிராமத்துக்கு சென்று, பெரியப்பாவின் உதவியுடன் முதல் 2 கிளாஸ் (முதுகில் டின் கட்டிக்கொண்டு) வெற்றிகரமாக முடிந்தது. இந்த கிளாஸ் முடிந்த நேரம் போக காட்டில் பருத்தி எடுப்பது, உரம் கலக்குவது, களத்துமேட்டில் டயர் ஒட்டி விளையாடுவது, கவட்டை, பம்பரம், கோலிக்குண்டு, இன்ன பிற ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளுடன் நன்றாகத்தான் இருந்தது. 3 வது நாள் நம்ம மேல என்ன கோவமோ தெரியல இன்னோரு பெரியப்பா பையன், கயித்தை அவுத்துவிட்டுட்டான். அந்த நேரம் பாத்து வாத்தியார் பெரியப்பா வேற பீடி குடிக்க போய்ட்டார். சரின்னு நானும் கடப்பாரை நீச்சல் கத்துக்கவும், கிணத்து தண்ணிய எல்லாம் குடிக்கணும்ங்கர ஆர்வத்துலயும் உள்ள போய்ட்டேன். சும்மாக்காச்சும் அந்த பக்கம் வந்த பெரியப்பா பீடியோட சொர்க்கு அடிச்சி, என்னோட ஆர்வத்துக்கு தடா போட்டு மேல இழுத்துட்டு வந்துட்டார்.

பாவம் வீட்ல, வாத்தியார் பெரியப்பாவுக்கு திட்டு விழுந்தது. இந்த குரங்குகளை மேய்க்கச் சொன்னா எங்க போனன்னு. நான் பெரியப்பா பீடி குடிக்கத்தான் போனார்ன்னு கடைசி வரைக்கும் சொல்லவே இல்ல. அதுக்கு பலன் ஸ்பெசல் நீச்சல் டிரெய்னிங், கரட்டாண்டி புடிப்பது, புறா & காடை ரோஸ்ட், தினமும் காலைல பதனீர், தெரு முக்குல (ஊரே 10 தெருதான்) இருக்குற கடைல அக்கவுன்ட்ல முறுக்கு & குழல் அப்பளம். 2 மாசம் போனதே தெரியல. ஹூம் அது ஒரு காலம். அதுக்கு அப்புறம் அந்த பெரியப்பா பையனை நேரம் கிடைக்கும் போதெல்லாம் அழ அழ அடிக்குறது எனக்கு ஹாபி ஆகிபோச்சு.


காய்ச்சல்



4 வது படிக்கும் போதுன்னு கா பரீட்சையோ இல்ல அரைபரீட்சை லீவோன்னு நினைக்குறேன். சரியா நினைவு இல்ல. மதியம் வரைக்கும் நல்லாத்தான் இருந்தேன். சாயந்தரம் பம்பரம் மேட்ச்க்கு போறப்ப என்னான்னு தெரியல்ல நடக்ககூட முடியல. அப்பாக்கிட்ட சொன்னேன், நெத்தில கைவச்சி பார்த்தார். டென்சன் ஆனது மூஞ்சிலயே நல்லா தெரிந்தது. நாக்க நீட்டு, கண்ண மூழிச்சி பாரு அப்படின்னு சொன்னாரு. அப்புறம். இந்த கட்டில்ல படு, எங்கயும் விளையாட போகத, அப்பா இப்ப வந்துடுறேன்னு சொல்லிட்டு கிளினிக் போய் சலைன் பாட்டில், ஸ்டண்டு அது இதுன்னு ஒரு ஆஸ்பத்திரி அட்மாஸ்பியரை கொண்டுவந்துட்டார்.. அம்மா & அப்பா ரெண்டு பேரும் டென்சன்னா இருந்தாங்க. அம்மா அழுதுகிட்டே இருந்தாங்க, என்னா நாளைக்கு ராத்திரி தாண்டுனாத்தான் பய பொளைக்குறது இருக்குன்னு சொல்லிட்டாராம்..(இது அம்மா பின்னாளில் சொல்லியது) எப்படியோ சாமியின் புண்ணியத்துல பிழைத்து கொண்டேன். (எதோ Food poison & no body immune நு அப்பா சொன்னதா நினைவு).


தண்ணி






5 - வது படிக்கும் போது தண்ணியடிக்க, குழாய்லங்க (மோட்டர் போட்டா கார்ப்பரேஷன்ல இருந்து வந்து மோட்டரை எடுத்துட்டு போய்டுவாங்க). காலைல 5, 5.30 மணிக்கே அம்மா எழுப்பிவிட்டுடுவாங்க. எப்பவாச்சும் தண்ணி ரொம்ப வேணும்ன்னா மோட்டர் போடுவாங்க. எப்படி நடந்ததுன்னு சரியா ஞாபகம் இல்ல. அம்மா மோட்டர்ல கால் தடுக்கி விழுந்துடுவாங்க என்ற பயத்தில் மோட்டர புடுச்சி இழுத்தேன் சுவிட்ச் ஆன் ல இருந்ததை கவனிக்கலை. எப்படியோ பயங்கரமா ஷாக் அடிச்சிருச்சி. கைய எடுக்க முடியல. அதுக்குள்ள அம்மா சுதாரிச்சி பக்கத்துல இருக்குற கட்டையால அடிச்சி இழுத்து விட்டுட்டாங்க :-)

அதுக்கு அப்புறம் கொஞ்ச நேரம் ஒரே தலை சுத்தலா இருந்திச்சி. அப்புறம் அன்னைக்கு தண்ணி அடிக்க சொல்லவே இல்லை :-)


அதுக்கு அப்புறம் நம்ம இம்சை தாங்கம 6 - வதுல இருந்து போடிங் ஸ்கூல்ல சேத்துட்டாங்க


கணங்கள் தொடரும்...

6 Comments:

Blogger பொன்ஸ்~~Poorna said...

நான் கூட ஏதோ வழக்கம் போல புதுசா ஒரு நடிகை போட்டோ போட்டு எழுதப் போறீங்கன்னு நினைச்சேன்.. ரொம்ப த்ரில்லிங்க் தான் போங்க.. இதுக்கு பார்ட் டூ வேற இருக்கா? (மதுரைல எங்கயாவது அடி வாங்கின அனுபவமா?? ;))

3/21/2006 10:48:00 PM  
Blogger Karthik Jayanth said...

// வழக்கம் போல புதுசா ஒரு நடிகை போட்டோ போட்டு எழுதப் போறீங்கன்னு நினைச்சேன்..

எனங்க பண்ணுறது. சரக்கு இல்லாட்டி, இப்படியே கொசுவத்தி, 2 இத்து போன இங்கிலிஸ் கவித & 1 நடிகை போட்டோன்னு காலத்த ஓட்டவேண்டியதுதான்.

// பார்ட் டூ வேற இருக்கா?

காலேஜ் சமயத்துல பண்ணுன இம்சை எல்லாம், இப்ப நினைச்சி பார்த்தா எனக்கே பல சமயம் ஆச்சர்யமாகவும், சில சமயம் சிரிப்புத்தான் வரும்.

// மதுரைல எங்கயாவது அடி வாங்கின அனுபவமா??

சின்ன வயசில இருந்து ஹாஸ்ட்டலயே இருந்தால, நம்ம அனுபவம் எல்லாம் வெளி ஊர்லதான். மதுரைக்கு வந்துட்டா ஆட்டோ மாணிக்கம் வாழ்க்கை. வெளி ஊர்ல பாட்ஷா கெட்டப்பு. இப்படியே வாழ்க்கை ஒடுது :-)

3/22/2006 09:59:00 AM  
Blogger தருமி said...

அய்யா பாட்ஷா,
எப்படி இப்படி ஒரே தலைப்ப ரெண்டு பேரும் வச்சிருக்கோம் பாத்தீங்களா?

3/26/2006 11:37:00 PM  
Blogger Karthik Jayanth said...

தருமி சார்,

ஆஹா. இப்பதான் பார்த்தேன். நம்ம ஊர்ல இருக்குற மூத்த வலைபதிவர் மாதிரியே நானும் யோசிச்சிசதில் கொஞ்சம் ஆச்சர்யம்தான்.

எனது வயதுக்கு நான் பார்த்த கணங்கள் அதிகம் என்று நினைக்கிறேன். பார்ட் 2 சீக்கிரம் எழுதவேண்டும், இருக்கும் போதே :-)

3/27/2006 08:23:00 AM  
Blogger தருமி said...

electric shockதான் பயங்கரம். அம்மா நல்ல வேளை, நல்ல வேலை செய்தாங்க..

3/27/2006 08:30:00 AM  
Blogger Karthik Jayanth said...

ரொம்ப சரியா சொன்னிங்க சார். இந்த பய மேல அம்மாவுக்கு ரொம்ப பாசம்.

என்னமோ அந்த நாள் முழுசும் ஒரு மாதிரியா இருந்தது.. அதோட தழும்பு கூட இன்னும் கைல இருக்கு..

3/27/2006 03:33:00 PM  

Post a Comment

<< Home