Thursday, March 16, 2006

பார்த்திபன் & கட்டதுரை

இதே போல் ஒரு அறிவிப்பை என் நண்பன் சிபியும் வெளியிட்டுளார்.

போன வாரம் நான் இருந்த கோர் டிஸ்சன் டீம் ல 2 ப்ராஜ்க்ட் Go Live என்பதாலும் தவிர இந்த வாரம் அது சம்மந்தமான வேலைகள் இருப்பதாலும், இதனுடன் நான் புது வீடு மாறுவதாலும் எங்க சங்கத்தின் தங்க தல, என் கூட்டாளி, எங்க அண்ணன், கண்ணன், அஞ்சாத சிங்கம், வீரத்தின் விளை நிலம் கைப்புள்ள அவர்கள் 'கடமை, கண்ணியம், கட்டுபாடு' என்ற தாரக மந்திரத்தை எடுத்துரைத்து, எனக்கு விடுப்பு அளித்தார் கூட்டாளி கைப்பு.

நான் இல்லாத அதே நேரத்தில் கழக கண்மணிகள் சமீபத்தில் 5 வது மணவிழா கண்ட கோவை கோபுரம் சிபி, வாரிசு கண்ட அன்பு அண்ணன் ILA, இலக்கிய ஆர்வத்தால் உந்தப்பட்டு கவிதை களத்தில் மூழ்கிய டெவ் ஆகிய அனைவரும் சற்றே கண்ணயர்ந்த வேளையில், இதுதான் சமயம் என சில புதிய புல்லுருவிகள் எங்கள் தலைவனை நோக்கி கேள்வி கணைகளை தொடுத்தார்கள் என அறிகிறேன்.

இதனால் எனது கூட்டாளி சிறிதளவேனும் மனவருத்தம் அடைத்தாறெனில், எங்க கூட்டாளியின் நிஜ முகத்தை காண தாங்கமாட்டிர்கள். அதன் முன்னால் எங்கள் வரு.வா.ச. கழக பேச்சாளர்களின் தீப்பொறி பேச்சில் BBQ Grill லில் சிக்கிய சிக்கன் துண்டுகளைப் போல் ரோஸ்ட் ஆகிவிடுவீர்கள் என்று கூறி அமைகிறேன்.

11 Comments:

Blogger ஏஜண்ட் NJ said...

//வரு.வா.ச.//

அப்டீன்னா..

ருத்தகோழிய வாயில்போடும் ங்கம்!-ங்களா

3/17/2006 10:57:00 PM  
Blogger நாமக்கல் சிபி said...

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். நம்ம ஞான்ஸ் மெய்யாலுமே நம்ம சங்கத்து ஆளுதானான்னு. :)

இல்லேன்னா சங்கத்து பேரை இப்படி சொல்லுவாறா?

(அப்படியே பல்டி பின்னூட்டம் வேற போடுவாரு, நான் சரியாத்தான் டைப் பண்ணினேன், பிளாக்கர் செய்த சதின்னு)




(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

3/18/2006 08:16:00 PM  
Blogger Karthik Jayanth said...

ஆஹா.. குரு, தமிழ்ல இப்படி பிரிச்சி மேஞ்சா சின்ன பையங்க எல்லாம் என்ன செய்யுறது :-)

சரி வருத்த கோழிதான் சங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட உணவுன்னு ஒரு அறிக்கை கொடுத்துடவேண்டியதுதான்.(சனிக்கிழமை தவிர)

சைடு பிட்

வருத்த / பொரித்த கோழியில் லெக் பீஸ் தான் சுவைக்க சிறந்ததுன்னு பெரியவங்க சொல்லுவாங்க

3/18/2006 08:29:00 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

என்னங்க இது.. இப்டி எல்லம் பேர் வைக்கறீங்க!!! கைப்புள்ள, இதையெல்லாம் கேட்டு நீங்க கோழிப் பக்கம் போய்டாதீங்க.. உங்க ஊர்ல தான் கோழிக் காய்ச்சல் எல்லாம் இருக்கு...

3/19/2006 12:04:00 AM  
Blogger Karthik Jayanth said...

நண்பா சிபி,

தல, 'தமிழின் கலைஞர்' தான் என்பதை உலகுக்கு உணர்த்தும் உதாரணம் இது :-)

3/19/2006 12:30:00 AM  
Blogger Karthik Jayanth said...

வாங்க பொன்ஸ்,

முதல் வரவு.. நல்வரவு ஆகுக..

இதலெல்லாம் அரசியல்ல சகஜம்ப்பு :-)

3/19/2006 12:31:00 AM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

//முதல் வரவு.. நல்வரவு ஆகுக..//

கார்த்திக், முதல் வரவெல்லாம் இல்ல.. கிட்டத்தட்ட உங்க பதிவு எல்லாம் படிச்சிட்டேன் (இந்த மாசம் மட்டும் தான்).. பின்னூட்டு போட எப்டி மறந்தேன்னு தெரியல.. இனி நிச்சயம் என் வரவையும் பதிவு பண்ணிடறேன்... :)

3/19/2006 09:04:00 PM  
Blogger Karthik Jayanth said...

//கிட்டத்தட்ட உங்க பதிவு எல்லாம் படிச்சிட்டேன்

தன்யனனேன்.

அப்படியே நேரத்தை வெட்டியாக்குறதுன்னு முடிவு பண்ணிட்டா, கண்டிப்பா மத்த பதிவுகளையும் படிங்க. உங்க பொன்னான கருத்துக்களை சொல்லுங்க.

பதிவு எல்லாம் படிச்சேன்னு சொன்னதுக்கு, இவ்வளவு பெரிய தண்டனையான்னு நினைக்குறது எனக்கு புரியுது :-)

3/19/2006 09:43:00 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

//பதிவு எல்லாம் படிச்சேன்னு சொன்னதுக்கு, இவ்வளவு பெரிய தண்டனையான்னு நினைக்குறது எனக்கு புரியுது :-) //
-- :-D

3/20/2006 10:18:00 PM  
Blogger Unknown said...

உளவு துறையின் லேட்டஸ்ட் ரிப்போர்ட் படி, சங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலர் சங்கத் தலைவர் கைப்புள்ள மீது அதிருப்தி அடைந்துள்ளதாகச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
கைப்புள்ளயின் குடும்ப அரசியல் சங்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தும் போல் உள்ளது.
ஏற்கனவே கைப்பொண்ணு தல கைப்புவின் வாழ்க்கையில் நுழைந்ததற்கு சங்கத்தின் முக்கிய மீசைக்கார புள்ளி எந்த வித வாழ்த்தும் தெரிவிக்காமல் ஒதுங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலயின் ஹாங்காங் விசிட் பற்றி வீடு கட்டும் சங்கத்து மற்றொரு முக்கிய புள்ளி கடும் கடுப்பில் இருப்பதாய் பேச்சு. தலயின் ஹாங்காங் லூட்டிகள் பற்றியும் சங்கத்தினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

குடும்ப அரசியலின் அடுத்த கட்டமாய் தன்னுடைய தூரத்து தம்பி வீரபாகுவைச் சங்கத்தில் இணைத்தது பெரும் கலவரத்தைக் கிளப்பும் என எதிர்பார்க்கப் படுகிறது...

தல... இருக்கீயா... இப்படி உன்னப் பத்தி தப்பு தப்பாப் பத்திரிக்கையிலே எழுதி இருக்காங்க தல...
நீ எதாவது பேசு தல.... நான் எப்பவும் உன் கூடத் தான் தல....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்(விசும்பல்)

3/22/2006 07:46:00 PM  
Blogger கைப்புள்ள said...

//நான் எப்பவும் உன் கூடத் தான் தல....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்(விசும்பல்)//

நம்புறேன்யா...நம்புறேன்! அதுக்குன்னு எல்லா ப்ளாக்லயும் போய் இதச் சொல்லணுமா? எதாவது அறிக்கை விட்டா 'அவனுங்க' பிச்சி எடுக்குறானுங்க...அறிக்கை விடலன்னா நீ 'பத்திரிகை'நியூஸா கொண்டாரே? என்ன தான் பண்ணுவேன்?

சரி...ஒனக்கு அறிக்கை தானே வேணும்? இந்தா வாங்கிக்க "எங்கள் சங்கத்து சிங்கங்கள் அனைவரும் தலயின் அன்புக்கு கட்டுப்பட்டு இருக்கிறார்கள்...இங்கு உள்கட்சி பூசலுக்கு இடமில்லை. தம்பி வீரபாகு சும்மா உலூலூங்காட்டி ரெண்டு நாள் தங்கியிருந்து ரெஸ்ட் எடுத்துட்டு போனாரு. அவருக்கும் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் கெடயாது"...போதுமா?

இத கொண்டு போய் எல்லா பத்திரிகைக்கும் குடு...எல்லா ப்ளாக்லயும் எழுது.

3/23/2006 11:40:00 PM  

Post a Comment

<< Home