வீக்என்டு வெட்டி குறிப்புகள்
ஒண்ணும் இல்லைங்க. இந்த வாரம் நானும் என்னோட கூட்டாளியும் St. Louis போனோம். இங்க வந்ததுல இருந்து வாரம் தவறாம DownTown ல தொங்குறமே. அப்படியே சும்மா வண்டிய எடுத்துக்கிட்டு அப்படியே St.Louis போனா என்னன்னு ஒரு ரோசனை. சரின்னு வெள்ளிகிழமை அப்படியே அழுத்திட்டோம். அங்க என்னமோ பாக்குறதுக்கு நிறைய இடமெல்லாம் இருக்கு.. ஆனா நாங்க போனது Zoo மட்டும்தாங்க.. அங்க போய் நம்ம முன்னோர்களை பாத்ததிலயே நேரம் போச்சி.. (டேய் பார்ட்டி வைக்க சொன்னா, எதுக்குடா ஆப்பு வைச்ச குரங்கு மாதிரி முழிக்கிற)..
இத பாக்குறதுக்குள்ளயே டயர்ட்டு ஆகிட்டோம். இங்க வந்து ஒரு வேலையும் செய்யாம, இப்படி பில்டப்பு கொடுக்குறது நா மாட்டும்தான்னு ஆரம்பத்துல நினைச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது இங்கன எல்லாருமே இப்படித்தான்னு..
அப்புறம் ராவுக்கு குடிச்சிகின்னு குத்தாட்டம் போடுற இடத்துக்கு போகலாம்ன்னு ஒரு மெகா பிளான் போட்டா எதோ சர்வர்ல ஞாபகம் உடச்சிகிச்சின்னு (Memory Leak) போன் வந்துடுச்சி. அப்புறம் கால்ல உக்காந்து ஞாபத்தை அடைக்குறதுக்குள்ள நமக்கு பொதும்டான்னு ஆகிடுச்சி.
சரி St.Louis இங்க பக்கதுலதானே இருக்கு. இன்னும் ஒரு 4 - 5 தடவை வந்துட்டா போச்சின்னு முடிவு பண்ணியாச்சி.. அதுனால இனிமே அங்க அடிக்கடி போகுறதுக்கு வாய்ப்பு இருக்கு..
இப்ப ரொம்ப தூரம் வண்டி ஓட்டிகிட்டு வந்ததுனால கொஞ்சம் அலுப்பாத்தான் இருக்கு..
7 Comments:
//அதுனால இனிமே அங்க அடிக்கடி போகுறதுக்கு வாய்ப்பு இருக்கு..//
அடிக்கடி எதுக்குங்க போகணும்? இந்தத் தடவை பாத்துட்டு வந்தீங்களே உங்க கூட்டளிங்க (அதாங்க zoo-ல), அவங்க அடிக்கடி வர் சொன்னாங்களா??
//உங்க கூட்டளிங்க (அதாங்க zoo-ல), அவங்க அடிக்கடி வர் சொன்னாங்களா??
நமக்கு மூத்தவங்கன்னா ஒரு மரியாதைதான் :-)
"ராவுக்கு குடிச்சிகின்னு குத்தாட்டம் போடுற இடத்துக்கு போகலாம்ன்னு"// -உங்க அப்பாவை நாளைக்குப் பார்க்கப் போகலாம்னு ஒரு ஐடியா இருக்கு; எப்படி வசதி...? :-)
// உங்க அப்பாவை நாளைக்குப் பார்க்கப் போகலாம்னு ஒரு ஐடியா இருக்கு; எப்படி வசதி...? :-)
அய்யா ஊர் பெரியவங்களே முத வேலயா கும்பிட்டுகிறெனுங்க. இத எல்லாம் கூட்டாளிதான் சொன்னானுங்க. நான் சும்மா துணைக்குதான் சொன்னாலும் இந்த உலகம் நம்பாது. குறிப்பா எங்க அப்பாரு :-) (பய மேல அம்புட்டு நம்பிக்கை). அப்பாலிக்கா குயில புடிச்சி கால உடைச்சி, கூண்டில் அடச்சின்னு பாட்டுதான் கேக்கும் :-)
அழகிய வேலைப்பாடுகள் கொண்ட ஒரு சர்ச் உள்ளது St. Louis Basilica. ஆர்ச்சிலிருந்து பக்கம்தான்,
முடிந்தால் பாருங்கள்.
இரவை போக்க St. Louis நல்ல இடம் அல்ல எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.
அமெரிக்காவில் எங்கே இருக்கிறீர்கள்.
வாங்க சிரில் அலெக்ஸ் சார்,
முதல் வரவு.. நல் வரவு ஆகுக...
சரியா சொன்னீங்க.. St. Louis Basilica இதுக்குகாகத்தான் போனது.. ஆனா கால் முடிய ரொம்ப நேரம் ஆனதுனால அசந்து தூங்கிட்டோம்...
நான் இருப்பது Chicago ல சார்..
"அய்யா ஊர் பெரியவங்களே முத வேலயா கும்பிட்டுகிறெனுங்க..." ஆங்...இந்த பயம், மருவாத எல்லாம் எப்பவும் மனசுல இருக்கட்டும்... :-)
Post a Comment
<< Home