பெண்
பெண்ணல்ல ! பெண்ணல்ல ! ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ,
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ,
சிரிப்பூ மல்லிகைப்பூ,
சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாபூ,
அவள் கை விரல் ஒவ்வொன்றும் பன்னீர்பூ,
மை விழி ஜாடைகள் முல்லைப்பூ,
மணக்கும் சந்தனப்பூ,
சித்திரமேனி தாளம்பூ,
சேலை அணியும் ஜாதிப்பூ,
சிற்றிடை மீது வாழைப்பூ,
ஜொலிக்கும் செண்பகப்பூ,
தென்றலைப்போல நடப்பவள்
என்னைத்தழுவக் காத்துக் கிடப்பவள்
செந்தமிழ் நாட்டுத் திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன் துளி
அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையைப் பழகும் பூந்தேரு
மெட்டியை காலில் நான் மாட்ட
மயங்கும் பூங்கொடி
[யாருக்குன்னு சொல்லியா தெரியணும்.]
6 Comments:
கண்ணே ரம்பா... ன்னு கூவுனாரே அவருக்கா!
;-)
அய்யோ... இது சினிமா பாட்டு மாதிரி தெரிதே...
அவர்தான் அவரேதான்..
வாங்க பாலா,
முதல் வருவு.. நல் வரவு ஆகுக..
அய்யோ இது சத்தியமா சினிமா பாட்டுதான்.. பாலா.. நம்ம அரசியல் & ஆன்மிக குருவுக்கு இந்த சிஷ்யகோடியின் அர்பணம்
கூட்டாளி!
தல ஞான்ஸைப் போலவே உங்களுக்கும் 'தை' மாசம் தான் ரொம்ப புடிக்கும் போல?
:)
நம்ம இதயத்தை நோக்கி மையம் கொண்ட பல புயல்களில் இதுவும் ஒண்ணு :-)
நம்ம பிறந்த மாதம் கூட தை மாசம்தான்.
பல ரீசன்ல இதுவும் ஒண்ணு :-)
Post a Comment
<< Home