என்னவளே
தினமும் வகுப்பில்
வாசிக்கும் அழகிய கவிதை
வருகை பதிவேட்டில்
உள்ள உந்தன் பெயர்
நீயும்
நீ சார்ந்தவைகளும் தான்
என் தேசத்தின்
எல்லை கோடுகள்...
என்ன தேடுகிறாய்
என்னுள்ளே
என் இதயத்தை உடைத்து...
வெளியே எடுக்க முயன்றபொழுதுதான்
தெரிந்தது ....
எவ்வளவு ஆழம்
நீ உள்ளே சென்றிருக்கிறாயென்று .....
உன் நினைவாக நான்
எழுதி வைத்திருக்கும்
பக்கங்களை விட
வெற்று பக்கங்கள்
உன் பற்றிய சிந்தனைகளை
அதிகமாக்கி விடுகிறதே....
செவ்விதழ் சேரும்போது ஜீவன்கள் சிலிர்த்தது
ஒவ்வொரு ஆசையாக உள்ளத்தில் துளிர்த்தது
மெல்லிய மேனியும் சில்லென ஆனது
வெட்கமும் சீக்கிரம் விடை பெற்றுப் போனது
ஏடென்று இதயம் இருக்க நூலொன்று இதயம் எழுதாதோ
இளமையின் இலக்கணம் எடுத்து சொல்லிய இளைய கன்னிக்கு....
எனக்கென்னவோ வண்ணம் பூசாத
உன் உதடுகளை தான்பிடிந்திருக்கிறது
உதடு காயமலிருக்க
நீ ஈரப்படுத்தும் அந்த அழகை விடவா
சாயம் அழகை தந்துவிடப்போகிறது.....
என் இடது கன்னத்தை விட
வலது கன்னந்தான் மிகவும் பிடிக்கும்
உன் முதல் முத்தத்தை
அங்கேதான்சேமித்து வைத்திருக்கிறேன்.........
வெளியே வரத்துடிக்கும்
கண்ணீர்....
வார்த்தைகள் இருந்தும்
மவுனம்.....
சத்தம் இல்லா
நெற்றி முத்தம்...
உதடுகள் திறத்தும்
வரமறுத்த வார்த்தைகள்..
நடை மறத்த கால்கள்...
நமது கடைசி சந்திப்பின்
முதல் நொடிமுதல்
கடைசி நொடி வரை
சேமித்து வைத்திருக்கிறேன்...
இந்த வரிகள்
கண்கள் மூடி சிந்தித்ததால் அல்ல
இதயம் கதறி சிந்தியவை.....
உன்னால்
உனக்காக -
உன் நினைவுகளோடு மட்டும் வாழும்
நான்...
2 Comments:
கலக்குறீங்களே கூட்டாளி! அப்ப வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல நாலு கவிஞருங்க இருக்காங்கனு ஒரு பிரகடன அறிக்கை பதிவா போட்டுடலாம்னு நெனக்கிறேன்.
'தல' கைப்புள்ளக்கு தான் காம்ப்ளெக்ஸ் அதிகமாவுது. சங்கத்தை உட்டு இப்ப நீங்க எல்லாம் சேந்து நம்மள தூக்கிராதீங்கப்பு!
நீங்க வேர கூட்டாளி சின்ன வயசுல சொல்ல நினைச்சதை, இருக்குற மூளைய கசக்கி ஒரு பதிவா கணக்கு காமிச்சிருகேன். நம்ம சரக்கு அவ்வளவுதான்.
இந்த இம்சை பதிவ பாத்துட்டு நீங்க காம்ப்ளெக்ஸ் எல்லாம் கட்ட வேணாம் கூட்டாளி.
Post a Comment
<< Home