Monday, March 06, 2006

ஞாயிறு என்பது பெண்ணாக

ஞாயிறு என்பது பெண்ணாக
திங்கள் என்பது அவள் கண்ணாக
செவ்'வாய்' கோவை பழமாக
...


இப்படியா பட்ட ஒரு ஞாயித்துகிழமையில் அதாங்க நேத்துதான், எங்க ஊர்ல சன்னமா Snow வேற அடிச்சுகிட்டு இருந்துச்சி.[சனிகிழமை வேற சரியா சாப்பாடு இல்ல, அதுவும் போக என்னோட ரூம்மேட் காமெடியன் பாலகிருஷ்ணா படம் 2 கொண்டுகிட்டு வந்தான். அத பாத்து சிப்போ சிப்பு]





சரியான தூக்கம் இல்லாம அதிகாலை 9 மணிக்கே எழுந்திரிச்சிடேன், ஒரு வழியா ரெடியாகி பக்கத்து கிராமத்துல இருக்குற கூட்டாளிய பார்க்க போனேன். இந்த Snow அடிக்கறப்ப, கூட்டமே இல்லாத ரோட்ல, வண்டி ஓட்டிக்கிட்டே, தூரத்தில் கேட்டதாக கற்பனை கொண்ட சர்ச் பெல் ஓசை, அப்பத்தான் ரொம்ப முக்கியமாக சவுன்டு விட்டுகிட்டே புல்ல தோண்டுர இந்த வாத்து & அது நடந்து நடந்து கால் தடம் பதிஞ்சத பார்த்தா என்னமோ புது மாடல் எம்ப்ரயாட்ரி துணி மாதிரி இருக்கும், ஊரே சும்மா Surf ல முக்கி வச்ச மாதிரி Snow இது எல்லாம் ஒரு சுகானுபவம்னா, எவனுமே இல்லாத ரோட்லயும் ஈல்டு, ஸ்டாப்பு சைன், காப் வண்டிய பார்த்துட்டா கண்ணு தன்னால ஸ்பிடு செக் பண்ணுறது இது எல்லாம் ஒரு மாதிரியான இம்சை.

இதுமாதிரியான ஒரு கலந்துகட்டுன உணர்வோடு போய்கிட்டே இருக்கும் போது நேரம் பாத்து, இந்த பாட்டுகள் வேற கேட்டேன்


அழகே அழகு.. தேவதை...
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மன கண்கள் சொல்லும் பொன்னோவியம்......
மூங்கிலே தோள்களோ
தேன்குழல் விரல்களோ

ஒரு அஙகம் கைகள் அறியாதது ......


ஷ்னோரீட்டா ஐ லவ்வ் யூ மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ...

வானெங்கும் ஊர்வலம்
வா(வெ)என்னும் உன் முகம்
கண்டால் மயக்கும்
கலந்தால் இனிக்கும்

பூங்காற்று உன் பேர் சொல்ல
கேட்டேனே இன்று ....

ஏழு ஜென்மங்கள் ஆனாலும் என்ன
ஜீவன் உன்னோடுதான்
....

ராஜாவின் முத்தம் கொள்ளும்
ரோஜா பூ கன்னம்
... (இந்த பாட்டுவரிக்கு பின்னால பெரிய கதை இருக்கு, அது இன்னுமொரு கொசுவத்தில)


என்ன ஆச்சுன்னு தெரியல சும்மா ஒன்ற மணி நேரமா ஓட்டியும், வீட்ட காணோம், எப்படி வரும் 59ல நார்த்ல போனா. நம்ம கூட்டாளி வீடு சவுத்ல. தலைல அடிச்சிகிட்டு ஒருவழியா போய் பாத்தா, அம்புட்டு பெரிய சட்டில, கால்வாசி சிக்கன்பிரியாணிதான் இருந்தது. பயங்கரமா கோவம் வந்தாலும், இன்னும் கொஞ்சம் செய்டா சொல்லிட்டு, 'கள்வனின் காதலி'ங்கர காவியத்த பாத்துகிட்டே சாப்ட்டு முடிச்சேன்.


நயன்தாராவுக்கு என்னால முடிச்சது



அம்மா நயன்தாரா கொஞ்சமாவது பெரிய மனசு பண்ணி சாப்பாட்ட ரேசன்ல சாப்டு தாயே. '52' இன்ச் டீவில பாத்த என்னலயே தாங்க முடியல. காசு கூடுத்து தியேட்டர்ல பாக்குறவன் நிலமை பாவம்தான்.

அப்புறம் அங்கயே பட்டரைய போட்டு நைட்டும் இருக்குற எல்லா சட்டியையும், காலி பண்ணிட்டுதான் கிளம்புனேன்.

சும்மா கூட்டாளி வீட்டுக்கு போனேன், சாப்ட்டேன், வந்தேன். இப்படி பதிவு போட்டா நல்லா இருக்காதுன்னுதான்; ஹி ஹி

பதிவின் நீதி - (கொஞ்சம் பழசுன்னாலும்) சரியான நேரத்துக்கு சாப்பாட்டுக்கு போகணும்.

10 Comments:

Blogger குமரன் (Kumaran) said...

சே. இந்தப் பதிவெல்லாம் வந்து படிச்சேன் பாரு.....

அப்படி சொல்வேன்னு தானே நினைச்சீங்க. அதான் இல்லை. Snowவைப் பத்தி எழுதியிருந்த பத்தியைப் படிச்சதே இந்த பதிவைப் படிச்சதுக்கு worth. பல முறை நான் அனுபவித்த ஒன்று. மினசோட்டாவில இருக்கிறதால வருசத்துக்கு 8 முதல் 10 மாசம் வரை Snow பாக்குறதாலயும், வந்து 8 வருஷம் ஆனதாலயும் இப்ப எல்லாம் சலிப்பா இருக்கு Snow.

3/06/2006 08:52:00 PM  
Blogger Jayaprakash Sampath said...

இந்த போட்டாவிலே இருக்கிறது நயன்தாராவா? நான் நம்பமாட்டேன்.. புடைவை எல்லாம் கட்டியிருக்காங்க...?

3/07/2006 07:22:00 AM  
Blogger Karthik Jayanth said...

// இந்த பதிவைப் படிச்சதுக்கு worth

தன்யனனேன்.

முதல் காதல்,
முதல் முத்தம்,
முதல் கூடல்,
முதல் ஊடல்,
முதல் கண்ணீர்,
முதல் பிரிவு ...

இதல்லாம் எப்படி நீங்காத தாக்கத்தை ஏற்படுத்துமோ.. அதே மாதிரிதான் என்னோட முதல் Snow அனுபவம். இந்த காதலியை இன்னும் கொஞ்ச நாள்ல பார்க்கமுடியாதுன்ற நினைப்பே வருத்தமாத்தான் இருக்கு

3/07/2006 09:38:00 AM  
Blogger நாமக்கல் சிபி said...

பள்ளிக் காலத்து
பால்ய நினைவுகளைப் போல்
முதல் காதலும்
நெஞ்சில்
முள்ளாய்த்
தைத்திருக்கும்!

அதுபோல்தான்
முதல் கடனும்!
மச்சி!
எப்ப திருப்பித் தருவே
அந்த முப்பது ரூபாயை?

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

3/07/2006 10:21:00 AM  
Blogger நாமக்கல் சிபி said...

நயன்தாராவின் படத்துடன் ஒரு பதிவைப் போட்டு நாமக்கல்லாரை சமாதானப் படுத்த மேலிடத்து உத்தரவா "வாலிப வயசு" உடன் பிறப்பே?

இதற்கெல்லாம் மசிய மாட்டார் எங்கள் கேள்வியின் நாயகன்!

3/07/2006 10:42:00 AM  
Blogger Karthik Jayanth said...

பிரகாஷ் சார்,

//இந்த போட்டாவிலே இருக்கிறது நயன்தாராவா? நான் நம்பமாட்டேன்.. புடைவை எல்லாம் கட்டியிருக்காங்க...? //

சில நேரங்களில் ஆரம்ப கால உண்மைகள் கசப்பாகவே இருக்கும். என்ன பண்ணுறது.

அது புடவையா நான் என்னமோ தாவணி என்று நினைத்தேன்.

3/07/2006 05:12:00 PM  
Blogger Karthik Jayanth said...

நண்பரே நாமக்கல் சிபி,

முதல் வருகை. நல்வரவு ஆகுக

//முதல் காதலும்
நெஞ்சில்
முள்ளாய்த்
தைத்திருக்கும்!..

உண்மை உண்மை .அது உனக்கும்தான் என்பதை நான் அறிவேன் :-)

// எப்ப திருப்பித் தருவே
அந்த முப்பது ரூபாயை?

நோ சில்லி பிலிங்ஸ் :-)

3/07/2006 05:21:00 PM  
Blogger Karthik Jayanth said...

// நயன்தாராவின் படத்துடன் ஒரு பதிவைப் போட்டு நாமக்கல்லாரை சமாதானப் படுத்த மேலிடத்து உத்தரவா "வாலிப வயசு" உடன் பிறப்பே? //


ஓ நீர்தான் நண்பன் சிபிக்கு அரசியலின் அரிசுவடியை அள்ளி வழங்கும் கட்டதுரையோ !!!

நான் வாழ்கையில் நடத்த நிகழ்வுதனை எழுதிவிட்டு, எனது அலுவலகவேலை நிமித்தமாக இருந்துவிட்டேன். எனது வாழ்கை ஒரு திறந்த புத்தகம் என்பதையும், நான் கண் துஞ்சாமல் 22 மணி நேரம் உழைபவன், இதனால் அந்த கூட்டத்தில் என்னால் கலத்துகொள்ள முடியவில்லை என்பதும் வரலாறு.

அன்பில் சிபி, கேவலம் நயன்தாரா படத்துக்கே(?) விலைபோக கூடியவர் என்று கருதும் குள்ள நரிகள் கூட்டத்தில் மாட்டிகொண்டு விட்டாய், என்பதை அறித்து அய்யகோ எனது பரந்த இதயம் வேதனையில் விம்முகிறது.

3/07/2006 05:57:00 PM  
Blogger கைப்புள்ள said...

கூட்டாளி,
உங்க பேரையும் என்னோட links listல சேத்துக்கறேனே? வர வர செம ஜாலியா இருக்கு உங்க பதிவெல்லாம் படிக்க...அப்படியே கண்டினியூ பண்ணுங்க.

உலகத் திருட்டு DVDயில் முதல் முறையாக கஜினினு ஒரு படம் பாத்தேன் ரெண்டு நாளைக்கு முன்னாடி...நயந்தாரா இருந்தாங்க அதுலேயும்...ஒன்னும் சொல்றதுக்கில்ல! ஐயாவும் சந்திரமுகியும் கனவானு தோணுது?

3/07/2006 06:43:00 PM  
Blogger Karthik Jayanth said...

என்ன கூட்டாளி,

இப்படி கேட்டுடீங்க. ஆணையிடுங்கள் அடிபணிகிறேன் :-) . சந்தோசமா செய்யுங்கள். நமனால ஒரு நாலு பேரு நல்லா சிப்பு சிப்பா இருந்தா சரிதான்.

நயன்கி பத்தி என்ன சொல்ல.. எல்லாம் 'அயா' வோட Its Gone..

3/07/2006 09:01:00 PM  

Post a Comment

<< Home