Wednesday, March 08, 2006

' ஸ்னிப்பர் '



நேத்து 'ஸ்னிப்பர்' அப்படின்னு ஒரு படம் பாத்தேன். அதுக்கு அப்புறம் 'ஸ்னிப்பர்' பத்தி எதோ புரிந்தது. என்னடா ஆச்சி இவனுக்கு, யார்ரா அந்த 'ஸ்னிப்பர்' அப்படின்னு கேள்வி கேக்குறவங்களுக்கு,

தமிழ் படத்துல எதோ ஒரு மொட்ட மாடில இருந்து 'கதாநாகனை' ரொம்ப நேரம் குறி பாத்தும், நம்ம தல அப்பத்தான் தன்னோட 'டாவு' பக்கம் திரும்பும்போது கரெக்ட்டா கேன மாதிரி செடில சுடுவாரே அவர்தான் 'ஸ்னிப்பர்' . இந்த மாதிரி சித்தரிக்கபடுவதை நிஜ 'ஸ்னிப்பர்' பார்த்தா சத்தியமா டென்சன் ஆகிடுவாரு.

'ஸ்னிப்பர்'



இந்த வார்த்தையை கேட்டது ஞாபகம் வருவது முகம் தெரியாத உருவம், லாங் கோட், கருப்பு தொப்பி, பெரிய துப்பாக்கி..

'ஸ்னிப்பர்' ட்ரிக்கர்ரரை அழுத்தும் முன், காற்றின் வேகம், அது வரும் திசை, மிரேஜ், கிராவிட்டீ, ஒலி / ஒளி & பாரோமெட்ரிக் கூறியிடுகள் இன்னும் படத்தில் காட்டாத பல.. இந்த சரியான இடத்தை தேட படுற பாடு, அப்புறம் 'இரு உடல் ஒரு மூளை' என்ன ஆச்சர்யமா இருக்கா. 'சிட்டிசன் அஜித்' சொல்லுற மாதிரி 'நான் தனி ஆள் இல்ல', 'ஸ்னிப்பர்' ஒரு குழு.

'ஸ்னிப்பர்'ருடைய முக்கிய கடமை ரிகான்நாஸ்சன்ஸ்(reconnaissance - தமிழ்ல என்னப்பா ?). அதாவது எதிரிகளை பற்றி முக்கிய தகவல்களை கமாண்ட் போஸ்ட்க்கு தருவதுதான். குறிப்பிட்ட வேலை இல்லாத போது 'கழுகு' மாதிரி சரியான சந்தர்பத்தை பார்த்திருபதுதான். 'ஸ்னிப்பர்' பெறும்பாலும் எதிரிக்கு பலமடங்கு சேதம் உண்டுபண்ணுகிற வேலையில்தான் இருப்பார்கள். உ.தா. தண்ணி சப்ளைய நிப்பாட்றது, பெரிய தலைய அசல்ட்டா தூக்குறது, ஆதாரத்துகே சேதாரம்(ஆ பன்ச் டயலாக்கு), ரஜினி டயலாக்குதான் 'ஒரு தடவை சுட்டா 100 தடவை சுட்ட மாதிரி' (என்ன சப்பாத்தியா அப்படின்னு யாரு குரலு குடுக்குறது)

'ஸ்னிப்பர்' கள் தனி ஆளா போகமாட்டார்கள். வேலைக்கு போனா Bourne Supremacy' ல 'தல' கொண்டுக்கிட்டு போற பொருள் இருக்குற பெட்டி ஒண்ணுதான் பெருசு. வேலைல சும்மா நாள் கணக்குல ஆடம, அசையாம இருப்பாங்கலாம்.(ஆங்.... பொறுமை எறுமை மாதிரினு சொன்னது கரெக்ட்தான் போல)


'ஸ்னிப்பர்' குழு

2 பேரு; Shooter - சுடுபவர் & Spotter- பார்பவர். இதுல இந்த 'ஸ்ப்ட்டர்' வச்சிகுற பொருள வச்சி 1000 அடிக்கு அப்புறம் வரவன் தலைல எத்தனை .யிறு இருக்குன்னு கூட எண்ணிரலாம் போல. இது வழியா உலகத்த பாக்குறது தனி சுகம். அத வச்சி நம்ம ஆளு சொல்ல சொல்ல இனிக்குதைய்யா மாதிரி சொல்ல நம்ம 'ஹீரோ ஸ்னிப்பர்' அம்சமா இடத்துல இருந்துகிட்டு குறி வச்சி சொல்லி அடிக்குறாரு..

என்னதான் இருந்தாலும் நம்ம எல்லாம் மனுச பயதானே. தப்பு நடக்குறது சகஜம்தான். இந்த மாதிரி நேரத்துல, மின்னல் மாதிரி இலக்கின் அடுத்த இடத்த சொல்லுற அழகுதான் என்ன. நிலமை கைமீறி போறப்ப, 'ஸ்பாட்டர்' திடிர்ன்னு தோள்ல இருக்குற M-16ன வச்சி போட்டுதள்ளி நிலமைய சமாளிக்குறது என்ன. எல்லாம் அழகுதான்.

'ஸ்பாட்டர்' டாவு மாதிரி எடுத்ததுக்கெல்லாம் கோவிச்சுகிறதே கிடையாது. பின்ன 'ஸ்பாட்டர்' வேலை ஒரு பயிற்சி களம் மாதிரி 'ஸ்னிப்பர்'க்கு.

'ஸ்னிப்பர்' பொருளு



'ஒரு அடி அது மரண அடி' இதுதான் 'ஸ்னிப்பர்க்'கு தெரிந்தது. சும்மா சொன்ன மட்டும் போதுமா அதுகேத்த மாதிரி இருக்குற பொருளுதான் நம்ம M-21, PSG-1. விலை கம்மிதான் $10K :-), இது ரெண்டுலயும் பாரேல், ட்ரிக்கெர், சேம்பர், சில மாற்றங்கள் செஞ்சி ரெடி பண்ணுறங்க. 'ஸ்கோப்' இது நம்ம டெலிஸ்கோப் மாதிரி. 1 கிலோ இருக்கும். காலடி ஸ்கேல் நீளத்துல ஆனால் சில மாற்றங்களுடன்.

'ஸ்னிப்பர்' வேலைல

நம்ம ஆளு வேலை எல்லாம் ரேஞ்ச் தான். இவங்க எல்லாம் 'ஸ்பெசல் ஆப்ஸ்'னு சொல்லுற டீம்ல இருப்பாங்க. சும்மா சாலை மறியல், 10 பேர் ஊர்வல பாதுகாப்பு வேலை இல்ல.

2002 War on Terrorல, Arron Perry using 50-caliber MacMillan TAC-50 rifleல, 2,430 metres (1-1/2 மைல்)க்கு அப்பால இருக்குற ஒரு முக்கியம்மான ஆப்கானிஸ்தான் காமாண்டர தூக்குனதுதான் இப்போதைக்கு ரெக்கார்ட்டு.

இன்னும் எழுத ஆசைதான். இம்மா நேரம் என்னோட பட்டரைய தாங்குனதே பெரிய விசயம். அதுனால இப்போதைக்கு போதும்.

22 Comments:

Blogger இலவசக்கொத்தனார் said...

தம்பி,
அது ஸ்னிப்பரா அல்லது ஸ்னைப்பரா? எனக்கு தெரிஞ்சு ரெண்டாவதுதான். முதலாவது துண்டு துண்டா வெட்டறவன இல்ல குறிக்கும்?

Snipper vs Sniper

உடனே குத்தம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் ஆளின்னு வையக்கூடாது.

3/08/2006 07:14:00 PM  
Blogger இலவசக்கொத்தனார் said...

reconnaissance

வேவு பார்த்தல் சரியா வருதா?

3/08/2006 07:15:00 PM  
Blogger Karthik Jayanth said...

அண்ணன் இ.கொ ,

நான் எதுக்கு உங்களை வைய்ய போறேன். நீங்க என்ன வைய்யாம இருந்தா பத்தாது :-)

எனக்கு தெரிந்து Sniper அப்படி என்றால் skilled military shooter அல்லது One who shoots at other people from a concealed place அப்படின்னு ஞாபகம்.

ஆனால் இவங்களை 'ஷார்ப் ஷுட்ர்ஸ்' 'ஸ்னைப்பர்' என்று சொல்ல கேள்வி. ஆனால் Snipper என்ற வார்த்தை நான் பார்த்தது இல்லை..

நமக்கு english அறிவு கம்மிதான். சொன்னா சரி பண்ணிகுவேன்.

நானும் இந்த reconnaissance =
வேவு / உளவு அப்படின்னு யோசிச்சேன். சரி எதுக்கும் பெரியவங்க கிட்ட கேக்கலாம்ன்னுதான்.

3/08/2006 07:52:00 PM  
Blogger இலவசக்கொத்தனார் said...

நீங்க சொல்ல வந்தது ஸ்னிப்பரா அல்லது ஸ்னைப்பரா? குழப்புறீங்களே.

Snipper - one who snips. அவ்வளவுதான்

3/08/2006 08:12:00 PM  
Blogger Karthik Jayanth said...

இ.கொ,

நான் சொன்னது 'ஸ்னிப்ப்ர்' பத்திதான். 'ஸ்னைப்பர்' அப்படிதான் உச்சரிக்கணும், தவறுக்கு வருத்தங்கள் :-)

கொண்டோடி

முதல் வரவு.. நல்வரவு ஆகுக

// இது கொஞ்சம் அதிகம் போல.திரைப்படங்களில் காட்டப்படும் குவியம் பொய்யானது//

ஒரு மைல் தொலைவுக்கு அப்பாலும் எப்படி உருவங்கள் தெளிவாக தெரியும், என்பதை உணர்த்த, நான் கையாண்டது அவ்வளவே.

// திரைப்படங்களில் காட்டப்படும் குவியம் பொய்யானது.//

இதை நானும் அறிவேன். நீங்கள் குறிப்பிட்ட படங்களை பார்த்துளேன். அவை அருமை

3/08/2006 09:00:00 PM  
Blogger கொழுவி said...

Sniper - இது சுடுபவனையும் குறிக்கிறது. அதேநேரம் சுடுவதற்குப் பயன்படுத்தப்படும் துப்பாக்கியையும் குறிக்கிறது.

வேவு - சரியானது போலவே படுகிறது. (வேவு அணி, வேவுப்புலி, வேவுத்தரவுகள் என்று ஈழப்போராட்டத்தில் இச்சொல்தான் பயன்பாட்டிலுள்ளது)

________________
மறந்துபோன முக்கியமான சினைப்பர் படம், எங்கட "பரம சிவன்" ;-)

3/08/2006 10:20:00 PM  
Blogger கைப்புள்ள said...

//மறந்துபோன முக்கியமான சினைப்பர் படம், எங்கட "பரம சிவன்" ;-)//

:)))))-

3/08/2006 10:35:00 PM  
Blogger Karthik Jayanth said...

கொழுவி,

முதல் வரவு.. நல்வரவு ஆகுக...

தகவலுக்கு நன்றி :-)

//மறந்துபோன முக்கியமான சினைப்பர் படம், எங்கட "பரம சிவன்" ;-)//

:)))))-

தங்களுக்கு sense of humor அதிகம் என நினைக்கிறேன்

வேறு என்ன நான் சொல்ல முடியும்.

3/08/2006 10:55:00 PM  
Blogger கொழுவி said...

யோவ், என்ன நக்கலா?
பரமசிவனில, தலை இரவில ஒரு சினைப்பர் தாக்குதல் செய்வார்.
நைட் விஷன் இல்லாமல் (அதுதாங்க, ஸ்கோப்புக்கால பாக்கும்போது பச்சையாத் தெரியுமே?) பகலில சுடுற மாதிரியே இரவிலயும் சுட்டுத்தள்ளுறதோ, அதுவும் ஒரே தோட்டாவில் நகர்ந்து கொண்டிருக்கும் இருவரைப்போடுவதோ எவ்வளவு கஸ்டமென்று தெரியுமா? ஆங்கில நாயகர்களே இப்படி ரிஸ்க் எடுக்கிறதில்லை.

3/09/2006 01:58:00 AM  
Blogger Karthik Jayanth said...

மண்ணிச்சுகோங்க ஆபிஸர்,

உலகத்துல பெரிய சயின்டிஸ்ட்டு எல்லாரும் மூளைய கசக்கி, சயின்ஸ்ச அடிப்படையா வச்சி பல மேட்டர்கள செஞ்சிவச்சிருக்குறங்க. அதுனல இங்க்லிஸ் தலங்க ஈஸியா பண்ணுராங்க.

ஆனா நம்ம 'தல' தலையே 100 ஸுப்பர் கம்யுட்டர்ரு, அதுனால சயின்ஸ் பத்தி கவலையே இல்லாம ராத்திரில (நைட் விஷன் கூட இல்லாம) அசால்ட்டா 2 பேர தூக்குறார். இது கம்மின்னு பீல் பண்ணுறேன்.

இவர விட பெரும் 'தல'ங்க ஒரு Bolt Action rifle ல 100 பேர தூக்குவாரு தெரியுமா..

3/09/2006 10:30:00 AM  
Blogger கொழுவி said...

//இவர விட பெரும் 'தல'ங்க ஒரு Bolt Action rifle ல 100 பேர தூக்குவாரு தெரியுமா..//

வன்னியனெண்டு ஒருத்தர் கொஞ்சக் காலத்துக்கு முந்தி ஒரு பதிவு போட்டார். அதில நீங்கள் சொல்லிற மாதிரியே இப்படிச் சொல்லியிருக்கிறார்.

போன வருசம் கொழும்பில ஒரு தமிழ்ப்படம் பாத்தனான். ரஜனி நடிச்ச படம். அதின்ர கடைசிக் காட்சிதான் பாத்தனான். ரகுவரனும் ரஜனியும் சண்ட பிடிக்கிற காட்சி. (மனிதன் எண்டு நினக்கிறன்) அதில ரஜனி துவக்கொண்டு வச்சு சுடுவார். அவர் எப்பிடி சுடுகிறார் எண்டா துப்பாக்கியின் விசைவில்லுக்குள் (trigger) கைவைத்துச் சுட மாட்டார். மாறாக குண்டு ஏற்றும் தாழ்பாளை (cocking handle) இழுத்து இழுத்து விட்டுக்கொண்டிருப்பார். குண்டு சரமாரியாகப் பாயும். இதையெல்லாம் பாக்கிற சின்னப்பிள்ளையள் கூட சிரிக்கும்.

முதலிட்ட பின்னூட்டம் இருதடவை வந்திருக்குமென்று நினைக்கிறேன். இருந்தும் "வெளியிடாததுக்கு" நன்றி;-)

3/09/2006 01:23:00 PM  
Blogger Karthik Jayanth said...

கொழுவி,

// வன்னியனெண்டு ஒருத்தர் கொஞ்சக் காலத்துக்கு முந்தி ஒரு பதிவு போட்டார் //

இதை பற்றி எனக்கு தெரியாது.

//முதலிட்ட பின்னூட்டம் இருதடவை வந்திருக்குமென்று னைக்கிறேன்.இருந்தும் "வெளியிடாததுக்கு" நன்றி;-)

நீங்கள் என்ன சொல்ல வரிங்கன்னு எனக்கு புரியல.

1) நான் உங்களோட கமென்ட்ஸ் வெளியிடவில்லை என்று அர்த்தம் பண்ணிகவா, ? இல்லை
2) நீங்கள் 2 முறை கமென்ட்ஸ் எழுதினீர்கள் என்று எடுத்துகொள்ளவா ?

எனக்கு வந்த கமெண்ட்ஸ் எல்லாம் நான் பப்லிஷ் பண்ணுறேன். உங்களுக்கு sense of humor அதிகம் என நான் சொன்னது lighter sense meaning..

well, if you feel i had said anything offensive. I seriously have my apologies

3/09/2006 07:08:00 PM  
Blogger கைப்புள்ள said...

ராப்டரு!
உங்களுக்கு ஒரு கேள்விங்க...நீங்க ஸ்னைப்பர் ஷாட் அடிச்சுக்கிட்டே கவிதையும் எழுதுவீங்களா? எதுக்கு இப்படி திடீர்னு கேக்கறேனா, நம்ம தேவ் கவிதை எழுதுவாருன்னு முன்னமே தெரியும். நேத்து பாருங்க நம்ம நாமக்கல் சிபி, கோழி பண்ணை மட்டும் வச்சிருக்காருன்னு பாத்தா கவிதையும் எழுதுவேன்னு இதை காட்டறாரு.
இந்த ஆச்சரியம் தீரருதுக்குள்ள கருது அறுக்கறவரு, களை புடுங்கறவருன்னு நெனச்சிருந்த விவசாயியும் கவிதை எழுதறாருன்னு தெரிஞ்சது.

அது தான் கூட்டாளி, நீங்களும் கவிதை எல்லாம் எழுதுவீங்களானு கேட்டுக்கலாம்னு ஒரு ரோசனை.அப்படி இருந்துச்சுனா வருத்தப்படாத வாலிபர் கவிக்குழுன்னு ஒன்னையும் ஆரம்பிச்சுடலாம்.

3/09/2006 11:14:00 PM  
Blogger கொழுவி said...

ஐயோ கார்த்திக்.
அதில் எதுவுமில்லை. நீங்கள் சொன்னதை நான் சரியானமுறையிலேயே எடுத்துக்கொண்டேன்.
வன்னியன் பதிவெழுதினாரென்று அந்த இணைப்பையும் தந்திருந்தேன். அதிலும் நீங்கள் சொன்னதுபோல விசயமிருந்தது.
பின்னூட்டப்பிரச்சினை எதுவுமில்லை. நீங்கள் என் பின்னூட்டமெதையும் நிறுத்தவில்லை. நான் தவறுதலாக அடித்த வசனமொன்றுடன் முதலொரு பின்னூட்டம் போட்டேன். பின் திருத்தி இட்டேன். ஆனால் முதற்போட்ட அந்த தவறுதலான பின்னூட்டம் உங்களுக்கு வரவில்லையென்று நினைக்கிறேன். அதைத்தான் குறிப்பிட்டேன்.

3/10/2006 06:41:00 AM  
Blogger Karthik Jayanth said...

என்ன கூட்டாளி,

இப்படி கேட்டுடீங்க.. நாங்க எல்லாம் சின்ன வயசுல இருந்த்தே இந்த வாலிப வயசுல வரைக்கும் முயர்ச்சி பண்ணுறோம். இப்பையும் பண்ணுறோம்.

ஹி ஹி எழுத வராது. ஒண்ணும் வேலைக்கு ஆகமாட்டேங்க்குது.

இதைத்தான் இப்படி டிஸ்சன்ட்டா சொன்னேன்.

இதுக்காக சங்கத்தை விட்டு துக்கிராதிக.எப்படியாவது முயர்ச்சி பண்ணுறேன்.

3/10/2006 10:30:00 AM  
Blogger Karthik Jayanth said...

நன்றி கொழுவி,

எங்க தப்பா அர்த்தம் பண்ணிடிங்களோண்ணு யோச்சிசேன். அப்புறம் நான் விளக்க, நீங்க விளக்க நடுவுல 2 பேரு குழப்ப, அதை எல்லாரும் வேடிக்கை பாக்குற மாதிரி ஆகிடுமோண்ணுதான். :-)

3/10/2006 03:26:00 PM  
Blogger துளசி கோபால் said...

ஏம்ப்ப்பா கார்த்திக்,

ஸ்னிப்பரோ,ஸ்நைப்பரோ உச்சரிப்பை விட்டுத்தள்ளுங்க.

என் பூனையை துப்பாக்கி புடிக்க வச்சுட்டீங்களே, நியாயமாக் கீதா?
மனசு அப்படியே ஒடைஞ்சுபோச்சேப்பா....(-:

3/10/2006 03:32:00 PM  
Blogger Karthik Jayanth said...

வாங்க துளசி அம்மா

நான் உங்கள இப்படி கூப்பிட்றதுதான் சரியா இருக்கும்.

முதல் முறையா வீட்டுக்கு வந்தவங்க இப்படி வருத்தபடும்படி ஆகிபோச்சே. உஙகளுக்கு புடிச்ச பூனைகுட்டிக்கு இப்படி ஒரு ரோல்லா நு நானும் யோசிச்சேன்.

ஆனா பாருங்க இந்த பூனைகுட்டி துளசி அம்மா என்ன கேரிபேக்ல எல்லாம் வச்சி ஒரு பெரிய மனுசன் இமேஜ் கொடுத்துடாங்க. நான் இன்னும் வாலிப வயசு ஆளுதான் காட்டனும். துளசி அம்மா அகில உலக சூறாவளி சுற்றுபயணம் போய்ட்டு வர்றதுகுள்ள இப்படி ஏதாவது செஞ்சாத்தான் ஆச்சின்னு சொன்னதுக்கு அப்புறம் என்னால ஒண்ணும் சொல்ல முடியல.ஆனா இது பொம்மை துப்பாக்கிதான்.

நான் சொன்ன சமாதானத்தை கேட்டு துளசி அம்மா மனசு சமாதானம் ஆகிடுச்சின்னு ஒரு அறிக்கை கொடுத்துடுங்க.இல்லனா உலகம் முழுவதும் உள்ள சொந்தகாரங்க, தொண்டர்கள் எல்லாம் டென்சன் ஆகிடுவாங்க. அப்புறம் டெய்லி ஆட்டோ & ஆஸிட் பாட்டில்தான். அத தாங்குற உடம்பும், மனசும் எனக்கு சத்தியமா இல்ல :-)

3/10/2006 04:21:00 PM  
Blogger துளசி கோபால் said...

:-)))))

3/10/2006 08:39:00 PM  
Blogger Amar said...

கார்த்திக்,

கொண்டோடி அவர்கள் சொன்னது போல Enemy at the Gates என்ற திரைபடத்தை பாருங்கள்!

Stalingrad நகரில் இரண்டு Sniperகளின் போராடத்தை பற்றிய அருமையான கதை!

அப்புறம் Call of Duty என்ற விளையாட்டை உங்கள் கம்யூட்டரில் install செய்து நீங்களே அந்த படத்தில் வரும் கதாநாயகனாக மாறி எதிரிகளை சுட்டு வீழ்த்தலாம். :)

3/11/2006 07:21:00 AM  
Blogger Karthik Jayanth said...

வாங்க

முதல் வரவு நல் வரவு ஆகுக..

கண்டிப்பா படத்தை பார்க்கிறேன். இவளோ ரெக்கமென்டேசன்னு அப்புறம் கூட பாக்கலைன்னா எப்படி :-)

அய்யா சாமி.. இந்த ஊருக்கு வந்ததுக்கு அப்புறம்தான், ரொம்ப கஷ்டப்பட்டு computer games பக்கம் போகாம இருக்கேன். மறுபடியுமா.. என்னோட laptop தாங்காது..

3/11/2006 05:24:00 PM  
Blogger கைப்புள்ள said...

//இதுக்காக சங்கத்தை விட்டு துக்கிராதிக.எப்படியாவது முயர்ச்சி பண்ணுறேன்//

என்னங்க இப்டி சொல்றீங்க! அவுங்க மூணு பேரும் சேந்து ஒனக்கு எங்க தலயா இருக்க தகுதியில்லன்னு நம்மள தூக்கிடுவாங்களோனு நான் நெனச்சுட்டு இருக்கேன்?!

3/12/2006 05:42:00 AM  

Post a Comment

<< Home