பொறுமை
எங்க ஆ காட்டுங்க பார்க்கலாம்.
ஏன் டாக்டர் நீங்க 'ஆ' வ பார்த்ததே இல்லையா
டாக்டர் இவர் எப்ப பாத்தலும் சிரிச்சிகிட்டே இருக்குறார்.
அதை நீங்க ஏன் பாக்குறிங்க?
என்னங்க நாலு கால் பேசிட்டு 1 ரூபா தர்ரிங்க
யோவ் நாலு கால் ஒண்ணு தானே.
படம் போட்டதும் எல்லாரும் தும்முறாங்களே ஏன்
அது மசாலா படமாச்சே... அதான்
அரசியல்வதுகளுக்கு புடிக்காத பிஸ்கட்
'ட்ரூ' பிஸ்கட்
பஞ்சாப்ல சப்பாத்திய எப்படி சாப்பிடுவாங்க
சுட்டுதான்
நீண்ட நாள் உயிர் வாழ என்ன வழி
பெருசா ஒண்ணும் இல்ல உயிர் வாழணும்
மேட்டுர் நீர் மேல பேப்பர்காரங்களுக்கு கோவம்
அதான் மேட்டுர் நீர் மட்டம் நு எழுதுறாங்க
தமிழ்ல 'ரம்பா' மாதம் இருக்கு
அதான் 'தை' மாதம்
UAE-ல போட்டோ எடுத்தா எப்படி இருக்கும்
ஒரே 'ஷேக்'கா இருக்கும்
வெயிட் டே இல்லாத ஹவுஸ் எது
லைட் ஹவுஸ் தான்
அந்த பையன் எதுக்கு டிக்ஸ்னரிய தலைக்கு வச்சி தூங்குறான்.
அவனுக்கு அர்த்தமில்லாத கனவா வருதாம்
இந்த சட்டை தீபாவளிக்கு எடுத்ததா
இல்ல எனக்கு எடுத்தது
[கூட்டாளி மைல் ல கடிச்சது. அப்படியே]
18 Comments:
karthiku neengalum arambichutingala, ensoy.... athu ennanga ramba jokeku athu mattum puriyaveilla.
சிப்பு வந்துட்டு
:)-
டைட்டில்ல 'பொறுமை' ன்னு போட்டதால பொறுத்துக்கறேன்!
சிப்பு சிப்பா வந்துது.....
varuthappadatha valibar sangamil ko.pa.se. anathin vilaivuthan ithu.
வாங்க நன்மனம்,
உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு. ரம்பா ஜோக் புரியலன்னு சொன்னத நான் நம்பிடேன் :-).
அதை என்னோட 'அரசியல் & ஆன்மீக குரு'க்கு சமர்பணம் பண்ண இருந்தது. அவசரத்தில் மிஸ் ஆகி விட்டது. இப்ப பண்ணுறேன்.
'தல' சிஷ்யகோடிகள் எப்ப கொடுத்தாலும் ஒன்னும் சொல்லமாட்டாருன்னு நம்புறேன்.
இதுக்கு அவரோட பொறுமை யே சாட்சி
// டைட்டில்ல 'பொறுமை' ன்னு போட்டதால பொறுத்துக்கறேன் //
தல உங்க போல வருமா :-)
(நல்ல நேரம்டா சாமி ஆட்டோ & SUV அட்டாக்ல இருந்து தப்பிச்சேன்)
//தமிழ்ல 'ரம்பா' மாதம் இருக்கு
அதான் 'தை' மாதம்//
'தை' = Thigh (தொடை!)
தொடையழகி ரம்பா வாழ்க!!!
;-)
குமரன்,
நிஜமா சிரிச்சிங்க என்றால் மகிழ்ச்சி.
உங்கள மாதிரி ஒருத்தர் சொன்னாலும் போதும். இப்படியே பட்டரைய போட்டு எல்லாதையும் அறுத்துற மாட்டேன்
எங்க குரு டென்சன் ஆகுறதுக்குள்ள எஸ்கேப்
வாங்க கீதா மேடம்,
முதல் வரவு.. நல்வரவு ஆகுக..
இந்த விளைவு நல்லதுக்கா இல்ல கெட்டதுக்கா அப்படின்னு கேட்டா வேலு நாயக்கர் மாதிரி தெரியலயே மேடம்...... அப்படித்தான் பதில் வரும்
இனி 100 வருசத்துக்கு அப்புறம் வரபோற தலைமுறைக்கு கூட தெளிவா புரியும்படி கோனார் நோட்ஸ் போடு சரித்திரத்தில் இடம் பிடித்த தல வாழ்க
'அரசியல் & ஆன்மீக குரு', உங்கள போல முடியுமா
வாழ்க ரம்பா மாதம் :-)
{/'அரசியல் & ஆன்மீக குரு', உங்கள போல முடியுமா /}
வேலு நாயக்கர் மாதிரி தெரியலயே அப்படித்தான் பதில் வரும் !!!
ஆ... தாங்க முடியலையே... வயித்து வலியைத்தான் சொல்றேன். அவ்ளோ டமாசு...
வாங்க ராம்ஸ்,
நிஜமாவா. சந்தோசம்தான். அப்புறம் ரொம்ப சிக்கன் சிப்ஸ் சாப்பிட வேணாம். உடம்புக்கு நல்லது இல்லயமே.
//பஞ்சாப்ல சப்பாத்திய எப்படி சாப்பிடுவாங்க
சுட்டுதான்//
இவ்வளவு பழைய சப்பாத்தியா? பஞ்சாப்'லே இன்னுமா சுட்டுகிட்டு இருக்காங்க?
//UAE-ல போட்டோ எடுத்தா எப்படி இருக்கும்
ஒரே 'ஷேக்'கா இருக்கும்//
சினிமாவிலே மற்றும் இந்தியாவிலே நிறைய பேரு சொல்றா மாதிரி, பொதுவா "துபாய்" சொல்லாமே விட்டியே, நீவிர் வாழ்க, உம் கொற்றம் வாழ்க!
வாங்க துபாய்வாசி,
முதல் வரவு.. நல்வரவு ஆகுக.
நமக்கும் முதல்ல துபாய்ன்னுதான் தெரியும். அப்புறம் கூட்டாளி ஒருத்தன் சொன்னான். அந்த ஊர்ல எல்லாம் மனுசன் வேல செய்வானா அப்படின்னு சொன்ன காலம் போய், சிரியஸ்சா பண்ணியும் ஆப்பான நேரமும் உண்டு.
நீங்க
விவேகானத்தர் தெரு,
துபாய் பஸ் ஸ்டான்டு,
துபாய் குறுக்கு சந்து ....
பக்கத்துலயா இருக்குறிங்க.. சும்மா டமாசு :-)
சிரிப்பு வந்துச்சுங்க.. ஆனா இன்னும் கொஞ்சம் ட்ரைபண்ணா நீங்க ஜோக் கூட எழுதலாம் ;)
ரியலி .. I will try definitely
இப்படி உசுப்பேத்தி, உசுபேத்திதான் உடம்பு ரணகளமா இருக்கு :-). அடுத்து என்ன பதிவு போடலாம்ன்னு யோசிச்சே மண்டை காயுது :-) :-)
Post a Comment
<< Home