'வாலிப வயசு' உடன்பிறப்பே,
'வாலிப வயசு' உடன்பிறப்பே,
கட்டுபாட்டு, கண்ணியம், இதுகாறும் அரசியலில் தூய்மை இவற்றின் ஒரே பிம்பமாக உள்ள தல 'கைபுள்ள' அவர்களை நோக்கி சிலர் திட்டமிட்டு கை, கால், கேள்(வேள்)வி கணைகளை நடத்தியவர்கள் என்பதை வரலாறு அறியும்.
இருப்பினும் வேல் கொண்டு வீர மறவர் கூட்டம் பெரும் வேட்டைக்கு செல்லும் போது, வழியில் உள்ள பேதை மயிலின் மேல் எரிவது வீணர் வேலை என்பதால் சென்றுவிட்டோம்.
வரு.வா. கழக வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒரு போர் தொடங்கியிருக்கிறது என்பது போன்ற மாயையை ஏற்படுத்த சில அன்னிய சக்திகளுடன் முயன்றுவருகிறார்கள். இது நமது தமிழின பெருமையை உலுக்கிப்பார்க்கும் ஒரு போராய் மாறிவிட்டது. கட்சியில் களை எடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.
கை நீட்டும் பகைப்படை நடுங்க வேண்டுமானால், நாம் பண்பாடு கடுகளவேனும் குறையாமல் சீறிக்காட்டவேண்டும். என்ன இது, ஒரிருவர் கேள்வி கேட்பதால் என்னவென்று, எள்ளவேனும் மந்தமாய் இருந்துவிடுவாயோ என்ற ஐயப்பாட்டுடனே இக்கடிதத்தைத் தொடங்குகிறேன்.
இந்திய துணைகண்டத்தின் அரசியல் எதிர்கால தலைவிதியை(?) நிர்ணயிக்கும் வகையில் எனது அரசியல் நிலைபாட்டை அறிவித்துவிட்டேன். இதையே வட அமெரிக்காவில் உள்ள கட்சியின் ஒரே நீ(நி)தி ஒனர், எனது அன்பு தம்பி, வருங்கால அரசியல் விடிவெள்ளி, F- 22 போல் செயலாட்றும் கார்த்திக் அவர்களின் அன்பின் வார்த்தைக்கு கட்டுபட்டு, அன்மையில் இங்கு வந்த அன்பர் ஜார்ஜ் புஷ் அவர்களும் வரவேற்றுளதை உலகம் அறியும்.
நம் கட்சியின் கண்ணியதை கட்டிக்காக்க வேண்டித்தான் நான் மீண்டும் மீண்டும் கடிதமெழுதிக்கொண்டிருக்கிறேன். இன்னும் நான் செய்யவேன்டியது ஒன்றுதான். கட்சியின் கண்ணியத்தை காக்க, எனது அன்பு தம்பி கார்த்திக் அவர்களை நானே எனது செலவில்(?), கட்சியின் நிதியிலிருந்து அவை குறிப்பில் சொல்ல முடியாத(எனது நலன் கருதி) உடனே வழங்கி, அடுத்த கட்ட நடவடிக்கை கூறித்து ஆலோசிக்க இந்தியாவுக்கு வருமாறு அழைக்கிறேன்.
17 Comments:
வர வர யாரு என்ன சொல்றாங்கன்னு ஒன்னுமே புரியமாட்டேங்குது.... ஹும்...
:-))
ம். அறிக்கைப் போர் ஆரம்பமாகியிருக்கிறது. கார்த்திக் ஜெயந்த் அவர்களின் அறிக்கை மத்திய அரசில் அமைச்சர் பதவி மீதான ஆவலையே காட்டுகிறது என்பதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை
(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)
அண்ணா,
சமீப காலத்தில இவ்வளவு உணர்ச்சியை தூண்டும் விதமா யாருமே எழுதின ஞாபகம் இல்லீங்கண்ணா. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்கண்ணா.
உங்க கட்சியில் சேரலாம்ன்னு தோணுது, ஆனா அதுக்கான வயசு இல்லீங்களே. ஏதாவது இளைஞர் அணி இருக்குதாங்கண்ணா?
// வர வர யாரு என்ன சொல்றாங்கன்னு ஒன்னுமே புரியமாட்டேங்குது.... ஹும்...//
என்னமோ இது சின்ன பசங்க விளையாட்டு. இத பத்தி நீங்க கண்டுகாதீங்க
வழக்கம் போல சகலகலகலாவல்லில கலக்குங்க குமரன் :-)
கழக கண்மனியே அன்பில் சிபி,
//அறிக்கைப் போர் ஆரம்பமாகியிருக்கிறது
போர் என்றால் வெற்றி அல்லது வீர மரணம் என்ற கொள்கையை உடைய வீர மறவர் கூட்டத்தின் வழி வந்தவன் நான். நாம் இருவரும் கண்ட களங்கள் எத்தனையோ. இந்த அரசியல் களத்தை தவிர்த்து நாம் இருவரும் எலக்கியத்திலும்(?) சரி, யதர்த்தவாழ்விலும் சரி நண்பர்கள்தான் என்பதை உலகம் அறியும்.
இது எனது அறிக்கை அல்லவே. கடமை, கண்ணியம், கழக கட்டுபாடு இவைகளை காக்கவேண்டி, தர்மதாயின் வேண்டுகோளுக்கு தலைசாய்த்து, இதயத்தை கல்லாக்கி இந்த அறிக்கைதனை வெளியிட்டேன்.
வாங்க இ.கொ ,
// சமீப காலத்தில இவ்வளவு உணர்ச்சியை தூண்டும் விதமா யாருமே எழுதின ஞாபகம் இல்லீங்கண்ணா.
நெஜமா !!! நான் ரொம்ப சின்னபயங்கங்கண்ணா.... எதோ கட்சிய காப்பத்தவேண்டி அவசரமா கிறுக்கியது :-)
// ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்கண்ணா.
தன்யனானேன்
// உங்க கட்சியில் சேரலாம்ன்னு தோணுது,
தங்களை போன்றவர்களுக்காக கழகத்தின் கதவுகள் திறத்தே இருக்கிறது.
// ஆனா அதுக்கான வயசு இல்லீங்களே. ஏதாவது இளைஞர் அணி இருக்குதாங்கண்ணா?
இளைஞர் அணியில் சேரும் அளவு, தங்களுக்கு வயதாகிவிடவில்லை என்று கருதுகிறேன் :-)
//அடுத்த கட்ட நடவடிக்கை கூறித்து ஆலோசிக்க இந்தியாவுக்கு வருமாறு அழைக்கிறேன்.//
ஆஸிட் பாட்டில்கள்...
ஆட்டோக்களில் காத்திருக்கின்றன...
விமானம் எப்போது இறங்குமோ...
என எதிர்பார்த்து...
Take care!!!
;-)
ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள் ஒன்றன் மீது மற்றொன்று மனம் நோகலாமா?
எதுவா இருந்தாலும் பேச்சு பேச்சாத் தான் இருக்கணும்... என்ற நம் உயர்ந்தக் கொள்கையை மறந்து விட்டாயா??
கட்டத்துரைகளிடமும்...பார்த்திபர்களிடமும் நம் கைப்புவைப் போட்டுக் கொடுத்து கைப்பு கதற கதற அடி வாங்கிக் கொடுக்க வேண்டிய உன்னதக் கடமையில்லிருந்து சின்ன சின்னக் கருத்து வேறுபாடுகளைக் காரணம் காட்டி நாம் தவறாலாமா?
வேண்டாம் சிபி... எதுவா இருந்தாலும் சங்கத்தை விட்டு விலகாதே....
அன்பு சகோதரர் கார்த்திக் ஜெயந்தும் இதையே தான் விரும்புகிறார்....என்பது அவர் பதிவிலிருந்து தெரிகிறது
மக்கள் கருத்தும் அதுவே... சிபி திரும்பி வா.... கடமை உன்னை அழைக்கிறது கேட்கவில்லையா?
(அம்ம்ம்ம்மாஆஆஆ...அம்ம..அம்ம....கைப்புள்ளயின் கொள்கை குரல் ஒலிக்கிறது)
//கட்டத்துரைகளிடமும்...பார்த்திபர்களிடமும் நம் கைப்புவைப் போட்டுக் கொடுத்து கைப்பு கதற கதற அடி வாங்கிக் கொடுக்க வேண்டிய உன்னதக் கடமையில்லிருந்து சின்ன சின்னக் கருத்து வேறுபாடுகளைக் காரணம் காட்டி நாம் தவறாலாமா?//
கடமை என்ற ஒன்றைச் சொல்லி தேவ் என்னை கட்டிப் போட்டுவிட்டார்.
தவிர கைப்புவின் சமாதான அறிக்கையும் எனக்கு திருப்தியளித்தது.
//அன்பு சகோதரர் கார்த்திக் ஜெயந்தும் இதையே தான் விரும்புகிறார்....என்பது அவர் பதிவிலிருந்து தெரிகிறது//
எனக்கு அப்படி தெரியவில்லை. கட்சியில் களையெடுக்கும் நேரம் வந்துவிட்டதென்று தன் கடிதத்தில் பேராசிரியர் கார்த்திக் ஜெயந்த் கூறியுள்ளார்.யாரை களை என்று கூறுகிறார்.
"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
பதிவினாற் சுட்ட வடு" என்று அவர் அறியாததா?
இருப்பினும் நண்பர்கள் மற்றும் தலைமையின் ஆலோசனையின் பேரில் மறு பரிசீலனை செய்ய இருக்கிறேன் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
(இதன் நகல்:
http://pithatralgal.blogspot.com/2006/03/56.html)
Agent 8860336 ஞான்ஸ் ,
// ஆஸிட் பாட்டில்கள்...
ஆட்டோக்களில் காத்திருக்கின்றன... //
அட இன்னும் பணமே வந்தபாட்ட காணோம். அது உள்ள ஆஸிட்ட்ட் பாட்டிலாஆஆஆஆஆஆஆ.
சங்க கொள்கையான பேச்சு பேச்சாதான் இருக்கணும். இந்த கோட்ட தாண்டி நானும் வரமாட்டேன். நீங்களும் வரப்படாது :-)
நண்ப(னே)ரே நாமக்கல் சிபி,
நமது கட்சியின் உயர்ந்த கொள்கைக்காக உழைக்கும் மறவர் கூட்டம் நாம் என்பதை எவ்வாறு மறக்க நேரிட்டது என்பதை நம்ப முடியவில்லை.
நான் கட்சியின் களை என்றது, உனது பிஞ்சு நெஞ்சில், நஞ்சை விதைத்தவர்கள் பத்தி..
என்னை பேராசிரியர் என்று சொன்னதே நீ நமது பழைய நட்பை மறக்கவில்லை என்பதை கூறுகிறது.
நாம் இருவரும் இணைத்து கழக பணி ஆற்றும் நாளை எதிர் நோக்கியுள்ளேன்
தோழா Dev,
முதல் வரவு.. நல்வரவு ஆகுக
// எதுவா இருந்தாலும் சங்கத்தை விட்டு விலகாதே....
அதே அதே ..
// அன்பு சகோதரர் கார்த்திக் ஜெயந்தும் இதையே தான் விரும்புகிறார்....என்பது அவர் பதிவிலிருந்து தெரிகிறது //
தோழா உங்களுக்கு தெரிந்தது அன்பில் நண்பன் சிபிக்கு புரியவில்லை என்பது எனக்கு மிகுந்த மண வருத்தத்தை அளிக்கிறது :-(
கட்சியின் கொள்கை கருதி நண்பனை திரும்ப வருமாறு வேண்டுகிறேன்.
//கட்சியின் கொள்கை கருதி நண்பனை திரும்ப வருமாறு வேண்டுகிறேன்.//
Grass itchingயா! என் காலத்துக்கு அப்புறமும் கழகக் கண்மணிகள் இப்பிடி தான் ஒத்துமையா இருக்கோணும்!
:)-
பார்க்க
கூட்டறிக்கை
சங்கத்தின் அங்கங்களாம் வாலிப தங்கங்கள் மதிப்பிற்குரிய சிபி, கார்த்திக் ஜெயந்த்,ILA ஆகிய முன்னணியினர் சங்கத்தின் சிங்கம் தலைவர் கைப்புள்ளயின் வேண்டிகோள் ஏற்று மீண்டும் சங்கக் கடமை ஆற்ற திரும்பியிருப்பது அறிந்து பெருமகிழ்ச்சியும் பெரு நிம்மதியும் அடைகிறேன்.
சங்கத்து நலனில் அக்கறைக் கொண்டு பல அறிக்கைகளில் (பதிவுகளில்) சம'ரசம்' காண விழைந்த அன்பர்கள் கொத்ஸ், ஞான் ஸ், ஆகியோருக்கும் சங்கத்தின் தொண்டனும், தல கைப்புவின் உண்மை விசுவாசியியுமான எனது கோடானு கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சங்கத்தின் தங்கமே, உயிரினும் மேலான உடன் பிறப்பு Dev,
தல கைப்பு, என்னை பேராசிரியர் என்று அன்புடன் அழைக்கும் மீசைக்கார நண்பன் சிபி, கடவுள் கண்டு எடுத்த விவசாயி ILA அவர்களே, மற்றும் அலை கடல என திரண்டிருக்கும் தொண்டர்களே,
கடந்த நாளில் நடந்த நிகழ்தகவினை, சுமுகமான முறையில் தழைவாழை இலையில் கூட்டு, பொரியல், அவியல், அறிக்கையுடன், சாம்பார், சம'ரசம்',கண்டு கடைசியில் பழுத்த அரசியல்வாதி ஞானஸ் இந்த அன்பு தம்பிக்காக ஆட்டோவில் கொண்டு வந்த 'அல்வா பொட்டலைங்களை, போர்களங்கள் பல கண்டு பின்னர் உண்டு சைவ விழாவாக முடிந்தது என்பதை நான் இந்த நேரத்தில் உறுதிப்படுத்துகிறேன்.
இந்த நேரத்தில் கொத்ஸ் அவர்களின் மகத்தான பணியையும் மறக்க இயலாது.
அப்பாடா எப்படியோ ஒரே அறிக்கைல எல்லாத்தையும் கவர் பண்ணியாச்சு.
Post a Comment
<< Home