Thursday, March 30, 2006

நினைவுகள் 2 - Shogun

பாகம் 1

எனக்கு தெறிந்து எல்லாரும் சொல்லுறது Shogun ல மைலேஜ் கிடைக்காதுன்னு. எனக்கு என்னமோ பைக் நல்லாத்தான் மைலேஜ் தந்தது. சிட்டில 40 - 42 தரும். நான் பைக் வாங்கி முதல் 6000 k.m க்கு 60 தாண்டி ஓட்டவே இல்லை. அதுலையும் நோ விலீங், நோ ஹில்ஸ், பைக் வாங்கி எல்லாமே லாங் ரைட்தான். அப்ப எல்லாம் எங்கயாவது போகணும்ன்னா மத்த பசங்க கிளம்புறதுக்கு 1 மணி நேரம் முன்னாடியே நானும் எங்கூட்டாளியும் கிளம்பிடுவோம். இருக்குற பணம் எல்லாம் இந்த பெட்ரோல் போட்டே அழிச்சோம். ஆ ஊ ந்னா எங்கயாவது டிரிப்தான்.

இப்படி ஓட்டி சிக்கிரமே 5K வந்துடுச்சி. அந்த வாரம் வீலிங் வாரம்ன்னு சொல்லாத குறைதான் :-) . என்ன கேட்டா இஞ்சின் செட் ஆகுர வரைக்கும் கைய, கால வச்சிக்கிட்டு சும்மா இருக்கனும். அப்புறம் இன்னும் ஒண்ணு. வண்டிய ஒருத்தனே ஓட்டனும். இந்த விஷயத்துல நான் கடைசி வரைக்கும் கொள்கை கொம்பனா இருந்தேன். இதுனால சில பல சண்டைகள் வந்தது உண்டு. அப்ப எங்க காலேஜ்ல ஷோகன் கிளப் ந்னு ஒண்ணு இருந்தது. வண்டிய நான் வெயில்ல கூட நிப்பாடுனது இல்ல.


எனக்கு தெரிஞ்சி அப்ப கூட்டாளிக வாங்குன பைக் எல்லாரும் Shogun தான். சண்முகம் ஒருத்தன் தான் RX - 100 வாங்குனான். அது என்னமோ Shogun தான் எனக்கு பிரியம். 2 பேருக்கும் சண்டை வந்தா அதுக்கு ஆரம்பம் இந்த பைக் மேட்டர்லதான். சில சமயத்துல RX - 100 விட ஸ்பீடா ஓட்டிருக்கேன். ஆனாலும் அவன் ஒத்துகவே மாட்டான். அப்புறம் என்னோட ரூம்மேட் கார்த்தி (அவன் பேரும் அதுதான்) அவங்க வீட்டுல பைக் வாங்கி குடுக்க ஒத்துகிட்டாங்கன்னு சொல்லிட்டு சந்தோசத்துல எங்கயோ போய்ட்டு வரும் போது சாமியார் (Old Monk) சொன்ன பேச்சை கேட்டு புதையல் எடுத்துட்டான். அதுவும் சாதா புதையல் இல்ல. அதுனால அவங்க வீட்டுல கடைசி வரைக்கும் பைக் வாங்கி தரல :-(


அப்புறம் சில குரங்குகள் மாதிரி எனக்கு இந்த எஞ்சின் ஆல்டர்ரேசன், ஸ்சைலன்சர்ல கை வைக்குறது இது எல்லாம் சுத்தமா புடிக்காது. Shogun ல அழகே அதோட ஒரிஜினாலிட்டிதான்.


எனக்கு என்னமோ பைக்க ரீமாடல் பண்ணுறதுல கொஞ்சம் கூட விருப்பமே இல்லை. எனக்கு தெரிஞ்சி பைக்ல நான் மாத்துன 2 விசயம் என்னா இந்த பெட்ரோல் லாக் ஒண்ணு. அதுவும் கூட ஹாஸ்டல்லயும், காலேஜ்லயும் ஒவர்ரா பெட்ரோல ஆட்டைய போட்டுடதுனால, அப்புறம் இந்த பெட்ரோல் டேங்க் கவர் ஒண்ணு. ஒரே ஒரு தடவை எங்கூட்டாளி 'டேய் கார்த்தி இந்த SareeGuard நல்லாவே இல்லைன்னும், அப்புறம் இன்னும் என்னனவோ சொல்லி, நானும் மாடு மாதிரி தலய ஆட்டி மெக்கானிக் ஷெட் வரைக்கும் போய்ட்டேன். நல்லவேலை அங்க போனதும் என்னொட புத்தி வேல செய்து ஒண்ணும் வேனாம்டா மாமா. சரிகா இப்படியே இருக்கட்டும்ன்னு சொல்லிட்டு வந்துடேன்'.


பைக் எங்கூடவே இருந்த ஒவ்வொறு நாளும் ஒரு இனிய அனுபவம்தான்.. ஷோகன்ல எனக்கு புடிச்சது 20KM ல கூட 4 வது கியர் எஞ்சின்ன தட்டாம ஓடும்.. இது ரொம்ப முக்கியம் எங்களுக்கு. என்னா எங்க காலேஜ் லேடிஸ் ஹாஸ்டல் முடிச்சதும் வர்ற லாங்க் ரோட்ல கியர டவுன் பண்ணாம ஒரே திருகுல அசால்ட்டா 60 அடிக்கலாம், அதுவும் 7 செக்கன்ட்ல :-). அப்புறம் சிட்டில ஓட்டுறதுக்கு சரியான பைக். அதுக்காக ஹைவேஸ்ல ஒழுங்கா ஒடாதுன்னு இல்ல. எனக்கு தெரிஞ்சி நிறைய தடவ 110 - 115 தொட்டுருக்கேன். முதல் தடவை 110 ந்னு ஸ்பீடாமீட்டர்ல பார்த்த திரில் ஹும், அத எல்லாம் ஒரு வார்த்தைல சொல்ல முடியாது, அனுபவிக்கனும்.





இந்த பைக் பயணங்களில் Top of My Mind ந்னு கேட்டா 3 வது செமஸ்ட்டர் அப்ப எங்க வீட்டுக்கு இரவோடு இரவாக எங்கயும் நிப்பட்டாம 5 Hrs ஓட்டிக்கிட்டு வந்ததுதான். வீட்டுக்கு வந்து இருந்தது 10 நிமிசம்தான். ஹால்டிக்கெட்டும், எனது ராசியான பேனாவையும் எடுத்துகிட்டு உடனே கிளம்பிட்டேன். மறுபடியும் ஒரு 5 Hrs Non Stop Driving :-)


நானும் என்னோட பங்காளியும் போன அதரம்பள்ளி பால்ஸ் 3 விசிட். இந்த 3 தடைவையும் காலைல சரியா சூரிய உதயத்தின் போது இருந்தோம். அப்புறம் ஒரு தடவை செல்வா ந்னு விஜய் படம் போய்ட்டு அதுல ஒரு பாட்டுல கோத்தகிரி கோழி கறி ந்னு ஒரு வரி வரும். அத கேட்டுட்டு எங்க பங்கு இப்ப அடுத்த வேளை சாப்பாடு நேரா கோத்தகிரில போய் ஒரு சிக்கன் பிரியாணிதான்.. நீதான் என்ன கூட்டிகிட்டு போறன்னு சாதிச்சிட்டான். சரின்னு ஒரு நடை போய்ட்டு வந்தோம். வரும் போது அங்க கேத்தரின் பால்ஸ் க்கு போக பாத்தது.. ஒரு தடவை நானும் அவனும் மட்டும் 6 மைல் போனது, ஒரு தடவை ஆழியார் டேம் & monkey Falls போனது.. ஒரு தடவை நேந்திரங்காய் சிப்ஸ் வாங்க மட்டும் பாலக்காடு போனது, வரும் போது எதுக்குடா ஒரு சிப்ஸ் பாக்கெட் வாங்க இவ்வளவு வந்தோம்ன்னு மண்டை காஞ்ச்சி நீதாண்டா இதுக்கு காரணம்ன்னு சொல்லிட்டு ஒருத்தனுக்கு ஒருத்தன் 1 வாரம் பேசாம இருந்தது. ஒரு தடவை செமஸ்ட்டர் லீவ்ல கொடைக்கானல் போய் 2 வாரம் தங்குனது, 2 பேரும் எந்த நேரம் பாத்தாலும் ஏர்கன் வச்சிக்கிட்டு இருக்குற பேரிக்காய் எல்லாத்தையும் காலி பண்ணுனது. ஒவ்வொரு செமஸ்ட்டர் ரிசல்ட் வந்ததும் போன மருதமலை முருகன் கோவில். எல்லாம் இப்ப நடந்தது மாதிரி இருக்கு.


கடைசி வருசம் எங்க ஜூனியர் ஒருத்தன் ஒரு ஆக்சிடன்ட்ல இறந்தப்ப அவங்க அம்மா ஹாஸ்பிட்டல்ல அழுதது, பார்க்க போன எல்லாத்துக்கும் அவங்க சொன்ன ஒரே அறிவுரை வாசகம் ' நீங்க எல்லாருமே எனக்கு எம் புள்ளங்கதான் , நான் இப்ப அழுகுற மாதிரி இன்னும் ஒரு தடவை அழ வச்சிராதீங்க ' எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. இது நடந்து 2 மாசத்துல மதுரைல எங்க அப்பாவுக்கு ரொம்ப தெரிஞ்சவங்க பையன் ஆக்சிடென்ட்ல இறந்துட்டான். இத எங்க அப்பா எங்கிட்ட சொல்லிட்டு இத மாதிரி எனக்கு ஒரு நிலமை எனக்கு வேணாம்டா அப்படின்னு சொன்னார்.


தொடர்ச்சியா நடந்த இந்த 2 சம்பவங்கள் என்னோட மனசை மாத்திடுச்சி. எங்க அம்மா சொல்லிகிட்டே இருந்த மாதிரி பைக் க வித்துட ஒத்துகிட்டேன்.

Adios Amigos சரிகா.

3 Comments:

Anonymous Anonymous said...

Wonderful blog. Keep posting.

11/03/2006 01:00:00 PM  
Blogger Udhayakumar said...

//சந்தோசத்துல எங்கயோ போய்ட்டு வரும் போது சாமியார் (Old Monk) சொன்ன பேச்சை கேட்டு புதையல் எடுத்துட்டான். //

:-)

12/02/2006 03:05:00 PM  
Blogger Unknown said...

Hey Karthick how are u man?

where u now?

12/03/2006 10:18:00 PM  

Post a Comment

<< Home