Sunday, March 05, 2006

நாலு என்னோடது - I am tagged

இந்த டிஸ்கவரி சேனல்ல பாத்தா காட்டுல வேட்டைக்கு அப்புறம் முதல்ல சிங்கங்கள் எல்லாம் மெதுவா சாப்பாட்ட அடிச்சி ஆடும். அதுக்கு அப்புறம் மத்த சின்ன பசங்க விளையாட்டுல தலைய காட்டுவாங்க.



கொங்கு ராசா( நம்ம முதல் காதல். நான் எதையோ நெட்ல தேடி போய் முதல்ல பார்த்த வலை பதிவு). இளவஞ்சி, இவங்க பதிவ எல்லாம் ஒரே நாள்ல படிச்சேன். அதுல ஆரம்பிச்சதுதான் என்னோட தமிழ் எலக்கிய பிளேடு. பின்னாளில் ப்லொக்ல உதவியது அனந்த், குமரன் & Agent(8860336)ஞான்ஸ்(இப்பவும்). இவங்க எல்லாம் ஆரம்பிச்சி வச்ச இந்த திருப்பணி(?)ல, இப்ப நம்ம கூட்டாளி கைபுள்ள கோத்துவிட்டுடாரு. இது பத்திய ட்ரைலர்


சரி இப்ப மைய்ன் பிளேடு இங்க





நான் இருந்த / இருக்கும் நாலு எடம்

1) மதுரை
2) ராஜம் மேன்சன் புகழ் சென்னை
3) ஹைதராபாத் & பெண்களுர்
4) அமெரிக்கா

நான் பார்த்த / பார்க்கும் நான்கு பணிகள்

1) வெட்டி பய (இவன் வாழ்கைல தேறமாட்டான்னு அப்பா & சொந்தகாரர்கள் எல்லாரும் சொன்ன வேலை)
2) புரோகிராமர்
3) சீனியர் இன்டெக்ரேசன் அனலிஸ்ட்
4) வெட்டியா ஊர் / நெட்ல மேயுறது

மதுரையில் புடிச்ச நாலு எடம் ( நாலு மட்டும் அல்ல)

1) வீடு
2) மீனாக்ஷி அம்மன், திருப்பரங்குன்றம், அழகர் & திருமோகூர் கோயில்கள் (லிஸ்ட் இன்னும் இருக்கு)
3) எல்லீஸ் நகர் & எஸ்.எஸ் காலனி, (பதின்ம வயதில் சைக்கிள் டயர் தேய சுத்திய இடங்கள்)
4) காலேஜ் ஹவுஸ் & டவுன் ஹால் (சும்மாவாச்சும் கோயில பாத்துகிட்டே சுத்தி சுத்தி நடக்கலாம்)

ரசிச்சு பாக்குற / பாத்த நாலு டிவி நிகழ்ச்சி

1) ஜெயா டிவி ல மதியம் 1 மணிக்கு வர்ர காமெடி ஷோ & விஜய் டிவில வர்ர சந்தானம் ஷோ
2) போகோ டிவி
3) கார்ட்டூன் சேனல்
4) டாம் & ஜெர்ரி டிவிடி கலெக்சன் ( நமக்கு காமெடின்னா ஹி ஹி )

சினிமாவில் புடிச்ச நாலு பேரு

1)மொட்டை
2)கமல்
3)சேரன்
4)விக்ரம்

சினிமாவில் புடிச்ச நாலு பேரு (ஹி ஹி)

1)சாவித்ரி
2)சில்க் ஸ்மிதா
3)மாதவி
4)ஷில்பா ஷெட்டி

புடிச்ச நாலு உணவு வகைகள்

நோ.. நெவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இதுக்கு மட்டும் நான் கட்டம் காட்டி வெறும் நாலு சமாச்சாரத்தை சொல்லமாட்டேன்.. நாங்கெல்லாம் அன்லிமிட்டட் மீல்ஸ் சாப்ட்டுட்டு, ஒரு பார்சல் சிக்கன் பிரியாணி வாங்குற ஆளுக. இருந்தாலும்

அம்மா வைக்கிற கருவாடு குழம்பும் பழைய சாதமும்

பார்க்க விரும்பும் நாலு இடங்கள்

1) Europe
2) எகிப்து
3) சவுத் ஆப்ரிக்கா
4) பிரேசில்

வாழ்கையில் புரியாத நாலு தருணங்கள்

1) சரியாக படிக்காமல் (மெடிக்கல் சீட் கிடைக்காததால்) அப்பாவின் குட்புக்கில் இப்பவும் இல்லாதது.
2) பதின்ம வயதில் முதலும் கடைசியுமாக பெண் நண்பியிடம் தொலைபேசியதால் செமத்தியா அடிவாங்கியது
3)எத்தனையோ தடவை ட்ரெய் பண்ணியும் மிஸ்ஸான Europe வேலை வாய்ப்புகள்
4) இங்க வரும் போது எதை நோக்கி இந்த ஓட்டம், இன்னும் எத்தனை காலம்

புடிச்ச நாலு தலைவர்கள்

1) சுபாஷ் சந்திர போஸ் & சர்தார் வல்லபாய் பட்டேல்
2) சே குவேரா
3) அடால்ப் ஹிட்லர்
4) ஆப்ரகாம் லிங்கன்

எனக்கு பிடித்த நாலு பேர்(relatives)

1) எங்க அம்மா (My first in all)
2) செல்வராஜ் (எங்க சொந்தகாரர். நான் காலேஜ் படிக்கும் போது இவரை மாதிரி பஞ்சு வியாபாரம் செய்ய ஆசைபட்டேன். விட்றுந்தா அந்த லயன்ல போய் இருப்பேன்)
3) வேலு அண்ணா
4) ராமகிருஷ்ணன் (family friend)

எதிர்பார்க்கும் நாலு நிகழ்வு

1) சீனியர் சொல்யுசன்ஸ் ஆர்க்கிடெக்ட் (வேலைலதான்)
2) M.B.A டிகிரி(இங்க)
3) இந்த ஊருக்கு பதில் Europe ல எங்கனாச்சும் வேலை ட்ரான்ஸ்பர்
4) வாழ்கையில் எங்க ஊருக்கே திரும்பி போகும் காலம்

நான் அழைக்கும் நாலு பேர்

1) Boston Bala
2) அனந்த்
3) முகமூடி
4) முத்து (தமிழினி)

இவர்கள் எல்லாரும் தொடர்ந்தால் சந்தோசம் அடைவேன்.

10 Comments:

Blogger குமரன் (Kumaran) said...

கார்த்திக். எனக்கு ரொம்ப பிடிச்சது புளியோதரையும் வறுத்த உப்புகண்டமும். இது வரை வறுத்த கருவாடோ, கருவாட்டுக் குழம்போ சாப்பிட்டதில்லை. எங்கள் வீட்டில் செய்ததில்லை. அதனால் அடுத்த முறை மதுரை போகும் போது (நீங்கள் வீட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்) உங்கள் வீட்டிற்கு சென்று கருவாட்டுக் குழம்பை சுவை பார்க்க வேண்டியது தான்.

பிடித்ததில் அடுத்த ஐட்டம், பழைய சோறும் ஊறுகாயில் இருக்கும் பச்சை மிளகாயும். என் மகளுக்கு பிடித்த ஐட்டங்களில் இந்த காம்பினேசன் தான் முதல் இடம். பழைய சாதம் என்றால் வேறு எதுவும் (பிட்சா முதற்கொண்டு) வேண்டாம் அவளுக்கு. :-) இன்னும் எவ்வளவு நாட்களுக்கோ?

3/05/2006 07:42:00 PM  
Blogger கைப்புள்ள said...

புடிச்ச நாலு தலைவர்கள்
//3) அடால்ப் ஹிட்லர்//

கூட்டாளி! அப்டி போடுங்க அறுவாளை! ஸ்கூல்ல என் கூட படிச்ச மன்னாரு(ஹி...ஹி...பட்டப்பேரு தான்) அப்பெல்லாம் ஹிட்லர் பத்தி கதை கதையா சொல்லுவான். அவனைப் பொறுத்த வரைக்கும் ஹிட்லர் ஒரு சூப்பர் ஹீரோ. மெயின் காம்ப்ஃபைப் பத்தி அக்கு வேறா ஆணி வேறா பேசுவான். ஆனா இப்ப ரொம்ப மாறிட்டான். தாங்கள் எப்படியோ?

3/05/2006 07:43:00 PM  
Blogger Karthik Jayanth said...

குமரன்,

//உங்கள் வீட்டிற்கு சென்று கருவாட்டுக் குழம்பை சுவை பார்க்க வேண்டியது தான். //

தங்கள் வருகையில் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.

//பிடித்ததில் அடுத்த ஐட்டம், பழைய சோறும் ஊறுகாயில் இருக்கும் பச்சை மிளகாயும்//

என்னை கேட்டால் பழைய சாதத்தை அடிச்சிக்கிர கூட்டணில ஆள் இல்ல

3/05/2006 07:53:00 PM  
Blogger Karthik Jayanth said...

வாங்க கூட்டாளி,

ஹிட்லர் ஒரு சூப்பர் ஹீரோ (I admire him). மெயின் காம்ப்ஃ படிங்க தெரியும்.

Jews mass killing & ww II defeat இரண்டும் துன்பியல் சம்பவங்கள்

3/05/2006 07:58:00 PM  
Blogger ஏஜண்ட் NJ said...

//இங்க வரும் போது எதை நோக்கி இந்த ஓட்டம், இன்னும் எத்தனை காலம்...

வாழ்கையில் எங்க ஊருக்கே திரும்பி போகும் காலம்...
//


தத்துவம் தத்துவம்!!


//பஞ்சு வியாபாரம் செய்ய ஆசைபட்டேன்//

Punch? ;-)

//பின்னாளில் ப்லொக்ல உதவியது அனந்த், குமரன் & Agent(8860336)ஞான்ஸ்(இப்பவும்)//

!!!!!

//Jews mass killing & ww II defeat இரண்டும் துன்பியல் சம்பவங்கள் //

புளியோகரே பிடிக்குமா?! பிடிக்குமா?!

3/05/2006 08:03:00 PM  
Blogger Muthu said...

கார்த்திக் சந்தோசம்..ஆனால் என்னைய ஏற்கனவே டேக் பண்ணி நானும் பதிவு போட்டுட்டேன்.....இங்கே பார்க்கவும்...மற்றபடி உங்கள் ருசிகளும் என் ருசிகளும் பல விதங்களில் ஒத்துப்போவது ஆச்சரியம்தான்.

(உதா)

மீனாட்சி கோவில், காமெடி ஷோ, போகோ சேனல், மொட்டை, கமல் மற்றும் சாப்பாட்டு மேட்டர்கள்.

(எஸ்.எஸ.காலனியா..ஸ்டேன்லி் என்பவரை தெரியுமா?)

பிரேசில் எதுக்கு ( அந்த பொண்ணுங்களுக்குத்தானே..ச்சும்மா சொல்லுங்க)

ஈரோப் வேலை, மதுரைல வேலை எது வேணும்னு கேட்டா என்ன சொல்வீங்க?

3/05/2006 08:07:00 PM  
Blogger Karthik Jayanth said...

வாங்க Agent(8860336)ஞான்ஸ்

//தத்துவம் தத்துவம்!!

தன்யன் ஆனேன்.

//Punch? ;-)

காட்டன் பிஸினஸ் :-)

// !!!!!

தங்களின் பார்வையில் சிறு உதவி அது

// புளியோகரே பிடிக்குமா?! பிடிக்குமா?!

சாப்பாட்டில் நோ discrimination :-)

3/05/2006 08:27:00 PM  
Blogger Karthik Jayanth said...

சந்தோஷம் முத்து (தமிழினி),

//எஸ்.எஸ.காலனியா..ஸ்டேன்லி் என்பவரை தெரியுமா //

கேட்ட பெயரா இருக்கு. ஞாபகம் வரவில்லை

//பிரேசில் எதுக்கு ( அந்த பொண்ணுங்களுக்குத்தானே..ச்சும்மா சொல்லுங்க) //

Foot ball & F1 மட்டும்ன்னு சொன்னா நம்பவா போறிங்க. இருந்தாலும் இது open சீக்ரெட் தான்

// ஈரோப் வேலை, மதுரைல வேலை எது வேணும்னு கேட்டா என்ன சொல்வீங்க?

Europe ல வேலை, அப்புறம் மதுரைல செட்டில்மென்டு

3/05/2006 08:42:00 PM  
Blogger ilavanji said...

//1) சீனியர் சொல்யுசன்ஸ் ஆர்க்கிடெக்ட் (வேலைலதான்)
2) M.B.A டிகிரி(இங்க)
//
சரியான மூளைக்கார பயலா இருப்பீக போல இருக்கே!! :)

3/05/2006 08:46:00 PM  
Blogger Karthik Jayanth said...

வாங்க இளவஞ்சி சார்,

முதல் தடவையா வந்து இருக்கிங்க. - நல்வரவு ஆகுக

// சரியான மூளைக்கார பயலா இருப்பீக போல இருக்கே!! :) //

இங்க அவ்வளவு சரக்கு இல்ல. எல்லாம் ஒரு ஆசை தான். இந்த பதிவ பாருங்க

3/05/2006 08:58:00 PM  

Post a Comment

<< Home