Saturday, May 06, 2006

டே கைய வச்சிகிட்டு சும்மா இருடா ...

போன வெள்ளி கிழமை வேலை ஒண்ணும் செய்யாம சிங்கி அடிக்கனும்ன்னு ஒரு பிளான் போட்டு வச்சிருந்தேன்.. சும்மா ஒண்ணும் இல்ல.. அதுக்காக அடிக்கிற வேலைய வார தொடக்கத்திலே செஞ்சிட்டு, இன்னும் முடியலன்னு மேனேஜர்(PM) அக்காவ ஏமாத்திக்கிட்டு இருந்தேன்.. வியாழன் சாயந்தரம் போல டெஸ்ட் சர்வர்க்கு மூவ் பண்ண சொல்லி ப்ரோசிஜர் டாக்குமென்ட், 1008 ப்ராசெஸ், நாள் நட்சத்திரம் எல்லாம் பாத்துதான் அனுப்புனேன்.. வழக்கமா இந்த மாதிரி பண்ணிட்டு நானே Code டை சர்வர்ருக்கு தள்ளிக்கிட்டு போய்டுவேன்..

சரி நம்ம ஆப்-ஷோர் மக்கள் சும்மாதானே இருக்குறாங்க.. இந்த தடவை அவனுகளையே பண்ண சொல்லுவோம்ன்னு மண்டைல ஒரு பல்பு.. இந்த பல்பு ஒண்ணும் சும்மா வரல.. 100 நாட்களையும் கடந்து எந்த வித சிக்கல்,சினுங்கல்,அச்சம், மடம், பருப்பு, செருப்பு மற்றும் பெரிய & சின்ன இம்சை எதுவும் தராமல் ப்ரொடெக்சன்னில் ஓடிகொண்டு இருக்கும் என் தங்கம் (போன ப்ராஜெக்ட்) தந்த மிக பெரிய அனுபவ பாடம் அதான்.

அதுவும் போக எங்க சமாளிப்பு திலகம்(PM) வேற கடமை, கண்ணியம் & கட்டுபாடு(Job Responsibility & Quality Process) பத்தி வாரத்துக்கு ஒரு தடவை மீட்டிங் போட்டு பேசுவாங்க. அந்த பேச்சுல மனசு வேற மாறி போச்சி..

ஆப்ஷோர் கண்மணிகள் என்ன பண்ணுனாங்களே.. கடவுளுக்கே வெளிச்சம்.. வெள்ளிகிழமை மதியம் போல சரி எதாவது பிலிம் காட்டணுமேன்னு, டெஸ்ட் சர்வர்ல போய் கைய வச்சி ஓட்டிவிட்டா அது என்னாடான்னா நம்ம ஊர் அரசியல்வாதி இலவசங்களை (மக்கள் முன்னேறத்துக்கு ?) அள்ளி வழக்குற மாதிரி, துப்புன Error Logs ல நான் கொஞ்சம் ஆடிபோய்டேன்.. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைன்னு..

முதல்ல ஒண்ணுமே புரியல.. சரின்னு டெவலப்மென்ட் சர்வர்ல Code பாத்தா நான்ந்தான்டா நல்லவன் அப்படின்னு ஒழுங்கா ஓடுது.. Code எல்லாம் சரியாதான் இருக்கு.. சரிதான் நம்ம இன்னைக்கு கண்ணு முழிச்ச நேரம் சரி இல்லை அப்படின்னு நினைச்சேன்.. சபாஷ் சரியான போட்டின்னு சொல்லிட்டு இருக்குற Server Error Logs எல்லாம் பாத்தா ஒரு வழியா பிரச்சனை புரிச்சது.. என் கண்மணிகள் அப்ளிகேசன் சர்வரை அதுக்கு ஒதுக்கபட்ட யூசரா (OSUser)ஓட விடாம வேற ஒரு டம்மி யூசர் ப்ரொபல்ல ஓடவிட்டு இருக்குறாங்க.. ஒழுங்கா எல்லாத்தையும் சரி பண்ணி இருக்கணும்.. அத செய்யாம அந்த டம்மி யூசர்க்கு சகட்டுமேனிக்கு ரோல்ஸ்(permissions) எல்லாம் அசைன் பண்ணிடாங்க..

இத எல்லாம் சரி பண்ணுறதுக்குள்ள வெள்ளிகிழமை சரியா போச்சி :-( .. இதுல என்ன மேட்டர்ன்னா எனக்கும் சன் ஸ்பார்க் மெசின் சோலாரீஸ் OS ல வேலை பாத்த அனுபவம் ஒண்ணும் கிடையாது.. அதுனால ரொம்பவே தடவ வேன்டியதா போச்சி.







எல்லாம் சரிதான், எதுக்கு சம்மந்தமே இல்லாம இந்த படம்ன்னு கேக்குறவங்களுக்கு.. டே கார்த்தி ஏதாவது கெட்டது நடந்தா நம்ம குல தெய்வத்த கும்பிட்டுக, காத்து கறுப்பு ஒண்ணும் அண்டாதுன்னு எங்க ஊர்ல கூட்டாளிக சொல்லுவாங்க அதான் :-)

19 Comments:

Blogger இலவசக்கொத்தனார் said...

//என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைன்னு.//

என்னாதான் மதுரைக்காரன்னாலும் உமக்கு ஒரு பிரச்சனைன்னா ஊருக்கே பிரச்சனைன்னு சொல்லறது கொஞ்சம் டூ மச்சா தெரியலை...

5/08/2006 05:30:00 PM  
Blogger Karthik Jayanth said...

கொத்ஸ்,

இல்லயே :-)

ஊர்காரவங்க ரொம்ப பாசமானவங்க.. ஒரு பஞ்சாயத்துனா பறந்து வந்துட மாட்டாங்களா என்ன .. அதுகாகதான் இப்படி ஒரு பில்டப்பு :-)

5/08/2006 05:41:00 PM  
Anonymous Anonymous said...

உங்கட தெய்வத்தப் பாத்தாத்தான் பொறாமையா இருக்கு. கலியாணம் ஆகேல எண்டு நினைக்கிறன்.

5/08/2006 07:52:00 PM  
Anonymous Anonymous said...

அடப்பாவி!
எத்தினை குலதெய்வம் உமக்கு?
இப்ப தான் பழைய பதிவொன்று படிச்சிட்டு வாறேன்.

5/08/2006 08:15:00 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

பேராசிரியரே.. உங்க கடமை கண்ணியம் கட்டுப்பாடு, தெய்வ பக்தி பார்த்து நம் கட்சியே அதிர்ந்து நிற்கிறது :)

5/08/2006 08:30:00 PM  
Blogger Karthik Jayanth said...

அய்யா அனானி,

தெய்வங்களின் வகையில் இவர் அம்மன்.. இன்னும் பலவகை தெய்வங்கள் வரிசையில்.. இவர்கள்தாம் என்னை நல் வழி நடத்தும் சக்திகள், இவர்களின்றி ஒர் அணுவும் அசையாது என்னில்.

5/08/2006 08:39:00 PM  
Blogger Karthik Jayanth said...

பாச மலரே, தங்க தாரகையே,

இந்த எளியவனின் உயிர் உய்வடைய இந்த மண்ணில் மானிட உருவம் கொண்டுள்ள

ஏஞ்சலீனா அம்பாள்

வாழ்க !

வாழ்க !!

வாழ்க !!!

கடமை கண்ணியம் கட்டுப்பாடு கட்சி எனக்களித்த கொடை !

மற்றுமொரு தெய்வத்தை பற்றி விபரங்கள் அந்த பதிவில் தரப்பட்டுள்ளன.. பார்க்கவும். பயன் பெறவும் !!!

5/08/2006 09:26:00 PM  
Blogger பிரதீப் said...

சூப்பரப்பு...
இனிமேல் எனக்கும் இங்கே வேளை கெட்ட வேளையில் ஆப்பு வரும்போது இந்த இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொள்ளலாம் தானே?

அப்படியே அவங்க படம் இன்னும் நிறைய போடுங்க... புண்ணியமாப் போவும்

5/08/2006 10:54:00 PM  
Blogger Mahadev said...

அண்ணாத்தே ,
நா என்னத்துக்கு இருக்கேன் ?
என்னா பிரச்சனை சொல்லு,ஒரு கை பாத்துடுவோம்..எனக்கும் சன் ஸ்பார்க் மெசின் சோலாரீஸ் ல வேலை பாத்த அனுபவம் கிடைக்கும் :)

5/09/2006 01:23:00 AM  
Blogger கவிதா | Kavitha said...

//டே கார்த்தி ஏதாவது கெட்டது நடந்தா நம்ம குல தெய்வத்த கும்பிட்டுக, காத்து கறுப்பு ஒண்ணும் அண்டாதுன்னு எங்க ஊர்ல கூட்டாளிக சொல்லுவாங்க அதான் :-)//

இது என்னவோ பிரச்சனை வந்த பிறகு கும்பிட்ட தெய்வம் மாதிரி தெரியல.. பிரச்சன வர காரணமான தெய்வம் மாதிரி இருக்கு..சரியா?..

5/09/2006 03:13:00 AM  
Blogger குசும்பன் said...

ஏம்ப்பா கார்த்திக்கு,

ஒழுங்கா 'ஜோலி'யப் பாருப்பான்னா அத வுட்டுட்டு ஆஞ்சலினா 'ஜோலி'யப் பாத்தா இப்பிடித்தான்...

ஹூம் கலி முத்திடுத்து ;-)

5/09/2006 09:46:00 AM  
Blogger Karthik Jayanth said...

பிரதீப்,

முதல் வரவு.. நல்வரவு ஆகுக ..

//இந்த இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொள்ளலாம் தானே?

அய்யா தங்கமே என்ன கேள்வி இது ?. தாரளமா வேண்டுங்க.. அம்பாள் அருள் பரிபூரணமா கிடைக்கும் :-)

// அவங்க படம் இன்னும் நிறைய போடுங்க... புண்ணியமாப் போவும்

இந்த மாதிரி யாரவது ஒருந்தர் சொல்லிட்டா போதுமே.. இதே வேலையா செஞ்சிட மாட்டோம்

விரைவில் புதிய ரிலீஸ் எதிர்பாருங்கள்

5/09/2006 10:37:00 AM  
Blogger Karthik Jayanth said...

கார்த்தி அய்யா,

உன்னை மாதிரி ஒருத்தன் போதும் அய்யா எனக்கு.. ஒண்ணும் கவலையே படாத.. OS அக்சஸ் மட்டும் குடு. அரைமணி நேரத்தில அதே மாதிரி பண்ணிதாரேன். அப்புறம் PM கிட்ட இருந்து வரற ஏத்துல நீயே தன்னால சரி பண்ணிடுவ.

சும்மா கடல்ல குதி ! மரண பயத்துல தன்னால நீச்சல் வரும்.. அது மேட்டர்..

5/09/2006 10:43:00 AM  
Blogger நாமக்கல் சிபி said...

பேராசிரியரே!

உமது பக்தியை மெச்சினோம்! இப்படியே அம்மன் படங்களை போட்டு அனைவருக்கும் அருள் பாலிப்'பீராக'!

5/09/2006 11:08:00 AM  
Blogger Karthik Jayanth said...

கவிதா,

// பிரச்சன வர காரணமான தெய்வம் மாதிரி இருக்கு..சரியா?..

என்ன இப்படி சொல்லிடீங்க.. சாமி குத்தம் ஆகிடபோகுது :-) . இத நிவர்த்தி செய்யணுமுன்னா

1) ஒரு மண்டலம் (45 நாள்) தினமும் ஏஞ்சலீனா அம்பாள் படமா பார்க்கணும்..

2) சம்மர்ல ஹாலிவுட் Blvd ல பீர் பந்தல் வச்சி எல்லாருக்கும் சேவை செய்யணும்.

3) ரூம் முழுசும் ஏஞ்சலீனா படமா ஒட்டிவைக்கணும்.

4) தினமும் 100 பேருக்கு ஏஞ்சலீனா படத்தை செயின் மெயில்ல Fwd செய்யணும்.

5) முடிஞ்சா Maddox Jr வாழ்க ! &
Brad Pitt ஒழிக !(ஜெனீபர் ஆனிஸ்டன் தேவதைய அழ வச்சதுனால, இங்க அவனவன் ஒண்ணு கூட கிடைக்காம அலஞ்சிக்கிட்டு இருந்தா இவன் என்னமோ பல சாமிய கரெக்ட் செஞ்சதுனாலயும்) அப்படின்னும் சொல்லனும்..

5/09/2006 11:13:00 AM  
Blogger Karthik Jayanth said...

இணையில்லா இணைய குசும்பன் அவர்களே,

முதல் வரவு.. நல் வரவு ஆகுக !

சாமி நல்லவங்களைதான் சோதிக்கும்.. ஆனா கடைசில கைவிடாது.. கெட்ட்வங்களுக்கு சர்வர்யே ஊத்தி மூட வச்சிடும் :-) ...

5/09/2006 11:17:00 AM  
Blogger கவிதா | Kavitha said...

//என்ன இப்படி சொல்லிடீங்க.. சாமி குத்தம் ஆகிடபோகுது :-) . இத நிவர்த்தி செய்யணுமுன்னா //

கார்த்திக்..அதுக்குனு இப்படியா..நிவர்த்தி செய்வீங்க..என்னவோ பண்ணுங்க....

5/11/2006 11:39:00 PM  
Blogger Suka said...

கார்த்திக் ..

உங்க PM அக்காகீது இங்க உங்க ப்ளாகை படிச்சு வைக்கப் போறாங்க..

பதிவுல தேர்தல் தாக்கம் இன்னமும் இருக்கு போல .. :)

கலக்குங்க..

5/12/2006 01:46:00 PM  
Blogger Karthik Jayanth said...

கவிதா,

இதுக்கே இப்படி சொல்லிட்டா எப்படி.. நான் வெறும் பொது விதிகளை மட்டும்தான் சொல்லி இருக்கேன். :-)

***

சுகா,

PM அக்காவ பத்தி கவலையே வேண்டாம். அவங்களுக்கு மேப்ல கூட இந்தியா எங்க இருக்குன்னு தெரியாது..

அரசியல் பத்தி எதாவது சொல்லலாம்.ஆனா நோ கமென்ட்ஸ் ..

கலக்குறதா.. கலங்கி போய் இருக்கேன்

5/12/2006 04:02:00 PM  

Post a Comment

<< Home