Monday, May 15, 2006

க.பி.க - முன்னோட்டம்

எங்கள் அண்ணன், தங்க தலைவன், பாசமிகு பண்பாளன், வீரத்தின் விளை நிலம், கண் துஞ்சா கர்ம வீரன், வலைஉலக வேந்தன், எழுத்துசித்தன், மந்திர எழுத்தின் மன்னன், ஒத்தகை ஒண்டிபுலி, இரட்டை கை பிரச்சார பீரங்கி,

பால பாரதி என்று ஒன்றானவன் !
அன்பு தம்பி என்னோடு இரண்டானவன் !!
போர் வாள் பாண்டியுடன் மூன்றானவன் !!!
கழத்துடன் சேர்ந்து நான்கானவன் !!!!

இந்த உலகம் உய்வடைய தனது சீரிய சிந்தனையால் இந்த தரணியில் எங்கள் இனம் ஏற்றம் கண்டிட தனது கருத்தினை முன் வைத்து ஒரு சிறிய பொறியை ஏற்றி வைத்து, என்னை சங்கத்துக்கு படை திரட்டி வர சொன்னார். சிறிய நேரமே ஆனாலும் என்னால் கழகத்தின் கொள்கைகளை முன்வைத்து 'தல' பின்னால் அணி திரண்ட படை.





இந்த படை போதுமா !!!

இன்னும் கொஞ்சம் வேணுமா ?



இதே போன்றதொரு ஊர்வலத்தை வட அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திலும் நடத்த 'தல' அனுமதிக்க வேண்டும் என்பதே கழக கண்மணிகளின் வேண்டுகோள். இந்த அமைதி ஊர்வலங்கள் கழக கொள்கைகளை எமது இனத்தை அடிமை தளையிலிருந்து மீட்டெடுக்க உதவும் என்பது உறுதி..

பெரிய மனது படைத்து இதயத்தில் மட்டும் இடம் கொடுக்காமல், இந்த அன்பு தம்பியை கழகத்தின் கொ.ப.செ -வாக நியமித்ததர்க்கு

நன்றி !

நன்றி !!

நன்றி !!!

கழகத்தின் கொள்கை, கோட்பாடுகள், உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம், பதவி, விரைவில் வெளிவரும்..

37 Comments:

Blogger VSK said...

இதெல்லாம் சொல்லிவிட்டு,
இதற்கெல்லாம் கட்டணம், அன்பளிப்பு எவ்வளவு என்று சொல்லாமல் விட்ட
நீங்கள்.............,
நிச்சயம் ஒருநாள் பெரிய தலைவராக வர வாய்ப்பு உள்ளது!
உடனே இந்தியா, குறிப்பாக தமிழகம் செல்லவும்!!!!!!!!!!!!

5/15/2006 04:53:00 PM  
Blogger மாயவரத்தான் said...

:D

ஸாரி.. நீங்கள் குறிப்பிட்டிருந்த பின்னூட்டம் நான் இட்டத்தல்ல.

5/15/2006 06:23:00 PM  
Blogger - யெஸ்.பாலபாரதி said...

ஆங்....
அ..ன்..பு.. த..ம்..பி...
எனக்கு வார்த்தைகளே வரலைப்பா...
கண்ணு முட்டிகிட்டு வருது...
சீக்கரம் கழகத்தை தொடங்கிட வேண்டீயது தான்....
ஏகப்பட்ட பேர் காத்து கிட்டு இருக்காங்க...
வாட-அமெரிகாவின் கூட்டத்தை பார்த்தூ வாயடைத்து போய் இருக்கிறார்கள்... எதிரணியினர்..
சீக்கரம் படைக்கு ஏற்ப்னாடு செய்...

தமிழனின் புகழ் பரப்ப்ப.. நம்
க.பி.கழகத்தின் செயற்குழ கூட்டம் விரைவில் கூட்டப்படும்..
நீதான் கொ.ப்.செ..
தம்பி பாண்டிக்கு வேறு 'முக்கிய' பதவி கொடுத்துடலாம்..

5/15/2006 09:14:00 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

பாசமலர் கார்த்திக்,
என்னாச்சு? கல்கியில் நம் கட்சி பெயர் வந்து நாம் பெரும்பெயர் பெறும் நேரம், நீ கட்சி மாறிட்டியா??!! நம்பவே முடியலை அண்ணாத்தே!! இல்லைன்னா, எந்தக் கட்சி கிடைச்சாலும் அதுக்கு வட அமெரிக்க கிளை கொ.ப.செ.ஆகிடுவீங்களா? :)

5/15/2006 09:23:00 PM  
Blogger கவிதா | Kavitha said...

//எங்கள் அண்ணன், தங்க தலைவன், பாசமிகு பண்பாளன், வீரத்தின் விளை நிலம், கண் துஞ்சா கர்ம வீரன், வலைஉலக வேந்தன், எழுத்துசித்தன், மந்திர எழுத்தின் மன்னன், ஒத்தகை ஒண்டிபுலி, இரட்டை கை பிரச்சார பீரங்கி,

பால பாரதி என்று ஒன்றானவன் !
அன்பு தம்பி என்னோடு இரண்டானவன் !!
போர் வாள் பாண்டியுடன் மூன்றானவன் !!!
கழத்துடன் சேர்ந்து நான்கானவன் !!!!//

தெரியாமத்தான் கேட்கிறேன்..என்ன இது?..ஆங் என்ன இது..?!! வ.வா.க. விலே என்ன நடக்கதுன்னு புரியாம..திண்டாடிக்கிட்டு இருக்கும் போது.. என்ன இது..?!! புது கழகம்?!!

வே.வெ.வா.க(வேலையில்லா வெட்டி வாலிபர் கழகம்) அப்படின்னு ஒன்னு ஆரம்பிச்சு..உங்க எல்லாரையும் அதுல மெம்பர் ஆக்கி..ரவுண்டு கட்டனும்..ன்னு நினைக்கிறேன்.

5/15/2006 11:46:00 PM  
Blogger Sami said...

kalukkureenga ponga...

5/16/2006 04:21:00 AM  
Anonymous Anonymous said...

க.பி.க.விற்கு வருத்தப் படாத வாலிபர் சங்கம் வளைகுடா கிளை சார்பில் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
துபாய் ராஜா.
(என்ன!!!இன்னும் கல்யாணம் ஆகாத
கன்னிப்பையன்கிறதால க.பி.க.வோட
வளைகுடா கிளைப் பொறுப்பையும் நான்தான் பார்த்துக்கனும்னு பாலபாரதி
பிரியப்படராறா??அய்யோ!!அய்யோ!!
பாசக்காரபயலுவையா!!!!!!!!)

5/16/2006 08:11:00 AM  
Anonymous Anonymous said...

க.பி.க.விற்கு வருத்தப் படாத வாலிபர் சங்கம் வளைகுடா கிளை சார்பில் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
துபாய் ராஜா.
(என்ன!!!இன்னும் கல்யாணம் ஆகாத
கன்னிப்பையன்கிறதால க.பி.க.வோட
வளைகுடா கிளைப் பொறுப்பையும் நான்தான் பார்த்துக்கனும்னு பாலபாரதி
பிரியப்படராறா??அய்யோ!!அய்யோ!!
பாசக்காரபயலுவையா!!!!!!!!)

5/16/2006 08:12:00 AM  
Blogger Karthik Jayanth said...

SK சார்,

முதல் வரவு.. நல்வரவு ஆகுக..

அப்படியே தமிழ் நாடுல எங்க போகணும்.. என்ன இன்ஸ்ட்டிடுட்ல சேரணும்ன்னு சொன்னா நல்லா இருக்கும்.. எதோ நானும் என்னோட தலமுறையும் வாழ்க்கைல செட்டில் ஆனமாதிரி இருக்கும்..

இன்னும் எத்தன நாள்தான் கம்ப்யுட்டர்லயே தலைய விட்டுகிட்டு இருக்குறது

5/16/2006 03:58:00 PM  
Blogger Karthik Jayanth said...

ஆற்றலரசி, பாசமலர், பிகிலு பொன்ஸ்,

நான் ஒன்றும் கட்சி மாறவில்லை.. வருத்தமில்லா வாலிபர்கள் என்பவர் யார்.. கல்யாணம் ஆகாதவர்கள் தானே ? இது ஒரு உள்ளிருத்தபட்ட கருத்தல்லவா?.. இதை தாங்கள் அறியாததா?.

தமிழுக்கே நான் தமிழ் கூற விளைவது சிறுபிள்ளைதனம் அல்லவா ? . மேலும் இந்த பதிவில் சொன்னபடி அண்ணன் பாலாவின் கருத்தே என் கருத்து அதை உலகறிய செய்வது எனது கடமை.. ஆகவே அண்ணனின் ஆணையை சிரமேற் கொண்டு கழகத்தின் கருத்தை பரப்ப என்னால் ஆன முயர்ச்சிகளை மேற்கொண்டுளேன்.

இதில் உங்களின் ஆசியை எதிர் நோக்கியுள்ளேன்..

5/16/2006 06:48:00 PM  
Blogger Karthik Jayanth said...

கவிதா,

எங்கள் கழகத்தின் உரிமை குரலை, ஜனநாயக தர்மமான கருத்து சுகந்திரத்தை, அடிமை வர்க்கத்தின் உரிமை குரலை, தியாக வேள்விகளின் உன்னத கருத்துக்களை நசுக்க நினைக்கும் உங்களின் முயர்ச்சி வெற்றியடையாது என்பதை மட்டும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விளைகிறேன்.

(இதுக்கே மூச்சு வாங்குது.. சோடா பிளிஸ்)

எங்கள் அண்ணன் எழுத்துச்சித்தன், வலையலக வேங்கை பாலா அவர்களின் கொள்கை வாழ்க !

5/16/2006 06:57:00 PM  
Blogger - யெஸ்.பாலபாரதி said...

அன்புத் தம்பி..
எனக்கு வயலே அறிக்குது..(எத்தனை காலத்துக்கு புல்லுன்னு சொல்றது..!)
கழகத்துக்காக நீ கொடுக்கும் குரல் மற்றவர்களுக்கு ஏன் புரியவில்லை என்பது எனக்கு விளங்காத புதிர்!
க(ல்யாணம் வரைக்கும்)பி(ரம்மச்சாரிகள்) கழகத்தை ஏன் வ.வா.சங்கத் தோழர்கள் போட்டியாக நினைக்கிறார்கள்...?
நமது 'முக்கிய'(இது அந்த முக்கல் அல்ல) கொள்கையே நாம் வுட்ட ஜொள்ளு பற்றியும் அதனால் ஏற்பட்ட லொள்ளு பற்றியும் காழகத்தில் சேராத மற்ற பேச்சிலர்களுக்கு பறை சாற்றுவது தானே..
இதுல எங்கே வ.வா.சங்கம் நமக்கு போட்டியானது?
அவர்களை நம் தோழமைக் கட்சிகாஅரர்கள் என்றல்லவா நினைத்திருந்தேன். அதனால் தானே தல கைப்பு பற்றிய செய்தி கல்கியில் கண்டவுடன் பிகிலுக்கு தகவல் கொடுத்தேன்.. அவரே இப்படி நம்மை போட்டியாளர்களாக நினைக்கலாமா?
திருமதி.கவிதாவுக்கு நீ கொடுத்திருக்கும் பதிலைக் கண்டு பூரித்துப் போகிறேன்..
உன் போர்க்குணம் நம் மற்ற கழக கண்மணிகளுக்கும் வரவேண்டும் என்பதே..என் ஆசை..
பேச்சு-யிலர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவோம்..
அன்புடன்
சகா.
பாலபாரதி.யெஸ்

5/16/2006 07:10:00 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

வ.வா.ச கல்கியில் வந்து புகழ் பெற்றதும், தமிழ்மணத்தில், ஆளாளுக்குக் கட்சி ஆரம்பிக்கிறீங்க.. உங்களை மாதிரி க(ல்யாணத்திற்குப்) பி(ரிபேராகும்) க(ழகத்தவருக்குத்) தானே இளவஞ்சி, உஷாக்கா எல்லாரும் ஸ்பெஷல் க்ளாஸ் எடுத்து கிட்டு இருக்காங்க.. எல்லாம் எவ்வளவு நாள் க.பி.கவிலும் வ.வா.சவிலும் உதார் விட்டுகிட்டு இருக்கப்போறீங்கன்னு பாத்துடுவோம்!!! :)

5/16/2006 08:15:00 PM  
Blogger Karthik Jayanth said...

'தல'

// சீக்கரம் கழகத்தை தொடங்கிட வேண்டீயது தான்....

இந்த ஒரு வார்த்தை போதும் தல.. தளர்ந்திருக்கும் தமிழனின் தன்மானத்தோடு வாழ புறப்பட்டது ஒரு படை !

// அவரே இப்படி நம்மை போட்டியாளர்களாக நினைக்கலாமா?

'தல' இவர்கள் தெரியாமல் செய்யும் தவறுகளை பொறுத்தருள வேண்டுகிறேன். :-)

5/16/2006 08:24:00 PM  
Blogger கவிதா | Kavitha said...

//எங்கள் அண்ணன் எழுத்துச்சித்தன், வலையலக வேங்கை பாலா அவர்களின் கொள்கை வாழ்க ! //

தலைவர் கை இப்பதான் சரியாயிருக்கு..போல...திருப்பி உடையனும்னு தலையில எழுதியிருந்தா யாரால அதை மாற்ற முடியும்

5/16/2006 08:59:00 PM  
Blogger Karthik Jayanth said...

// திருப்பி உடையனும்னு தலையில எழுதியிருந்தா யாரால

இது போன்ற மிரட்டல்களுக்கும், அன்பு வேண்டி ஆட்டோ அனுப்புதல் போன்ற சிறிய நிகழ்வுகளை கண்டு நடுங்காது எங்கள் கழகம்.

நாங்கள் கொள்கை கொம்பர்கள் !

5/16/2006 09:11:00 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

பாலா, இங்க பாருங்க, உங்காளு அமெரிக்கால உக்காந்து கிட்டு சென்னைல இருக்கிற உங்கமேல, ஆட்டோ வுடறதுக்கு சென்னைவாசிகளான எங்களுக்கு ஐடியா குடுத்துகிட்டு இருக்காரு... நல்லா பாத்துக்குங்க :)

5/16/2006 09:14:00 PM  
Blogger கைப்புள்ள said...

பேராசிரியரே! க.பி.கவோட full form என்னன்னு கொஞ்சம் சொன்னா நாங்களும் தெரிஞ்சிக்குவோமில்ல?

5/16/2006 09:17:00 PM  
Blogger இலவசக்கொத்தனார் said...

இப்போதான் தேர்தல் முடிஞ்சிருக்கு, இப்போ போய் புது கட்சி ஆரம்பிக்கரயேப்பா. டைமிங்க் சரி இல்லையே.

5/16/2006 09:19:00 PM  
Blogger - யெஸ்.பாலபாரதி said...

//பாலா, இங்க பாருங்க, உங்காளு அமெரிக்கால உக்காந்து கிட்டு சென்னைல இருக்கிற உங்கமேல, ஆட்டோ வுடறதுக்கு சென்னைவாசிகளான எங்களுக்கு ஐடியா குடுத்துகிட்டு இருக்காரு... நல்லா பாத்துக்குங்க :)//


ம்ஹீம்.. இதை நான் ஏத்துக்க மாட்டேன்...
தம்பியுடையான் "படை"க்கு அஞ்சான்..
எனக்கும் இந்த பழமொழி தெரியும்..

5/16/2006 09:20:00 PM  
Blogger Karthik Jayanth said...

பொன்ஸ்,

எங்களின் கழக வேங்கைகள் உலகமெங்கும் இருக்கிறார்கள் என்பதை மறந்து பேசுகிறிர்கள்.



கட்டை பிரம்மச்சாரிகள் கழகம் வாழ்க

'தல' இது போதுமா !

5/16/2006 09:21:00 PM  
Blogger - யெஸ்.பாலபாரதி said...

கைபுள்ளைகே சந்தேகமா...?
பழைய பக்கங்களை பார்க்க.. அல்லது எங்கள் கொள்கை புலி தம்பி பாண்டியை தொடர்பு கொள்க...

5/16/2006 09:21:00 PM  
Blogger - யெஸ்.பாலபாரதி said...

கொத்ஸ்... இது தேர்தலை குறிவைத்து துவங்கப்பட்ட கழகமல்ல...
உரிமை மீறலுக்கு எதிரானது....

5/16/2006 09:23:00 PM  
Blogger Karthik Jayanth said...

கொத்ஸ்,

இந்த கழகம் பதவியோ, இல்லை அதனால் வரும் முள்கீரிடங்களையோ எதிர்பார்த்து தொடங்கப்பட்டது இல்லை.

இன மக்களின் நன்மைகாக தொடங்கப்பட்டது.

5/16/2006 09:24:00 PM  
Blogger Karthik Jayanth said...

அண்ணன் பாலா வாழ்க !

// தம்பியுடையான் "படை"க்கு அஞ்சான்..

இந்த வார்த்தை ஒண்ணு போதுமே! இதுவே பல வருசம் தாக்குபிடிக்குமே !

5/16/2006 09:26:00 PM  
Blogger கைப்புள்ள said...

//கட்டை பிரம்மச்சாரிகள் கழகம் வாழ்க//

க.க.பி.க னு பேர் வச்சீங்கனா கரீட்டாயிருக்கும். அதாவது கல்யாணம் ஆகற வரைக்கும் கட்ட பிரம்மச்சாரிகள் கழகம். இப்படித் தான் பாருங்க கொங்குராசா...கொங்குராசான்னு நண்பர் ஒருத்தரு இருந்தாரு அவரையும் புடிச்சு இப்ப கால்கட்டு போட்டுட்டாங்க. என்ன தான் நாம உறுதியா இருந்தாலும் அந்நிய சக்திகளோட சதி அதிகமா இருந்துச்சுன்னா நம்ம கதி அதோகதி தான். எது எப்படியோ...க.பி.க வுல நமக்கும் ஒரு துண்டு போட்டு வையுங்க...அப்பப்போ வந்து நானும் ஜோதியிலே ஐக்கியமாயிக்கிறேன். என்ன தாடிக்காரர் தான் நம்ம மேலே கொஞ்சம் கடுப்புல இருக்காரு...நான் சென்னைக்கு வந்தும் அவரைப் பாத்துப் பொன்னாடை போத்தலைன்னு...அவரை மட்டும் கொஞ்சம் சமாளிச்சுக்குங்க.

5/16/2006 09:30:00 PM  
Blogger Karthik Jayanth said...

// பழைய பக்கங்களை பார்க்க.. அல்லது எங்கள் கொள்கை புலி தம்பி பாண்டியை தொடர்பு கொள்க...

'தல' அண்ணன் கைப்பு கால சக்கரத்தில் மாட்டி நேரம் காலம் தெரியாமல் ஆப்பு வாங்கி கொண்டு இருப்பதால் நிகழ்வுகளை எதிர்கொள்ள தவறி விட்டர் :-)

5/16/2006 09:30:00 PM  
Blogger Karthik Jayanth said...

கொத்ஸ்,

நீங்கள் கூட இந்த கழகத்தில் இணைத்து உங்களின் மீதான மனித உரிமை மீறல்களை எடுத்துகூறி ஒரு நமது இனத்தை விழிப்படையச்செய்யலாம்

இது ஒரு அருமையான வாய்ப்பு. தவறவிடவேண்டாம் :-)

5/16/2006 09:36:00 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

//நீங்கள் கூட இந்த கழகத்தில் இணைத்து உங்களின் மீதான மனித உரிமை மீறல்களை எடுத்துகூறி ஒரு நமது இனத்தை விழிப்படையச்செய்யலாம் //
கொத்ஸுக்கு அதுக்கு சான்ஸ் இல்ல.. வீட்ல தங்கமணிக்குத் தெரிஞ்சா அவ்வளவு தான்..

//...நான் சென்னைக்கு வந்தும் அவரைப் பாத்துப் பொன்னாடை போத்தலைன்னு...அவரை மட்டும் கொஞ்சம் சமாளிச்சுக்குங்க.
//
தல, உங்களுக்குப் பதிலா நாங்க தான் (அடியில் கிழிந்திருக்கும்) பொற்கிழி குடுத்துட்டோமே!!

5/16/2006 09:39:00 PM  
Blogger Karthik Jayanth said...

'தல' கைப்பு வாழ்க !

எழுத்துச்சித்தன் அண்ணன் பாலா வாழ்க !

கொள்கைகளால் இணைந்த இமயமே !

இந்த கழகம் தொடங்கபட்டதன் நோக்கமே அன்பில் நண்பன் ராசா போன்ற கழக துண்களை யாரும் இனி வரும் எதிர்காலத்தில் அசைத்து பார்க்கும் எண்ணம் கூட அடி மனதில் எழக்கூடாது என்ற அவாவினால்தான் !

5/16/2006 09:41:00 PM  
Blogger - யெஸ்.பாலபாரதி said...

//என்ன தாடிக்காரர் தான் நம்ம மேலே கொஞ்சம் கடுப்புல இருக்காரு...நான் சென்னைக்கு வந்தும் அவரைப் பாத்துப் பொன்னாடை போத்தலைன்னு...அவரை மட்டும் கொஞ்சம் சமாளிச்சுக்குங்க.//
உண்மை..உண்மை
//க.பி.க வுல நமக்கும் ஒரு துண்டு போட்டு வையுங்க...அப்பப்போ வந்து நானும் ஜோதியிலே ஐக்கியமாயிக்கிறேன்.//
இப்போ கொஞ்சம் கொறஞ்சாப்புல இருக்கு..
:-)

5/16/2006 09:43:00 PM  
Blogger Karthik Jayanth said...

பொன்ஸ்,

இது எமது கழகத்துக்கு விடப்பட்ட சவால்.. தங்கமணி என்ன ! 1008 வைரமணியே வந்தாலும் தனக்கு இளைக்கப்பட்ட அநீதிகளை, மனித உரிமை மீறல்களை எமது இனம் விழிப்படைய இந்த உலகுக்கு உரக்க சொல்லுவர் கொத்ஸ்..

5/16/2006 09:46:00 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

//இந்த கழகம் தொடங்கபட்டதன் நோக்கமே அன்பில் நண்பன் ராசா போன்ற கழக துண்களை யாரும் இனி வரும் எதிர்காலத்தில் அசைத்து பார்க்கும் எண்ணம் கூட அடி மனதில் எழக்கூடாது என்ற அவாவினால்தான் !
//
நோக்கத்துல ஏதோ பொருட்குற்றம் இருக்கிறது.. பாலாவின் நோக்கம், இப்படி தூணை வந்து யாராவது அசைக்கும் வரை தூணாக இருந்து விட்டு அப்புறம் பொலபொலன்னு உதிர்ந்துவிடுவது என்று நினைக்கிறேன்.. தல கைப்புவும் // கல்யாணம் ஆகற வரைக்கும் கட்ட பிரம்மச்சாரிகள் கழகம்//னு சொல்வதிலிருந்து அவர் எண்ணமும் அது தான் என்று தெளிவாகிறது :)

5/16/2006 09:59:00 PM  
Blogger Karthik Jayanth said...

அக்கா ஆற்றலரசி பொன்ஸ்,

ஒரு குத்தமும் இல்ல.. எல்லாம் சரியாத்தான் இருக்கு.. இப்படி சொல்லி குட்டைய குழப்பி அதில் மீன் பிடிக்கும் உங்களின் நோக்கம் நிறைவேறாது :-)

5/16/2006 10:12:00 PM  
Blogger கவிதா | Kavitha said...

//ஒரு குத்தமும் இல்ல.. எல்லாம் சரியாத்தான் இருக்கு.. இப்படி சொல்லி குட்டைய குழப்பி அதில் மீன் பிடிக்கும் உங்களின் நோக்கம் நிறைவேறாது :-)//

மீனு மட்டுமா புடிப்போம், வறுத்து உங்களுக்கே இல்ல கொடுப்போம்..!

5/16/2006 10:45:00 PM  
Blogger கவிதா | Kavitha said...

//அன்பு வேண்டி ஆட்டோ அனுப்புதல் போன்ற சிறிய நிகழ்வுகளை கண்டு //

நன்றி கார்த்திக், ஐடியா குடுத்ததுக்கு தான்..!சிறிய நிகழ்வா இல்லாம பெரிய நிகழ்வா நாங்க ஆக்கிகிறோம்.. என்ன பாலா..கையோட..கால், உடம்பு ன்னு சேர்த்துக்க வேண்டியது தான்..!

5/16/2006 10:47:00 PM  
Blogger பாரதி தம்பி said...

அய்யா.. என்னையும்ம் சேர்த்துக்குங்க...
நம்ம தல-க்கு மெயில் அனுப்பியும் பதில் இல்லை. நீங்களாவது சொல்லுங்கையா..

5/16/2006 11:15:00 PM  

Post a Comment

<< Home