Tuesday, April 11, 2006

வ.வா அறிக்கை வாசிப்பு

இப்படி பதிவு1 , பதிவு2 போட்டு என்னோட நிலமைய தெளிவா இருக்கும் போதே சொல்லி இருக்கேன்.

அதுக்கு பிறகும் சில புல்லுருவிகள் வ.வா.சங்கம் உடைந்துவிட்டது. பார்த்திபன் தலமையில் 3 வது அணி, என்று சில உடகங்களில் (அவர்களுக்கு சொந்தமான) மறுபடியும், மறுபடியும் பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதால் பல கடமைகளுக்கு இடையிலும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த? சிற்றுரையை ஆற்றும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளேன்.

***

கழக கண்மணிகளே,

வீட்டுக்கு போனதில் இருந்து வுட்டுல எதுத்த வீட்டு சுப்பரமணிய கானோம், பீர்க்கை வளர்ப்பது எப்படி, 2 in 1 ல என்ன பாட்டு கேட்டேன், கேசட் பதிவது எப்படி என்பது போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளை எழுதும் பதிவுலகின் மெகா ஸ்டார், எதடா எழுதுவது என்று யோசிக்கும் பதிவாளர்களுக்கு, இப்படியும் பதிவு போடலாம் என்று தனது பதிவால் உணர்த்தும் ஏழைகளின் ஏந்தலே...வாலிப சமுதாயத்தின் வங்காள விரிகுடா கைப்பு அவர்களே, குமர காவியம் படைத்துக்கொண்டிருக்கும், எனது அன்பு தோழன் கோவை கோபுரம் சிபி அவர்களே, சங்கத்தின் போர் வாளாக செயல்படும் அன்பில் அண்ணன் தேவ் அவர்களே, பொள்ளாச்சி / ஈரோடு தந்த மண்ணின் மைந்தன் விவசாயி இளா அவர்களே, இந்த பூவுலகிலே பிறந்த பயனை அடையும் வகையில் உழைக்கும் ஜொள்ளு பாண்டி அவர்களே, மகளிர் அணி தலைவி கீதா மேடம் அவர்களே, சங்கத்தின் செயல்புயல் பொன்ஸ் அவர்களே, இன்னும் கோடானுகோடி தொண்டர்களே, அனைவருக்கும் வணக்கம்.

கடந்த சில தினங்க்களாக சில உடகங்களில் வ.வா. சங்கம் உடைந்து விட்டதாக வரும் வதந்திகளை நம்பவேண்டாம் என்று முதலாவதாக கேட்டுகொள்ள விழைகிறேன். இந்த சில நாட்களில் என்னிந்த பரபரப்பு என்பதைப் பற்றிய ஆச்சர்ய கடலில் நான் மூழ்கி இருக்கிறேன்..
இதற்க்கு காரணம் இல்லாமல் இல்லை.. எங்கே தல போட்டியிடும் இடங்களில் எல்லாம் அமோகமாக ஆப்பு வாங்கி விடுவாரோ என்று மனதில் எழுந்த அச்சத்தாலும், கருத்து கனிப்பு முடிவுகள் சாதகமாக இல்லையே என்ற பயத்தாலும் இருக்கலாம். இதனால்தான் தங்களுக்கு ஆதரவாக நயன்தாரா பிரச்சாரம் செய்வதாக செய்தி பரப்புகிறார்கள். நீங்கள் ஒரு மலையாள பகவதியை வழிபட்டால், நாங்கள் உலகை தன் பொற்கரத்தால் காக்கும் ஏன்ஜலீனா அம்பாள், மாய சக்தி ஜெசிகா ஆல்பா ஆகியோரை அழைக்கவேண்டியது இருக்கும் என்று கூறிக்கொள்ள கடமைபட்டிருக்கிறேன்.

சங்கத்தின் மூத்த உறுப்பினர்களின் ஆதரவு இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்க முயலும் பார்த்திபன் அவர்களே, எங்கே முடிந்தால் அந்த ஆதரவு மெயில்களை காட்டவும்.. மகளிர்க்கு போதிய இடமளிக்க படவில்லை என்று அவதூறு பரப்புவர்களே நீங்கள் இது பற்றி மேலும் அறிய எங்க கூட்டாளி ஜொ.பாண்டியை அணுகவும்.

***

இந்த உண்மை நிலையை அறிந்து தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட்டு சட்டம் ஒழுங்கு பாதிக்காத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று மாநகர ஆணையாளர் சாட்டிலைட் பாண்டியன் கேட்டுகொண்டுள்ளார்.


***

யாருமே கேட்க மாட்டர்கள் என்பதால்

கேள்வி - பதில்


கே: இட்லி வடையைத் தாக்கியவர்கள் கைப்புள்ளயின் கைக் கூலிகளே என்ற வதந்தி குறிந்து.

ப: நீங்களே வதந்தி என்று சொல்லிவிட்டிர்கள். மேலும் என்னை போலவே கைப்பு அவர்களும் கடை வேலைகளில் சிக்கி அங்கங்கே பல ப்ராஜெக்ட் ஆப்புகளில் சிக்கி சின்னாப்பின்னமாகி கொண்டு இருப்பதால் வேறு யாருக்கும் இபோதைக்கு ஆப்பு வைக்கும் எண்ணம் இல்லை.

கே: தேவ் சங்க போர் வாளாக நியமிக்கப்பட்டு இருப்பதை பற்றி ?

ப: கூட்டாளி கடைல வேலை அதிகம் இல்லாம ஜிலோன்னு இருப்பார் போல. அது அவரின் கைப்புவின் அரசியல் பிரவேச பதிவில் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

கே: பெண்களுக்கு சங்கத்தில் உரிய முக்கியத்துவம் இல்லை என்ற குற்றச்சாட்டு பற்றி ?

ப: பெண்கள் நாட்டின் கண்கள். இதை எங்க சங்க 2 வது வேட்பாளர் பட்டியலில் காணலாம்.

கே: கட்டதுரை எங்க ?

ப: அதையும் நீங்களே கண்டுபுடிங்க.

கே: பார்த்திபன் உங்க சங்கத்தில் இணைய போவது பற்றி.

ப: அது கொள்கை கூட்டணியாக இருந்தால் வரவேற்பேன்.

கே: அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?

ப: ஸ்பிரிங் பிரேக்ல கனடா போகணும். கடைல புதுசா 5 C1 சிஸ்டம் டிசைன் பண்ணனும். இத பத்தி பதிவு எழுதணும்.

13 Comments:

Blogger பொன்ஸ்~~Poorna said...

கூட்டாளி கார்த்திக்கு..
மத்தவங்க சொல்றாங்கன்னு நீ சோகமாகி மறுபடியும் 'குடி'மகனாய்டாதன்னு தல சொல்ல சொன்னாரு..

அந்த ஏஞ்சலீனா அம்பாள், ஜெசிகா சக்தி படமெல்லாம் போட்டு பாட்டு எழுதிகிட்டே இரு.. அப்பால, நம்ம நயன் தாரா பாவம், அது கூட பாட்டு கேட்ருக்குது.. அது பத்தியும் எதுனா எழுது...

4/11/2006 09:41:00 PM  
Blogger ஜொள்ளுப்பாண்டி said...

ஆஹா வா 'தல' ஜெயந்து ஒரு வழியா மப்பு கலைஞ்சுதா ? அண்ணன் கைப்பு எங்கெயோ வசமா சிக்கிட்டாரு போல தல தலையக்காணோம்.நீங்களாவது வந்து அறிக்கை விட்டீங்களே. கழகப்போர்வாள் நீங்கதான் ஓகே ?

கழகப் போர்வாள் அண்ணன் ஜெயந்த் வாழ்க !!!

4/12/2006 01:12:00 AM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

//கழகப் போர்வாள் அண்ணன் ஜெயந்த் வாழ்க !!! //

வாழ்க வாழ்க.. !!!!!

4/12/2006 07:51:00 AM  
Blogger Karthik Jayanth said...

//ஏஞ்சலீனா அம்பாள், ஜெசிகா சக்தி படமெல்லாம் போட்டு பாட்டு எழுதிகிட்டே இரு

இந்த அம்பாள், மாய சக்தி, குல தெய்வம், காவல் தெய்வங்கள், இன்னும் எல்லாத்தையும் பத்தி வரும் நாட்களில் எழுதப்படும். படம் போடப்படும்.. உள்ளூர் பகவதிகளும் கண்டுகொள்ளபடுவார்கள்.(என்ன இருந்தாலும் நானும் மண்ணின் மைந்தன் தானே :-)

//கழகப் போர்வாள் அண்ணன் ஜெயந்த் வாழ்க !!!

யப்பா ஜொ.பாண்டி. எற்கனவே கடைல வசமா சிக்கி சின்னாபின்னமாகிட்டு இருகேன். இதுல இதுவேறயா. கொஞ்சமாவது கருணை காட்டுப்பா. நிலமை சரியாகட்டும் அப்பால பாக்கலாம்.

4/12/2006 11:27:00 AM  
Blogger Karthik Jayanth said...

//வாழ்க வாழ்க.. !!!!!

ஆஹா நான் தப்பிக்கவே முடியாதா. இப்படி முட்டு சந்துல மாட்டிக்கிட்டனே :-) ஹும் ஒரு வழி..

கழகத்தின் செயல் சூறாவளி, சென்னை தந்த செம்மல் கட்சிய காக்கும் அண்ணன் தேவ் வாழ்க!! வாழ்க!!!!

4/12/2006 04:52:00 PM  
Blogger நாமக்கல் சிபி said...

பொறுத்தது போதும்

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/04/06-2006.html)

4/12/2006 07:32:00 PM  
Blogger சரளாக்கா said...

ஜாக்கிரதை ஜாக்கிரதை
வ.வா.சங்கமே கைப்புவே ஜாக்கிரதை
விரைவில் கைப்புவுக்கு புது ஆப்பு ரெடி
விவரம் எனது பிளாக்கில்

4/12/2006 07:48:00 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

//கழகத்தின் செயல் சூறாவளி, சென்னை தந்த செம்மல் கட்சிய காக்கும் அண்ணன் தேவ் வாழ்க!!//

வாழ்க வாழ்க.. !!!!!

4/12/2006 08:03:00 PM  
Blogger Karthik Jayanth said...

இந்த தருணத்தில் இலக்கிய செம்மல், கோவை கோபுரம் நண்பன் சிபி அவர்கள் முன்பு வெளியிட்ட அறிக்கையை நினைவு கூற கடமைபட்டிருக்கிறேன்..

அறிக்கை

கைப்புள்ளக்கேத்த கைப்பொண்ணு வந்தவுடன் கோவையைச் சேர்ந்த மீசக்கார நண்பன் கருத்து(!?) ஏதும் சொல்லாததால் சில (விஷமப்) பத்திரிக்கைகள் தங்களுக்குத் தோன்றியவாறு செய்திகள் வெளியிட்டு உட்கட்சிப் பூசலை உண்டுபண்ண முயற்சி செய்வதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த அறிக்கை. எந்த ஒரு பத்திரிக்கையும் இத்தகு தரந்தாழ்ந்த வேலைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் எல்லாவற்றையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்றும் இதன் மூலம் அறிவிக்கப் படுகிறது.


இதன் மூலம் சங்கம் இன்னும் உடையவில்லை என்பது கையில் உள்ள சிக்கன் பீஸ் போல தெளிவாக தெரிகிறது.

4/12/2006 09:07:00 PM  
Blogger Karthik Jayanth said...

யக்கா சரளாக்கா,

வாங்க நீங்க எத்தனை ஆப்பு கொண்டுவந்தாலும் சரி.. அதை சமாளிக்க தல ரெடி சங்கமும் ரெடி. அதே மாதிரி நீங்களும் ரெடியா இருங்க.. என்னா தல தூங்கிகிட்டு இருக்குற சிங்கத்தை தட்டி எழுப்பிடங்கா.. வாங்க...

சிங்கம் ஒன்று புறப்பட்டதே!!!!!!!!!

தல வா தல......

4/12/2006 09:15:00 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

கார்த்திக், சிங்கம் எப்படி இருக்குன்னு கேக்கணும்.. ராஜ்குமார் இறந்ததுனால, கர்னாடகா பூரா கலவரமாம்.. இப்படி ஒரு கலவரமான நேரத்துல சிங்கம் மால்கேட் காட்டுக்குப் போயிருக்கு.. அறிக்கையும் ஒண்ணும் வர மாட்டேங்குது.. நம்ம சங்கத்துக்கு எதிரிடையான புல்லுருவிகள் யாராவது இந்த நேரம் பார்த்து சிங்கத்தை கூண்டுக்குள்ள போட்டுரப் போறாங்க..

4/12/2006 09:22:00 PM  
Blogger Karthik Jayanth said...

பொன்ஸ் ஒண்ணும் கவலைபடவேண்டாம்..தல எங்க இருந்தாலும் நல்லபடியா வருவாரு.. வந்து வழக்கம் போல எல்லாத்தையும் கலாசுவாரு..

தல எங்க இருக்க... ஒரு அறிக்'கை' கொடு தல

4/12/2006 09:30:00 PM  
Blogger வெட்டிப்பயல் said...

ஃபிளாஷ் நியூஸ்!
கைப்புள்ளயின் கதி - திடுக்கிடும் உண்மைகள்வழக்கில் திடீர் திருப்பம் - நீதிபதி மாற்றப்பட்டதின் பின்னணி என்ன?

5/12/2006 11:46:00 PM  

Post a Comment

<< Home