Friday, April 21, 2006

கூட்டாளியின் பிரிவு

வெள்ளி கிழமை

அதிகாலை ஆப்ஷோர் கான்பெரன்ஸ் கால் !
காலை சிக்காகோ ஆபிஸ் !
அரக்க பரக்க வேலை !
மதியம் DownTown ஆபிஸ் ரிப்போட்டிங்க் !
ஈவினிங் கூட்டாளிகள் பிக்கப்பு !

முன்னிரவு 'பார்' இல் பார்ட்டி !
இனிமேல் கூட்டாளிக்கு இல்லை வேலி !
இன்று இது எங்கள் உலகம் !
உலகம் எங்கள் பாக்கெட்டிலே !
கால்கள் பறக்குது ராக்கெட்டிலே !
இரவு பொழுது எங்கள் பக்கம் !
விடிய விடிய கொண்டாடினோம் !

வீரன் என்ற படம் பார்த்துவிட்டு
தெலுங்கு, தமிழ் வுட் எல்லாம்
ஒரு கலவை அலசல் !


******

சனி கிழமை

காலை B2B Hub கான் கால் & வேலை !

மதியம் சியர்ஸ் டவர் !
மாலை இளவெயில் நேரம்
மிச்சிகன் லேக், அரட்டை !

எனோ தெரியவில்லை இபொழுதெல்லாம்
மிச்சிகன் லேக் வந்தால் தான் எதோ நிம்மதி !

பின்னிரவு குத்தாட்ட ஜாலி !
எங்கு நோக்கினும் கட்டழகு பெண்களின் புரட்சி !
அவர்களின் உடைகளில் பெரும் வரட்சி !
அதில் அப்பட்டமாய் தெரியும் திரட்சி !
பக்கத்தில் பாய் பிரன்ட் (பாடி கார்ட்) பார்த்து மிரட்சி !

எங்கேயும் காதை செவிடாக்கும் சங்கீதம் சந்தோஷம் !
இங்கேயும் பல ரவுண்டு உற்சாகம் !

உற்சாகம் வந்து சாத்திரங்கள் ஓடிவிட !
ஆசை நூறு வகை, பெண்கள் 4 வகை
என்று மனதில் பாடிக்கொண்டு !
வாழ்த்து விடு இந்த நிமிடத்தை
என்று நினைத்துகொண்டு !
கைகள் ஆறும் தட்டிக்கொள்ள !

காண்பவை கண்கொள்ளா காட்சி !
கொண்டவையோ இளமை கோலம் !
இரவு முழுக்க இன்ப மயம் !
ஆடிக் களைத்த கால்கள் கெஞ்ச !
தேடி ஒரு இடத்தை பிடித்து
பசிக்கு பல ஐய்ட்டங்கள் ஆர்டர் செய்து !

தத்து பித்து பழங்கதை பேசிக்கொண்டு !
நினைவுகள் தாய்நாடு நோக்கி ஓடிச்செல்ல !
வரம்பு இல்லாமல் செலவு செய்து
உயரப் பறந்து கொண்டாடினோம் !
பேசி முடியாத கதைகளை ஒதுக்கி விட்டு
அதிகாலை 5 மணிக்கு வீடு திரும்பினோம் !


******

ஞாயிறு

7 மணிக்கு குளித்து விட்டு முன்னிரவு
பின்னிரவு செய்த பாவங்களிருந்து விடுபட
அரோரா, லேம்பார்ட் கோவில்கள் தரிசனம் !

வந்ததும் கூட்டாளியின் கை வண்ணத்தில்
பிரியாணி, சிக்கன் 65 கடைசியாக !

பிரிவின் சோகம் தீர்க்க
அழகாய் இருக்கிறாய்
பயமாய் இருக்கிறது திரைப்படம்

கடைசி தடவையாக லக்கேஜ் & டீக்கெட் செக்கிங்
இலவசமாக அறிவுரைகள் :-) !
ஏர்போட்டில் டிராப் !

ஒத்த சிந்தனையுள்ள
கூட்டாளியின் பிரிவு
சோகம் தான் கண்டிப்பாக !

கூட்டாளி போற ஊர்
அரைகுறை ஆடை மேனி !
அங்கே இது ஒரு ஹாபி
கூட்டாளி நீ அனுபவி !


*******


வீரன்

வழக்கமான கரம் மசாலா கொஞ்சம் அதிகமாகவே சேர்க்கப்பட்ட படம். கதை ஒண்ணுமே இல்ல. மாஸ் எப்படி ஊரே நடுங்குற வில்லன் கிட்ட இருந்து, கரெக்ட்டு பண்ணுன டிக்கெட்டு தங்கச்சிய அள்ளிகினு போறாரு அம்புட்டுதான் கதை.

மாஸ் சின்ன வயசுல நிறைய காம்ளான், ஹார்லிக்ஸ் குடிச்சிருப்பார் போல, இல்லாட்டி எப்படி வில்லனோட அடியாட்கள் எல்லாம் 15 அடி பறந்து போய் விழமுடியும் ?

இந்த பைக் சேஸிங் MI-2 வோட கேவலமான காப்பி. வில்லன் சுட்டதும் மாஸ் போட்டிருக்கும் ஹெல்மட் மட்டும் பறக்குறதும், அத்தனை பேர் துப்பாக்கியால் சுட்டாலும் மாஸ் மட்டும் பைக் ஓட்டிகிட்டே இருக்குறதுலயும் & படம் முழுக்க வர்ற logic காமெடியில், நாங்க சிரிச்சதுல அடுத்த நாள் பக்கத்து வீட்டுகார Blonde அக்கா You young men seems to had lots of fun and party அப்படின்னு சொல்லுற மாதிரி ஆகிடுச்சி.


அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது.

பட ஒப்பனிங் நல்லா இருக்கு. டாவ தேடிக்கிட்டு ஹீரோ கிளப்புறப்ப அவங்க மதர் குத்தாட்டம் போட்டு, வீச்சருவாள Backpack ல பார்கிங் பண்ணும்போது சகா சொல்லுற மேட்டர் நம்ம சிந்தனை மாதிரியே இருக்கு(நமக்கு இந்த மாதிரி நமக்கு ஒரு மதர் இர்ந்தா வாழ்க்கை எப்பவவோ ஜில்பான்ஸ்சோட ஜிலோன்னு இருந்திருக்குமேப்பா)

படத்தின் ஆரம்பம் நாற்கோன காதல் கதை போன்று தோன்றினாலும் ஒரு 40 நிமிடத்தில் இது மற்றும் ஒரு முக்கோன காதல் கதைதான் என்பதை பாத்திரங்களின் குணாதிசியங்களும், சில வசனங்களும், காட்சியமைப்புக்களையும் பார்த்தே கண்டுகொள்ளலாம். தமிழ் கலாச்சார சினிமாவும்(?) இன்னும் ஜோடிகள் ஸ்வாபிங் போன்ற அடுத்த கட்டத்தை நோக்கி செல்லவில்லை என்பது கூடுதல் பலம் :-)

படம் இடைவேளை வரும் போது யார் சூப்பு வாங்க போறாங்க என்பதும் தெரிந்து விடும். அப்புறம் வழக்கம் போல சூப்பு வாங்கும் கேரக்டர் எப்படி சூப்பு வாங்குறார் என்பது மீதி கதை. எங்கே அந்த மேனேஜரும், சூப்பு கேரக்டரின் சுற்றங்களும் சூப்பை மாத்த்கிடுவாங்களென்னு ஒரு நிமிசம் யோசிக்க வைக்கிறாங்க அவ்வளவே.

ஹீரோ கடைசியில் காதல் பற்றி பேசும் போது கொஞ்சம் தலைய சொரிய வைச்சாலும், இதே மாதிரி வந்த பூவே உனக்காக படத்துல விஜய் பண்ணுன அளவுக்கு இல்லைங்கிறதால எங்க சபைல மன்னிப்பு கொடுத்துட்டோம் :-)

4 Comments:

Blogger கவிதா|Kavitha said...

//பின்னிரவு குத்தாட்ட ஜாலி !
எங்கு நோக்கினும் கட்டழகு பெண்களின் புரட்சி !
அவர்களின் உடைகளில் பெரும் வரட்சி !
அதில் அப்பட்டமாய் தெரியும் திரட்சி !
பக்கத்தில் பாய் பிரன்ட் (பாடி கார்ட்) பார்த்து மிரட்சி !//

பாய் பிரன்ட் உங்கள மிச்சிகன் லேக் ல தூக்கி போடத அளவுக்கு sight அடிச்சிகோங்க..!

உங்க பதிப்பு நல்ல உற்சாகத்தை தருது..! வாழ்த்துக்கள்!

4/23/2006 10:08:00 PM  
Blogger துளசி கோபால் said...

கார்த்திக் ஏதோ புகையுற வாசனை வருதேப்பா:-)))

4/23/2006 10:09:00 PM  
Blogger துளசி கோபால் said...

//கூட்டாளி போற ஊர்
அரைகுறை ஆடை மேனி !
அங்கே இது ஒரு ஹாபி
கூட்டாளி நீ அனுபவி !//

கார்த்திக் ஏதோ புகையுற வாசனை வருதேப்பா:-)))

4/23/2006 10:09:00 PM  
Blogger Karthik Jayanth said...

கவிதா,

வாழ்த்துக்கு நன்றி :-) .

துளசி அம்மா,

நம்ம சார்பா கூட்டாளியாவது அள்ளுறானேன்னு ஒரு சந்தோசம்தான் :-)

இந்தாலும் வசந்த காலத்துல என்னால அங்க போக முடியலைன்னு, ஒரு புகை அவன் கதை சொல்லுறப்ப வரும்

4/24/2006 08:41:00 AM  

Post a Comment

<< Home