Wednesday, April 12, 2006

St. Patricks Day

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்னு சூப்பரு மாதிரி டயலாக் எல்லாம் பேச மாட்டேன். நமக்கு கொஞ்சம் இல்ல ரொம்பவே சோம்பேறித்தனம் ஆகிபோச்சிங்க.. இந்த St. Patricks Day வந்து போய் இப்ப ஒரு 2 மாசம் ஆகிபோச்சி..








சரிப்பு அதுதான் எல்லாத்துக்கும் தெரியுமே இப்ப என்ன அதுகென்னு கேக்குறவங்களுக்கு. ஹி ஹி அது எனக்கும் தெரியுமுங்க.. ஆனா பாருங்க இப்பத்தான் அப்ப போட்டோ புடிச்சது எல்லாத்தையும் என்னோட லாப்டாப்க்கு மாத்துனேன்.. ஆர்வம் எல்லாம் ஒண்ணூம் இல்லைங்க.. அங்கன இடம் இல்லாம இருக்கு.. அதுவும் போக வசந்தம் வேற வந்துடுச்சி... மரம், செடி கொடி எல்லாம் இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா துளிர்க்க ஆரம்பிச்சி இருக்கு.. எங்க கடைல அத பாக்குறதுக்கு கொஞ்சம் நல்லா இருந்தது.. அதுவும் போக எங்க அம்மா வேற எதாவது போட்டோ இருந்தா அனுப்புடா. பாத்து நாள் ஆவுதுன்னு சொல்லி கிட்டே இருக்குறாங்க...என்ன பண்ணுறது. இங்க வந்ததுல இருந்து இப்படி படத்துலயும் போன்லயும் தான் வாழ்க்கை ஓடுது.. அவங்களே நேரா வர்ரதுக்குள்ள எதாவது படம் அனுப்பனும்.. இப்படி தலைக்கு மேல வேல இருக்குறதுனால இப்பத்தான் அந்த டிஜிகேம் பக்கம் போனேன்..




இதுகூட சிக்காகோ ஆட்டோ ஷோ படம் வேற கொஞ்சம் இருக்கு..
பொறுங்க எல்லாத்தையும் ஒரே தடவ போட மாட்டேன்.. அப்புறம் எப்படி பதிவு கணக்கு காட்டுறது (ஹி ஹி)





இந்த வெள்ளை கட்டடம் இருக்கே அதுதான் அமெரிக்காவுல இருக்குற பழமையான கட்டடத்துல ஒண்ணாம்..அப்படின்னு நான் எங்க கிராமத்துல இருந்து மொதல்தடவையா மஞ்ச பைய தூக்கிகிட்டு வந்தப்ப எங்க்கூட்டாளி ஒருத்தன் சொன்னான்.(அவனுக்கு எவன் சொன்னானோ).. அத கேட்டதுல இருந்து நான் ஒரு 5௬ பேருக்கு சொல்லிட்டேன். பின்ன நான் வந்ததுக்கு அப்புறம் அத்தன பேரு வந்துடாங்க.. இப்ப நானும் ஒரு சீனியர்தான்..இப்ப நீங்களும் ஒரு நாலு பேருக்கு சொல்லி என்னைய சீனியர் வளையத்துல கொஞ்சம் மேல தள்ளுங்க :-)







இந்த பெரிய்ய காவா இருக்கே அதுதான் மிச்சிகன் லேக்காம்.. இந்த தினத்துக்காகவே இத பச்சை கலரா மாத்தி இருக்குறாங்க..இதுதான் நமக்கு வீக் என்டு டாப்பு.. கவலைய மறக்கணும்ன்னா போதும். இங்கன வந்து பட்டரைய போட்டுவேன்.. சும்மா கடல் மாதிரி இருக்குற தண்ணியையும் ஆகாசத்தையும் பாத்துகிட்டே இருக்கலாம். குளிர் காலத்துலயே இப்படித்தான் பண்ணுவேன்.. இப்ப வசந்த காலம் வேற வந்துடுச்சி. அய்யா ராம்ஸ் இங்கதான் உமக்கு சிலை வைக்கலாம்ன்னு இருக்கேன். லொகேசன் ஒகேவா. பாத்து சொல்லு.. இதுக்காக நேர்ல பாக்க எல்லாம் டிக்கெட்டு குடுக்குற அளவுக்கு வசதி இல்ல :-(





இந்த நாள்ல காலைல நடக்குற பரேட் ரொம்ப நல்லா இருந்தது.. எல்லாம் எங்க சங்க கலரான பச்சை கலர்ல டிரஸ் பண்ணிகிட்டு ஒரே அலும்புதான்.. நல்லா இருந்தது.. இந்த நாள் ஐரிஷ்காரவங்களோடதாம். அத பத்தி அங்க இருக்குற ஒரு அம்மா சொன்னங்க.. (சாயந்தரம் நெட் ல பாத்த்கு இன்னும் தெரிஞ்சிகிட்டேன்). அவங்களுக்கு ஒரே சந்தோசம்.. பின்ன அவங்க விழாவ பாக்க ஒருத்தன் காலைலயே போனா.. இப்படியா நாள் அன்னைக்கு நல்லா போச்சி

8 Comments:

Blogger பொன்ஸ்~~Poorna said...

அது சரி.. ஏன் தண்ணி பச்சை கலர்ல இருக்கு? இவ்ளோ அழுக்கான தண்ணில தான் போட் விடுவாங்களா??!!!

4/12/2006 09:09:00 PM  
Blogger Karthik Jayanth said...

இல்லைங்க. அன்னைக்கு மட்டும்தான் அப்படி கலர்ல இருக்கும்.. இல்ல நல்லா வெள்ள கலர்ல இருக்கும்..

இதுக்கு பக்கத்துல நேவி பியர் ல பெரிய ராட்டனம் அது இதுன்னு நம்ம ஒரு அரசு பொருள்காட்சி மாதிரி இருக்கும்.

லேக் ஷோர் அப்படின்னு ஒரு இடம் இருக்கு. அங்க இண்ணும் நல்லா இருக்கும். ஆனா கூட்டமா இருக்கும். அதுவும் போக இப்ப வசந்த காலம் வேற இல்ல. போட் ரைட் நல்லா இருக்கும். ஜோடி ஜோடியா இடம் ஜில்பான்ஸ்சா இருக்கும் :-)

4/12/2006 09:25:00 PM  
Blogger கவிதா | Kavitha said...

water எப்படி பச்சை கலரா மாத்தறாங்க? any idea? அப்புறம், ஒர் வேண்டுகோள்..எனக்கு உங்க தமிழ் புரிய மாட்டேங்குது. அகராதி ஏதாவது maintain பண்ணா அனுப்பி வைங்க..please..!

4/13/2006 03:16:00 AM  
Blogger Karthik Jayanth said...

கவிதா,

//பச்சை கலரா மாத்தறாங்க? any idea?

முந்துன நாள் 40 - 50 எடை உள்ள canister ல அடைச்ச ஆரஞ்சு கலர் dye எடுத்துட்டு போய் இந்த காவா (canal) ல வச்சிடுவாங்க அதுல இருந்துதான் இந்த எமரால்ட் கலந்த பச்சை கலர் நிறம் தெரியும். இந்த பழக்கம் 1957 - 1962 (எனக்கு சரியா தெரியல) ல இந்து ஆரம்பிச்சதா சொல்லுறாங்க.

அகராதி எல்லாம் ஒண்ணும் இல்லைங்க.. சும்மா பேசிகிறதுதான்.

கூட்டாளி, பங்காளி, மாமா, பங்கு, சகா = என் நண்பர்கள்

டாப்பு = நம்ம ஊர் தெருமுனை மொட்டை சுவரு மாதிரி அடிக்கடி வர்ற இடம்

பட்டரை =தனியாக அமர்ந்து கொண்டு கடந்த கால நினைவுகளிலோ இல்லை எதிர்கால சிந்தனைகளிலோ, இல்லைன்னா ஒத்த சிந்தனையுள்ள கூட்டாளிகளுடன் நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டு இருப்பது

4/13/2006 01:11:00 PM  
Blogger Costal Demon said...

பணமா கொடுன்னாலும் கேட்க மாட்டேன்றியே தல... ம்ம்ம்... லொகேசன்லாம் O.K தான். நம்ம சிலை வச்சா அந்த ஏரியால ட்ராபிக் ஜாம் ஆயிடுமே தல. அதான் யோசிக்கேன். :-)

4/16/2006 11:46:00 AM  
Blogger Karthik Jayanth said...

பணம் என்ன கூட்டாளி.. இன்னைக்கு வரும்.. நாளைக்கு போகும்.. தத்துவம் :-)

சிலை வைச்சா ப்ளான்ட் டிக்கெட்டுகள் கூட்டம் அதிகம் ஆகி டிராபிக் ஜாம் எல்லாம் ஆவாது. அத எல்லாம் நான் பாத்துகிடுறேன் ஒகேவா. குளிர் காலத்துல தினமும் ஒரு ப்ளு லேபில் வாங்கி படைக்கிறேன்.

சொல்ல மறந்துட்டேன். சிலை திறப்பு விழாவுக்கு உலகாளும் குல தெய்வங்கள், அம்மன்கள், ஊர் காவல் தெய்வங்கள், மாய சக்திகள், இன்னும் பிற தேவலோக தேவதைகள் எல்லாரும் வந்திருந்து ஆசீர்வதிக்க வச்சிடுவோம் :-)

4/16/2006 04:52:00 PM  
Blogger தருமி said...

தினமும் ஒரு ப்ளு லேபில் வாங்கி படைக்கிறேன்.//
- படைச்சதுக்குப் பொறவு அத என்ன பண்ணுவீங்க? லேக்ல ஊத்திருவீங்களோ..?

அந்த river pier / lake pier-ஆ அங்க வந்து ஒரு சுத்து சுத்துனதாக 'அந்த நாள் ஞாபகம்...'

4/17/2006 09:01:00 PM  
Blogger Karthik Jayanth said...

//- படைச்சதுக்குப் பொறவு அத என்ன பண்ணுவீங்க? லேக்ல ஊத்திருவீங்களோ..?

இப்படி பண்ணுனா கூட்டாளி கோவிச்சுகிட்டா. அதுவும் போக சுற்றுபுற சூழலுக்கு மாசு உண்டாக்க கூடாது. காப் மாமா பாத்தா என்ன ஆகும் இப்படி பல சிந்தனை வேற ஓடுது. அதுனால பெரியவங்க நீங்களே ஒரு நல்ல ஐடியா குடுங்க.

// ஒரு சுத்து சுத்துனதாக

அப்ப நீங்களும் அது ஒரு நல்ல இடமுன்னு ஒத்துகிடுவீங்கன்னு நினைக்கிறேன்.

'அந்த நாள் ஞாபகம்' நெஞ்சிலே வந்ததோ ? ஊர் பெரியவங்களே.

4/18/2006 08:42:00 AM  

Post a Comment

<< Home