குல தெய்வமே
பூவே என் மனம் என்னும்
பூட்டை உடைக்கிறாய்..
உன் சுவாச பாதையில்
என் இதயம் இழக்கிறேன்..
உன் பெயரை சொல்லி
அதில் போதை கொள்கிறேன்..
உன் விழியசைவில் 100
காவியம் தோன்றிடுதே..
என் நினைவு தோன்றினால்
ஒரு துளி நீரை சிந்திடு..
ஒரு பார்வையால் நிரப்பிவிடு
துளி நேசத்தில் என்னை சேந்திடு
குல தெய்வமே என் குறை தீர்த்திடு..
ஒரு வார்த்தை சொல்லு.
நல்வார்த்தை சொன்னால்
'கொடி'யோடு வாழ்வேன்..
***
உன்னைக் காதலித்துக்
கொண்டிருக்கும்போது
நான் இறந்துபோவேனா
என்பது தெரியாது.
ஆனால்
நான் இறக்கும்போதும்
உன்னைக் காதலித்துக்
கொண்டிருப்பேன்
என்பது மட்டும் தெரியும்.
***
நான் வழிபட இந்த உலகத்தில்
எத்தனையோ கடவுள்கள்
இருக்கிறார்கள்..
நான் பின்பற்ற இந்த உலகத்தில்
எத்தனையோ மதங்கள்
இருக்கின்றன..
ஆனால்,
நான் காதலிக்க
இந்த உலகத்தில்
நீ மட்டும்தான் இருக்கிறாய்!
***
நீ எப்போதும்
தலையைக் குனிந்தே
வெட்கப்படுவதால்
உன் மதிப்புமிக்க
வெட்கத்தையெல்லாம்
இந்த பூமிதாய் மட்டுமே
தரிசிக்கிறாள்!
ஒரேயரு முறை
கொஞ்சம் உன் தலையை நிமிர்த்தி
வெட்கப்படேன்...
வெகுநாட்களாய்
உன் வெட்கத்தைத் தரிசிக்க
வானத்தில் தேவர்கள் காத்திருக்கிறார்கள்
***
9 Comments:
தமிழ் பொண்ணு கிடைக்கலையா உங்களுக்கு?!!
இந்த கேள்வியை எந்த கோணத்தில் எதிர் கொள்வது என்று எனக்கு தெரியவில்லை :-(
//வெகுநாட்களாய்
உன் வெட்கத்தைத் தரிசிக்க
வானத்தில் தேவர்கள் காத்திருக்கிறார்கள்//
????????????????
சீக்கிரம் ஓடியாங்க. நம்ம கார்த்திக்குக்கு என்னமோ ஆயிருச்சு.
தாயி மகமாயி, மாரியாத்தா காப்பாத்தும்மா.
உன் சன்னதியிலே கார்த்திக்கு மொட்டை அடிச்சுக்குவார்.
துளசி அம்மா,
//உன் சன்னதியிலே கார்த்திக்கு மொட்டை அடிச்சுக்குவார்.
:-))
சூரியன் மேற்கே உதித்தாலும்,
தாமரை இரவில் மலர்ந்தாலும்
தமிழகத்தில் காங்கிரஸ் தனிச்சு நின்னு ஜெயிச்சாலும்
கைப்புள்ள அடிவாங்காம இருந்தாலும்,
கார்த்திக்கு, நீ மாறவே மாட்ட கார்த்திக்கு...
இது தெரியாம, உன்னப் பத்தி ஒழுங்கு நடவடிக்கைன்னு என்னன்னவோ எழுதிட்டேனே...
மனசு தாங்கலப்பா... வந்து அக்கா பதிவுல கொத்தனாருக்கு பதில் மட்டும் சொல்லிடு தம்பி... சொல்லிடு... :)
Hi karthi ,
Please tell me who is girl
Nandri
Karthi
Tiruchendur
அய்யா கார்த்தி,
எம் பேருக்கே களங்கத்தை பண்ணிடயே. தெரியாமதான் கேக்குறயா ?.
தெரியாமயாக் கேப்பாரு.. அதெல்லாம் தெரிஞ்சிருக்கும்.. இருந்தாலும், உங்க வாயால யாருன்னு தெரிஞ்சிக்கத் தான் கேப்பாரு..
இருக்கட்டும், எனக்கு மட்டும் சொல்லுங்க, இது யாரு??
கார்த்தி,
எங்க பாச தெய்வம் சொன்னதுனால இந்த குல தெய்வத்தை பற்றி நான் அறிந்த தகவல்களை தருகிறேன்
தெய்வத்தின் பெயர் : இவா மென்டஸ் (Eva Mendes)
தெய்வத்தின் ஜனனம் : மார்ச் 5 1974
அவதரித்த இடம் : மியாமி ப்ளோரிடா (ஹூஸ்டன் டெக்சாஸ் என்ற தவறான தகவல் தருவோரும் உண்டு)
பால்ய பருவம் : லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் இனிதே க்யூபன் பெறோர்களுடன்
கலை சேவை : 14 படங்கள் என்னிலடங்கா ம்யூசிக் ஆல்பம், கமர்சியல்ஸ் (பெண்களின் அழகு சாதன தயாரிப்பு கம்பெனி ரெவ்லான் முகங்களில் தெய்வமும் ஒன்று), டீ.வி தொடர்கள், லாஸ் ஏஞ்சல்ஸ் ஸ்டேட் யுனிவர்சிட்டி(Drop out)
பிட்டு : குழந்தைகளுக்கு புத்தகம் & Interior Design
பாச மலரே விவரம் போதுமா :-)
Post a Comment
<< Home