Friday, April 21, 2006

மெய்யாலுமா

இன்போசிஸ் மற்றும் TCS இல் வேலை செய்யும் வாலிப வயோதிக அன்பர்களுக்கு ஒரு நற்செய்தி. உங்களுக்கு இன்னும் ஒரு தடவை கூட திருமணம்(?) நடக்கவில்லையா. நீங்கள் அதிஷ்டசாலிகள். உங்கள் கடை நடத்தும் இந்த சூப்பர் பம்பர் ரெடி. நீங்க ரெடியா ?

உங்கள் கடையிலே வேலை செய்யும், திருமணம் ஆகாத பெண்களுடன் ஒரு லைனில் செட் ஆகி அடிக்கடி இந்திய பொருளாதாரம் பற்றியும், உலக அமைதி குறித்தும், ப்ராஜெக்ட் பற்றி மட்டுமே அடிக்கடி ரெஸ்டாரன்ட், பீச் சினிமா தியேட்டர்களில் டீப் டிஸ்கசன் பண்ணுரீங்களா ?

நீங்கள் கல்யாணம் செஞ்சிகிட்டா உங்க கடைல இருந்து ஒரு லட்ச ரூவா கல்யாண மெய் பணமாகவும், எதோ ஒரு வெளிநாட்டு பயணமும் ஒரு B-Segment காரும் தாரங்களாம். இந்த அரிய வாய்ப்பு ஒரு தடவைதான் கிடைக்கும். போனா வராது. வாலிப வயோதிக அன்பர்களே முந்துங்க. காரு & மொய்பணத்தை அள்ளுங்க

மேல் விவரங்களுக்கு இங்க இடிங்கப்பு.

(http://www.outlookindia.com/full.asp?fodname=20060424&fname=Jobs+%28F%29&sid=1&pn=2,)

உங்களுக்கு கல்யாணம் ஆகி மொய் பணம் வந்ததும் , இந்த அன்பு தம்பிய மறக்காம கண்டுக்கோங்க. கல்யாணத்துல சாப்பாட்ட பாத்தி கட்டிட்டு நீங்க கொடுக்குற பணத்தையும் (கேஷ்,D.D, ஆன்லைன் ட்ரான்ஸ்பர் மட்டுமே) வாங்கிகிட்டு, அதோட போகம வெளிநாடு போகும் போது வந்து வழியும் அனுப்பி வாழ்த்துவேன்.(கட்அவுட் & போஸ்ட்டர் செலவுகள் எக்ஸ்ட்ரா)

6 Comments:

Blogger நன்மனம் said...

இதுல கடைசி பத்தில ஒரு பெரிய (எவ்வளவு பெரிசுனு சொல்லலீங்க)திரி வெச்ச குண்ட பத்த வெச்ச மாதிரி தெரியுது. ஆதலால் சீக்கிரம் கல்யாணம் செய்வீராக.

//...indiscriminate increase in labour costs will eat into India's cost-effectiveness. "Such salary levels are not sustainable even in the medium term. Global firms will think twice before deciding on India...//
கதையின் நீதி, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

4/22/2006 12:21:00 AM  
Blogger Karthik Jayanth said...

நன்மனம்,

எல்லாம் ஒரு சைக்கிள் தான்.

இப்படித்தான் கொஞ்ச நாளா சொல்லிகிட்டு இருக்குறாங்க. இதுக்கு எதிர் கருத்து சொல்லுறவங்களும் இருக்குறாங்க.

4/22/2006 12:32:00 AM  
Blogger துளசி கோபால் said...

ஆஹா... கார்த்திக்.
சந்தர்ப்பத்தைக் கெட்டியாப் புடிச்சுக்குங்க.
மத்தவனுக்கு கட் அவுட் வச்சு............... வழி அனுப்பி............
?????????????

ஆமா நீங்க வேலை செய்யறது எங்கே? இன்போசிஸ்தானே:-)

4/22/2006 03:43:00 PM  
Blogger Karthik Jayanth said...

துளசி அம்மா,

நான் மூடை தூக்குற கடை பேரு வேற :-( .

சரி இந்த பம்பர் லாட்டரில முடிஞ்ச வரைக்கும் யாராவது அள்ளுனா சரிதான். நெல்லுக்கு போறது கொஞ்சம் புல்லுக்கும் வரட்டும்ன்னுதான் இந்த கட்அவுட் ஸ்கீம் :-)

4/22/2006 04:03:00 PM  
Blogger நாமக்கல் சிபி said...

ஐயா! தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதோ?

5/04/2006 11:44:00 AM  
Blogger Karthik Jayanth said...

சிபி,

இன்னும் இல்லை ..

5/04/2006 05:30:00 PM  

Post a Comment

<< Home