Thursday, April 13, 2006

என் தமிழ்ப் புத்தாண்டு எண்ணங்கள்

அனைவருக்கும் என் 'விய' தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த நாள் அன்னைக்கு எங்க வீட்டுல விஷு கணி பார்ப்பது அப்படின்னு ஒண்ணு கொண்டாடுவாங்க. இது எங்க வீட்டுல எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து நடக்கும் நிகழ்வு.

புதுவருடத்தின் முதல்நாளே சாமி படம், தேங்காய், வெத்தலை பாக்கு, முக்கனிகள், நவதானியங்கள் மற்றும் நகைகளும் பணமும் ஒரு பெரிய வெள்ளி தாம்பாளத்துல வச்சி ஒரு பெரிய நிலை கண்ணாடி முன்னால வைப்பார்கள்.



அதி காலையில் கண்களை மூடிக்கிட்டுதான் எழுப்புவாங்க நேராக கனி காணுதல் அந்த ஆண்டு முழுவதும் வளமையை கொடுக்கும்ன்னு அம்மா சொல்லுவாங்க. நல்ல படிப்பு, புத்தி, குணம் எல்லாம் வரணும்ன்னு சாமிகிட்ட வேண்டிகிட சொல்லுவாங்க.அப்புறம் குளிச்சிட்டு கோயிலுக்கு போறது எல்லாம் உண்டு.எனக்கு இந்த வருசம்தான் இப்படி விஷுகனி பார்க்காத தமிழ் புத்தாண்டு வருசம்.

இந்த சிறப்பு நாளன்று எல்லாருக்கும் வரும் நாட்கள் , வேண்டிய வரம் தரும் நாட்களாக அமைய சாமிகிட்ட வேண்டிகிறேன்.

4 Comments:

Blogger குமரன் (Kumaran) said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் கார்த்திக்.

4/18/2006 09:42:00 AM  
Blogger Karthik Jayanth said...

வாழ்த்துக்கு நன்றி குமரன் :-)

4/18/2006 03:39:00 PM  
Blogger துளசி கோபால் said...

கை நீட்டம் கிட்டியோ?

4/18/2006 08:53:00 PM  
Blogger Karthik Jayanth said...

துளசி அம்மா,

எனக்கு மலையாளம் தெரியாது. இருந்தாலும் 'சாமி கிட்ட வேண்டிகிட்டது கிடைச்சதா'ன்னு, எனக்கு தெரிஞ்ச அறிவை வச்சி அர்த்தம் பண்ணிகிட்டேன். சரியான்னு நீங்கதான் சொல்லனும் :-)

எங்க அம்மாவுக்கு பிறந்த / சொந்த ஊர் தெக்க. அவங்க சீதனமா கொண்டு வந்த பல நல்ல பழக்கங்களில் இதும் ஒண்ணு :-)

4/19/2006 03:31:00 PM  

Post a Comment

<< Home