Saturday, April 08, 2006

'குடி' மகன்

என்ன ஒரு 2 வாரம் இருக்கும்ன்னு நினைக்குறேன், நம்ம பதிவு பக்கம் எட்டிப்பாத்து..இந்த 2 வாரம் நிஜமாகவே கொஞ்சம் பிஸி. கடைல வேலை செய்ய சொல்லிட்டாங்க..(நீ இல்லாம நல்லாத்தான் இருந்திச்சி, மறுபடியும் வந்துட்டயா). வேற வழி இல்ல :-( . படியளப்பவனே பகவான். முதல்ல இத எல்லாம் ஒரு பதிவா போடணுமான்னு யோசிச்சேன். சரி எதாவது எழுதுனா nostalgia ல இருந்து கவனத்தை மாத்துற மாதிரி இருக்கும்ன்னுதான் எழுதுறேன்.


*******

இது நான் காலேஜ் கடைசி வருசம் படிக்கும்போது நடந்தது. என்னோட ஜூனியர் ஆக்சிடென்ட்ல மாட்டுனது எங்க காலேஜ்ல எல்லாருக்கும் ரொம்ப ஷாக். என்னா பெர்சனலா பாத்தா அவன் தான் அடுத்த வருசம் எங்க காலேஜ் சேர்மன் ஆகவேண்டியது. எங்க டிபாட்மென்ட் வேற. அதுனால அன்னைக்கு மதியம் காலேஜ் போகல. எனக்கு மூட் வேற சரிய இல்ல. சரின்னு நானும் என்னோட பங்கும் ஒரு படத்துக்கு போய்ட்டு வந்தோம். சாயந்தரம் திரும்பி வந்தா எல்லாரும் அதையே பேசிக்கிட்டு இந்தாங்க. சரின்னு என்னோட இன்னோரு கூட்டாளி ரூம்க்கு போனோம். அவன் பேரு குட்டி. (எல்லாம் பட்டபேரு தான். நிஜ பேர சொன்னா என்ன கொன்னுடுவான்)

என்னைக்கும் இல்லாம அவன் கொஞ்சம் சோகமா இருந்தான். அதுக்கு ஒரு காரணம் இருக்கு.(அத பத்தி நான் இங்க சொல்ல மாட்டேன்.) அவனும் எங்க ஆஸ்தான தோஸ்து மாலிபுவும் ஏற்கனவே பயங்கரமான ஆலோசனைல இருந்தாங்க. குட்டிக்கு எம் மேல சரியான மரியாதை இருக்கு. நான் சொன்ன கேட்டுகுவான். சரின்னு அவங்க ஆலோசனைய கொஞ்ச நேரம் நிப்பாட்டிட்டு நானும் அவனும் ஒரு விசயமா கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தேன்.

திடிர்ன்னு என்ன நினைச்சான்னு தெரியல, கார்த்தி நீ இன்னைக்கு குடிச்சே ஆகணும்ன்னு சொல்லிட்டான். சரி சும்மா வழக்கம் போல உளற்ரான்னு சும்மா இருந்தேன். அவன் கூட மைசூர்சான்டலும், மாமாவும் (எல்லாம் பட்டபேருதான்) சேந்துகிட்டானுக. சண்முகம் ஒருத்தந்தான் எம்மேல நம்பிகையா இருந்தான், நான் குடிக்கமாட்டேன்ன்னு. வழக்கமா எனக்கு சப்போட்டா இருக்குற மெஸ் சீனி அண்ணன் கூட இன்னைக்கி சப்போர்ட் பண்ணல..

அடுத்த 1 மணி நேர சண்டைல நான் ரூம்ல இருக்குற எல்லா தண்ணிலயும் நல்லா குளிச்சேன்.அன்னைக்கு குடிக்கலைன்னு எம்மேல குட்டிக்கு கொஞ்சம் கோவம்தான். சும்மா ஒரு வாரத்துக்கு சொல்லிகிட்டே இருந்தான்.

அன்னைக்கு நான் ஏன் குடிக்கலைன்னு எனக்கு சத்தியமா தெரியாது.ஆனா ஒரு கட்டத்துல சரி போனா போகுது ஒரு 5 ml வது குடிச்சா என்னன்னு எனக்கு ஒரு கட்டத்துல தோணுனது உண்மைதான்.

ஆனா நான் எதுக்கு குடிக்கமாட்டேன்னு சண்முகம் ஒரு காரணம் சொன்னான். குட்டி எதுக்கு நான் கண்டிப்பா குடிக்கணும்ன்னு ஒரு காரணம் சொன்னான். என்னை பொறுத்த வரைக்கும் எது சரி / தப்புன்னு இந்த நிமிசம் வரைக்கும் தெரியல.


*******
போன வாரம் எங்க VP கூட ஒரு பார்ட்டி இருந்தது. எங்க VP ரொம்ப நாளா 2 பேரும் சேந்து ஒரு நாள் அவங்க ஊர்ல காய்ச்சி விக்கிற இடத்துக்கு போகலாம், அது ரொம்ப நல்லா இருக்கும்ன்னு சொல்லிகிட்டே இருந்தாரு, நாந்தான் இப்ப அப்ப ந்னு இழுத்தடிச்சிகிட்டே இருந்தேன். பார்ட்டினா ஒண்ணும் நிறைய பேருல்லாம் இல்ல. நான், VP அப்புறம் ஒரு 5 - 6 SDM அவ்வளவுதான். எங்க VP நான் என்னமோ கடமையா வேலை செய்யிர மாதிரி மத்த SDM கிட்ட எல்லாம் அளந்து விட்டுக்கிட்டு இருந்தாரு. எல்லாரும் வாய்ல ஈ போறதுகூட தெரியாம கேட்டுக்கிட்டு இருந்தோம்.

முதல்ல ஆர்டர் பண்ணும் போது எனக்கு உடம்பு சரியில்ல ஒண்ணும் வேணாம்ன்னு சொன்னேன்.ஆனா சாப்பாட்டுல ரொம்ப decent ட்டா பாத்தி கட்டிக்கிட்டு இருந்தேன் எவனும் ஒண்ணும் சொல்லல. அப்பாலிக்கா எல்லாரும் ஜோதில இருக்கும் போது ஆட்டத்துல இஸ்த்துவிட்டுடாங்க.சரி ரொம்ப பண்ணுனா VP டென்சன் ஆகிட்டான்னு நானும் சரின்னு சொல்லிடேன். ஆட்டத்துல குதிச்சி Tequila (100% agave) 4 straight ஷாட் அடிச்சேன்.

அதுக்கு அப்புறம் ஒரு அரைமணி நேரத்துல என்ன நடந்ததுன்னு தெரியல. அடுத்த நாளும் ஒரு மாதிரியாதான் இருந்திச்சி. நல்ல நேரம் ஊர்ல பத்திரமா கொண்டுவந்து விட்டுடாங்க.

காரணம் ஒண்ணும் பெருசா இல்லங்க. நமக்கு கடைல ஒரு சீட்ட விட்டு இன்னும் ஒரு சீட்டுக்கு மாத்திட்டாங்க.


*******

என்ன இப்படி சீட்டு மாறும்போது நம்மளயும் ஒரு மனுசனா மதிச்சி, கார்த்தி நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்ப... நம்ம சாமிய கும்புட்டுக..எங்க போறதுன்னாலும் தென்னாடுடைய சிவனே போற்றி ந்னு சொல்லு.. அந்த சாமி உன்னைய பாத்துக்கும்., அப்படின்னு சொல்லுற அம்மா இப்ப வாழ்த்து சொல்ல பக்கத்துல இல்லைங்கிற வெறுமையும்

எவ்வளவு சொதப்புனாலும், கார்த்தி நீ இங்க இருக்கவேண்டியவனே இல்லடா.. நீ பாக்குற வேலைக்கு நீ கலக்க வேண்டிய இடமே வேறன்னு சந்தோஷம், துக்கம், நம்ம வாழ்கைல எல்லாம இருந்த மாமா, பங்கு, கூட்டாளிக கொண்டாட இப்ப பக்கத்துல இல்லைங்கறது, எல்லாத்தையும் நினைச்சா கண்ணுல தண்ணிதான் வருது.

12 Comments:

Blogger துளசி கோபால் said...

குடி குடியைக் கெடுக்கும்.

இதெல்லாம் அங்கே பாட்டிலில் போட்டுருக்க மாட்டாங்கல்லே?

4/10/2006 07:59:00 PM  
Blogger Karthik Jayanth said...

துளசி அம்மா,

அன்னைக்கு இருந்த மூட்ல இத எல்லாம் கவனிக்கல. அடுத்த தடவை பாத்து சொல்லுறேன் :-)

4/10/2006 08:25:00 PM  
Blogger Dharumi said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......போற போக்கைப் பார்த்தா நான் அண்ணா நகர் போக வேண்டியதுதான் போலிருக்கு !!

4/10/2006 09:18:00 PM  
Blogger Rams said...

ஜாலியா ஆரம்பிச்சு நெகிழ்ச்சியா முடிச்சுட்டியே தல...
நல்லாருக்கு

இராம்ஸ்

4/10/2006 09:34:00 PM  
Blogger Karthik Jayanth said...

அய்யா ஊர் பெரியவங்களே,

கும்பிட்டுகிறேங்கோ.. இப்படி எல்லாம் அவசரப்பட்டு ஒரு முடிவு எடுக்கவேண்டாமுங்கோ.. கடைல சீட்ட மாத்துனதுனலதாங்க இப்படி ஆகிபோச்சி.இதே மாதிரி எல்லாமே நல்லா நடந்தா சீக்கிரமே பெரிய சீட்டுக்கு போயிடலாமுங்க, அதுக்காகத்தான் இந்த வேசம் எல்லாம் :-)

4/11/2006 02:28:00 PM  
Blogger Karthik Jayanth said...

வாய்யா ராம்ஸ்,

ஒரு கூட்டாளியா என்னோட சோகத்தை நல்லா புரிஞ்சிகிட்டய்யா.. உமக்கு மிட்சிகன் லேக் பக்கத்துல ஒரு சிலை வைக்க ஏற்பாடு ஆகிட்டு இருக்குன்னு இந்த நேரத்தில சொல்லிகிறேன்.

அதான் ' Muzungu ' ஆகியாச்சில்ல அப்புறம் என்ன :-)

4/11/2006 02:52:00 PM  
Blogger கவிதா|Kavitha said...

கார்த்திக், இதில நிறைய terms (உங்க எழுத்து) எனக்கு புரியல..

4/12/2006 02:08:00 AM  
Blogger சந்தோஷ் aka Santhosh said...

மச்சி கலக்கிடிங்க போங்க புது சீட் எல்லாம் குடுத்து இருக்காங்க. எங்களுக்கு டிரிட் எல்லாம் இல்லையா. நம்க்கு பீர் புட்டி ஆகாதுப்பா பால் புட்டிப்பசங்க நாங்க. புது சீட், புது கட்சி(ஆனா தலையைக்காணோம் அப்படின்னு கேள்விப்பட்டேன்), புது பதவி கலக்குற சந்துரு.

4/12/2006 07:57:00 AM  
Blogger Karthik Jayanth said...

வாங்க கவிதா,

முதல் வரவு.. நல்வரவு ஆகுக..

என்னது இந்த சாதா பதிவே புரியலையா :-). என்னன்னு சொல்லுங்க. விளக்க கடமைபட்டு இருக்கிறேன்

4/12/2006 11:15:00 AM  
Anonymous Anonymous said...

சிறுவயதில் நான் மதுரையில் தெற்கு மாசி வீதியில் மறவர் சாவடி எனும் பகுதியில் வளர்ந்தவன். (உடனே சாதி முத்திரைக் குத்திவிடவேண்டாம்.) நான் வசித்த பகுதி அது, அவ்வளவே. அங்கு பண்டிகை தினங்களில் ரெக்கார்டு பிளேயர் போட்டு பெரிய குழாய் ஸ்பீக்கர்களை தெரு முழுவதும் விளக்கு கம்பங்களில் கட்டி குத்துப் பாட்டு போடுவார்கள்.

குடியைப் பற்றி பார்த்தவுடன் அந்நாளில் கேட்ட ஒரு அருமையான பாடல் நினைவில் வந்தது. அந்தப் பாடல்,
"ஊத்திக் கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு, இந்த உலகம் சுத்துதடி பல ரவுண்டு.."

இப்பாடலை வலைவீசித்தேடிக் களைத்துப் போய் பல ரவுண்டு அடித்துவிட்டு கவுந்து போய் கெடக்கிறேன். யாருக்கிட்டையாவது அந்தப் பாட்டு இருந்திச்சின்னா தமிழ் மணத்திலே பதிச்சி விடுங்கண்ணே!

அன்புடன்,
சரவணன்

4/12/2006 04:27:00 PM  
Blogger Karthik Jayanth said...

வாய்யா சந்தோஷ்,

வாழ்த்துக்கு ரொம்ப நன்றி.. இருந்தாலும் என்னால சந்தோசமா இருக்கு முடியலப்பு. எம்பேர சொல்லி நீ வேணும்ன்னா ஒரு உறுகா பாக்கெட்டு வாங்கி அள்ளிக்கோ. இல்லா நான் உங்க ஊர்பக்கம் வரும் போது கலக்கலாம் :-)

//நம்க்கு பீர் புட்டி ஆகாதுப்பா

நானும் அப்படித்தான். சரி லட்சியத்துக்காக ந்னு கொஞ்சம் கொள்கைய மாத்திக்கிடேன்.

// புது பதவி கலக்குற சந்துரு.

மேல போன சரி ஜிலோன்னு இருக்கலாம்ன்னு பாத்தா வேல கிழிக்குது கூட்டாளி

4/12/2006 05:20:00 PM  
Blogger Karthik Jayanth said...

வாங்க சரவணன்,

முதல் வரவு நல்வரவு ஆகுக...

இன்னுமொரு மதுரகாரன பாத்ததுல சந்தோசம்தான். நான் சாதி / மதம் அப்படின்னு பாக்குற ஆள் கிடையாது..இந்த பாட்ட ரவுண்டு ரவுண்டா தேடி அலுத்துபோய்டீங்களா ?. வாங்க 2 பேரும் இண்ணும் ஒரு ரவுண்டு தேடுவோம் :-).இல்ல யாரு பாடுனதுன்னு சொன்னா இங்க பாட்ட பத்தி எல்லாம் தெரிஞ்சவுங்க இருக்குறாங்க. அவங்க கோர்த்துவிடுவாங்க கவலையேவேண்டாம்

4/12/2006 05:57:00 PM  

Post a Comment

<< Home