Friday, March 31, 2006

Nameless

என் நெஞ்சே! என்னை கேட்காமல் அலைபாய்கின்றாய்,
காதல் ஒரு காந்தம்.. ஈர்க்கும் அதன் திசையில்..
மாயகரம் ஒன்று மயிலிறகு கொண்டு சில்லென்று மனதை தொடுதே!!!

என்னில் ஒரு மாற்றம்.. எதிலும் தடுமாற்றம்..
பார்வை பரிமாற்றம்.. ஒரு ஆனந்த ஏக்கம்.
கண்ணை விட்டு வெளியே காணும் ஒரு கனவே..
இனி அழைத்தாலும் வாராது தூக்கம்..

ஏதேதோ மாற்றம் வந்து என்னிடம் நான் இல்லை.



*******


என் வானில் வானவில்லாய் நீ இருந்தால்
என் வாழ்வின் வண்ணம் இன்னும் கூடும்
சுட்டு விரலாய் நானும்
கட்டல் விரலாய் நீயும்
எழுதும் என் வாழ்க்கை
அழகிய கவிதையாக மாறும்

விடாமலே உன்னை தொடர்ந்திடும் என்னை
ஒரே ஒரு முறை மனதினில் நினை
நான் வாழும் உலகில் மவுனம்தானே பேச்சு.
விழாகளில் நான் தனித்திருக்கிறேன்.
கனாக்களில் தினம் விழித்திருக்கிறேன்



*******


I woke up in the middle of the night
And I noticed my girl wasn't by my side,
Cause ever since my girl left me,
My whole life can crash in a moment.. ,


Never thought that I would be alone ,
I didn’t think you'd be gone this long,
So stop playing girl and
Come on to me...

7 Comments:

Blogger Geetha Sambasivam said...

Hope you are ready to marry. Congratulations. Who is that girl?

4/01/2006 01:05:00 AM  
Blogger சின்னவன் said...

"கட்டல் விரல்" இது என்னங்க ?
(thumb ?? )

4/01/2006 10:07:00 AM  
Blogger குமரன் (Kumaran) said...

கவிதை நல்லா இருக்கு கார்த்திக். நினைப்பதை நன்றாகச் சொற்களில் சொல்லியிருக்கிறீர்கள்.

4/01/2006 10:10:00 AM  
Blogger Karthik Jayanth said...

கீதா மேடம்,

பொண்ணுங்க சங்கதி எல்லாம் இல்லைங்க.. எதோ பொழுது போகாம கிறுக்குறதுதான்.

4/01/2006 07:37:00 PM  
Blogger Karthik Jayanth said...

சின்னவனே(ரே),

கட்டை விரல் இதுதான் சரி.. நான் நினைத்ததும் இதுதான்.. ஆனால் இரவு வெகு நேரம் கழித்து எழுதியதால் சிறிய எழுத்து பிழை ஏற்பட்டுவிட்டது. தவறை சுட்டிகாட்டியமைக்கு நன்றி :-)

குமரன்,

ரொம்ப நாள் கழிச்சி வந்து இருக்குறிங்க. உங்க கருத்துக்கு மிக்க நன்றி

4/01/2006 08:31:00 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

சீக்கிரம் பொண்ணு பாருங்க இல்லை வீட்லயாவது பாக்க சொல்லுங்க.. அப்புறம் இதெல்லாம் அவகிட்ட சொல்லலாம் (நாங்க தப்பிச்சிடுவோம் ;))

4/02/2006 11:31:00 PM  
Blogger Karthik Jayanth said...

நீங்க வேற வளர்ந்து வரும் கவிஞனை இப்படியா discourage செய்வது.

ஒண்ணுயும் இல்லங்க. வெள்ளிகிழமை ஒரே சோக ராகமா கேட்டு இப்படி கவிதயா ஆகிடுச்சி :-)

4/03/2006 07:55:00 PM  

Post a Comment

<< Home