ஒரு சனிக்கிழமை அதிகாலை...
இன்னைக்கு அதிகாலை ஒரு 11.30 மணி இருக்கும். நல்லா தூங்கி கொண்டு இருந்தேன். யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்பது போல இருப்பதாகவும், தன்னால் இருக்கும் இடத்தை விட்டு நகரமுடியாது மேலும் சனிக்கிழமை இது போல அதிகாலையில் எழுந்து கெட்டவனாக ஆக விருப்பம் இல்லை என்றும் கூறிவிட்டு கனவுலகில் கோடு அடிக்க போய்விட்டான் என் நண்பன். இந்த மாதிரி கதை சொல்ல எங்க வீட்டில் வேறு யாரும் இல்லை. எனவே மாட்டியது நான் மட்டும் தான்.
எவன்டா இது இந்த நேரத்தில். அதுவும் அப்பார்ட்மென்ட் காம்ளெக்ஸிஸ் இருக்கும் செக்யூரிட்டி டோர் எப்படி திறந்தது. எவன் வீட்டுக்கோ போறவன். வீட்டை மறந்து இங்கே வந்து நம்ம தாலிய அறுக்குறானோ?, அப்படி இந்த அமெரிக்காவில் இந்த நேரத்தில் நம்மளை பாக்குறதுக்கு வர்றது. நமக்கு தெரிஞ்சவன் எல்லாம் நம்மளை மாதிரி தூங்கிகிட்டு இல்ல இருக்கணும். இவனுக தொல்லை தாங்காமதானே நம்ம அமெரிக்காவுக்கு வந்து ரூம் போட்டு தூங்கிகிட்டு இருக்குறோம்.. இங்கயுமா இவனுக தொல்லை அப்படின்னு திட்டிகிட்டே கதவை திறந்தால்....
$%&^*!&#^$%&@(@)^%&%">$%&^*!&#^$%&@(@)^%&%*#*#
வந்தவன் பேசுனது ஸ்பானிஷ் என்பதே ஒரு 1 - 1/2 நிமிடம் கழித்தே மண்டையில் உறைத்தது. ஒரு வழியாக அவனை ஹோல்டான் ஹோல்டான் நீ யாரு? உனக்கு என்ன வேண்டும் ? எதுக்கு வந்து இப்படி பனிகாலத்துல கொல்லுற அப்படின்னு கேட்டு முடிக்கும் முன் 2 வது ஆள்
யூ சீ மிஸ்டர்..... வாட் இஸ் யுவர் நேம் ? (இதுக்கு நடுவில் சத்தத்தில் எனது நண்பனும் வந்துவிட்டான்)
அதுக்கு அப்புறம் வந்த புண்ணியவான்கள் 2 பேரும் எதோ மிஷனரியில் இருந்து வருவதாகவும் இதற்க்கு முன் இந்த வீட்டில் இருந்தவன் இந்த கூட்டத்தில் ஒருவன். எனவே அவனை பார்க்க வந்ததாகவும் அவன் எங்கே என்று என்னை கேட்டான் மற்றவன்.
நான் இந்த வீட்டில் கடந்த 6 மாத காலமாக இருக்கிறேன். அப்படி யாரும் எனக்கு தெரியாது. இதுக்கு முன்னால் இருந்தவனை பத்திய மேல் தகவல்களுக்கு ரியால்ட்டி ஆபீஸ் அக்காமார்களை போய் பாத்துக்கோ. என்னை ஆளை விடு என்று கூறினேன்.
வந்தவர்கள் ஒரு முடிவோடு வந்த மாதிரி இருந்தது. மறு உலகம், பக்திமார்க்கம், யேசுவின் வருகை, ஹிண்டு ரிலிஜியன்னுக்கும் & கிறிஸ்டியானிட்டிக்கும் உள்ள கருத்து ஒற்றுமை வேறுபாடு, பைபிள், பகவத் கீதை அது இது என்று ஒரு 20 நிமிட சிற்றுரையை ஆத்தி விட்டு ஒரு புத்தகத்தை கொடுத்தார்கள்.
அவர்கள் இருவரும் அடுத்த வாரம் வந்து இது பற்றி மேலும் விரிவாக எடுத்து கூறி எங்களை மறு உலக பயணத்துக்கு தயார் படுத்தும் கடமையில் இருப்பதாக கூறியவுடன் எனக்கு அது வரை இருந்த கொஞ்ச தூக்கமும் போய் விட்டது.
அவர்கள் போனபின் இன்றைய நாள் நன்றாகவே இருந்தது. சிவராத்திரியை முன்னிட்டு கோவிலுக்கு சென்றேன். மாலையில் நண்பர்கள் வீடு, கீழ்நகரம், இந்தியா ஷாப்பிங்க் என்று நாள் முழுவதும் அலைந்தாலும் எப்போதும் கரகாட்டகாரன் படத்தில் கவுண்டமணி செந்திலை பார்த்து அது என்டா அந்த கேள்வியை என்னைய பார்த்து கேட்ட? என்பது போல ஆறு மாசத்துக்கு முன்னால் காணாமல் போன எவனோ ஒருத்தன் இல்லை என்று தெரிந்த பின்னும் முன் பின் தெரியாத தூக்கத்தில் இருந்து எழுந்த ஒருவனை மனசாட்சியே இல்லாமல், இப்படி மொட்ட பிளேடு போட முடிகிறது? என் இன்று நான் அவர்கள் கையில் மாட்டிகொண்டேன்?
Labels: சொந்த கதை