Thursday, June 22, 2006

கவிதையும் நானும் ::




















ஈ வேசவி சாலா சல்லகா உன்டுந்தி :-)

Monday, June 19, 2006

நண்டு கதை - சில கேள்விகள்

வெங்கட்ரமணி சார் ஒரு சிறுகதையை சொல்லி இருக்குறார்.. இந்த நண்டு நீதி கதையில் சில கேள்விகள் எனக்கு தோன்றியது.. இந்த பதிவு ஒரு கமென்ட் அளவுக்குத்தான் இருந்தாலும் அங்கேயே கமென்ட்டாக போடாமல் ஒரு தனி பதிவு கணக்கு ;-)

கேள்விகள்

1) முதல்ல எத்தனை தமிழ் நண்டுகள் கூஜாவில் இருந்தன ?


2) முதலில் எந்த நண்டு எதனால் வெளியே வர முயர்ச்சி செய்தது ? அதை எந்த நண்டு அதன் காலை பிடித்து இழுத்தது ? ஒரு நண்டு இழுத்ததா ? இல்லை ஒரு கூட்டமாக சேர்ந்து இழுத்ததா ?


3) அடுத்த நண்டு தனியாக வர முயர்ச்சி செய்த்ததா ? இல்லை கூட்டமாக வெளியே வர முயர்ச்சி செய்த்ததா ? அதை எந்த நண்டு அதன் காலை பிடித்து இழுத்தது ? ஒரு நண்டு இழுத்ததா ? இல்லை ஒரு கூட்டமாக சேர்ந்து இழுத்ததா ?


4) 2 வது & 3 வது கேள்விகள் ரீவிட் சே ரீபிட்டு..எத்தனை நண்டுகள் இருந்ததோ அத்தனை நண்டுகளுக்கும் ஹி ஹி..


5) நண்டுகள் ஒரு குழுவாக இருந்தால் அதன் குழு மனபான்மை பற்றி எதற்க்கு ஒரு வார்த்தை கூட இந்த கதையில் சொல்லவில்லை.. வாழ்க குழு மனபான்மை..


5 அ) எதாவது நல்ல கருத்துகள் எந்த குழு நண்டுகளால் சொல்லபட்டாலும் எப்படி மற்ற நண்டுகள் வாய் வலிக்காமல் எதிர் கருத்துகளை சொல்லி கொண்டே இருக்க முடிகிறது. இது தமிழ் நண்டுகளின் தனி தன்மையா / இல்லை வாங்கி வந்த வரமா - சாபமா ?


6) மத்த நண்டுகள் எல்லாம் வெளியே சென்றதால் கூஜாவுக்குள்ள எதாவது புது நண்டுகள் வந்ததா ? ஆம் என்றால் எத்தனை ஹி.. ஹி..


7) அப்படி வந்த நண்டுகள் எட்டி பார்க்கும் போது தெரியாமல் வழுக்கி விழுத்த நண்டுகளா ? இல்லை உள்ளே வந்து இருப்பதை மேலும் ரணகளப்படுத்தவா ?


8) இல்லை இருக்கும் சண்டையை சரி செய்யவா ? இந்த நண்டுகளின் தற்போதைய நிலை என்ன ?


9) இந்த நண்டுகளின் சண்டைகளை வேடிக்கை பார்க்கும் நண்டுகள் எத்தனை.. அவற்றின் மன நிலை என்ன ?


10) எப்பத்தான் இந்த நண்டுகள் சண்டை முடியும் ?


இன்னும் சில கேள்விகள் இருந்தாலும், இப்போதைக்கு இது போதும் .. கடைல கடமை அழைக்கிறது..

Friday, June 09, 2006

வ.வா.ச தொண்டனின் பதில்

நான் இந்த பதிவை எழுதுவது ஒரு பொறை கடையிலிருந்து, ஆகவே இங்கு ஓடும் பாட்டுக்களும், வசனங்களும் எனது பதிவில் தெரிந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.

***

வ.வா. சங்கத்தின் மிக முக்கியஸ்தரான அக்கா ஆற்றலரசி பொன்ஸ் அவர்கள் சங்கத்துக்கு வந்ததாக கூறப்படும் ஒரு கடிதத்துக்கு பதில் சொல்லும் பதிவில், நான் இதுகாறும் அரசியல், பொது வாழ்வு, மக்கள் தொண்டு, இலக்கிய பணி, உருவாக்க சிந்தனை, பொருளாதார மேம்பாடு, இன்னும் என்னிலடங்காத்துறைகளில் நான் பெற்றிருந்த இடத்தை ஒரே நாளில் புல்டோசர் கொண்டு இடிக்கும் விதத்தில் இருப்பதாக சங்கத்தின் சில முக்கியஸ்தர்கள் கருதுவதால், இந்த அறிக்கையை சங்கத்தின் தூண் என்று சொன்னாலும் கூட சங்கபலகையில் இடம் / அனுமதி மறுக்கபட்ட நிலையில் நானே எனது சொந்த செலவில், எனது சொந்த ஊடகத்தில் வெளியிடும் கட்டாயத்துக்கு தள்ளபட்டுள்ளேன்.

ஓராயிரம் ஆண்டுகள ஆகட்டுமே !
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே !

பகுத்தறிவு பிறப்பதெல்லாம் கேள்விகள் கேட்பதானாலே

***





காய்ந்து போன பிட்சா, பர்கர், சூடான நாய் தான் உணவு என்று வருத்ததுடன் கூறும் அக்கா அவர்கள், கடந்த மாதம் மெக்டி பில் தொகையாக சில மில்லியன்களை சங்க நிதியிலிருந்து அடைத்தது ஏன் ?

வந்ததாக கூறப்படும் அந்த கடிதத்தின் ஒரிஜினல் எங்கே ?. அதிலிருந்தது அக்கா அவர்களின் கையெழுத்தை போலவே இருந்தது எனறு கூறப்பட்ட அந்த முக்கிய ஆவணங்கள் எங்கே ?

எனக்கு கொடுக்கபட்டுள்ள புதிய பெயரின் முன்னால் உள்ள அடைமொழியின் புரிதல் என்னவென்று விளக்கவேண்டும் என்ற எனது கோரிக்கை காற்றிலே கரைந்து போன மாயம் என்ன ?

கணக்கு கேட்கும் தலமையே "கண்களைத் திறந்து பார்..கண்ணாடியைத் துடைத்துப் போட்டுப்பார்.." என்று தனி மனித தாக்குதலில் இறங்கியது ஏன் ? சங்கத்தின் சிங்கங்கள் எல்லாம் கொள்கைகளால் கட்டுண்ட இமயங்கள் என்ற உண்மையை மறந்து தனது புதரக பயணத்தினால்தான் என்று தனி மனித புகழில் இறங்கியது ஏன் ?

வெண்பா என்று ஒரு பாடத்தை நடத்தி தமிழ் பரீட்சைக்கே பிட் அடித்த தல கைப்புவை நொந்து போக வைத்தது, எதிர் கட்சிகளின் தூண்டுதலினால்தானா என்ற நியாயமான கேள்விக்கு பதில் எங்கே ?

புதரகத்தில் தனியொருவானாக இட்லி செய்வது எவ்வளவு கடினம் என்று அறிந்திருந்தும், தோசை மட்டுமே சுடும் பேராசிரியர் என்று எள்ளி நகையாடுவது ஏன் ?

அனைத்திலும் மேலாக இவ்வாறு கேள்விகள் கேட்டால் நான் எதிர் கட்சிக்கு தாவிடுவேன் என்று தலமையை மிரட்டுவது எந்த வகை நியாயம் ?

Sunday, June 04, 2006

கால்பந்தாட்டாம் நினைவுகள் - 4

பாகம் 1, பாகம் 2, பாகம் 3



சில முக்கிய நினைவுகள்

FIFA அமைப்பானது விளையாடும் நாடுகளை 24 லில் இருந்து 32 ஆக உயர்த்தியது.ஆனால் ஒவ்வொரு குழுவிருந்தும் முதல் 2 இடங்களுக்குள் வரும் டீம்கள் மட்டுமே அடுத்த ரவுன்டுக்கு அனுமதிக்கபட்டன..

இந்த சிரீஸில் மிக அருமையாக விளையாடி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவர் Croatia வின் Davor Suker.

பிரான்ஸின் டீம் மேனஜர் சாலிட் டீம்மை அமைத்திருந்தார்.. இந்த சிரீஸ் முழுவதும் பிரான்ஸ் 2 கோல்களை மட்டுமே பெற்றது.. இதற்க்கு Defense எவ்வளவு முக்கியம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இதில் லின்க்ஸ் மேன் ஆக செயல் பட்ட எனது Thuram பேவரெட் :-) . தல Zizou பத்தி சொல்லவில்லை என்றால் நான் தல விசிறி என்று சொல்லுவதில் அர்த்தம் இல்லை.. தல மாதிரி பால் கன்ட்ரோல் பண்ணுறது அப்போது / இப்பொதும் யாருமே இல்லை. தல பத்தி எனக்கு ஒரே ஒரு டவுட்தான் இருந்தது.. யுவன்டஸில் இருந்த போது Heading இல் சில முக்கியமான கட்டத்தில் சொதப்பி இருக்குறார்.. ஆனா பைனலில் தல அடிச்ச முதல் 2 கோல் சிம்பிளீ சூப்பரப்பு..

பிரேசில் டீம் Ronaldo-Romario கூட்டணிய நம்பியது.. ஆனால் Romario வின் Injury அவரை வரவிடாமல் தடுத்துவிட்டது.. என்னுடைய தனிபட்ட கருத்தில் Ronaldo ஒரு சில மேட்ச்சில் மட்டுமே நன்றாக விளையாடினார். ஆனால் Rivaldo and Bebeto அப்படி இல்லை..

இங்கிலாந்தின் அர்ஜென்டினாவுக்கு எதிரான மேட்ச்சில் தனி ஆளாக Micheal Owen அடித்த கோல் வாவ் என்று சொல்ல வைத்தது.. ஆனால் அதே மேட்ச்சில் பெக்காம்மை Red card காட்டி வெளியேறியது சரியான முடிவு..

இந்த சிரீஸ் முழுவதும் 22 பேர் கார்ட் வாங்கினார்கள். கேமரூனின் Rigobert Song 2 முறை வெளியேற்றபட்ட Red card பெருமையை பெற்றார்.

***

முதல் ரவுன்டில்

ஸ்காட்லான்ட்க்கு எதிரான இந்த மேட்ச்சில் Ronaldo நன்றாக விளையாடினார்.



கேமரூனுக்கு எதிரான இந்த மேட்ச்சில் Christian Vieri விளையாடிய விதத்தை பார்த்து மற்றுமொரு Paolo Rossi இத்தாலிக்கு கிடைத்துவிட்டார் என்று மீடியாகள எழுதின :-). இத்தாலி 3 - 0 என்ற கணக்கில் வென்றது



South Africa க்கு எதிரான இந்த மேட்ச்சில் Thierry Henry அடித்த கோல சூப்பர். Thierry Henry அப்பொழுது புதுமுகம் முதல் ரவுன்டு முழுவதும் பிரான்ஸ் 9 கோல் அடித்து உலககோப்பையை வெல்லும் முயர்ச்சியில் நாங்களும் இருக்கிறேம் என்று சொல்லியதை நம்ப வேண்டியதாயிற்று..



Saudi Arabia க்குஎதிரான இந்த மேட்ச்சில் பிரான்ஸ் 4 - 0 என்ற கணக்கில் வென்றது.. இந்த மேட்ச்சில்தான் Zizdane Red card காட்டபட்டு வெளியேற்றபட்டார். Bixente Lizarazu அடித்த 4 வது கோல் இது.



Andoni Zubizarreta Spain (goal keeper) seconds after making a schoolboy error against Nigeria which would cost Spain dearly in the end. "Zubi" steered a cross from the right into his own net. The Africans ran out 3-2 winners in this entertaining match.




Davor Suker gets the winning goal for Croatia against Japan thirteen minutes from time with a trademark finish from inside the penaltybox.



Gabriel Batistuta celebrating one of his three goals against Jamaica. Batigol became the first man in World Cup history to score a hat-trick in multiple tournaments.



****

2 - வது ரவுன்டில்

Laurent Blanc (france) finally finds a way through the brave Paraguayan defence to score with a nice volley. 113 minutes on the clock and France escaped the frightening scenario of facing Chilavert in a penalty shoot-out where all the pressure would have been on the hosts.



Michael Owen (England) has just scored his famous solo-goal against Argentina and England are 2-1 up already after fifteen minutes. Beckham joins in the celebration.



Disaster for England. Referee sends off David Beckham for his clumsy challenge on Diego Simeone. Gary Neville (12) knows the task of winning is even tougher now.



"...Pearce, Waddle, Ince. Don't join them......He has joined them". David Batty's weak attempt is saved by Carlos Roa and Argentina are through to the quarterfinals.



Alessandro Del Piero shielding the ball against Norway's Dan Eggen. The game ended 1-0 to the Italians.




கால் இறுதியில்


Robert Jarni puts Croatia one nil up with this strike from long range against Germany in the quarterfinal. The Germans were down to ten men when Wörns was harshly sent off for a foul on Suker before this goal was scored. They failed to recover and lost 3-0 in the end.



Ariel Ortega(Argentina) is sent off for head-butting the Dutch Goal keeper . It was a clumsy and unnecessary action from the little wizard who had played remarkably well throughout the tournament.



Oh boy not again for God sake.....Italy out of the World Cup on penalties for the third time in a row. This time to France. Roberto Baggio was a member of all those teams, but scored in this shoot-out. Demetrio Albertini (on the ground) missed his attempt.



Rivaldo(Brazil) emerged as one of the most entertaining players in the World Cup. He scored the matchwinning goal in this quarterfinal against Denmark with a long range effort.



அரை இறுதியில்

Laurent Blanc(France) was sent off for pushing Slaven Bilic in the penalty area before a corner. The referee read it as a knock in the face which Bilic made it look like when he fell to the ground as if Mike Tyson had slaughtered him.



Zinedine Zidane with perfect control despite Croatia's Mario Stanic attempt of tackling him. Zizou was world class in the latter stages of the tournament.



Lilian Thuram had never previously scored for France before he scored twice in the semifinal against Croatia. He looks as if he still can't believe it.



***

இறுதி போட்டி

Rivaldo(Brazil) failed to connect well with Bebeto and Ronaldo in the final. Here challenged by Djorkaeff(France).



Barthez(France) and Ronaldo(Brazil) crashing into eachother in the final. Brazil found no way through the French defensive wall.



Zinedine Zidane outjumps Leonardo and heads France in front in the final. Zizou was never regarded as a particularly good player in the air, but having scored two headed goals in the final most people had to reconsider that.



Marcel Desailly is sent off for this bad foul on Cafu in the final. Even with one man more on the field, Brazil were unable to threaten the French in the second half.



Emmanuel Petit races clear to score France's third goal in the dying seconds of the match. 3-0! Cafu and Taffarel know the game is over. The day belongs to Petit and France. The largest winning margin in a World Cup final since Brazil themselves outplayed Italy in 1970.





Heavily criticized before the World Cup, coach Aime Jacquet now had his time of revenge. Here carried around the field holding the cup aloft.



France 98 Team Picture
Back row from left: Zidane, Desailly, Leboeuf, Thuram, Guivarc'h and Petit. Front row from left: Karembeu, Djorkaeff, Deschamps, Barthez and Lizarazu.




* இங்கு இருக்கும் ஆங்கில வார்த்தைகள்தான் நான் நினைத்தது.. ஆனால் அதை அப்படியே தமிழில் கொண்டு வரமுடியாததால் அப்படியே ஆங்கிலத்தில் இட வேண்டியதாயிற்று.

யோசிச்சிதான் பேசுறாங்களா ?

மேட்டர் என்னன்னா நேத்தோ இல்ல இன்னைக்கோ தமிழர்களின் பாசறையாம் சென்னை பட்டனத்தில், பகுத்தறிவு டிப்போவில் கிட்டத்தட்ட 50 - 60 வருசங்களாக அண்டா அண்டாவாக பகுத்தறிவு பாலை குடித்த பின்னும் எதுவும் சிந்தாமல் இருப்பதற்க்காக அதை சேர்ந்து வைக்க மஞ்சள் துண்டு போட்டிருக்கும் பகலவன் நேத்து கண்ணகி சிலைய தொறந்து வைச்சி இருக்குறார் - இது செய்தி

***

வைரமுத்து

"கண்ணகி சிலை வெறும் உலோகம் இல்லை, எங்கள் உலகம்"

சரி கரெகட்டு !

"தலைவிரி கோலத்துடன் கண்ணகி சிலை இருப்பது சென்னை நகரத்திற்கும் தமிழகத்திற்கும் அபசகுணம் என்பதால் அகற்றப்பட்டதாக கூறப்பட்டது"

சரி மைக்கை புடிச்சிட்டிங்க ! முழுங்காம வுடமாடிங்க! அதுனால இதையும் பொறுத்துகிடுறோம் (ஹி ஹி இந்த காமெடிக்கே அசந்துட்டா எப்படி !)

"கண்ணகி சிலை அகற்றப்பட்ட பிறகு தான் வங்கக்கடல் சீறி சுனாமி வந்தது"

எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இந்தோனேஷியாவுல பூமி லைட்டா ஷேக் ஆனதுனால அதோட தொடர்ச்சியா அது தமிழ் நாட்டையும் தாண்டி ஆடிட்டுத்தான் நின்னுச்சி. ஒருவேளை சிலை அங்க இருந்திருந்தா அந்த சிலை என்ன டிராபிக் போலிஸ் மாதிரி சுனாமிய திருப்பிவிட்டு இருக்குமா ?

இதுதான் அண்ணன் பேசுனதுலயே டாப் காமெடி.. இங்க எத்தனை ஸ்மைலி போடுறதுன்னே எனக்கு தெரியல.. படிச்சிட்டு சிரிப்பா இருக்கு காலைல இருந்து.. முடியலப்பா.



***


1)இது தவிர கண்ணகி பாண்டிய மன்னன் செய்த குற்றத்திற்க்கு அவனையும், அந்த குற்றம் சம்மந்தபட்ட அனைவரையும் கொன்ற பிறகும், எந்த பாவமும் செய்யாத குடிகளையும் கொன்றது எந்த வகை நியாயம் ?

2) பாண்டிய மன்னன் செத்தவுடன் அவனின் மனைவியும் செத்துபோய்ட்டங்க.. அப்படி இருந்தும் யாரும் அவங்களை கண்டுகொள்ளடவில்லை

3) கோவலன் மாதவி பின்னாடி போன போதெல்லாம் ஒண்ணும் செய்யாமல், சொத்து, பணம், மானம் இவை எல்லாம் இழந்த போதும் கோவலனை கண்டிக்காமல் கண்ணகி சும்மா இருந்தது ஏன் ? . இப்படி பட்ட பிற்போக்கு சிந்தனைகளோடுதான் பெண்கள் இருக்கவேண்டும் என்று சொல்லுகிறார்களா ?

இப்படிபட்ட கண்ணகிக்கு எதுக்கு கற்பின் மறு உருவம், அப்படி இப்படின்னு வேண்டாத பில்டப்பு கொடுக்கிறார்கள்

Saturday, June 03, 2006

நினைவுகள் கால்பந்தாட்டம் - 3

பாகம் - 1 , பாகம் - 2




கால்பந்தா ? எங்களுக்கு தெரியாதா என்ன ?.. ஒரு 10 பேரு கிளாடியேட்டர் மாதிரி டிரஸ் போட்டுகிட்டு மூஞ்சுறு முகம் மாதிரி இருக்குற பந்தை எடுத்துகிட்டு ஒரு கோட்டை பாத்து ஓடும்போது, அடுத்த பக்கம் இருக்குற 10 பேரும் 'மாப்பிள்ள.. அவன் தான்டா, அமுக்குடான்னு சொல்லிகிட்டு மடக்கி அவன் மேல அம்முவாங்களே' அந்த விளையாட்டுத்தானே என்று சரியாக தப்பா சொல்லும் அமெரிக்காவில்தான் 94 உலக கோப்பை நடந்தது..

எங்க எல்லா மேட்ச்சும் காத்தாட போகுது ! இதுதான்டா FIFA World cup சூப்பர் பிளாப் அப்படின்னு சொன்ன / நினைத்த எல்லாரும் அது தப்பு அப்படின்னு கடைசில ஒத்துகொண்டார்கள்.. (மேட்ச் ஒன்றுக்கு 70000 பேர் - சராசரியாக - இதை நான் படித்த நினைவுகளிலிருந்து எழுதுகிறேன்.. தவறாகவும் இருக்கலாம்.).

இந்த துவக்க உரையாற்றி ஆரம்பித்து வைத்தவர் உலக அண்ணாத்தே ரசீது அவர்கள் - Bill Clinton :-) . அப்ப பார்க்கும் போது இன்னும் ஸ்லிம் ஆக இருந்ததாக ஞாயபகம்..

***

இந்த சீரிஸில் சில முக்கிய நினைவுகள்


தல Diego Maradona banned substance உபயோகித்தார் என்று சொல்லி, அவரை இனி வரும் ஆட்டங்களிலிருந்து விலக்கியற்க்கு முன்னர் நைஜிரியா உடன் ஆடிய மேட்ச்சில் Maradona வின் தனிதிறமை பார்த்து நான் அதிர்ந்தது உண்மை..82 , 86 பார்த்த மாதிரியே இருந்தது. கால் பந்து போன்ற Higly demanding விளையாட்டில் 12 வருடங்களாக அதே கன்சிஸ்டன்ஸி காட்டுவது எல்லாருக்கும் வராது.. நான் மதிக்கும் Gabriel Batistuta, juan sebastian veron, Ariel Ortega போன்ற பல வீரர்கள் இருந்தும் Diego Maradona இல்லாத அதிர்ச்சியில் யாருமே சரியாக விளையாடவில்லை என்பதே உண்மை :-(

Back pass என்று சொல்லபடும் முக்கிய ரூல கொண்டு வரப்பட்டது இன்ஸ்டன்ட் சக்சஸ்தான்.. இந்த ரூல் அழுகுனி ஆட்டம் ஆடும் Defender களை நிறைய attacking கேம் ஆடும்படி நிர்பந்தம் செய்தது.. ஆட்டத்தின் விறுவிறுப்பும் கூடியது :-)

ஜெர்மனி டீமில் எல்லாரும் கிழட்டு சிங்கங்கள் ஆகியிருந்தார்கள் அல்லது விளையாட தெரியாத சின்ன பசங்களா இருந்தார்கள். எனக்கு தெரிந்து அந்த டீம் குவாட்டர் பைனலில் வெளியேறபோது Klinsmann கிரவுன்டில் அழுதது மனதை தைத்தது.



ரஷ்யாவின் Oleg Salenko 5 கோல் அடித்தும் அது அவரின் தனிப்பட்ட ரெக்கார்ட்டை வளர்க்க மட்டுமே உதவியது..




நம்ம கேமரூனின் சிங்கம் Roger Milla தனது 42 வது வயதில் கடைசி முறையாக ரஷ்யாவுக்கு எதிரான மேட்சில் 1 முறை கர்ஜித்தது..



சவுதி அரேபியாவின் Saeed Owairan பெல்ஜியத்துக்கு எதிரான மேட்ச்சில் தனியாக அடித்த 1 கோல் சூப்பர்.

இந்த சீரிஸில் 2 சூப்பர் ஸ்டார்கள் 1)Roberto Baggio (Italy) & 2) Romareio & Bebeto (Brazil) இதில் Romareio வுக்கும் டீம் மேனஜருக்கும் ஒத்து வராது..FC Barcelona இல் Romareio தான் கீ பிளேயர் அப்போது.





குவாட்டர் பைனலில் நடந்த ஹாலந்து - பிரேசில் மேட்சில், Branco ப்ரீ கிக்கில் அடித்த கோல் சூப்பர்.

70-பதுகளுக்கு பிறகு, பிரேசில் ஜெயித்த உலககோப்பை இது.. செமி & பைனல் மேட்ச்சில் பிகிலு ஊதுபவர் ஒரு தலை பட்ச்சமாக நடந்தது வேறு இதற்க்கு உதவியது.

சுவீடனின் Dahlin, Brolin and Andersson கூட்டணி மிகவும் நன்றாக விளையாடியது,அந்த டீமிற்க்கு வெண்கல பதக்கத்தை பெற்று தந்தது.. குறிப்பாக பல்கேரியாவும் சுவீடன்னும் விளையாடிய அந்த கடைசி மேட்ச் சிம்பிளி சூப்பர்..

***

முதல் ரவுண்டில்


பிரேசிலின் Legend Dr Socrates - Mid fielder இன் தம்பி Rai கேமரூனுக்கு எதிரான மேட்ச்சில் - ஆனால் இவர் ஒரு Substitute மட்டுமே.



கிரீஸ்க்கு எதிரான இந்த மேட்ச்சில் கோல் அடித்த மகிழ்ச்சியில் Diego Maradona.. இதுவே உலககோப்பையில் Maradonaஅடித்த கடைசி கோல். A beautiful left-footed shot from outside the penalty area.



நைஜிரியாவுக்கு எதிரான இந்த மேட்ச்சில் தல Diego Maradona காட்டிய ஜிம்மிக்ஸில் நானெல்லாம் திறந்த வாயை மூடாமல் :-), ஆடாமல் அசையாமல் இருந்தேன். 15 வருடங்களாக தனது தனிதிறமையால் கால்பந்து ரசிகர்களை கட்டிபோட்டு வைத்திருந்த Diego Maradona க்கு இது ஒரு சோகமான முடிவு..



பல்கேரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் Diego Siemeone, Disgraced captain Diego Maradona இல்லாமல். இந்த ஆட்டத்தில் பல்கேரியா 2 - 0 என்ற கணக்கில் வென்றது



அயர்லாந்திடம் ஆப்பு வாங்கிய பிறகு Dino Baggio (blue shirt far right) அடித்த இந்த 1 கோலின் காரணமாக இத்தாலி அடுத்த ரவுண்டுக்கு சென்றது.. இந்த மேட்ச்சில் இத்தாலி 10 பேருடனே விளையாடியது.





2- வது ரவுன்டில்


ருமேனியாவுக்கு எதிரான ஆட்டத்தில் Gabriel Batistuta . இந்த மேட்ச்சில் ருமேனியா 3 ௨- 2 என்ற கணக்கில் வென்றது.



அமெரிக்காவுக்கு எதிரான இந்த மேட்ச்சில் Leonardo பவுல் செய்து வாங்கிய போது.. பிரேசில் வெற்றி பெற்றது. ஆனாலும் அமெரிக்கா ஒரு பாதி வரை நன்றாகவே விளையாடியது.



நைஜிரியாவின் கொடுத்த Rasheed Yekini(center-forward ) டார்ச்சரில் இத்தாலி டீமில் Paolo Maldini தவிர எல்லோருமே திணறினார்கள்.




காலிறுதியில்


Roberto Baggio அடித்த இந்த கோல் ஸ்பெயினுக்கு ஆப்படித்து வெளியேற்ற போதுனதாக இருந்தது.. Roberto Baggio தான் ஒவ்வொரு மேட்ச்சிலும் வின்னிங் கோல் அடித்தார். அதாவது கடைசியில் சொதப்பும் வரை :-(



ஹாலந்துக்கு எதிரான இந்த மேட்ச்சில் Bebeto இந்த கோலை அடித்ததையே முதலில் ஒத்துகொள்ள முடியாது. அப்போது Romario offside இல் இருந்தார். பிகிலு ஊதுபவர் பொட்டி வாங்கிடார் என்றே எல்லொரும் சொன்னார்கள்



ஆனால் Branco அடித்த இந்த Free kick கோல் சூப்பரப்பு :-)



ஜெர்மனி டீம்மை மொத்திய மகிழ்ச்சியில். இதற்க்கு முன்னால் பல்கேரியா உலக கோப்பை மேட்ச்சில் ஒன்றில் கூட வெற்றி பெற்றது கிடையாது.




அரையிறுதியில்

பல்கேரியாவுக்கு எதிரான இந்த மேட்ச்சில் Roberto Baggio 2 கோல் அடித்தார்.முதல் ரவுன்டில் சரியாக விளையாடத போது அவரை மீடியாக்கள் ரவுன்டு கட்டி கிழித்தது வேறு கதை.



இத்தாலியின் Iron wall of defense நோ கமென்ட்ஸ். பாவம் Emil Kostadinov (Bulgeria)



டே வர்ரான்டா.. சுத்துடா அவனை !.. இந்த மேட்ச்சில் Romarioவை இப்படித்தான் சொல்லி வைத்து ரவுன்டு கட்டினார்கள் சுவீடனின் வீரர்கள்



இந்த சிரீஸ் முழுவதும் சுவீடனின் Tomas Brolin நன்றாக விளையாடினார் என்று சொன்னால் அது சாதாரண வார்த்தையாக இருக்கும்.. Tomas Brolin was one of the best players in the World Cup and appeared on many Best XI's after the tournament.



விளையாட்டின் 80 வது நிமிடம் சுவீடனின் வீரர்கள் அசந்த நேரம் Romario அடித்த மேட்ச் வின்னிங் கோல்




இறுதியில்

இந்த மேட்ச்சில் Romario க்கு சிறிதளெவே வாய்பளிக்கபட்டது.. அதை திறமையாக செய்த்தது இத்தாலியின் Defense டீம்



Franco Baresi clears away the ball before Romario. The Italian captain played the game of his life in the final. He got injured in a first round match and missed every game leading up to the final, but in the final itself Baresi proved to be the classy defender everyone knew he was.



Roberto Baggio followed closely by Cafu. The quality of defensive play was extremely high in the final, and Baggio wasn't the only attacker who had problems.



The moment of truth. Roberto Baggio fires his penalty over the bar in the shoot-out and Brazil are the new world champions.

பெனால்ட்டி -ஷாட்டுக்கு முன்னால்





Roberto Baggio and Franco Baresi with silvermedals. Both had played outstanding throughout the tournament, but missed in the penalty shoot-out.




பிரேசில் டீம் - 94


நிற்பது (இடமிருந்து வலம்): Taffarel, Jorginho, Aldair, Mauro Silva, Marcio Santos and Branco.அமர்ந்திருப்பது(இடமிருந்து வலம்): Mazinho, Romario, Dunga, Bebeto and Zinho.




* இங்கு இருக்கும் சில ஆங்கில வார்த்தைகள்தான் நான் நினைத்தது.. ஆனால் அதை அப்படியே தமிழில் கொண்டு வரமுடியாததால் அப்படியே ஆங்கிலத்தில் இட வேண்டியதாயிற்று.