Monday, May 29, 2006

நினைவுகள் - கால்பந்தாட்டம் - 2

பாகம் 1

இதை போன பதிவிலேயே எழுதி இருக்க வேண்டும்.. மறந்து விட்டேன்..சில விஷயங்களின் மதிப்பு அர்ஜென்டினாவில் குறைவதே இல்லை என்று நான் போன வருடம் சந்தித்த அர்ஜென்டினிய தோழி சொன்னது இந்த படம் குறித்துதான்..***

Italia 90
இத்தாலி நடத்திய முதல் உலக கோப்பை இது.. இந்த சீரிஸில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்

கேமரூனின் ஆப்ரிக்க சிங்கங்கள் தந்த Royal Treatment ஐ வாங்கிய டீம்கள் அர்ஜென்டினா, ருமேனியா, கொலம்பியா. 38 வயதான Roger Milla(semi-retired) substitute ஆக இறங்கி ருமேனியாவுக்கு எதிரான் மேட்சில் 3 நிமிடந்தில் அடித்த 2 கோல்கள் சிம்பிளி சூப்பர் என்றுதான் சொல்லவேண்டும்.. Roger Milla தான் கோல் அடித்தவுடன் மைதானத்தின் கார்னரில் நின்று டான்ஸ் ஆடும் பாரம்பரியத்தை ஆரம்பித்து வைத்தார் என்று நினைக்கிறேன்..

குவாட்டர் பைனலில் நடந்த இங்கிலாந்து - கேமரூன் மற்றும் செமி பைனலில் நடந்த ஜெர்மனி - இங்கிலாந்து இடையேயான மேட்ச்கள்

தென் அமெரிக்காவின் 2 சிங்கங்கள் அர்ஜென்டினா - பிரேசில் சந்தித்த மேட்ச்.. Maradona-Caniggia கூட்டணியே பிரேசிலை வெளியேற்ற போதுனாதாக இருந்தது..

சீரிஸில் அதிகம் கார்ட் வாங்கியது அர்ஜென்டினா டீம். 22 மஞ்சள் 3 சிகப்பு.. சீரிஸ் முழுவதும் Maradona எப்பொழுதும் 5 பேர்களால் கவர் செய்யபட்டிருந்தார்.. இது போக அவர் டீம்க்காக பிகிலு அண்ணணிடம் எப்போதும் பேச வேண்டியது வேறு..இதை தாண்டி விளையாடுவதே அரிதாக இருந்தது.இதை தாண்டி விளையாடுவதே அரிதாக இருந்தது.
தமிழ்மணம் போல உள்குத்துகள் இல்லாமல், நேரடியாகவே கமென்ட்களையும் அடிதடிகளையும் அதிக அளவில் பார்த்தது இந்த சீரிஸ்.

சீரிஸில் மொத்தம் 16 பேர் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றபட்டனர்.. இதில் பைனல் மேட்ச்சில் முதலில் சிகப்பு அட்டை காட்டபட்டு வெளியேறிய பெருமை பெற்றவர் அர்ஜென்டினாவின் Pedro Monzon, 5 நிமிடத்தில் பின்னால் வந்து கம்பெனி கொடுத்தவர் Dezotti. பைனனில் அர்ஜென்டினா 9 பேருடன் விளையாடியது.


பிரேசில் அதிக அளவில் five out-and-out defendersகளை பயன்படுத்தியது. Its an irony that most teams played to avoid losing rather than to win. This was especially evident in the knock-out stage, when half the matches went to extra-time and/or penalties.

எப்படி அப்பா இப்படி எல்லாம் பண்ணுறாங்க என்று நான் அடிக்கடி கேட்டவர்கள் கொலம்பியாவின் கேப்டன் Carlos Valderrama & ஒரு செத்த கடின விசிறி..

முதல் ரவுன்டில்

Biyick கோல் அடிக்கும் காட்சிUSSRக்கு எதிரான மேட்சில் கோல்கீப்பர் Nery Pumpido காலை உடைத்துகொண்ட காட்சி..sustitute ஆக வந்த Sergio Goycoechea சீரிஸின் சிறந்த கோல்கீப்பர் ஆக தேர்வு செய்யப்பட்டர்ருமேனியாவுக்கு ஆப்படித்த சிங்கம் Roger milla வெற்றி களிப்பில்
சிக்குனான்டா என்று வந்த சான்ஸில் மேற்கு ஜெர்மனியின் Rudi Völler யூகோஸ்லோவியாவுக்கு எதிரான மேட்சில் 4- 1 கோல் அடித்து வென்ற காட்சி

இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையே நடந்த மேட்சின் போது..2- வது ரவுன்டில்

பிரேசிலை ஜெயித்த போது Maradona.Caniggia அடித்த ஒரு கோலே போதுமானதாக இருந்தது. இந்த மேட்சில் Maradona பிரேசிலின் Out a & out 5 defender களால் கவர் செய்யப்பட்டிருந்தார்..
கொலம்பியாவுக்கு எதிரான மேட்சில் கேமரூனின் Roger MIlla

இந்த படத்தில் இருக்கும் ஹாலந்தின் Frank Rijkaard ம் ஜெர்மனியின் Rudi Völler ம். இந்த மேட்ச் முழுவதும் பங்காளிகள் போல சண்டையிட்டு கொண்டே இருந்தனர்.. இந்த படம் எடுத்த அடுத்த வினாடியில் Frank Rijkaard, Rudi Völler ன் முகத்தில் துப்பியதால் வெளியேற்றபட்டார். Rudi Völler க்கும் 2 வது மஞ்சள் அட்டை காட்டபட்டு வெளியேற்றபட்டார்

கால் இறுதியில்

இத்தாலிக்கும் அயர்லாந்துக்கும் இடையே நடந்த போட்டியில் கோல அடித்த வெற்றி களிப்பில் Salvatore Schillaci. இந்த சீரிஸில் மிக அருமையாக விளையாடியவர்.கேமரூன்க்கு எதிரான மேட்சில் ஜெயித்த போது Paul Gascoigne .. இந்த சீரிஸ் முழுவதும் இங்கிலாந்து எல்லா மேட்சிலும் உயிரை குடுத்து விளையாடியே ஜெயிக்க முடிந்தது..
அரையிருதியில்


அர்ஜென்டினா - இத்தாலி.. அர்ஜென்டினா penalty shoot outல் வென்றது..
"Why the F**k didn't I get the ball??" Schillaci is furious after yet another missed chance by Italy.

ஜெர்மனி - இங்கிலாந்து. ஜெர்மனி penalty shootout ல் வென்றது

Chris Waddle யை தேற்ற முயர்ச்சிக்கும் ஜெர்மனியின் கேப்டன் Lothar MatthäusPaul Gascoigne
இறுதி போட்டியில்

Luciano PavarottiBrehme அடித்த ஒரே பெனால்டி கோல்Sunday, May 28, 2006

நினைவுகள் கால்பந்தாட்டம் - 1
கால் பந்து அப்படின்னு சொன்னதும், எது ஒரு பெரிய மைதானத்துல ஒரு பந்துக்காக அடிச்சிகிவாங்களே / இந்த கால்லயே உதைச்சிகிட்டு ஓடுவாங்களே / ஒரு வலைல பந்தை தள்ளிவிட்டுட்டு என்னமோ தலைகால் தெரியாமா குதிபாங்களே / இதுல எதுக்கு ஓடுரோம்ன்னே தெரியாம ஒருத்தர் பிகிலு வச்சிக்கிட்டு ஒயாம ஊதுவாரே அவரு யாரு ? அந்த விளையாட்டான்னு பார்த்திபன் மாதிரி அறிவு (?) பூர்வமா கேட்கும் ஆளுங்களா நீங்க அப்படின்னா தயவு செஞ்சி இதுக்கு மேல படிச்சி உங்க நேரத்தை வீணடிக்க வேண்டாம் சொல்லிட்டேன்..

அல்லது இன்னும் 2 மாதத்துக்கு என் பதிவு பக்கம் எட்டிப்பார்க்காலும் இருக்கலாம்.. (ஆமா இப்ப அப்படி எத்தனை பேரு வந்துட்டாங்கன்னு இப்படி பிலிம் காட்டுறன்னு நீங்க சொல்லுறது எனக்கு கேக்குது)
உலக திருவிழாவுக்கு இன்னும் 10 நாள்களே இருக்கிறது.. கால் பந்து விளையாட்டுக்கு நான் ஒரு செத்த கடின விசிறி.. சிறு வயதில் எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் நான் ஆர்வத்துடன் பார்த்த முதல் விளையாட்டு என்றால் அது கால் பந்து / உதை பந்து தான். எனக்கு இந்த பழக்கம் எனது அப்பாவிடம் இருந்து வந்திருக்கலாம்.. எப்ப கால்பந்து திருவிழா ஆரம்பிக்குதோ அதுக்கு 2 மாசத்துக்கு முன்னாலயே எங்க வீட்டுல ஸ்போட்ஸ் ஸ்டார் & மேட்ச் ஆரம்பிக்கிறதுக்கு 10 நாள் முன்னாலயே ஹிண்டு, எக்ஸ்பிரஸ் எல்லாமே எங்க அப்பா வாங்குவார்.

இப்பொழுது போல் நான் சிறுவனாக இருந்த 80- களின் கால கட்டத்தில் டீவி ஒரு அதிசய பொருள்.. 80-களின் தொடக்கத்தில் நடந்த உலககோப்பையை அப்பாவின் நண்பர் வீட்டில்தான் பார்த்திருக்கிறேன். எனக்கு முதன் முதலில் மேட்ச் பார்க்க போனது இன்னும் நினைவில் நன்றாக இருக்கிறது.. அம்மாவுடன் சேர்ந்து பேங்க் கேம் விளையாடிக்கொண்டு இருந்தேன்.. அப்பா வந்து கார்த்தி கிளம்பு நம்ம வெளிய போய் சாப்பிட்டுவிட்டு சீனி மாமா வீட்ல போய் புட்பால் மேட்ச் பார்க்கலாம் என்று சொன்னர்கள்.. அப்ப நான் உடனே கிளம்பியதுக்கு 2 காரணம்.

1. வெளிய போனால் பை- பாஸ் கடைல சூடா பரோட்டாவும், சுக்கா வருவலும் சாப்பிடலாம்.

2. காலையில் சீக்கிரம் எழுந்து பைப்பில் தண்ணிர் அடிக்க வேண்டாம்.

இந்த மேட்சின் போது நான் ரொம்ப சின்ன பையன். பாதி மேட்ச் நடக்கும் போதே தூங்கிடுவேன்.. அடுத்த நாள் என்ன ஆச்கின்னு அப்பா கிட்ட நச்சு பண்ணிகொண்டு இருப்பேனாம். ஆனால் இந்த சீரிஸின் போது நான் கத்துகிட்ட சில ஆங்கில வார்த்தைகள் - Hooligans, hat trick, well Placed Shot, Injury, Half time, Penalty Extra ordinary, Fanstastic, Black Panthers..

Cameroon (பின்னாலதான் இது ஒரு நாடுன்னு தெரிஞ்சது),

Paulo Rossi(Italy), Diego Armando Maradona(Argentina), Zico, Socrates, Junior, Falcao(Brazil) - இது எல்லாம் முதல்ல இங்கிலீஸ் வார்த்தைன்னு நினைச்சிகிட்டு இருந்தேன்.. பின்னாலதான் தெரியும்.. இவங்க பேரை எல்லாம் தமிழ்ல எழுதி படுகொலை பண்ண சத்தியமா விருப்பம் இல்லை

82- ல் நடந்த சில முக்கிய மேட்ச் காட்சிகள் - நடந்த இடம் ஸ்பெயின்

இது 2-வது ரவுன்டில் அர்ஜென்டினாவுக்கும் பிரேசிலுக்கும் இடையே நடந்த மேட்சில் Batista வை உதைத்ததால் ரெட் கார்ட் காட்டி Maradona(தாடியுடன்) வெளியே அனுப்பட்ட போது எடுத்த படம்.. கைதட்டி வரவேற்பது Eder. இந்த சீரிஸில் Most fearsome player ஆக கருதப்பட்டது Diego maradona தான். இந்த மேட்சில் வெற்றியடைந்தது பிரேசில்.பிரேசிலுக்கும் இத்தாலிக்கும் இடையே நடந்த மேட்சில்.. பல திறமையான வீரர்கள் இருந்தும் இத்தாலி 3 - 2 என்ற கணக்கில் ஜெயித்தது.. ஆட்ட நாயகன் Paolo Rossi.
செமி பைனலில் ஜெர்மனிக்கும் பிரான்ஸ்க்கும் இடையே நடந்த மேட்சில் பிகிலு வைத்திருக்கும் ரெப்ரி செய்த மிக பெரிய மடத்தனம் இது.. இல்லை என்றால் ஆட்டத்தின் போக்கே மாறி இருக்கும்(இது கால் பந்து விசிறிகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று).. ஆட்டத்தின் போக்கை மாற்றிய காட்சி.Patrick Battiston(France) ஜெர்மனியின் கோல்கீப்பர் Toni Schumacher ல் தாக்கபட்டு வெளியேரும் காட்சி

Karl heinz Rummennigge substituteஆக களமிறங்கிய இந்த மேட்ச் . ஜெர்மனி penalty shootout ல் வெற்றியடைந்தது

பைனலில் - Glimpse

Paolo Rossi - செயலில்இத்தாலி டீம்நின்றிருப்பது(இடமிருந்து வலம்) - Dino Zoff, Francesco Graziani, Giuseppe Bergomi, Gaetano Scirea, Fulvio Collovati and Claudio Gentile. அமர்ந்திருப்பது(இடமிருந்து வலம்) - Bruno Conti, Paolo Rossi, Gabriele Oriali, Antonio Cabrini and Marco Tardelli.


*******

80-களின் பின் பகுதியில் நடந்த மேட்ச் அப்ப நான் ஸ்கூல் படிச்சிகிட்டு இருந்தேன்.. அப்ப எங்க வீட்டிலயே டீவி இருந்தது.. ஒரு நேஷனல் VCR ந்னு ஒண்ணு இருக்கும்.. முதல் பட்டனை தட்டுனா கேசட் டெக் எஜெக்ட் ஆகி மேல வரும்.. அதுல எல்லா மேட்சும் ரெக்கார்ட் பண்ணுவாங்க.. அதுல மேட்ச் வாரியா அழகா நோட்ஸ் எழுதி வைச்சிருப்பார். (இப்பவும் என்னோட ரூம்ல இந்த கேசட் எல்லாம் இருக்கு.. ஆனா அதை பாக்குறதுக்குத்தான் பழைய கேசட் VCR இல்ல)

இந்த தடவை நம்ம பெரிய பையனங்கிறதுனாலயும், அறிவு வேற நிறையவே இருக்குறதுனாலயும் அப்பா சொல்லிகுடுத்ததாலயும், முதல் தடவையா விளையாட்டின் விதி முறைகளை தெரிந்து பார்த்த சீரிஸ்ன்னா அது இதுதான்.. அந்த 2 மாசம் வீட்டுல எந்த நேரம் பார்த்தாலும் கால்பந்து பற்றிய விவாதம்தான்..கிட்டதட்ட ஒரு நான் ஒரு முழு கால்பந்து விசிறியாகவும் ஆனது இந்த காலகட்டத்தில்தான். இந்த காலகட்டத்துல எனக்கு பிடிக்காத ஒரே விஷயம் என்னனா அது பள்ளிக்கு செல்வது, அப்புறம் தினமும் மாலை வேளையில் இருக்குற நாளிதழ் எல்லாத்தையும் சத்தமா வாசிக்க சொல்லுவார் எங்க அப்பா.. தப்பா சொன்னா அதுக்கு ஆப்பு உண்டு..


இந்த சீரிஸில் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால்

1) Gifted Marks man - Micheal Platini captain (France)2) Deadly Gentleman Gary Linekar - Center Forward (England)3) Elegant Midfield General Socretes - Midfield (Brazil)4) Karl-Heinz Rummenigge - captain (Germany)

4) Master Monster - Diego Maradona - Captain (Argentina)

86- ல் நடந்த சில முக்கிய மேட்ச் காட்சிகள் - நடந்த இடம் மெக்சிகோ

முதல் ரவுன்டில்

அர்ஜென்டினாவும் கொரியாவும்.. இந்த சிரிஸில் நடந்த எல்லா மேட்ச்களிலும் maradona குறைந்த பட்சம் 3 defenfer-களால் எப்பொழுதும் கவர் செய்யபட்டிருந்தார்.


2 - ரவுன்டில்

உருகுவே Iron wall of defense என்று கூறப்பட்டது. அது உண்மையும் கூட.. அர்ஜென்டினா 1-0 என்று வெற்றி பெற்றதுகால் இறுதி சுற்றில் ஜென்ம பகைவர்களான அர்ஜென்டினாவும் இங்கிலாந்தும்.. இந்த மேட்சில்தான் சர்ச்சைகுள்ளான 'கடவுளின் கரம்' என்று கூறப்பட்ட கோல் அடித்த 4 வது நிமிடந்தில் கால் பந்து வரலாற்றின் இணையற்ற கோலை அடித்தார். அர்ஜென்டினா 3 - 2 என்ற கணக்கில் வென்றது. இந்த கணக்கை நிகர் செய்ய கிட்டதட்ட 12 வருடங்கள் ஆகும்.. அதாவது David beckham வரும் வரை

அறையிறுதியில் பிரான்ஸ் ஜெர்மனி.. ஜெர்மனி 2- 0 என்ற கணக்கில் வென்றது..86 அதிசயம் எதுவும் நிகழவில்லை :-(இறுதி ஆட்டம்

அடித்த இந்த கோலின் ஆறவது நிமிடத்தில் அர்ஜென்டினா 3 - 2 கணக்கில் வெற்றி பெற்றது.அர்ஜென்டினா டீம்நின்றிருப்பது(இடமிருந்து வலம்) - Batista, Cuciuffo, Olarticoechea, Pumpido, Brown, Ruggeri and Maradona.அமர்ந்திருப்பது(இடமிருந்து வலம்) - Burruchaga, Giusti, Enrique and Valdano.

நினைவுகள் தொடரும்..

நோ கமென்ட்ஸ்

நாட்டு நடப்பு
Blonde Jokes

Blonde விளையாட்டுகள்

சிறப்பு பார்வை - ஏன் இப்படிAbsolutely Hilarious