Friday, July 28, 2006

தத்துவம் / சிந்தனை- 1




The good thing about banging your head against a stone wall is that it is nice when you stop.

Tuesday, July 04, 2006

சில சிந்தனைத் துளிகள் !


Awake, Araise, Stop not until the goal is reached - swami vivekananda.

இன்று சுவாமி விவேகானத்தரின் நினைவு நாள்.



அவரின் புகழை உலகறியச் செய்தது சிகாகோவில் Sept 11, 1893 அன்று அவர் ஆற்றிய ஆன்மீகம் குறித்த உரைதான். அவற்றின் ஒலிவடிவம் இங்கே




அவருடைய எண்ணங்கள் எல்லாமே பெரும் பொக்கிஷங்கள் என்றாலும் அவற்றுள் சில.


"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்."

"பலவீனத்திற்கான பரிகாரம், பலவீனத்தைக் குறித்து ஒயாது சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பது தான்."

"தனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால், தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும்."

"உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன".

"தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். இவை அனைத்திற்கும் மேலாக, அன்பு வேண்டும்."

"எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், இனியும் தூங்க வேண்டாம். எல்லா தேவைகளையும் எல்லா துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது."

"முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி பிறகு உனக்குத் தானாக வந்து சேரும்."

"பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே மதம்".

"அடுத்தவனின் பாதையைப் பின்பற்றாதே. ஏனெனில் அது அவனுடைய பாதை, உன்னுடையது அல்ல. உன்னுடைய பாதையைக் கண்டுபிடித்து விட்டாயானால், அதன்பிறகு நீ செய்ய வேண்டியது எதுவும் இல்லை; கைகளைக் குவித்த வண்ணம் சரணடைந்து விடு. பாதையின் வேகமே உன்னை உனது லட்சியத்தில் சேர்த்து விடும்."

To Dear friend Dev & Family

குட்டி பாப்பாவுக்கு இந்த அங்கிளுடைய வாழ்த்துகள்.




பதவி உயர்வு பெறும் வ.வா.ச.வின் போர்வாள் தேவ் & அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய உளங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Monday, July 03, 2006

F1 - 2006 ன்னும் நானும்

நேத்து நானும் என்னோட கூட்டாளியும் ஸ்பிட்வே - இன்டியானாபோலிஸ் போனோம். மேட்டர் என்னன்னா மைக்கேல் ஷூமாக்கர் 'கார்த்தி நீயும் அலெக்ஸும் வரலன்னா நான் வண்டி ஓட்ட மாட்டேன். நீ வந்து ஆசிர்வாதம் செஞ்சாத்தான் நான் ஜெயிப்பேன்ன்னு ஒரே அழுவாச்சி :-)' (சரி அடங்கிட்டேன்)

ஏகப்பட்ட படம் எடுத்தாலும் , பார்க்குற மாதிரி இருக்குற ஒண்ணு ரெண்டு படம் இங்கே..








இவ்வளவு Porsche இருக்குதே, ஒண்ணு கொடுடான்னு கேட்டேன். தரமுடியாது உம்பேச்சு கான்னு சொல்லிடாங்க :-(



நானும் எங்கூட்டாளியும் இருந்த இடத்துக்கு வலது கைபக்கம் இடது கைபக்கம்

























இது திரும்பி வரும்போது இருந்த டெம்ப்ரேச்சர்.. எங்கூட்டாளி நம்ப மாட்டான்னு படம் புடிச்சது :-)





இது எங்கூட்டாளிக்கு புடிச்ச Hummer H1



இந்த படம் புடிச்ச கொஞ்ச நேரம் கழிச்சி ஹைவேஸ்ல வந்துகிட்டு இருக்கும் போது 2 Porsche GT மின்னல் மாதிரி போச்சி. வண்டிய முழுசா கூட பார்க்கமுடியல.. தூரத்துல Porsche வரும்போதே ஒரு சத்தம்..

'Hey Alex check this' சொல்லி முடிச்சி என்னோட கூட்டாளி கண்ணு முழிச்சி பார்க்குறதுகுள்ள வந்த 2 Porsche GT ம் எங்க வண்டிக்கு முன்னால போய்டுச்சி.. அதுலயும் எங்க வண்டிக்கு இடது பக்கம் வந்த Porsche GT இருக்குற எமர்ஜென்சி புல் ஓவர் ல புகுந்து போய்ட்டான்..

இத பார்த்ததும் எனக்கு ஒரு டவுட்.. நானே ஸ்பிட் லிமிட்ட தாண்டகூடாதுன்னு 65 ல வண்டிய உருட்டிகிட்டு இருந்தேன், காப் மாமா பார்த்துட்டா ஒடனே லவ் லெட்டர் கொடுத்துடுவாரு அதனாலதான்.. எதுக்கு இந்த வண்டிகளுக்கு மட்டும் லெட்டர் கொடுக்கலன்னு வந்த எரிச்சல்ல நம்ம Southpark, Beavis and Butthead சீரியல ஸ்ட்டார்ட் பண்ணுனா எங்கூட்டாளி அதை முழுசா தி என்ட் டைட்டில் கார்ட் போட்டுட்டுத்தான் நிப்பாட்டுனான் :-)

சரி அந்த வண்டியதான் படம் புடிக்க முடியல.. அதனால மெதுவா போன ஒரு Porsche Boxter உங்களுக்காக :-)

Saturday, July 01, 2006

Legendary Zinedine Zidane - 2006

தல வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.. தல நீ இன்னும் பல ரவுண்டு வரலாம்..



















We did it in 1986 !
we did it again in 1998 !
we did it again in 2006.... !!!


We would continue to do it with the Legendary Zinedine Zidane.