Friday, March 31, 2006

Nameless

என் நெஞ்சே! என்னை கேட்காமல் அலைபாய்கின்றாய்,
காதல் ஒரு காந்தம்.. ஈர்க்கும் அதன் திசையில்..
மாயகரம் ஒன்று மயிலிறகு கொண்டு சில்லென்று மனதை தொடுதே!!!

என்னில் ஒரு மாற்றம்.. எதிலும் தடுமாற்றம்..
பார்வை பரிமாற்றம்.. ஒரு ஆனந்த ஏக்கம்.
கண்ணை விட்டு வெளியே காணும் ஒரு கனவே..
இனி அழைத்தாலும் வாராது தூக்கம்..

ஏதேதோ மாற்றம் வந்து என்னிடம் நான் இல்லை.



*******


என் வானில் வானவில்லாய் நீ இருந்தால்
என் வாழ்வின் வண்ணம் இன்னும் கூடும்
சுட்டு விரலாய் நானும்
கட்டல் விரலாய் நீயும்
எழுதும் என் வாழ்க்கை
அழகிய கவிதையாக மாறும்

விடாமலே உன்னை தொடர்ந்திடும் என்னை
ஒரே ஒரு முறை மனதினில் நினை
நான் வாழும் உலகில் மவுனம்தானே பேச்சு.
விழாகளில் நான் தனித்திருக்கிறேன்.
கனாக்களில் தினம் விழித்திருக்கிறேன்



*******


I woke up in the middle of the night
And I noticed my girl wasn't by my side,
Cause ever since my girl left me,
My whole life can crash in a moment.. ,


Never thought that I would be alone ,
I didn’t think you'd be gone this long,
So stop playing girl and
Come on to me...

Thursday, March 30, 2006

நினைவுகள் 2 - Shogun

பாகம் 1

எனக்கு தெறிந்து எல்லாரும் சொல்லுறது Shogun ல மைலேஜ் கிடைக்காதுன்னு. எனக்கு என்னமோ பைக் நல்லாத்தான் மைலேஜ் தந்தது. சிட்டில 40 - 42 தரும். நான் பைக் வாங்கி முதல் 6000 k.m க்கு 60 தாண்டி ஓட்டவே இல்லை. அதுலையும் நோ விலீங், நோ ஹில்ஸ், பைக் வாங்கி எல்லாமே லாங் ரைட்தான். அப்ப எல்லாம் எங்கயாவது போகணும்ன்னா மத்த பசங்க கிளம்புறதுக்கு 1 மணி நேரம் முன்னாடியே நானும் எங்கூட்டாளியும் கிளம்பிடுவோம். இருக்குற பணம் எல்லாம் இந்த பெட்ரோல் போட்டே அழிச்சோம். ஆ ஊ ந்னா எங்கயாவது டிரிப்தான்.

இப்படி ஓட்டி சிக்கிரமே 5K வந்துடுச்சி. அந்த வாரம் வீலிங் வாரம்ன்னு சொல்லாத குறைதான் :-) . என்ன கேட்டா இஞ்சின் செட் ஆகுர வரைக்கும் கைய, கால வச்சிக்கிட்டு சும்மா இருக்கனும். அப்புறம் இன்னும் ஒண்ணு. வண்டிய ஒருத்தனே ஓட்டனும். இந்த விஷயத்துல நான் கடைசி வரைக்கும் கொள்கை கொம்பனா இருந்தேன். இதுனால சில பல சண்டைகள் வந்தது உண்டு. அப்ப எங்க காலேஜ்ல ஷோகன் கிளப் ந்னு ஒண்ணு இருந்தது. வண்டிய நான் வெயில்ல கூட நிப்பாடுனது இல்ல.


எனக்கு தெரிஞ்சி அப்ப கூட்டாளிக வாங்குன பைக் எல்லாரும் Shogun தான். சண்முகம் ஒருத்தன் தான் RX - 100 வாங்குனான். அது என்னமோ Shogun தான் எனக்கு பிரியம். 2 பேருக்கும் சண்டை வந்தா அதுக்கு ஆரம்பம் இந்த பைக் மேட்டர்லதான். சில சமயத்துல RX - 100 விட ஸ்பீடா ஓட்டிருக்கேன். ஆனாலும் அவன் ஒத்துகவே மாட்டான். அப்புறம் என்னோட ரூம்மேட் கார்த்தி (அவன் பேரும் அதுதான்) அவங்க வீட்டுல பைக் வாங்கி குடுக்க ஒத்துகிட்டாங்கன்னு சொல்லிட்டு சந்தோசத்துல எங்கயோ போய்ட்டு வரும் போது சாமியார் (Old Monk) சொன்ன பேச்சை கேட்டு புதையல் எடுத்துட்டான். அதுவும் சாதா புதையல் இல்ல. அதுனால அவங்க வீட்டுல கடைசி வரைக்கும் பைக் வாங்கி தரல :-(


அப்புறம் சில குரங்குகள் மாதிரி எனக்கு இந்த எஞ்சின் ஆல்டர்ரேசன், ஸ்சைலன்சர்ல கை வைக்குறது இது எல்லாம் சுத்தமா புடிக்காது. Shogun ல அழகே அதோட ஒரிஜினாலிட்டிதான்.


எனக்கு என்னமோ பைக்க ரீமாடல் பண்ணுறதுல கொஞ்சம் கூட விருப்பமே இல்லை. எனக்கு தெரிஞ்சி பைக்ல நான் மாத்துன 2 விசயம் என்னா இந்த பெட்ரோல் லாக் ஒண்ணு. அதுவும் கூட ஹாஸ்டல்லயும், காலேஜ்லயும் ஒவர்ரா பெட்ரோல ஆட்டைய போட்டுடதுனால, அப்புறம் இந்த பெட்ரோல் டேங்க் கவர் ஒண்ணு. ஒரே ஒரு தடவை எங்கூட்டாளி 'டேய் கார்த்தி இந்த SareeGuard நல்லாவே இல்லைன்னும், அப்புறம் இன்னும் என்னனவோ சொல்லி, நானும் மாடு மாதிரி தலய ஆட்டி மெக்கானிக் ஷெட் வரைக்கும் போய்ட்டேன். நல்லவேலை அங்க போனதும் என்னொட புத்தி வேல செய்து ஒண்ணும் வேனாம்டா மாமா. சரிகா இப்படியே இருக்கட்டும்ன்னு சொல்லிட்டு வந்துடேன்'.


பைக் எங்கூடவே இருந்த ஒவ்வொறு நாளும் ஒரு இனிய அனுபவம்தான்.. ஷோகன்ல எனக்கு புடிச்சது 20KM ல கூட 4 வது கியர் எஞ்சின்ன தட்டாம ஓடும்.. இது ரொம்ப முக்கியம் எங்களுக்கு. என்னா எங்க காலேஜ் லேடிஸ் ஹாஸ்டல் முடிச்சதும் வர்ற லாங்க் ரோட்ல கியர டவுன் பண்ணாம ஒரே திருகுல அசால்ட்டா 60 அடிக்கலாம், அதுவும் 7 செக்கன்ட்ல :-). அப்புறம் சிட்டில ஓட்டுறதுக்கு சரியான பைக். அதுக்காக ஹைவேஸ்ல ஒழுங்கா ஒடாதுன்னு இல்ல. எனக்கு தெரிஞ்சி நிறைய தடவ 110 - 115 தொட்டுருக்கேன். முதல் தடவை 110 ந்னு ஸ்பீடாமீட்டர்ல பார்த்த திரில் ஹும், அத எல்லாம் ஒரு வார்த்தைல சொல்ல முடியாது, அனுபவிக்கனும்.





இந்த பைக் பயணங்களில் Top of My Mind ந்னு கேட்டா 3 வது செமஸ்ட்டர் அப்ப எங்க வீட்டுக்கு இரவோடு இரவாக எங்கயும் நிப்பட்டாம 5 Hrs ஓட்டிக்கிட்டு வந்ததுதான். வீட்டுக்கு வந்து இருந்தது 10 நிமிசம்தான். ஹால்டிக்கெட்டும், எனது ராசியான பேனாவையும் எடுத்துகிட்டு உடனே கிளம்பிட்டேன். மறுபடியும் ஒரு 5 Hrs Non Stop Driving :-)


நானும் என்னோட பங்காளியும் போன அதரம்பள்ளி பால்ஸ் 3 விசிட். இந்த 3 தடைவையும் காலைல சரியா சூரிய உதயத்தின் போது இருந்தோம். அப்புறம் ஒரு தடவை செல்வா ந்னு விஜய் படம் போய்ட்டு அதுல ஒரு பாட்டுல கோத்தகிரி கோழி கறி ந்னு ஒரு வரி வரும். அத கேட்டுட்டு எங்க பங்கு இப்ப அடுத்த வேளை சாப்பாடு நேரா கோத்தகிரில போய் ஒரு சிக்கன் பிரியாணிதான்.. நீதான் என்ன கூட்டிகிட்டு போறன்னு சாதிச்சிட்டான். சரின்னு ஒரு நடை போய்ட்டு வந்தோம். வரும் போது அங்க கேத்தரின் பால்ஸ் க்கு போக பாத்தது.. ஒரு தடவை நானும் அவனும் மட்டும் 6 மைல் போனது, ஒரு தடவை ஆழியார் டேம் & monkey Falls போனது.. ஒரு தடவை நேந்திரங்காய் சிப்ஸ் வாங்க மட்டும் பாலக்காடு போனது, வரும் போது எதுக்குடா ஒரு சிப்ஸ் பாக்கெட் வாங்க இவ்வளவு வந்தோம்ன்னு மண்டை காஞ்ச்சி நீதாண்டா இதுக்கு காரணம்ன்னு சொல்லிட்டு ஒருத்தனுக்கு ஒருத்தன் 1 வாரம் பேசாம இருந்தது. ஒரு தடவை செமஸ்ட்டர் லீவ்ல கொடைக்கானல் போய் 2 வாரம் தங்குனது, 2 பேரும் எந்த நேரம் பாத்தாலும் ஏர்கன் வச்சிக்கிட்டு இருக்குற பேரிக்காய் எல்லாத்தையும் காலி பண்ணுனது. ஒவ்வொரு செமஸ்ட்டர் ரிசல்ட் வந்ததும் போன மருதமலை முருகன் கோவில். எல்லாம் இப்ப நடந்தது மாதிரி இருக்கு.


கடைசி வருசம் எங்க ஜூனியர் ஒருத்தன் ஒரு ஆக்சிடன்ட்ல இறந்தப்ப அவங்க அம்மா ஹாஸ்பிட்டல்ல அழுதது, பார்க்க போன எல்லாத்துக்கும் அவங்க சொன்ன ஒரே அறிவுரை வாசகம் ' நீங்க எல்லாருமே எனக்கு எம் புள்ளங்கதான் , நான் இப்ப அழுகுற மாதிரி இன்னும் ஒரு தடவை அழ வச்சிராதீங்க ' எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. இது நடந்து 2 மாசத்துல மதுரைல எங்க அப்பாவுக்கு ரொம்ப தெரிஞ்சவங்க பையன் ஆக்சிடென்ட்ல இறந்துட்டான். இத எங்க அப்பா எங்கிட்ட சொல்லிட்டு இத மாதிரி எனக்கு ஒரு நிலமை எனக்கு வேணாம்டா அப்படின்னு சொன்னார்.


தொடர்ச்சியா நடந்த இந்த 2 சம்பவங்கள் என்னோட மனசை மாத்திடுச்சி. எங்க அம்மா சொல்லிகிட்டே இருந்த மாதிரி பைக் க வித்துட ஒத்துகிட்டேன்.

Adios Amigos சரிகா.

Wednesday, March 29, 2006

நினைவுகள் 1 - Shogun

எங்க பக்கத்து கியுபிகல்ல இருக்குறவர் கிட்ட பேசிகிட்டு இருக்கும் போது, பைக் பற்றியும், இளவயதில் முதன்முதலில் பைக் ஓட்டிய அனுபவங்களையும் பற்றி பேச்சு திரும்பியது. பைக் பத்தி பேச்சு வந்ததும் அவர் சொன்னது 'எனக்கு ஒரு 30 வயசு குறைந்த மாதிரி இருக்கு'. அது எவ்வளவு சத்தியமான வார்த்தை.


இங்க மாதிரி நம்ம ஊர்ல நிறைய பைக் இல்லை என்றாலும், நானும் எனக்கு இருக்கும் ஒரு அனுபவ அறிவை வச்சி சமாளித்துகொண்டு இருந்தேன். அப்புறம் நம்ம ஊர் பத்தி அவர் நல்லா தெரிஞ்சி வச்சிருக்கார். அதுனால எதுக்கு 500 CC, 1000 பைக் எல்லாம் உங்க ஊர்ல இல்லை என்று கேட்கவே இல்லை.



நான் பள்ளிகூடம் படிக்கும் போது வந்த, பின்னாளில் காலேஜ் படிக்கும் போது என்னுடன் இருந்த, இந்த பைக்தான் மிகவும் ரசித்த, காதலித்த ஒரே பைக். இப்படி பைக் என்று எல்லாரும் சொல்லும் ஒரு சாதாரன வார்த்தையில் சொல்லி, எனது வாழ்க்கையின் எல்லா சுக துக்கத்தில் உடனிருந்த அவளை கூப்பிட மனம் ஒப்பவில்லை. அவளுக்கு நான் வைத்த பெயர் 'சரிகா'.


எல்லோரும் சொல்லுவது போல் கூப்பிடவேண்டும் என்றால் Suzuki Shogun.


வாழ்க்கைல இதுவரைக்கும் செய்யாத எதாவது ஒரு விசயத்தை செய்யனும்ன்னு தோணுதா ?. இது வரைக்கும் போகாத இடத்துக்கு, போகும் போது உங்க வழில வர்ர எல்லாரும் ஒதுங்கி வழிவிடனும்னு தோணுதா. அப்ப நீங்க Shogun ல ஒரு சுத்து சுத்துங்க..


94- 95 ல் இந்த விளம்பரம் அப்ப ஸ்கூல் ல படிச்சிகிட்டு இந்த மத்த பசங்க தூக்கத்தை காலி பண்ணுசோ இல்லையோ, என்னை முழுமையாக அதனுள் இழுத்துகொண்டது. விளம்பரம் 2 - 3 இருக்கும்.


ஒரு வீட்டுக்கு முன்னால ஒரு சேர்ல பெரியவரும், தரைல ஒரு நாயும் கண்மூடி இருப்பார்கள். தூரத்தில் கேட்டு, திடிரென பக்கத்தில் கேட்கும் அதே நேரத்தில் வீட்டில் ஒளி வெள்ளம் பரவும், சட்டென தூரத்தில் சென்று மறையும் அந்த ஒலி. அதுக்கு அப்புறம் இந்த எழுத்துக்கள். ShoGun - The Boss.


இந்த நேரம் ப்ரின்ட் மீடியால குறிப்பா ஹின்டு சன்டே பேப்பர்ல கலர்ல ஒரு விளம்பரம். முழுவதும் கறுப்பு உடை அணிந்த ஒரு உருவம் பைக் ஓட்டுவது ஒரு மாதிரியான பிளர்ர்டு இமேஜ்ல இருக்கும். அதுக்கு கீழே இந்த எழுத்துக்கள்.

fasten your seat belts and extinguish your cigarette. Suzuki Shogun.

இந்த பேப்பர் எல்லாம் இப்பவும் எங்கூட பத்திரமா வீட்டில இருக்கு..
இதுல கவனிச்சி பார்த்தா எங்கயும் ஸூசுகியோட இந்தியன் பார்ட்னர் கம்பெனியோட பேரு இருக்காது. What a Brand positioning.


என்ன கேட்டா Sensational Adverstisement இது. என்னோட ஸ்கூல் நேரத்துல. அப்பவே முடிவு பண்ணுனேன். நானா சம்பாதித்து வாங்கும் வண்டி இதுதான்னு... இப்ப ஆசை பேராசையாகி BMW - M5 ல வந்து நிக்கிது. அது வேர கதை :-)




நான் முதன் முதலில் இந்த வண்டிய ஓட்டியது நல்லா ஞாபகம் இருக்கு.. கிட்டதட்ட பைக் ஓட்டதெரியும்னாலும், அப்பதான் இந்த Wheeling ( தமிழ்ல என்னப்பா )- வீலிங் எல்லாம் செய்ய கத்துகிட்ட நேரம். இதுக்காகவே Hero Puch நு ஒரு அட்டு வண்டி இருக்கும் அதுலதான் வீலிங் பழகுனேன். என்னோட ஸ்கூல் படிக்குறப்ப ஒரு நாள் என்னோட சகா ஒருத்தனோட அண்ணன் அந்த Shogun பைக் வாங்குனதுனால, அவன் கைல கால்ல விழுந்து, அவன் அதை காலேஜ்க்கு பத்திக்கிட்டு போறதுக்கு முன்னால சகா ஒரு நாள் அத ஓட்டிகிட்டு வந்துட்டான்.. எங்க ஸ்கூல்ல பசங்க யாரும் பைக் எல்லாம் கொண்டுவரக்கூடாதுன்னு ஒரு ரூல் இருந்தது.. அதனால், எங்க ஸ்கூல் பின்னால் இருந்த ஒரு மெக்கானிக் ஷெட்ல வச்சிருந்தோம். ( படிக்கும்போது எல்லீஸ்நகர், எஸ்.எஸ். காலனில தெரியாத மெக்கானிக்கே இல்ல. அது பத்தி வேற ஒரு பதிவுல ) யாருக்கும் சொல்ல. எங்க எவனாவது வத்தி வச்சிட்டா.. நம்ம பசங்களுக்குத்தான் அடுத்தவன் பல்பு வாங்குறான்னா ஒரே சந்தோசம், அதுவும் டிக்கெட்டுங்க முன்னால வேற.


சாயந்தரம் எல்லாரும் போனதும், யாருமே இல்லைன்னு முடிவு பண்ணிக்கிட்டு, குறிப்பா எந்த டிக்கெட்டு சைக்கிள் இருக்குன்னு பாக்கணும். அதை வச்சே எத்தனை பேரு ரேடியஸ்ல இருப்பாங்கன்னு ஒரு கணக்கு பண்ணலாம்.


சைக்கிள ஷெட்ல போட்டுட்டு, நான் ஸ்கூல் முக்குல நின்னுக்கிட்டு இருந்தேன். வந்தான் சகா. ஆஹா அந்த சத்தம்.. ஒண்ணும் சொல்லுறதுக்கு இல்ல. எம்முன்னால வந்ததும் நிப்பாடுனான். நம்ம இதுக்கு முன்னால ஓட்டுன வேகமான பைக்ன்னா அந்த சாமுராய்தான்..


பைக்ல ஏறி உக்காந்து பைக்க ஸ்ட்டாட் பண்ணுனேன்..I was totally dazed at the sound the bike was making... Wow... கொஞ்சமா அந்த Throttle ல திருகுனா, அதே வேகத்துல என்னோட ஹார்ட்பீட்டும் அடிச்சிகிச்சி, அந்த எஞ்சின் ஓடுற வேகத்துல... கிளச்ச புடிச்சி, முதல் கியர போட்டு.. unforgettable roar.. i said Ohh My God...மெல்ல்லலலலல கிளச்ச விட்டு ஸ்லோவா ல குடுத்தா அ அ அ ஒரு Full Wheeling ஆச்சி பாருங்க.. அதுல வந்தது முதல் காதல்..


ஒரு வழியா அந்த எல்லீஸ் நகர் மெயின் ரோட்ல மறுபடியும் ஒரு wheeling பண்ணுனேன். ஆனா இந்த தடவை தெரிஞ்சே :-). ஒரு தடவை ஓட்டுனா போதும். அப்புறம் பைக் நம்ம சொல் பேச்சு கேக்கும். அப்புறம் பால்பூத் ஸ்டாப்ல மருக்கா பைக் ஓடும் போதே ஒரு full wheeling, அப்புறம் கடைசி ஸ்டாப்ல நிப்பாட்டுற வரை மெதுவா ஓட்டுனேன். எல்லாரும் நம்மளையே பாக்குறாங்க.. எனக்கும் என்னோட சகாவுக்கும் ஒரே ஆனந்தம்.. பரமானந்தம்.. பின்ன அந்த டையத்துல எல்லாரும் நம்மளையே பாக்குறதுன்னா சும்மாவா.. அதுவும் அப்பத்தான் எல்லாரும் கோட்டிங் கொடுக்க இத்துபோன வண்டிய வச்சி முயர்ச்சி பண்ணிகிட்டு இருக்கும் போது, 2 ஸ்கூல் பசங்க அசால்ட்டா எல்லாத்தையும் அள்ளுனா, எவனுக்குத்தான் புகை வராது..


பாலத்துகிட்ட பைக்க நிப்பாட்டிட்டு பாத்தா அப்பத்தான் அந்த தெருமுனைல ஒரு 5 - 6 வண்டி வருது.. எங்க 2 பேருக்கும் கொஞ்சம் பயம். எங்க அடி வெளுத்துட்டா.. பைக்க ஒரே திருகு.. சுத்தி பாத்தா மாப்பிள்ளை வினாயகர் தியேட்டர் வந்துடுச்சி.. எங்க மறுபடியும் அரசரடி வழியா வந்தா பிடிச்சிகிட்டான்னு, ரொம்ப சுத்தி இதுல நடுவால ரயில்வே காலனில வேற கோட்டிங்கோ கோட்டிங்.. இது சகாவுக்காக.


பைக்க ஒரு வழியா மெக்கானிக் ஷெட்டுகிட்ட நிப்பாட்டும் போது சகா கேட்டான். டே கார்த்தி பைக் எப்படி..

ஒரே அமைதி.....

மறுபடியும் ஒரே அமைதி.....

சின்னதா ஒரு பார்வை.....

ஒரு சிரிப்பு........

டேய்.. 2 வார்த்தை.. Power is Awesome.. and the sound is Maaaan...



வீட்டுக்கு போறதுக்குள்ள யாரோ புண்ணியவான்/வதி பத்த வச்சிடாங்க. அம்மா ஒரே கோவமா இருந்தாங்க... அப்பவே அந்த பைக் வாங்கி தர சொல்லி ஆரம்பிச்சிடேன். அம்மா சொன்ன பதில். அப்பா வாங்கி தந்தா ஓட்டு.. யாரு வேனாம்ன்னு சொல்லுறா... நல்லவேல இந்த மேட்டர் அப்பாவுக்கு தெரியுறதுகுள்ள வேற எதோ பிரச்சனை வந்ததுனால தப்பிச்சேன். இல்ல அடி வெளுத்துருப்பார்.



அடுத்த நாள் பாத்தா ஸ்கூல்லயே ஒரு டாப் டிக்கெட்டு கிட்ட இருந்து ஒரு சிரிப்பு. மதிய லஞ்ச் பிரேக்ல சொன்னது.. கார்த்தி உனக்கு இப்படி எல்லாம் பைக் ஓட்ட தெரியும்ன்னு சொல்லவே இல்லை.. நான் சொன்னது நீங்க கேக்கவே இல்லை....அப்புறம் இந்த ஒரு மேட்டர வச்சே நமக்கு செம பேரு.


இந்த மேட்டர்க்கு அப்புறம் கிட்டத்தட்ட ஒரு 3 வாரம் எங்கயும் போகல.. வீடு 2 ஸ்கூல். ஸ்கூல் 2 வீடு தான்.. அந்த 1 1/2 மணீ நேர வித்தைல ஒரு 4 எரியா பசங்க அவ்வளவு டென்சன் ஆகிட்டாங்க.. அப்பாலிக்கா எல்லாரும் கூடிக்கிட்டது வேற கதை..


கணங்கள் தொடரும்...

Tuesday, March 28, 2006

தடம்

என்னிலிருந்து என்னைப் பிரித்துக்கொண்டு, ஒருவனாக இதை மிகுந்த பிரயாசையுடன் எழுதுகிறேன். கண்டிப்பாக இவற்றை ஒரு பதிவில் சொல்லிவிடமுடியாது. அப்படி சொல்லி முடிக்கிற விஷயமும் இல்லை இது.


பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று
நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று
தீர்த்தக் கரை ஓரத்திலே தேன் சிட்டுகள் உள்ளத்திலே
கல்யாண வைபோகம் தான்


நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று
மூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு
மோகப் பண் பாடுதே
மேலைக் காற்றோடு கைசேர்த்து நாணல்காதல் கொண்டாடுதே


ஆலம் விழுதோடு கிளிக்கூட்டம் ஆடும்
காலம் இதுவல்லவா
ஈரச் சிறகோடு இசைபாடித் திரியும்
நேரம் இதுவல்லவா


ஏதேதோ எண்ணம் தோன்ற
ஏகாந்தம் இங்கே
நான் காணும் வண்ணம் யாவும்
நீதானே அன்பே


வண்ணம் மாறாமல் மீண்டும் மீண்டும்
ஆசைகள் ஈடேறக் கூடும்


(பூங்காற்று)


ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன
ஜீவன் உன்னோடுதான்
தேவி ஸ்ரீதேவி பூவாரம் சூட
தேவன் என்னோடுதான்


நீல வான் கூட நிறம் மாறிப் போகும்
நேசம் நிறம் மாறுமா
கால காலங்கள் போனாலும் என்ன
காதல் தடம் மாறுமா

ஓயாமல் உன்னைக் கொஞ்சும்
ஊதாப்பூ வண்ணம்
ராஜாவின் முத்தம் கொள்ளும்
ரோஜாப்பூ கன்னம்

வாடை தீண்டாத வாழைத் தோட்டம்
ஆனந்த எல்லைகள் காட்டும்

(பூங்காற்று)



இப்படி ஒரு பாட்டு பதிவு பார்த்து, கடந்த சில நாட்களாக, என்னை கடந்து போன அந்த இனிமையான நினைவுகளில் என்னை மறுபடியும் மூழ்கடித்துகொண்டேன். எனோ தெரியவில்லை இந்த நினைவுகளில் என்னை எத்தனை முறை மூழ்கடித்துகொண்டாலும் அலுப்பதில்லை. இவற்றை நான் சுகமாக கருதுகிறேன், சுமையாக அல்ல.

இதை பற்றி ஒரு பதிவு எழுதியே ஆகவேண்டுமா என்று கடந்த சில நாட்களாக யோசித்தது உண்டு. எதை சொல்லுவது, எவ்வாறு சொல்லுவது, எதை விடுப்பது ஒன்றுமே புரியவில்லை..


இந்த நினைவுகள் என்னுள் இறக்கபோவது இல்லை
ஆனால்,
இந்த நினைவுகளுடன் நான் இறக்கபோவது உறுதி...


இப்படி பதிவுகளாக போட்டு, என்னை ரொம்பவே கடந்த 5 நாட்களாக நான் கடந்து வந்த நினைவு தடங்களுக்குள் மூழ்கடித்த சுந்தர் அண்ணனுக்கு எனது மரியாதையுடன் நன்றி கலந்த கண்டனத்தை தெரிவித்துகொள்கிறேன்.

Sunday, March 26, 2006

கவிதை - 1

உலகில் எண்ணத் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என 2 வகை,
2 வகைகளில் பிரிக்கமுடியும் என நம்புவோர், முடியாது என நம்புவோர்,
2 வகைகளில் பிரிக்க முடிந்தவர்கள், முடியாதவர்கள் என 2 வகை,

என்று சொன்னான்

ஒரு கணித மேதை...

***

லஞ்சம் வாங்கினேன்
சிறையில் அடைத்தார்கள்
லஞ்சம் கொடுத்தேன்
விடுதலை செய்தார்கள்


***

நான் எழுதியவை அனைத்தும் வார்தைகள்தான்......
என்றாவது இதை நீ படிக்க நேர்ந்தால் ஒரு வேளை கவிதை ஆகும்

***

உன்னை கவிதை என்று என்றோ சொன்னதன் அர்த்தம் இப்பொது எனக்கு புரிகிறது...உன்னிலும் பொய்கள்


***

ஏனக்கு உன்டான சோகம்..ம்.ம்
அது ஒரு பாட்டில் ரம் அடிச்சா சரியாகிடும்..
ஆனா உன் சோகத்துக்கு ஒரு பாட்டில் ரம் அடிச்சா
உன் உடம்பு தாங்குமா..தாங்காது...அபிராமி..அபிராமி..
அதுனால அதையும் நானே அடிச்சுடுறேன்

கவிஞர் ஆப்பு ஆன்டனி

Saturday, March 25, 2006

பதில்




















சரி நம்ம புகழ் திக்கெட்டும் தீ போல பரவுதே, இப்படி வளர்ந்து வர்ர நேரத்துல? (இம்சை ஓவர் ஆகிடுச்சின்னு நீங்க சொல்லுறத நான் இப்படி டீசன்ட்ட சொல்லுறேன்) நீ செய்த எலக்கிய உலக பங்களிப்பு என்னவென்ற, சரித்திர உலகின் கால நிகழ்தகவினை எதிர் நோக்கி விடகூடாது என்ற யோசனையில் ஒரு கதை எழுதினேன்.

அதையும் படிச்சிட்டு நல்லா இருக்கு. என்னாப்பு இப்படி சோகமா இருக்கு. பங்கு இப்ப எப்படி இருக்குறார். அப்படின்னு கமென்ட் வேற போட்டுடாங்க. சரி நம்மக்கும் எதோ எழுத வருதுன்னு சந்தோஷமாத்தான் இருந்திச்சி..

சரி எலக்கியம்ன்னு சொல்லிட்டு கதை மட்டும் எழுதிட்டு எஸ்கேப் ஆனா எப்படின்னு ஒரு செக்கன்ட்டாவது யோசிக்கிற சமுதாயமே

வெய்ட் எ செக்கன்ட் பார் 5 மினிட்ஸ்

கவிஞன் ந்னு வந்துட்டா ஒரு பேரு வேணுமே. அதுக்காக பெயர்களை யோசித்துக்கொண்டு இருக்கிறேன். இப்போதைக்கி ஆப்பு ஆன்டனி, மதுர மன்னாரு, சீட்டுகட்டு சிலுவை, சால்னா சரவணன் போன்ற பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. இன்னும் பெயர்கள் வரவேற்கப்படுகின்றது.

-----------

இருந்தாப்புல இருந்து போன வெள்ளிக்கிழமை ஒரு சீமைல இருந்து வந்த இம்சை ஒண்ணு நாங்க எல்லாம் ஒரு கூட்டம். நீங்களும் எங்க கூட்டமா அப்படின்னு கேட்டுடாங்க.

சரி இந்த கேள்விக்கு எல்லாம் ஒரு படி இறங்கி பதில் சொல்ல வேணாம் அப்படின்னுதான் முதல்ல நினைத்தேன். எங்க மறுபடியும் வீக்டேஸ் ல வந்து மூட் அவுட் பண்ணிடுமோ என்ற எண்ணத்தில் கீழே உள்ள அறிக்கை.

" நான் நீங்க நினைக்குற மாதிரி இல்லைங்க. நான் எதோ கணினிய கட்டிக்கொண்டு அழும் அளவுக்கு படித்த ஒரு சாதாரன மனுசப்பய. இந்த மனுச பிறவியில் உங்க கூட்டத்தில் சேரும் எண்ணமோ, நிலையோ இல்லை. நீங்கள் நீங்களாகவே இருக்க கடவுளை வேண்டுகிறேன்"

Friday, March 24, 2006

வீக்என்டு வெட்டி குறிப்புகள்




ஒண்ணும் இல்லைங்க. இந்த வாரம் நானும் என்னோட கூட்டாளியும் St. Louis போனோம். இங்க வந்ததுல இருந்து வாரம் தவறாம DownTown ல தொங்குறமே. அப்படியே சும்மா வண்டிய எடுத்துக்கிட்டு அப்படியே St.Louis போனா என்னன்னு ஒரு ரோசனை. சரின்னு வெள்ளிகிழமை அப்படியே அழுத்திட்டோம். அங்க என்னமோ பாக்குறதுக்கு நிறைய இடமெல்லாம் இருக்கு.. ஆனா நாங்க போனது Zoo மட்டும்தாங்க.. அங்க போய் நம்ம முன்னோர்களை பாத்ததிலயே நேரம் போச்சி.. (டேய் பார்ட்டி வைக்க சொன்னா, எதுக்குடா ஆப்பு வைச்ச குரங்கு மாதிரி முழிக்கிற)..

இத பாக்குறதுக்குள்ளயே டயர்ட்டு ஆகிட்டோம். இங்க வந்து ஒரு வேலையும் செய்யாம, இப்படி பில்டப்பு கொடுக்குறது நா மாட்டும்தான்னு ஆரம்பத்துல நினைச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது இங்கன எல்லாருமே இப்படித்தான்னு..



அப்புறம் ராவுக்கு குடிச்சிகின்னு குத்தாட்டம் போடுற இடத்துக்கு போகலாம்ன்னு ஒரு மெகா பிளான் போட்டா எதோ சர்வர்ல ஞாபகம் உடச்சிகிச்சின்னு (Memory Leak) போன் வந்துடுச்சி. அப்புறம் கால்ல உக்காந்து ஞாபத்தை அடைக்குறதுக்குள்ள நமக்கு பொதும்டான்னு ஆகிடுச்சி.

சரி St.Louis இங்க பக்கதுலதானே இருக்கு. இன்னும் ஒரு 4 - 5 தடவை வந்துட்டா போச்சின்னு முடிவு பண்ணியாச்சி.. அதுனால இனிமே அங்க அடிக்கடி போகுறதுக்கு வாய்ப்பு இருக்கு..

இப்ப ரொம்ப தூரம் வண்டி ஓட்டிகிட்டு வந்ததுனால கொஞ்சம் அலுப்பாத்தான் இருக்கு..

Wednesday, March 22, 2006

ரம்யா ..

டெல்லியில், வந்த சொந்த வேலைகளை முடித்துக்கொண்டு, 4.55 சென்னை ஜெட் ஏர்வேஸ் விமானத்துக்கு மதியம் 2 மணிக்கே ஏர்போர்ட்டுக்கு போனதுக்கு முக்கிய காரணம், கிட்டத்தட்ட 1 வருட காலம் கழித்து என்னுடைய உயிர் நண்பன், பங்காளிய பார்க்க போகிறேன் என்பதுதான்.

இப்பொழுது சிறிது நேரம் தூங்கினால், அப்புறம் கண்ணு முழிக்க முடியும். நேத்து வேற சரியா தூக்கம் இல்ல. .எவ்வளவு விசயம் பேசணும்.

பாத்திங்களா, நாம் பாட்டு பேசிக்கிட்டே இருக்கேன். என்னோட பங்காளிய அறிமுகம் பண்ண மறந்துட்டேன்.

பங்காளி எனக்கு அறிமுகம் ஆனது. எங்க கம்பெனியில் நான் சேர்த்த 2- வது நாள் மதியம் எத்தனை வாட்டி படித்தாலும் புரியாத டிசைன் டாக்குமென்ட்ட வேற வழி இல்லாம பார்த்துகொண்டு இருக்கும் போது

Hi Dude ! அப்படின்னு ஒரு குரல்

Hi, I am Karthik - நான்

Hey, I am Saravanan. Come on let's go out for a lunch - பங்காளி

அப்படின்னு சொன்னான்.

இப்படித்தான் எங்களுக்குள் நட்பு ஆரம்பிச்சது. நம்ம எல்லாம் பஞ்சத்துக்கு ப்ரோகிராமர். ஆனா பங்கு பரம்பரை ப்ரோகிராமர். அவனுக்கு சின்ன வயசில் இருந்து கம்யுட்டர்ல கலக்கணும்ங்குறதுதான் கனவு. அவன் Code எழுதுறதே கவித எழுதுற மாதிரிதான் இருக்கும். ஆளு வேற பாக்குறதுக்கு ஆசை அஜித்குமார் மாதிரி இருப்பான்.

அப்புறம் அந்த மாசத்திலேயே நாங்க 2 பேரும் ஒரே ப்ராஜெக்ட்ல அலாட் ஆனோம். அடுத்த மாசத்திலயே பங்கு என்னோட மேன்சனுக்கு ரூம்மை மாத்திட்டான். ஆபிஸ்க்கு ரெண்டு பேருந்தான் சேத்து போவோம், வருவோம். நமக்கு கம்பெனில 'ஆன்சைட் பிரியன்' நும், பங்காளிக்கு 'ஆன்சைட் வெறியன்' நும் பட்டபேரு இருந்துச்சி. இந்த ஆன்சைட் மேட்டர் தவிர எங்க பேருக்கும் காமன் கிரவுன்ட்ஸ் ஆப் இன்ரெஸ்ட் வேற எதுவும் ஆரம்பத்தில் இல்லை. ஆனா 6 மாசத்தில் எங்களுக்குள்ள ஒருத்தன பத்தி ஒர் ஒருத்தனுக்கு தெரியாத மேட்டர்ன்னு எதுவுமே இல்ல, முதல் காதல், உட்பட :-)

2 பேருக்கும் ஒரே நேரத்துலதான் US விசா வந்திச்சி. 2 பேரும் ஒரே நாள்லதான் வர்றதா கூட பிளான். டாட்காம் கவுத்தல்ல 2 பேருக்கும் ஒரே மாதிரிதான் வேலையும் போச்சி. அப்புறம் 2 பேரும் ஒரே நேரத்துல, ஒரே ஹைதராபாத் கம்பெனில வேலை வாங்குனோம்.

------------------

எனக்கு சின்ன வயசிலிருந்து தண்ணியடிப்பது பற்றி ஒரு எண்ணம்... வாழ்க்கையில் ஏதாவது பெருசா சாதிக்கனும், அதை கொண்டாடும்போதுதான் தண்ணி அடிக்கணும். ..சும்மா ஆ .. ஊ.. ந்னா தண்ணி அடிக்கிகுறதுல எனக்கு உடன்பாடு இல்லை...

இப்படி சொன்னதும் பங்காளி சத்தியமா கோவிச்சுகபோறான்னு எதிர்பார்த்தேன். ஆனா ஒன்னுமே சொல்லாம ஒரு 5 நிமிசம் என்னய பாத்துகிட்டே இருந்தான்.

மாப்பிள கலக்கிட்ட.

அப்ப போட்ட தீர்மானந்தான் ஆன்சைட் சம்பளத்துலதான் இனிமே முதல்ல தண்ணி அடிக்கனும்னக்கறது.

-----------

எல்லாம் இப்பதான் நடத்த மாதிரி இருக்கு. அதுக்குள்ள 4 வருசம் ஆகிபோச்சி. காலச்சக்கரம் தான் எவ்வளவு வேகமாக சுத்துது.

தாகமா இருந்ததால் தண்ணிர் வாங்க போகும் தான் ஏதோச்சையா பார்த்தேன்.

ம்..ம் .. என்ன இது; என்னோட கண்ணா இது. என்னால நம்பமுடியவில்லை. ஏர்போர்ட் கேன்டீன்ல ரம்யா யாரோ ஒருத்தனோட, அதுவும் இடுப்பில் கைகோர்த்துக்கொண்டு. இருவரும் மிகவும் அன்னோன்யமாக.

கடவுளே என்ன இது. இருந்தாலும் இன்னும் ஒரு தடவை அது ரம்யா தான என உறுதியாக தெரிந்து கொள்ள, என்னையும் அறியாமல் எனது கண்கள் அவள் இருந்த இடம் நோக்கி சென்றது. ஆம் ரம்யாதான் அது.

நான் மறுபடியும் அந்த பக்கம் பார்த்த அதே வேளையில், ரம்யாவின் கண்களும் என்னை கண்டுகொண்டது. அந்த நொடியில் என் மனதில் எழுந்த ஆயிரமாயிரம் கேள்விகளை கேட்டுவிட மனது துடித்தது. இதுக்கும் மேல ஒரு நிமிடம் கூட டெல்லியில் இருக்க எனது மனம் விரும்பவில்லை.. கை தானாக செல்லில் பங்காளியின் நம்பர அழுத்தியது.

ரம்யா..
இவளை எப்படி என்னால் மறக்கமுடியும் ?

----------------

நான் டீம் லீடா இருந்த ப்ராஜெக்ட்ல குவாலிட்டி ஸ்சைட்ல ரீசோர்ஸ் கிரன்ச் இருக்குன்னு 4 மீட்டிங்ல நாயா கத்துனதுனால, சீனியர் டெஸ்டர்ரா நியு ரெக்ரூட் ரீசோர்ஸ்ல இருந்து வந்தவங்கதான் ரம்யா..

Karthik, brief about the project to Ramya, and set the expectations. BTW you know one thing, Ramya is also from TamilNadu, She is new to this city . னு பி.எம் சொன்னதுனால சரின்னு அவங்கள பாத்துட்டு, அப்படியே இத சாக்கா வச்சி HR ஸ்வேதா கிட்டயும் ஒரு 30 நிமிசமாவது கடலை போட்டுடனும்ன்னு ஒரு மெகா பிளானோடதான் போனேன்.

பார்மல் இன்ட்ராக்கு அப்புறம், ப்ராஜெக்ட்ட பத்தி ஒரு மணி நேரம் பிளேடு போட்டுட்டு, 'I heared you are from Tamilnadu and new to this city. Let me know if u need any help initially' சொல்லிட்டு வந்தேன். அதுக்கு அப்புறம் HR ஸ்வேதா கூட வேற ஒரு 45 நிமிசம் டீப் டிஸ்கசன். wow, What a long day !

நேரா பங்கு குயுபிகள்ல போய் நடத்தது எல்லாந்தையும் சொன்னேன். ரம்யாவை பார்க்கணும்ன்னு சொன்னான். அடுத்த நாள் இன்ட்ராவும் முடிஞ்ச்சது. அடுத்த வாரகடைசில பாவர்ச்சி பிரியாணி, ஐமேக்ஸ் ல ஒரு படம் வாரம் முடிஞ்சது. அதுக்கு பின்னால வேலை சம்மந்தமா ரம்யாவ பார்க்குறதோட சரின்னு ஆகிபோச்சி. எதோ 2 , 3 தடவை வெள்ளிகிழமை அமீர்பேட்ல ஆ.வி, குமுதம் வாங்கிகுடுத்ததோடு சரி.

----------


ஒருநாள் தூக்கத்தில பங்காளி ரம்யா நு சொன்னதா ஞாபகம். வேலை பளுவில் அதை பற்றி கேட்க மறந்துவிட்டேன். இது நடந்து 1 வாரம் கழித்து பங்காளி மேட்டர சொன்னான். சரிதான் பய விழுந்துட்டான்.

அதுக்கு அப்புறம் என்ன எல்லா காதலர்கள் மாதிரியே எம் பங்காளியும் ஆகிட்டான். அதான், மணிக்கணக்கில செல்ல பேசுறது, கிப்ட் கொடுக்குறது, கரடிபொம்மை வாங்க கட, கடையா ஏறி, இறங்குவது. அவனும் சாப்பிடமாட்டான், என்னையும் சாப்பிட விடமாட்டான். நாளைக்கே என்ன நடக்கும்ன்னு தெரியாம அவனவன் தலைய உருட்டிக்கிட்டு இருக்கும்போது, இவன் என்னமோ 5வது வெட்டிங் டேக்கு என்ன கிப்ட் வாங்கலாம்னும், ரம்யாவோ இவனுக்கு நான் கொஞ்சமும் சின்னவ கிடையாதுன்னு சொல்லிட்டு, சென்னைல ஷிவா (அவங்க பையன் பேராம். ஒருநா எதோ பேச்சு வாக்குல நான் சிவா ந்னு சொல்ல போக, அதுக்கு பெரிய கோவம்) / ஷில்பா (இது பங்கு பொண்ணு பிறந்தா வைக்கபோற பேராம். நான் எதுவும் சொல்லல) எந்த ஸ்குல்ல படிக்கணும், தண்ணிர் கஷ்டம் இல்லாத ஏரியாவுல லோன்ல வீடு வாங்குறது இப்படி போகும்.


இதுக்கு நடுவால எனக்கும், பங்காளிக்கும் வர இருந்த ஆன்சைட் சான்ஸ், இத்துபோன ஆபிஸ் அரசியலில் கெட்டுபோனது. இதுல நான் ரொம்ப மண்டை காஞ்சி

டே மாமா.. கொஞ்சம் தனியா பேசணும். மதியம் கோயிலுக்கு போய்ட்டு, சாயந்தரம் டேன்க்பண்ட் போறோம். உங்கிட்ட நிறைய பேசணும். ஆனா நீ மட்டும் வா. ரம்யா வேனாம், இந்த வாட்டி..

உத்தரவுடா.. மாப்பிள்ள..

------------

இப்படி சொல்லிட்டு கோயிலுக்கு போகும்போது பங்காளி, அவங்களை கூட்டிகிட்டு வந்தது எனக்கு கொஞ்சம் டென்சனாத்தான் இருந்திச்சி. சரி விடு.. சாமி தரிசனம் நல்லா ஆச்சி.. மனசுக்குள்ள பல சிந்தனை ஓடுது..

சரி ரம்யா.. நாங்க 2 பேரும் கொஞ்சம் வெளிய போறோம்... வா உன்னைய வீட்டுல இறக்கி விட்டுறேன்.

கார்த்திக்.. நீங்க எதுனா முக்கியமான டிசிசன் எடுக்கும் போது கோவிலுக்கு போவீங்கன்னு சரவணன் சொல்லிருக்கான்.. இப்ப நீங்க கோவிலுக்கு வந்தது எப்படி நார்மலா... இல்ல..

அது ஒன்னும் இல்லைங்க.. மூட் சரியில்ல.. இந்த ஆன்சைட் மிஸ் ஆனதுல கொஞ்சம் அப்செட் ஆகிட்டேன்...அதான்..

ரம்யா.. கார்த்திக் என்னமோ ஐடியா வச்சிருப்பான்.. நாங்க கொஞசம் தனியா போய்ட்டு வார்றோம்.. சரியா..

இல்ல சரவணா.. நீங்க 2 பேரும் தனியா போகவேணாம்.. எப்படி பார்த்தாலும் கார்த்திக்கு நானும் WellWisher தான்.. வாங்க மூணு பேருமே போவோம்..

சாரிங்க.. தப்பா நினைச்சிகாதிங்க... சரி நீங்களும் வாங்க.. எப்படியும் உங்களுக்கு தெரியத்தான் போகுது..

--

ஒண்ணும் இல்லைங்க... இந்த கம்பெனில இனிமே இருக்க முடியும்ன்னு எனக்கு தோனல.. இருந்தாலும் கேரியர் நல்ல இருக்காது. அதுனால நாங்க 2 பேரும் வேற கம்பெனிக்கு போகலாம்ன்னு...

கார்த்திக்.. என்ன பேசுறிங்க.. எதோ ஒரு ஆபர் மிஸ் ஆனதுக்கு... டிரை பண்ணுங்க.. மத்தபடி கேரியர் எல்லாம் வேஸ்ட்ன்னு சொல்லாதிங்க....

இல்லைங்க ... நான் டிசைட் பண்ணிட்டேன்...

Karthik.. This is stupidity..absolute stupidity... and dont drag saravanan into this stupid decisions ok..

Pls Ramya.. mind your language... I am trying to be good in evreybody's career and life here.. besides you cant decide on behalf of saravanan.. ok.. i know well about saravanan.. ok..

karthik.. this is it.. there is a limit for everything.. i cant tolerate this saravanan.. come on.. let's get out this place now..

சாரிடா பங்காளி.. நான் எதோ கோவத்துல..

மாப்பிள்ள எல்லாம் அப்புறம் ரூம்ல பேசிக்கலாம்.. ஒகே...

--------------

அதுக்கு அப்புறம், 2 மாசத்துல நான் பெங்களூர்ல ஒரு வேல வாங்கிட்டேன். நான் வந்த 3 மாசம் கழிச்சி அவங்க 2 பேரும் ஒரே கம்பெனில வேலை வாங்கிடாங்கன்னு போன் பண்ணிசொன்னாங்க 2 பேரும். அனேகமா வருச கடைசில கல்யாணம் இருக்கும்னும், நான் கண்டிப்பா வரணும்ன்னும் ரம்யா சொன்னங்க.. எப்படியோ பங்காளி நல்லா இருந்தா சரிதான். ஆனா பங்காளி எப்படி ஆன்சைட் மேட்டர லைட்ட எடுத்துகிட்டான்னு எனக்கு புரியல..

என்னா அதுதான் எங்களுக்கு உயிர்.. சுவாசம் எல்லாம்.. பிறகு ஒரு நாள் போன்ல பேசும்போது, எனக்கு வாழ்க்கை, செட்டில்மென்ட் இத பத்தி சரியா தெரியலன்னு ரம்யா குறைபட்டுகிட்டாங்கன்னும் சொன்னான்.

-------

ஜெட் ஏர்வேஸ் சென்னைல டச்டவுன் ஆகவும், பங்காளி போன் பண்ணவும் சரியா இருந்தது..ஒரு வழியா வெளிய வந்து நின்னா, ஓடிவந்து கட்டிபுடிச்சிகிட்டான்.. சரி இப்ப எதுவும் கேட்க வேண்டாம்னு சும்மா இருந்தேன்.

மாமா உங்கிட்ட ஒரு விசயம்டா... சொல்லணும்டா..

ம்.. சொல்லு... எனக்கு கொஞ்சம் மூட் அப்செட்டா இருக்குடா.. அதான் சரியா பேசாம இருகேன்..

என்ன ஆச்சி US போறவனுக்கு.. இன்னும் US 20 நாள்ல போற.. அதுகுள்ள என்ன ஆச்சிடா.. மனசு மாறுதுன்னு மட்டும் சொல்லாதடா மாமா.. சொல்லிடேன்...அதுக்கு முன்னால முதல்ல ரூம் போய் குளி.. எதாவது சாப்பிடு.. அப்புறம் பேசலாம்..ஒகே..

மாமா நீ சொன்னதுக்கு அப்புறம் நான் எதாவது மறுத்து சொல்லிருக்குறேனா..

--

வந்தவுடன் பொன்னுசாமி போனோம். வழக்கமான பேச்சு இருவரிடமும் இல்லை.. அப்புறம் பங்காளியே சொன்னான். 20 நாளைக்கு முன்னால் ரம்யா வந்தது..

"நன்கு யோசித்துதான் இந்த முடிவுக்கு வந்தேன், வீட்டில அவளுக்கு ஒரு US - N.R.Iக்கு நிச்சயம் பண்ணி இருப்பதாகவும், அவங்க காதலுக்கு இன்னும் 1 வருசத்தில் ரிட்டையர் ஆகப்போகும், ஏற்கனவே 1 தடவை ஹார்ட் அட்டாக் வந்த அப்பா ஒத்துக்கொள்ள மறுக்கிறார். மேலும் இந்த ஜென்மத்தில் பெற்றோர் சம்மதத்தோடு கல்யாணம் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.. என்னால் வீட்டை விட்டு வெளியில் வரும் திடமும் இல்லை.. நடந்தது எல்லாம் ஒரு கெட்ட கனவாக நினைத்து என்னை மறத்துவிடுங்கள்.. நான் அடுத்த மாதம் US போகிறேன். எங்க கல்யாணம் இன்னும் 10 நாள்ல இருக்கு. தயவுசெய்து அங்கு வந்து கலாட்டா செய்யவேண்டாம்.. நாம் இனிய நண்பர்களாக இருப்போம்..''

இன்னும் என்னனமோ ரம்யா சொன்னதாக சொன்னான்..

பங்காளி நான் ஒண்ணு கேட்பேன். முடியாதுன்னு சொல்லக்கூடாது. சரியா..

ம்.. சொல்லுடா..

நம்ம போட்ட தீர்மானத்தை இன்னைக்கு இல்லைன்னு நினச்சிகோடா..

கார்த்தி நியாயமா பாத்தா நாந்தான்டா தண்ணி போடனும்.. நானே சும்மா இருகேன்..

பங்கு நீ என்ன சொன்னாலும் நான் கேட்கமாட்டேன்...

---

ஏழ்ன டா நினைஷ்ழ்ட்டு ர்க்காடா அந்த ரம்யா @#$*%^*.. அவழ்ழ்ளோட அப்பன் அழ்த்த டபரா தைழ்யான் சொல்னானாம். இவழ்லும் கேழ்ட்டாலாம்.

ஷாரீடா மாம்மா.. நான் அவழ்ளள அப்டி ஸ்கோல்ட் பண்ணிழ்ருக்க கூடாதுடா..

இவழ்ளோ நடழ்ந்திருக்கு என் கிட்ட ஒருழ் வார்த்தை சொல்ழ்லல..இப்பவும் அவழ்ல திழ்ட்டாம இருக்க பாத்தியா.. மாம்மா நீ ரொம்பழ் நல்லவன்டா. youu R great

காதலுக்கு உண்மையான மரியாதை தரவன்டா.. ஆனா அவழ்க்குதான் அந்த ரம்யா $%&*@! என்ழ்த்த தகுதியும் இல்லடா.. ஆமாம் சொல்லிட்டேன்.


அப்புறம் இன்னும் என்னன்மோ உளறுனேனாம். கதவை திறக்குறேன்னு சொல்லிட்டு ஜன்னல் வழியா போக பார்தேனாம்.. ரம்யா வீட்டுக்கு போன் பண்ணுறேன்னு சொல்லிட்டு, என்னோட செல்ல உடச்சிடேனாம். எல்லாம் பங்காளி சொன்னது


----------------

அப்புறம் US வரும் போது சென்னைல கடைசி நாள் முழுவதும் பங்காளி எங்கூடவே இருந்தான்.. எங்க அப்பா, அம்மா இருந்தனால சரியாவே பேசிக்க முடியல.. எப்ப திரும்பி வருவோன்னு தெரியாது, என்னோட பங்கு இல்லாம நா மட்டும் US போற சோகம். ..

இதுனால என்னால சத்தியமா சந்தோஷமா இருக்க முடியல...

மாமா என்டா இப்படி சோகமாவே இருக்க.. இப்ப நான் என்ன வேல இல்லாம சோத்துகேவா கஷ்டபடுறேன். நல்ல வேலைலதான்டா இருக்கேன்.. 60 வாங்குறேன்.. அதுக்கும் மேல வேணும்ன்னா நீ இருக்க.. எனக்கு என்னடா கவலை..

ம்..ம்..

பாரு ஊருக்கு போற நீ சந்தோஷமா இருடா. அப்பத்தான்டா எனக்கு பெருமை.. சரி அம்மா வராங்க.. கொஞ்சம் சிரி.. கலகலன்னு இருடா..

ம்.. சரிடா

---------

ஏர்போட்டில் வைத்து அப்பா, அம்மாவிடம் சொல்லிவிட்டு கடைசியாக பங்காளிய பார்த்த போது அவன் கண்கள் கலங்கி இருந்தது..

போய்ட்டு வாறேன்டா, I am sure that, I will meet you there soon
அவன் என் கைய பிடிச்சிக்கிட்டு சொன்னது

thanks for everything . I need some time to be alone and to prepare myself for next journey.

பங்காளி கண்ணில் இருந்து 1 சொட்டு கண்ணீர் என் வலது உள்ளங்கையில் விழுந்தது...

Tuesday, March 21, 2006

சந்தேகம்

இதனால் யாரையும் கேலி பண்ணும் எண்ணம் இல்லை

கீழே எனக்குள் எழுந்த சந்தேகம் இதுவரை, பொதுவாழ்வில் (கடையில் குப்பை கொட்டிய வருடங்கள்) என் அறிவுக்கு எட்டிய வரை கேள்விப்படாத ஒன்றாக இருப்பதால்தான்.

போன வாரம் வாரமலர்ல இது உங்கள் இடம் பக்கத்துல சாப்ட்வேர் கம்பெனில வேல பாக்குற ஒருத்தங்க அவங்க அனுபவத்தை எழுதி இருக்குறாங்க.

********************

Text from Dinamalar

' சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் பணியாற்றும் எங்கள் கம்பெனியில் சமீபத்தில் , கண்காணிப்பு கேமராக்கள்சமீபத்தில பொருத்தப்பட்டன. இதற்க்கு பிறகு பெண் உழியர்களான எங்களுக்கு ஆண்களின் உபத்திரம் கொஞ்சம் குறைந்துள்ளது.தேவையற்ற அரட்டையும், வழிசலும் கேமரா மூலம் கண்காணிக்கப்படுமே என்ற பயம் காரணமாக குறைந்துள்ளன. அப்படி இருந்தும் சிலர், பைல்களை கையில் வைத்துக் கொண்டு, வேலை விசயமாக பேசுவது போல 'கடலை' போடுகின்றனர். கருவிகளின் கண்காணிப்பு, நம் குணத்தை மாற்றுவதைவிட, இயல்பான கண்ணியமே சிறப்பு.


கண்காணிப்பு கேமராவுக்கு பயந்து, நாம் வேலை பார்ப்பதை விட, நம் மனசாட்சிக்கும், வாங்குகிற சம்பளத்துகும் பயந்து உண்மையாக உழைப்பதே நல்லது. '

நன்றி : தினமலர்


இதை பற்றி எழுதுவது சில சமயம் தேவையில்லாத சர்ச்சைகளுக்கு வழிவகுக்குமோ என எண்ணி தயங்கினேன். நம் மேல் உள்ள பிம்பம் (பெரிதாக ஒண்ணும் இல்லை என்றாலும்) உடைபடுமே என்ற எண்ணம் வேறு. இருந்தாலும் சில சந்தேகங்கள்

இதை பார்த்தால் என்னமோ இவங்க எல்லாம் காலைல சர்வர்ல லாகி இன் பண்ணி சாயந்தரம் லாக் அவுட் பண்ணூற வரைக்கும் ஹைஎண்ட் கிலஸ்டர் சர்வர்ரே திணறி போற மாதிரி code எழுதுறங்களா. அதுக்காக பசங்க எல்லாம் இப்படி பண்ணவே மாட்டாங்கன்னு சொல்ல வரலை. அதுக்காக இவங்க எல்லாம் இப்படி பண்ணுறதே / பண்ணுனதே இல்லையா என்ன ?

Monday, March 20, 2006

நினைவுகள் - மரணம் தொட்ட கணங்கள் 1


இந்த ஞாயிறுகிழமை கூட்டாளி கூட DownTown ல தொங்குனேன்.(Hangout). அப்ப மிட்சிகன் லேக் பக்கத்துல ஒரு சப்பை ஆக்ஸிடென்ட்டு. அத பார்த்துட்டு வீட்டுக்கு வரும் போது கூட்டாளி அவனோட கொசுவத்திய சுத்துனான். நானும் சுத்துனேன். அத பத்தி உங்களுக்கும் சொல்லாம்ன்னுதான்.

தீக்குச்சி




ஒரு 3 அல்லது 4 வயது இருக்குமென்று நினைக்கிறேன். அந்த வருடம் தாத்தாவின் வீட்டுக்கு சென்ற நான், அதிக நேரம் வீட்டின் பின்னால் இருந்த தீப்பெட்டி பேக்டரிக்கு செல்வது, அதிக அளவில் தீக்குச்சிகளை எடுத்து வந்து விளையாடுவது இப்படி சில நாட்கள் நன்றாகத்தான் இருந்தது. எப்படி நடந்து என்று சரியாக நினைவில்லை. ஒரு நாள் தீக்குச்சிகளுடன் விளையாடிக்கொண்டு இருந்த போது டிரஸ்ல பட்டு நன்றாக எரிய, நான் ஓட, சத்தம் கேட்டு அம்மா வந்து கம்பளியில் உருட்டி தீயயை அனைத்து அதுக்குள்ள பெரிய கூட்டம்.(இந்த கிராமத்துல புது சட்டை போட்டாக்கூட 2 நாளு எல்லாத்துக்கும் பதில் சொல்லனும். இந்த சப்ப மேட்டருக்கு, அப்புறம் எல்லாரும் டெய்லி விசிட்தான். பாவம் நமக்கு தீக்குச்சி சப்ளை பண்ணுன அண்ணன ஊரே திட்டி குமிச்சிருச்சி)

ரெண்டு நாள் ரூம் படி தாண்டல. நான் தொழுவத்துக்கு போகததுனால லட்சுமியும் , குட்டி லட்சுமியும் கத்தி கிட்டே இருந்துச்சாம். மறுநாள் நாம தூங்குபோது ரெண்டுபேரையும், வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க. அப்புறம் 4 வது நாள்ல இருந்து அது சாப்பிடுர நேரத்துக்கு அம்மா என்ன தூக்கிகிட்டு போவங்க. அப்புறம் என்ன 2 மாசம் ராஜ வைத்தியம் தான்.(2-nd டிகிரி பர்ன் நு அப்பா சொன்னதா நினைவு) இந்த 2 மாத காலம் எங்க அம்மா சரியாக சாப்பிட, தூங்க கூட இல்லை. 24 மணி நேரமும் எங்கூடயே இருந்தாங்க. எல்லாம் சரியான பிறகு அப்பாவின் புண்ணியத்தில் காது & முதுகு வலியுடன் 2 நாள் சுத்தியது தனி கதை.


நீச்சல்



3 - வது லீவ்ல நீச்சல் கற்றுகொள்வதாக சொல்லி கிராமத்துக்கு சென்று, பெரியப்பாவின் உதவியுடன் முதல் 2 கிளாஸ் (முதுகில் டின் கட்டிக்கொண்டு) வெற்றிகரமாக முடிந்தது. இந்த கிளாஸ் முடிந்த நேரம் போக காட்டில் பருத்தி எடுப்பது, உரம் கலக்குவது, களத்துமேட்டில் டயர் ஒட்டி விளையாடுவது, கவட்டை, பம்பரம், கோலிக்குண்டு, இன்ன பிற ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளுடன் நன்றாகத்தான் இருந்தது. 3 வது நாள் நம்ம மேல என்ன கோவமோ தெரியல இன்னோரு பெரியப்பா பையன், கயித்தை அவுத்துவிட்டுட்டான். அந்த நேரம் பாத்து வாத்தியார் பெரியப்பா வேற பீடி குடிக்க போய்ட்டார். சரின்னு நானும் கடப்பாரை நீச்சல் கத்துக்கவும், கிணத்து தண்ணிய எல்லாம் குடிக்கணும்ங்கர ஆர்வத்துலயும் உள்ள போய்ட்டேன். சும்மாக்காச்சும் அந்த பக்கம் வந்த பெரியப்பா பீடியோட சொர்க்கு அடிச்சி, என்னோட ஆர்வத்துக்கு தடா போட்டு மேல இழுத்துட்டு வந்துட்டார்.

பாவம் வீட்ல, வாத்தியார் பெரியப்பாவுக்கு திட்டு விழுந்தது. இந்த குரங்குகளை மேய்க்கச் சொன்னா எங்க போனன்னு. நான் பெரியப்பா பீடி குடிக்கத்தான் போனார்ன்னு கடைசி வரைக்கும் சொல்லவே இல்ல. அதுக்கு பலன் ஸ்பெசல் நீச்சல் டிரெய்னிங், கரட்டாண்டி புடிப்பது, புறா & காடை ரோஸ்ட், தினமும் காலைல பதனீர், தெரு முக்குல (ஊரே 10 தெருதான்) இருக்குற கடைல அக்கவுன்ட்ல முறுக்கு & குழல் அப்பளம். 2 மாசம் போனதே தெரியல. ஹூம் அது ஒரு காலம். அதுக்கு அப்புறம் அந்த பெரியப்பா பையனை நேரம் கிடைக்கும் போதெல்லாம் அழ அழ அடிக்குறது எனக்கு ஹாபி ஆகிபோச்சு.


காய்ச்சல்



4 வது படிக்கும் போதுன்னு கா பரீட்சையோ இல்ல அரைபரீட்சை லீவோன்னு நினைக்குறேன். சரியா நினைவு இல்ல. மதியம் வரைக்கும் நல்லாத்தான் இருந்தேன். சாயந்தரம் பம்பரம் மேட்ச்க்கு போறப்ப என்னான்னு தெரியல்ல நடக்ககூட முடியல. அப்பாக்கிட்ட சொன்னேன், நெத்தில கைவச்சி பார்த்தார். டென்சன் ஆனது மூஞ்சிலயே நல்லா தெரிந்தது. நாக்க நீட்டு, கண்ண மூழிச்சி பாரு அப்படின்னு சொன்னாரு. அப்புறம். இந்த கட்டில்ல படு, எங்கயும் விளையாட போகத, அப்பா இப்ப வந்துடுறேன்னு சொல்லிட்டு கிளினிக் போய் சலைன் பாட்டில், ஸ்டண்டு அது இதுன்னு ஒரு ஆஸ்பத்திரி அட்மாஸ்பியரை கொண்டுவந்துட்டார்.. அம்மா & அப்பா ரெண்டு பேரும் டென்சன்னா இருந்தாங்க. அம்மா அழுதுகிட்டே இருந்தாங்க, என்னா நாளைக்கு ராத்திரி தாண்டுனாத்தான் பய பொளைக்குறது இருக்குன்னு சொல்லிட்டாராம்..(இது அம்மா பின்னாளில் சொல்லியது) எப்படியோ சாமியின் புண்ணியத்துல பிழைத்து கொண்டேன். (எதோ Food poison & no body immune நு அப்பா சொன்னதா நினைவு).


தண்ணி






5 - வது படிக்கும் போது தண்ணியடிக்க, குழாய்லங்க (மோட்டர் போட்டா கார்ப்பரேஷன்ல இருந்து வந்து மோட்டரை எடுத்துட்டு போய்டுவாங்க). காலைல 5, 5.30 மணிக்கே அம்மா எழுப்பிவிட்டுடுவாங்க. எப்பவாச்சும் தண்ணி ரொம்ப வேணும்ன்னா மோட்டர் போடுவாங்க. எப்படி நடந்ததுன்னு சரியா ஞாபகம் இல்ல. அம்மா மோட்டர்ல கால் தடுக்கி விழுந்துடுவாங்க என்ற பயத்தில் மோட்டர புடுச்சி இழுத்தேன் சுவிட்ச் ஆன் ல இருந்ததை கவனிக்கலை. எப்படியோ பயங்கரமா ஷாக் அடிச்சிருச்சி. கைய எடுக்க முடியல. அதுக்குள்ள அம்மா சுதாரிச்சி பக்கத்துல இருக்குற கட்டையால அடிச்சி இழுத்து விட்டுட்டாங்க :-)

அதுக்கு அப்புறம் கொஞ்ச நேரம் ஒரே தலை சுத்தலா இருந்திச்சி. அப்புறம் அன்னைக்கு தண்ணி அடிக்க சொல்லவே இல்லை :-)


அதுக்கு அப்புறம் நம்ம இம்சை தாங்கம 6 - வதுல இருந்து போடிங் ஸ்கூல்ல சேத்துட்டாங்க


கணங்கள் தொடரும்...

Saturday, March 18, 2006

என்ன சொல்ல...




Been all about the world ain't never met a girl
That can take the things that you been through...

Can't believe I had a girl like you
And I just let you walk right outta my life
,
After all I put you through you still stucked ....


Cause, without you in my life girl,
I’m Lonely
I have nobody ...







அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்

தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்


(அவளொரு)

மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி

(மரகத மலர்)

நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம் அஹஹஹா

(அவளொரு)

அறுசுவை நிரம்பிய பால்குடம்
ஆடும் நடையே நாட்டியம்

(அறுசுவை)

ஊடல் அவளது வாடிக்கை

(ஊடல்)

என்னைத் தந்தேன் காணிக்கை அஹஹஹா

(அவளொரு)

Thursday, March 16, 2006

என் காதலி

10 நாளா பாருங்க இந்த பொண்ணு நின்னா, நடந்தா, ஒரு லுக் விட்டா, சும்மா பேரு சொன்னாலே போதும் தூக்கம் போச்சி :-). என்னோட இதயத்தை ஹோல்சேல்ல வாங்கிடாங்க(கவனிக்க மரியாதை). என்னோட பொது வாழ்கைல இது மாதிரி ஆனது இல்லை. இதுல என்ன விஷேசம்ன்னா இவங்க என்னோட முதல் காதலி கூட அமைச்ச கூட்டணி இருக்கே. இத எல்லாம் ப்லொக்ல ஒரு பதிவுல எழுத முடியாது. இருந்தாலும் ஒரு முயர்ச்சிதான். [எப்படி இவங்கள இந்தன நாளா மிஸ் பண்ணுனேன்னு நினைச்சா எனக்கே அவமானமா இருக்கு.]


என்னடா ஆச்சி இவனுக்கு வரு.வா.சங், பாட்டு, அறிக்கை இப்படி நல்லாத்தானே இருந்தான்னு நீங்க கேக்குறது எனக்கு புரியுது. இந்தாலும் 10 நாளா இது வேர Additional Responsibility யா வந்துடுச்சி. இதுல வீடு வேர போன வாரம் மாத்திடேன் கடைக்கு பக்கத்திலயே. Recent Past ல என்னய இப்படி யாரும் மண்டை காயவைக்கல. இவங்கதான் இப்ப லிஸ்ட்ல Number 1 இருக்குறாங்க. அதுனாலதான் இவங்களை பத்தி உங்க கிட்ட சொல்லாம்ன்னு.

பில்டப்பு போதும்ன்னு நினைக்குறேன்.

இவங்க பேரு AOP (Aspect Orieneted Programming) . இவங்களை காதலிக்க செய்ய வேண்டியது AOSD (Aspect Oriented Software Development). Real simple Task Buddy :-)


என்னதான் OOPS அழகி அம்சமா இருந்தாலும், சில குறைகள் இருக்கு. நம்ம பாஷைல இதுக்கு 'Cross Cutting Concerns' நு சொல்லாம். இதுகளை அள்ளவும் முடியாது, தள்ளவும் முடியாது.

ஆனா எங்க ஆளு இதை ஈஸியா சால்வ் பண்ணுவாங்க.

கிராஸ் கட்டிங் கன்சர்ன்ஸ் உதாரணம்.

இப்ப ஒரு பேங்க்ல ஒரு ட்ரான்ஸாக்சன்னுக்கு code எழுதுனா அதுல கண்டிப்பா பிஸினஸ் லாஜிக்தான் core.

இந்த code தான் பிஸினஸ் லாஜிக்


void transfer(Account fromAccount, Account toAccount, int amount) {
if (fromAccount.getBalance() < amount) {
throw new InsufficientFundsException();
}

fromAccount.withdraw(amount);
toAccount.deposit(amount);
}


இப்படி Code எழுதுனா Hackers எல்லாம் ஒரே நாள்ல பேங்க கொட்டடிச்சிருவாங்க. இது போக டேட்டா லாஸ் இல்லாம இருக்க DB வேணும். என்ன நடந்ததுன்னு தெரிய Logging வேணும். இது மாதிரி இண்ணும் நிறைய வேணும். அதுனால ரியல் வேல்ட்க்கு பக்கத்துல போற மாதிரி Codeட மாத்தணும்னா atleast இப்படியாவது இருக்கணும்.


void transfer(Account fromAccount, Account toAccount, int amount) {
if (!getCurrentUser().canPerform(OP_TRANSFER)) {
throw new SecurityException();
}

if (amount < 0) {
throw new NegativeTransferException();
}
if (fromAccount.getBalance() < amount) {
throw new InsufficientFundsException();
}

Transaction tx = database.newTransaction();

try {
fromAccount.withdraw(amount);
toAcount.deposit(amount);
tx.commit();
systemLog.logOperation(OP_TRANSFER, fromAccount, toAccount, amount);
}
catch(Exception e) {
tx.rollback();
}
}


இப்ப Transaction, Security, Logging, etc எல்லாம் Cross Cutting Concerns நு தெரியும். இது போக திடும்ன்னு செக்யுரிட்டிக்காக புது வழிய கொண்டுவந்தா, இருக்குற Code புரிஞ்சி அத மாத்துறதுக்குள்ள...

எங்க ஆளு AOP உதவியால இப்படி Cross Cutting Concerns எல்லாத்தையும் தனியா Aspects சா பிரிச்சி எழுத முடியும்.

வழக்கமாக Aspect Programming ல Advice & Joint Points எல்லாம் இருக்கும்.

ஒரு Aspect எப்படி Base Program கூட பேசுதுன்னு முடிவெடுக்குறது Joint Point Model(JPM).

இந்த JPM

1) Aspects ச எப்படி உபயோகப்படுத்துவது.

2) Point Cuts (group of related Joint Points )ல இருந்து எப்படி சரியான Joint Points ச எடுக்குறது. அதாவது எப்படி Regular Expression ச சரியா உபயோகப்படுத்துவது. (Regular Expressions - UNIX ல இருந்த Pattern Matching Technique கிட்ட இருந்து ஆட்டய போட்டதுன்னு நான் நினைக்குறேன்)

3) சரியா எப்படி Advice ச உபயோகப்படுத்துவது. முடிவு செய்யணும்


AspectJ ச 2 மாதிரியா JPM உபயோகப்படுத்தலாம்.


A) PointCuts & Advice (Dynamic JPM)

I) PointCut Code கிட்டத்தட்ட இப்படி இருக்கும்

pointcut set() : execution(* *.set*( Amount Deposit, Amount Withdraw) ) && this(Point);

இதுல RunTime ல method execution, Object Instantiation, Exception Throwing இருக்கும். அதுனால Generally Heavy Mutational Objects எல்லாம் சரியா இருக்காதுன்னு நினைக்குறேன்.

II) Advice Code கிட்டத்தட்ட இப்படி இருக்கும்

after() : set() { Display.update(); }

இந்த Advice, PointCut true வா இருந்தா மட்டும்தான் execute ஆகும். தனியான function மாதிரி கூப்பிட முடியாது

B) InterType Declarations

Code

aspect VisitAspect {
Point.acceptVisitor(Visitor v) {
v.visit(this);
}
}



இதுல நம்மளோட புது Declarations கூட சேத்துக்கலாம்.

சரிப்பு எதோ ஒரு மூளைக்கார பய எல்லத்தையும் Architect பண்ணிட்டான். Code எழுதி முடிச்சாச்சு. இப்ப எழுதுன Code ட எப்படி சரியா Weaving பண்ணுறது. அதுக்குதான் இத்தனை Weaving Techniques இருக்கு.

1) PreProcessor (like C++)
2) PostProcessor (like patching binary files)

The first two options complicate the development process

3) AOP-aware compiler that generates woven binary files (இப்ப இந்த compiler லரத்தான் நோன்டிக்கிட்டு இருக்கேன். நல்லா மண்டை காயுது. என்னா இங்க எதோ பல இடத்தில் Generated Code Change ஆவுது. சாதாரன Code Debugging பண்ணுர விட நிறைய மாறுதல்கள். ( இந்த மரமண்டைக்கு ஒன்னுமே புரியல). இது வரைக்கும் இருந்த Debugging எல்லாம் வேலைக்கு ஆகலை :-( ஒரே லாஜிக் AOP முறையில் எழுதுன Code Profile பண்ணுனா தலைசுத்துது.

4) load-time weaving
5) run-time weaving

The last two options may slow down the program's execution. The last option (run-time weaving) also requires a special aspect-aware execution environment. In the world of Java, this implies a special JVM or other supporting framework.

AOP ல இருக்குற பிரச்சனைகள்

1) Debugging - மண்டை சுத்தமா ஆகும் ஒன்னுமே இல்லாம:-)

2) தெரியாம / புரியாம WildCard ல வர்ர JointPoints . இத தவிர்க்கணும்னா Codeல கை வைக்குறவன் Program specific Naming COnventions பத்தி நல்லா தெரிஞ்சவனா இருக்கனும்.

இவ்வளவு நேரம் நான் போட்ட பிளேடுல யாருக்காவது AOP பத்தி கொஞ்சமாவது புரிஞ்சா எனக்கு சந்தோசம் தான்.

நாணும் இப்பத்தான் AOP பத்தி படிச்சிகிட்டு இருக்கேன்..தப்பு இருந்தா சொல்லுங்க. கரெக்சன் பண்ணிக்குவேன்.. யாரவது அறிவாளி Compiler working (weaving) பத்தி எனக்கு புரியும் படி சொன்னா சிரம் தாழ்த்தி கேட்டுகுவேன்.

பார்த்திபன் & கட்டதுரை

இதே போல் ஒரு அறிவிப்பை என் நண்பன் சிபியும் வெளியிட்டுளார்.

போன வாரம் நான் இருந்த கோர் டிஸ்சன் டீம் ல 2 ப்ராஜ்க்ட் Go Live என்பதாலும் தவிர இந்த வாரம் அது சம்மந்தமான வேலைகள் இருப்பதாலும், இதனுடன் நான் புது வீடு மாறுவதாலும் எங்க சங்கத்தின் தங்க தல, என் கூட்டாளி, எங்க அண்ணன், கண்ணன், அஞ்சாத சிங்கம், வீரத்தின் விளை நிலம் கைப்புள்ள அவர்கள் 'கடமை, கண்ணியம், கட்டுபாடு' என்ற தாரக மந்திரத்தை எடுத்துரைத்து, எனக்கு விடுப்பு அளித்தார் கூட்டாளி கைப்பு.

நான் இல்லாத அதே நேரத்தில் கழக கண்மணிகள் சமீபத்தில் 5 வது மணவிழா கண்ட கோவை கோபுரம் சிபி, வாரிசு கண்ட அன்பு அண்ணன் ILA, இலக்கிய ஆர்வத்தால் உந்தப்பட்டு கவிதை களத்தில் மூழ்கிய டெவ் ஆகிய அனைவரும் சற்றே கண்ணயர்ந்த வேளையில், இதுதான் சமயம் என சில புதிய புல்லுருவிகள் எங்கள் தலைவனை நோக்கி கேள்வி கணைகளை தொடுத்தார்கள் என அறிகிறேன்.

இதனால் எனது கூட்டாளி சிறிதளவேனும் மனவருத்தம் அடைத்தாறெனில், எங்க கூட்டாளியின் நிஜ முகத்தை காண தாங்கமாட்டிர்கள். அதன் முன்னால் எங்கள் வரு.வா.ச. கழக பேச்சாளர்களின் தீப்பொறி பேச்சில் BBQ Grill லில் சிக்கிய சிக்கன் துண்டுகளைப் போல் ரோஸ்ட் ஆகிவிடுவீர்கள் என்று கூறி அமைகிறேன்.

Sunday, March 12, 2006

என்னவளே





தினமும் வகுப்பில்
வாசிக்கும் அழகிய கவிதை
வருகை பதிவேட்டில்
உள்ள உந்தன் பெயர்



நீயும்
நீ சார்ந்தவைகளும் தான்
என் தேசத்தின்
எல்லை கோடுகள்...



என்ன தேடுகிறாய்
என்னுள்ளே
என் இதயத்தை உடைத்து...


வெளியே எடுக்க முயன்றபொழுதுதான்
தெரிந்தது ....
எவ்வளவு ஆழம்
நீ உள்ளே சென்றிருக்கிறாயென்று .....


உன் நினைவாக நான்
எழுதி வைத்திருக்கும்
பக்கங்களை விட
வெற்று பக்கங்கள்
உன் பற்றிய சிந்தனைகளை
அதிகமாக்கி விடுகிறதே....



செவ்விதழ் சேரும்போது ஜீவன்கள் சிலிர்த்தது
ஒவ்வொரு ஆசையாக உள்ளத்தில் துளிர்த்தது
மெல்லிய மேனியும் சில்லென ஆனது
வெட்கமும் சீக்கிரம் விடை பெற்றுப் போனது
ஏடென்று இதயம் இருக்க நூலொன்று இதயம் எழுதாதோ
இளமையின் இலக்கணம் எடுத்து சொல்லிய இளைய கன்னிக்கு....


எனக்கென்னவோ வண்ணம் பூசாத
உன் உதடுகளை தான்பிடிந்திருக்கிறது
உதடு காயமலிருக்க
நீ ஈரப்படுத்தும் அந்த அழகை விடவா
சாயம் அழகை தந்துவிடப்போகிறது.....


என் இடது கன்னத்தை விட
வலது கன்னந்தான் மிகவும் பிடிக்கும்
உன் முதல் முத்தத்தை
அங்கேதான்சேமித்து வைத்திருக்கிறேன்.........


வெளியே வரத்துடிக்கும்
கண்ணீர்....
வார்த்தைகள் இருந்தும்
மவுனம்.....
சத்தம் இல்லா
நெற்றி முத்தம்...
உதடுகள் திறத்தும்
வரமறுத்த வார்த்தைகள்..
நடை மறத்த கால்கள்...
நமது கடைசி சந்திப்பின்
முதல் நொடிமுதல்
கடைசி நொடி வரை
சேமித்து வைத்திருக்கிறேன்...


இந்த வரிகள்
கண்கள் மூடி சிந்தித்ததால் அல்ல
இதயம் கதறி சிந்தியவை.....


உன்னால்
உனக்காக -
உன் நினைவுகளோடு மட்டும் வாழும்
நான்...

Saturday, March 11, 2006

பெண்




பெண்ணல்ல ! பெண்ணல்ல ! ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ,
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ,
சிரிப்பூ மல்லிகைப்பூ,

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாபூ,
அவள் கை விரல் ஒவ்வொன்றும் பன்னீர்பூ,
மை விழி ஜாடைகள் முல்லைப்பூ,
மணக்கும் சந்தனப்பூ,
சித்திரமேனி தாளம்பூ,
சேலை அணியும் ஜாதிப்பூ,
சிற்றிடை மீது வாழைப்பூ,
ஜொலிக்கும் செண்பகப்பூ,

தென்றலைப்போல நடப்பவள்
என்னைத்தழுவக் காத்துக் கிடப்பவள்
செந்தமிழ் நாட்டுத் திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன் துளி
அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையைப் பழகும் பூந்தேரு
மெட்டியை காலில் நான் மாட்ட
மயங்கும் பூங்கொடி



[யாருக்குன்னு சொல்லியா தெரியணும்.]

Thursday, March 09, 2006

பொறுமை




எங்க ஆ காட்டுங்க பார்க்கலாம்.
ஏன் டாக்டர் நீங்க 'ஆ' வ பார்த்ததே இல்லையா

டாக்டர் இவர் எப்ப பாத்தலும் சிரிச்சிகிட்டே இருக்குறார்.
அதை நீங்க ஏன் பாக்குறிங்க?

என்னங்க நாலு கால் பேசிட்டு 1 ரூபா தர்ரிங்க
யோவ் நாலு கால் ஒண்ணு தானே.

படம் போட்டதும் எல்லாரும் தும்முறாங்களே ஏன்
அது மசாலா படமாச்சே... அதான்

அரசியல்வதுகளுக்கு புடிக்காத பிஸ்கட்
'ட்ரூ' பிஸ்கட்

பஞ்சாப்ல சப்பாத்திய எப்படி சாப்பிடுவாங்க
சுட்டுதான்

நீண்ட நாள் உயிர் வாழ என்ன வழி
பெருசா ஒண்ணும் இல்ல உயிர் வாழணும்

மேட்டுர் நீர் மேல பேப்பர்காரங்களுக்கு கோவம்
அதான் மேட்டுர் நீர் மட்டம் நு எழுதுறாங்க

தமிழ்ல 'ரம்பா' மாதம் இருக்கு
அதான் 'தை' மாதம்

UAE-ல போட்டோ எடுத்தா எப்படி இருக்கும்
ஒரே 'ஷேக்'கா இருக்கும்

வெயிட் டே இல்லாத ஹவுஸ் எது
லைட் ஹவுஸ் தான்

அந்த பையன் எதுக்கு டிக்ஸ்னரிய தலைக்கு வச்சி தூங்குறான்.
அவனுக்கு அர்த்தமில்லாத கனவா வருதாம்

இந்த சட்டை தீபாவளிக்கு எடுத்ததா
இல்ல எனக்கு எடுத்தது

[கூட்டாளி மைல் ல கடிச்சது. அப்படியே]

Wednesday, March 08, 2006

' ஸ்னிப்பர் '



நேத்து 'ஸ்னிப்பர்' அப்படின்னு ஒரு படம் பாத்தேன். அதுக்கு அப்புறம் 'ஸ்னிப்பர்' பத்தி எதோ புரிந்தது. என்னடா ஆச்சி இவனுக்கு, யார்ரா அந்த 'ஸ்னிப்பர்' அப்படின்னு கேள்வி கேக்குறவங்களுக்கு,

தமிழ் படத்துல எதோ ஒரு மொட்ட மாடில இருந்து 'கதாநாகனை' ரொம்ப நேரம் குறி பாத்தும், நம்ம தல அப்பத்தான் தன்னோட 'டாவு' பக்கம் திரும்பும்போது கரெக்ட்டா கேன மாதிரி செடில சுடுவாரே அவர்தான் 'ஸ்னிப்பர்' . இந்த மாதிரி சித்தரிக்கபடுவதை நிஜ 'ஸ்னிப்பர்' பார்த்தா சத்தியமா டென்சன் ஆகிடுவாரு.

'ஸ்னிப்பர்'



இந்த வார்த்தையை கேட்டது ஞாபகம் வருவது முகம் தெரியாத உருவம், லாங் கோட், கருப்பு தொப்பி, பெரிய துப்பாக்கி..

'ஸ்னிப்பர்' ட்ரிக்கர்ரரை அழுத்தும் முன், காற்றின் வேகம், அது வரும் திசை, மிரேஜ், கிராவிட்டீ, ஒலி / ஒளி & பாரோமெட்ரிக் கூறியிடுகள் இன்னும் படத்தில் காட்டாத பல.. இந்த சரியான இடத்தை தேட படுற பாடு, அப்புறம் 'இரு உடல் ஒரு மூளை' என்ன ஆச்சர்யமா இருக்கா. 'சிட்டிசன் அஜித்' சொல்லுற மாதிரி 'நான் தனி ஆள் இல்ல', 'ஸ்னிப்பர்' ஒரு குழு.

'ஸ்னிப்பர்'ருடைய முக்கிய கடமை ரிகான்நாஸ்சன்ஸ்(reconnaissance - தமிழ்ல என்னப்பா ?). அதாவது எதிரிகளை பற்றி முக்கிய தகவல்களை கமாண்ட் போஸ்ட்க்கு தருவதுதான். குறிப்பிட்ட வேலை இல்லாத போது 'கழுகு' மாதிரி சரியான சந்தர்பத்தை பார்த்திருபதுதான். 'ஸ்னிப்பர்' பெறும்பாலும் எதிரிக்கு பலமடங்கு சேதம் உண்டுபண்ணுகிற வேலையில்தான் இருப்பார்கள். உ.தா. தண்ணி சப்ளைய நிப்பாட்றது, பெரிய தலைய அசல்ட்டா தூக்குறது, ஆதாரத்துகே சேதாரம்(ஆ பன்ச் டயலாக்கு), ரஜினி டயலாக்குதான் 'ஒரு தடவை சுட்டா 100 தடவை சுட்ட மாதிரி' (என்ன சப்பாத்தியா அப்படின்னு யாரு குரலு குடுக்குறது)

'ஸ்னிப்பர்' கள் தனி ஆளா போகமாட்டார்கள். வேலைக்கு போனா Bourne Supremacy' ல 'தல' கொண்டுக்கிட்டு போற பொருள் இருக்குற பெட்டி ஒண்ணுதான் பெருசு. வேலைல சும்மா நாள் கணக்குல ஆடம, அசையாம இருப்பாங்கலாம்.(ஆங்.... பொறுமை எறுமை மாதிரினு சொன்னது கரெக்ட்தான் போல)


'ஸ்னிப்பர்' குழு

2 பேரு; Shooter - சுடுபவர் & Spotter- பார்பவர். இதுல இந்த 'ஸ்ப்ட்டர்' வச்சிகுற பொருள வச்சி 1000 அடிக்கு அப்புறம் வரவன் தலைல எத்தனை .யிறு இருக்குன்னு கூட எண்ணிரலாம் போல. இது வழியா உலகத்த பாக்குறது தனி சுகம். அத வச்சி நம்ம ஆளு சொல்ல சொல்ல இனிக்குதைய்யா மாதிரி சொல்ல நம்ம 'ஹீரோ ஸ்னிப்பர்' அம்சமா இடத்துல இருந்துகிட்டு குறி வச்சி சொல்லி அடிக்குறாரு..

என்னதான் இருந்தாலும் நம்ம எல்லாம் மனுச பயதானே. தப்பு நடக்குறது சகஜம்தான். இந்த மாதிரி நேரத்துல, மின்னல் மாதிரி இலக்கின் அடுத்த இடத்த சொல்லுற அழகுதான் என்ன. நிலமை கைமீறி போறப்ப, 'ஸ்பாட்டர்' திடிர்ன்னு தோள்ல இருக்குற M-16ன வச்சி போட்டுதள்ளி நிலமைய சமாளிக்குறது என்ன. எல்லாம் அழகுதான்.

'ஸ்பாட்டர்' டாவு மாதிரி எடுத்ததுக்கெல்லாம் கோவிச்சுகிறதே கிடையாது. பின்ன 'ஸ்பாட்டர்' வேலை ஒரு பயிற்சி களம் மாதிரி 'ஸ்னிப்பர்'க்கு.

'ஸ்னிப்பர்' பொருளு



'ஒரு அடி அது மரண அடி' இதுதான் 'ஸ்னிப்பர்க்'கு தெரிந்தது. சும்மா சொன்ன மட்டும் போதுமா அதுகேத்த மாதிரி இருக்குற பொருளுதான் நம்ம M-21, PSG-1. விலை கம்மிதான் $10K :-), இது ரெண்டுலயும் பாரேல், ட்ரிக்கெர், சேம்பர், சில மாற்றங்கள் செஞ்சி ரெடி பண்ணுறங்க. 'ஸ்கோப்' இது நம்ம டெலிஸ்கோப் மாதிரி. 1 கிலோ இருக்கும். காலடி ஸ்கேல் நீளத்துல ஆனால் சில மாற்றங்களுடன்.

'ஸ்னிப்பர்' வேலைல

நம்ம ஆளு வேலை எல்லாம் ரேஞ்ச் தான். இவங்க எல்லாம் 'ஸ்பெசல் ஆப்ஸ்'னு சொல்லுற டீம்ல இருப்பாங்க. சும்மா சாலை மறியல், 10 பேர் ஊர்வல பாதுகாப்பு வேலை இல்ல.

2002 War on Terrorல, Arron Perry using 50-caliber MacMillan TAC-50 rifleல, 2,430 metres (1-1/2 மைல்)க்கு அப்பால இருக்குற ஒரு முக்கியம்மான ஆப்கானிஸ்தான் காமாண்டர தூக்குனதுதான் இப்போதைக்கு ரெக்கார்ட்டு.

இன்னும் எழுத ஆசைதான். இம்மா நேரம் என்னோட பட்டரைய தாங்குனதே பெரிய விசயம். அதுனால இப்போதைக்கு போதும்.

Tuesday, March 07, 2006

சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்



அனைத்து பதிவர்களுக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்

வருத்தப்படாத வாலிப சங்கத்தின் ஒரே வட அமெரிக்க கொ.பா.செ

இவாண்,
F-22 ராப்டர் கார்த்திக்


தாயாய், சகோதரியாய், தோழியாய், மனைவியாய் எங்கள் வாழ்வில் ஒளியேற்றிக் கொண்டிருப்பவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.

Whatever the very real benefits of investing in women, the most important fact remains: women themselves have the right to live in dignity, in freedom from want, financial freedom and freedom from fear. On this International Women’s Day, I dedicate myself to making that a reality

'வாலிப வயசு' உடன்பிறப்பே,



'வாலிப வயசு' உடன்பிறப்பே,

கட்டுபாட்டு, கண்ணியம், இதுகாறும் அரசியலில் தூய்மை இவற்றின் ஒரே பிம்பமாக உள்ள தல 'கைபுள்ள' அவர்களை நோக்கி சிலர் திட்டமிட்டு கை, கால், கேள்(வேள்)வி கணைகளை நடத்தியவர்கள் என்பதை வரலாறு அறியும்.

இருப்பினும் வேல் கொண்டு வீர மறவர் கூட்டம் பெரும் வேட்டைக்கு செல்லும் போது, வழியில் உள்ள பேதை மயிலின் மேல் எரிவது வீணர் வேலை என்பதால் சென்றுவிட்டோம்.

வரு.வா. கழக வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒரு போர் தொடங்கியிருக்கிறது என்பது போன்ற மாயையை ஏற்படுத்த சில அன்னிய சக்திகளுடன் முயன்றுவருகிறார்கள். இது நமது தமிழின பெருமையை உலுக்கிப்பார்க்கும் ஒரு போராய் மாறிவிட்டது. கட்சியில் களை எடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.

கை நீட்டும் பகைப்படை நடுங்க வேண்டுமானால், நாம் பண்பாடு கடுகளவேனும் குறையாமல் சீறிக்காட்டவேண்டும். என்ன இது, ஒரிருவர் கேள்வி கேட்பதால் என்னவென்று, எள்ளவேனும் மந்தமாய் இருந்துவிடுவாயோ என்ற ஐயப்பாட்டுடனே இக்கடிதத்தைத் தொடங்குகிறேன்.

இந்திய துணைகண்டத்தின் அரசியல் எதிர்கால தலைவிதியை(?) நிர்ணயிக்கும் வகையில் எனது அரசியல் நிலைபாட்டை அறிவித்துவிட்டேன். இதையே வட அமெரிக்காவில் உள்ள கட்சியின் ஒரே நீ(நி)தி ஒனர், எனது அன்பு தம்பி, வருங்கால அரசியல் விடிவெள்ளி, F- 22 போல் செயலாட்றும் கார்த்திக் அவர்களின் அன்பின் வார்த்தைக்கு கட்டுபட்டு, அன்மையில் இங்கு வந்த அன்பர் ஜார்ஜ் புஷ் அவர்களும் வரவேற்றுளதை உலகம் அறியும்.

நம் கட்சியின் கண்ணியதை கட்டிக்காக்க வேண்டித்தான் நான் மீண்டும் மீண்டும் கடிதமெழுதிக்கொண்டிருக்கிறேன். இன்னும் நான் செய்யவேன்டியது ஒன்றுதான். கட்சியின் கண்ணியத்தை காக்க, எனது அன்பு தம்பி கார்த்திக் அவர்களை நானே எனது செலவில்(?), கட்சியின் நிதியிலிருந்து அவை குறிப்பில் சொல்ல முடியாத(எனது நலன் கருதி) உடனே வழங்கி, அடுத்த கட்ட நடவடிக்கை கூறித்து ஆலோசிக்க இந்தியாவுக்கு வருமாறு அழைக்கிறேன்.

Monday, March 06, 2006

ஞாயிறு என்பது பெண்ணாக

ஞாயிறு என்பது பெண்ணாக
திங்கள் என்பது அவள் கண்ணாக
செவ்'வாய்' கோவை பழமாக
...


இப்படியா பட்ட ஒரு ஞாயித்துகிழமையில் அதாங்க நேத்துதான், எங்க ஊர்ல சன்னமா Snow வேற அடிச்சுகிட்டு இருந்துச்சி.[சனிகிழமை வேற சரியா சாப்பாடு இல்ல, அதுவும் போக என்னோட ரூம்மேட் காமெடியன் பாலகிருஷ்ணா படம் 2 கொண்டுகிட்டு வந்தான். அத பாத்து சிப்போ சிப்பு]





சரியான தூக்கம் இல்லாம அதிகாலை 9 மணிக்கே எழுந்திரிச்சிடேன், ஒரு வழியா ரெடியாகி பக்கத்து கிராமத்துல இருக்குற கூட்டாளிய பார்க்க போனேன். இந்த Snow அடிக்கறப்ப, கூட்டமே இல்லாத ரோட்ல, வண்டி ஓட்டிக்கிட்டே, தூரத்தில் கேட்டதாக கற்பனை கொண்ட சர்ச் பெல் ஓசை, அப்பத்தான் ரொம்ப முக்கியமாக சவுன்டு விட்டுகிட்டே புல்ல தோண்டுர இந்த வாத்து & அது நடந்து நடந்து கால் தடம் பதிஞ்சத பார்த்தா என்னமோ புது மாடல் எம்ப்ரயாட்ரி துணி மாதிரி இருக்கும், ஊரே சும்மா Surf ல முக்கி வச்ச மாதிரி Snow இது எல்லாம் ஒரு சுகானுபவம்னா, எவனுமே இல்லாத ரோட்லயும் ஈல்டு, ஸ்டாப்பு சைன், காப் வண்டிய பார்த்துட்டா கண்ணு தன்னால ஸ்பிடு செக் பண்ணுறது இது எல்லாம் ஒரு மாதிரியான இம்சை.

இதுமாதிரியான ஒரு கலந்துகட்டுன உணர்வோடு போய்கிட்டே இருக்கும் போது நேரம் பாத்து, இந்த பாட்டுகள் வேற கேட்டேன்


அழகே அழகு.. தேவதை...
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மன கண்கள் சொல்லும் பொன்னோவியம்......
மூங்கிலே தோள்களோ
தேன்குழல் விரல்களோ

ஒரு அஙகம் கைகள் அறியாதது ......


ஷ்னோரீட்டா ஐ லவ்வ் யூ மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ...

வானெங்கும் ஊர்வலம்
வா(வெ)என்னும் உன் முகம்
கண்டால் மயக்கும்
கலந்தால் இனிக்கும்

பூங்காற்று உன் பேர் சொல்ல
கேட்டேனே இன்று ....

ஏழு ஜென்மங்கள் ஆனாலும் என்ன
ஜீவன் உன்னோடுதான்
....

ராஜாவின் முத்தம் கொள்ளும்
ரோஜா பூ கன்னம்
... (இந்த பாட்டுவரிக்கு பின்னால பெரிய கதை இருக்கு, அது இன்னுமொரு கொசுவத்தில)


என்ன ஆச்சுன்னு தெரியல சும்மா ஒன்ற மணி நேரமா ஓட்டியும், வீட்ட காணோம், எப்படி வரும் 59ல நார்த்ல போனா. நம்ம கூட்டாளி வீடு சவுத்ல. தலைல அடிச்சிகிட்டு ஒருவழியா போய் பாத்தா, அம்புட்டு பெரிய சட்டில, கால்வாசி சிக்கன்பிரியாணிதான் இருந்தது. பயங்கரமா கோவம் வந்தாலும், இன்னும் கொஞ்சம் செய்டா சொல்லிட்டு, 'கள்வனின் காதலி'ங்கர காவியத்த பாத்துகிட்டே சாப்ட்டு முடிச்சேன்.


நயன்தாராவுக்கு என்னால முடிச்சது



அம்மா நயன்தாரா கொஞ்சமாவது பெரிய மனசு பண்ணி சாப்பாட்ட ரேசன்ல சாப்டு தாயே. '52' இன்ச் டீவில பாத்த என்னலயே தாங்க முடியல. காசு கூடுத்து தியேட்டர்ல பாக்குறவன் நிலமை பாவம்தான்.

அப்புறம் அங்கயே பட்டரைய போட்டு நைட்டும் இருக்குற எல்லா சட்டியையும், காலி பண்ணிட்டுதான் கிளம்புனேன்.

சும்மா கூட்டாளி வீட்டுக்கு போனேன், சாப்ட்டேன், வந்தேன். இப்படி பதிவு போட்டா நல்லா இருக்காதுன்னுதான்; ஹி ஹி

பதிவின் நீதி - (கொஞ்சம் பழசுன்னாலும்) சரியான நேரத்துக்கு சாப்பாட்டுக்கு போகணும்.

Sunday, March 05, 2006

நாலு என்னோடது - I am tagged

இந்த டிஸ்கவரி சேனல்ல பாத்தா காட்டுல வேட்டைக்கு அப்புறம் முதல்ல சிங்கங்கள் எல்லாம் மெதுவா சாப்பாட்ட அடிச்சி ஆடும். அதுக்கு அப்புறம் மத்த சின்ன பசங்க விளையாட்டுல தலைய காட்டுவாங்க.



கொங்கு ராசா( நம்ம முதல் காதல். நான் எதையோ நெட்ல தேடி போய் முதல்ல பார்த்த வலை பதிவு). இளவஞ்சி, இவங்க பதிவ எல்லாம் ஒரே நாள்ல படிச்சேன். அதுல ஆரம்பிச்சதுதான் என்னோட தமிழ் எலக்கிய பிளேடு. பின்னாளில் ப்லொக்ல உதவியது அனந்த், குமரன் & Agent(8860336)ஞான்ஸ்(இப்பவும்). இவங்க எல்லாம் ஆரம்பிச்சி வச்ச இந்த திருப்பணி(?)ல, இப்ப நம்ம கூட்டாளி கைபுள்ள கோத்துவிட்டுடாரு. இது பத்திய ட்ரைலர்


சரி இப்ப மைய்ன் பிளேடு இங்க





நான் இருந்த / இருக்கும் நாலு எடம்

1) மதுரை
2) ராஜம் மேன்சன் புகழ் சென்னை
3) ஹைதராபாத் & பெண்களுர்
4) அமெரிக்கா

நான் பார்த்த / பார்க்கும் நான்கு பணிகள்

1) வெட்டி பய (இவன் வாழ்கைல தேறமாட்டான்னு அப்பா & சொந்தகாரர்கள் எல்லாரும் சொன்ன வேலை)
2) புரோகிராமர்
3) சீனியர் இன்டெக்ரேசன் அனலிஸ்ட்
4) வெட்டியா ஊர் / நெட்ல மேயுறது

மதுரையில் புடிச்ச நாலு எடம் ( நாலு மட்டும் அல்ல)

1) வீடு
2) மீனாக்ஷி அம்மன், திருப்பரங்குன்றம், அழகர் & திருமோகூர் கோயில்கள் (லிஸ்ட் இன்னும் இருக்கு)
3) எல்லீஸ் நகர் & எஸ்.எஸ் காலனி, (பதின்ம வயதில் சைக்கிள் டயர் தேய சுத்திய இடங்கள்)
4) காலேஜ் ஹவுஸ் & டவுன் ஹால் (சும்மாவாச்சும் கோயில பாத்துகிட்டே சுத்தி சுத்தி நடக்கலாம்)

ரசிச்சு பாக்குற / பாத்த நாலு டிவி நிகழ்ச்சி

1) ஜெயா டிவி ல மதியம் 1 மணிக்கு வர்ர காமெடி ஷோ & விஜய் டிவில வர்ர சந்தானம் ஷோ
2) போகோ டிவி
3) கார்ட்டூன் சேனல்
4) டாம் & ஜெர்ரி டிவிடி கலெக்சன் ( நமக்கு காமெடின்னா ஹி ஹி )

சினிமாவில் புடிச்ச நாலு பேரு

1)மொட்டை
2)கமல்
3)சேரன்
4)விக்ரம்

சினிமாவில் புடிச்ச நாலு பேரு (ஹி ஹி)

1)சாவித்ரி
2)சில்க் ஸ்மிதா
3)மாதவி
4)ஷில்பா ஷெட்டி

புடிச்ச நாலு உணவு வகைகள்

நோ.. நெவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இதுக்கு மட்டும் நான் கட்டம் காட்டி வெறும் நாலு சமாச்சாரத்தை சொல்லமாட்டேன்.. நாங்கெல்லாம் அன்லிமிட்டட் மீல்ஸ் சாப்ட்டுட்டு, ஒரு பார்சல் சிக்கன் பிரியாணி வாங்குற ஆளுக. இருந்தாலும்

அம்மா வைக்கிற கருவாடு குழம்பும் பழைய சாதமும்

பார்க்க விரும்பும் நாலு இடங்கள்

1) Europe
2) எகிப்து
3) சவுத் ஆப்ரிக்கா
4) பிரேசில்

வாழ்கையில் புரியாத நாலு தருணங்கள்

1) சரியாக படிக்காமல் (மெடிக்கல் சீட் கிடைக்காததால்) அப்பாவின் குட்புக்கில் இப்பவும் இல்லாதது.
2) பதின்ம வயதில் முதலும் கடைசியுமாக பெண் நண்பியிடம் தொலைபேசியதால் செமத்தியா அடிவாங்கியது
3)எத்தனையோ தடவை ட்ரெய் பண்ணியும் மிஸ்ஸான Europe வேலை வாய்ப்புகள்
4) இங்க வரும் போது எதை நோக்கி இந்த ஓட்டம், இன்னும் எத்தனை காலம்

புடிச்ச நாலு தலைவர்கள்

1) சுபாஷ் சந்திர போஸ் & சர்தார் வல்லபாய் பட்டேல்
2) சே குவேரா
3) அடால்ப் ஹிட்லர்
4) ஆப்ரகாம் லிங்கன்

எனக்கு பிடித்த நாலு பேர்(relatives)

1) எங்க அம்மா (My first in all)
2) செல்வராஜ் (எங்க சொந்தகாரர். நான் காலேஜ் படிக்கும் போது இவரை மாதிரி பஞ்சு வியாபாரம் செய்ய ஆசைபட்டேன். விட்றுந்தா அந்த லயன்ல போய் இருப்பேன்)
3) வேலு அண்ணா
4) ராமகிருஷ்ணன் (family friend)

எதிர்பார்க்கும் நாலு நிகழ்வு

1) சீனியர் சொல்யுசன்ஸ் ஆர்க்கிடெக்ட் (வேலைலதான்)
2) M.B.A டிகிரி(இங்க)
3) இந்த ஊருக்கு பதில் Europe ல எங்கனாச்சும் வேலை ட்ரான்ஸ்பர்
4) வாழ்கையில் எங்க ஊருக்கே திரும்பி போகும் காலம்

நான் அழைக்கும் நாலு பேர்

1) Boston Bala
2) அனந்த்
3) முகமூடி
4) முத்து (தமிழினி)

இவர்கள் எல்லாரும் தொடர்ந்தால் சந்தோசம் அடைவேன்.

Friday, March 03, 2006

கைபுள்ள வந்துகிட்டே இருக்கேன்

நம்ம கைபுள்ள என்னயும் இந்த நாலு ஆட்டதுல கோர்த்துவிட்டுடாரு.இங்க வீக்கெண்டு & வீக்டே ஒண்ணும் வித்தியாசம் இல்லாம வேலை போட்டுவாங்குது.



சரி சங்கதல, கூட்டாளி நம்ம வீடு வரைக்கும் வந்து வேற சொல்லிட்டாரு. இதுக்கு மேல ரெஸ்பான்ஸ் இல்லனா எங்க சங்கத்துல சொல்லி கட்டதுரையோட வந்து அடிச்சிட்டா என்ற மருவாதியாலும், இதயத்தில் இடம் கொண்ட கூட்டாளி என்ற பாசத்தாலும், எங்கள் அண்ணன், கண்ணன், அஞ்சாநெஞ்சன், கண்துஞ்சா கர்ம வீரன், தமிழ்தாயின் இளையமகன், நாலும் தெரிஞ்ச நல்லவன், வல்லவன், காதல் தளபதி [இன்னும் சொல்ல ஆசைதான், ஆபிஸ்ல கடமை என்னை அழைக்கிறது] கைபுள்ள அவர்களின் அன்புக்கட்டளையை சிரமேர்க்கொண்டு, நானும் இந்த நாலு சங்கிலி பதிவில் என்னை இணைத்து கொல்கிறேன்[படிக்கிற புண்ணியவான்களே உங்களைதான்]

என் தாய்திருநாடாம் இந்திய மண்ணில் திங்கள் உதிக்கும் அந்த திங்களில், இது பத்திய பதிவோடு உங்களை சந்திக்கிறேன்