Monday, February 27, 2006

அரசியல் பாட்டு ?



இந்த படத்தை பார்த்ததும் எனக்கு இந்த பாட்டு தான் ஞபாகம் வந்தது.


take a risk
take a chance
make a wish and
breakaway



பார்ப்போம் இன்னும் எத்தனை பேரு இந்த பாட்டை பாடப்போறங்கன்னு

கேள்விகள்

234 தொகுதிகளில் 9 இல் மட்டும் போட்டியிட்டு 5% எப்படி பெறமுடியும்?

Sunday, February 26, 2006

அவள்




அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்


(அவளொரு)

மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி

(மரகத மலர்)

நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம் அஹஹஹா

(அவளொரு)

அறுசுவை நிரம்பிய பால்குடம்
ஆடும் நடையே நாட்டியம்

(அறுசுவை)

ஊடல் அவளது வாடிக்கை

(ஊடல்)

என்னைத் தந்தேன் காணிக்கை அஹஹஹா

(அவளொரு)

---------------------------------------------------------------------------




கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்து உக்காங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்

ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே
என் நரம்போடு வீணை மீட்டியதே
மனம் அவந்தானா இவன் என்று திடுக்கிட்டதே

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோ

உன் நரம்போடு வீணை மீட்டியதோ
உன் உயிர்க்குள்ளே காதல் அம்பைத் தொடுத்திட்டதோ

விழியோடும் தீண்டல் உண்டு விரலோடும் தீண்டல் உண்டு
இரண்டோடும் பேதம் உள்ளது

விழித்தீண்டல் உயிர் கிள்ளும் விரல் தீண்டல் உள்ளம் கிள்ளும்
அதுதானே நீ சொல்வது

நதியோரப் பூவின்மேலே ஜதிபாடும் சாரல் போலே
என்னில் இன்பதுன்பம் செய்குவதோ

ஒரு கன்னம் தந்தேன் முன்னே மறு கன்னம் தந்தாய் பெண்ணே
ஏசுனாதர் காற்று வந்து வீசியதோ

உறவின் உயிரே உயிறே என்னைப் பெண்ணாய்ச் செய்க
அழகே அழகே உன் ஆசை வெல்க

கடலோடு முத்தம் தந்தும் கலையாத வானம் போல
உடலோடு ஒட்டிக்கொள்ளவோ

உடலோடு அங்கும் இங்கும் உறைகின்ற ஜீவன் போல
உன்னோடு கட்டிக்கொள்ளவோ

உனைத் தேடி மண்ணில் வந்தேன் எனைத்தேடி நீயும் வந்தாய்
உன்னை நானும் என்னை நீயும் கண்டுகொண்டோம்

பல பேர்கள் காதல் செய்து பழங்காதல் தீரும்போது
பூமி வாழப் புதிய காதல் கொண்டுவந்தோம்

பனியோ பனியின் துளியோ உன் இதழ்மேல் என்னபனியோ தேனோ

நீ சுவைத்தால் என்ன

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்படி தாண்டாய்...
படி தாண்டாய்...படி தாண்டாய்...படி தாண்டாய்...

Friday, February 24, 2006

நினைவுகள் - 5 ரூபாய்





மதியம் SubWayல பில் கொடுக்க பர்ஸ்ச திறந்தா பணம் இல்லை.(5 டாலர் இருந்ததாக ஞாபகம்), இந்த ஊருக்கு வந்ததுக்கு அப்புறம் சில சமயத்தில் இவ்வாறு நிகழ்கிறது, 3 கழுதை வயசு ஆச்சினு எங்க அப்பா சொல்லுற மாதிரி ஒரு குரல் மனசுக்குளே.(இல்லைனாலும் நிஜம் அதான்டானு சொல்லுறது நீங்க சொல்லுறது கேக்குது. அடங்கிடேன்). சரி ஒரு கழுதைக்கு எத்தனை வயசு ?.

சரி சொல்ல வந்ததை மறத்துட்டு, என்னமோ வெட்டிபேச்சு வேற...

சரின்னு கடங்கார அட்டைய இழுத்துட்டு சாப்ட்டு இருக்கும் போது ஒரு கொசுவத்திசுருள் வந்துடுச்சி. சரி வேலை வேற இல்லையா, அதான் அப்படியே. இது நான் காலேஜ் படிக்கும் போது நடத்தது. (இந்த வெட்டி கதைய சொல்லவா இம்புட்டு பில்ட்டப்பு).

நம்ம காலேஜ் சேந்த ஒரு செமஸ்டர் வரைக்கும், எல்லாம் காசுக்கு அவ்வளவு பஞ்சம் இல்லை.என்னா சரியான செட்டு சேரல. எனக்கு ரூம் நம்பர் போட்டவன் எதோ பழக்கூட்டத்தில் மாட்டிவிட்டுடான்.(ஆனா காலேஜ் முடிக்கும் என்னோட முதல் ரூம்மு, நீயெல்லாம் என்னோட ரூம்முன்னு வெளிய சொல்லி, எம்மானத்தை வாங்காதனு சொல்லுற மாதிரி ஆனது வேற நிலமை) இது பத்தி பின் வரும் நாளில் எழுதப்படும்

மெல்ல மதுரைகார பயலுகலா செட்டு சேத்திச்சி.பணத்தட்டுபாடும் வந்துருச்சி. ஒக்கமக்கா ஒரு நாளு வீட்டுக்கு போககூட காசு இல்ல. சரி ஹாஸ்டலயே இருக்கலாமுன்னு சொல்லுர அளவுக்கும் நிலமை இல்லை. சரின்னு ரூம்ல Bond வேலை பாத்ததுல ஒரு 20 ரூபா தேரிச்சி. இன்னும் ஒரு 15- 20 ரூவா கிடைச்சா சுகவாசியா வீட்டுக்கு போகலாம்.(நான் படிச்ச ஊர்ல இருந்து மதுரைக்கு 25 ரூவா டிகெட்டு காசு). சரின்னு என்னோட கூட்டாளி கனிராஜ்(ரொம்ப பாசகார பய. பசின்னு சொன்ன போதும், எப்படியாச்சும் ஒரு முட்டைபரோட்டாவாச்சும் வாங்கி குடுப்பான். இப்ப கப்பல்ல நாடு, நாடா சுத்துறான். கெரகம் நான் இங்க கெடக்கேன்) கிட்ட கேட்டேன். அவன் என்னடானா "பங்கு நானே உங்கிட்ட கேக்கலாமுன்னு இருக்கேன், மதுர வரைக்கும்தான்டா எங்கிட்ட ரூவா இருக்கு; உசிலம்பட்டி போகணுமே அப்படினான்".

எல்லா பயவகலும் ஊருக்கு போய்ட்டே இருக்குராங்க. ஒரு 30 ரூவாவாச்சும் தேத்தனும்ன்னு சொல்லிட்டு ஒவ்வொறுத்தன்கிட்ட போய் "மாப்பு ஒரு 50 ரூவா குடுடானு சொன்னா எல்லாரும் 50 ரூவா இல்லடானு சொல்லிட்டு 5 - 10 ரூவா குடுத்து சாரிடானு சொன்னானுக" சரி இப்படியே ஒரு 70 ரூவா தேரிடுச்சி.

சரின்னு சந்தோசமா மதுரைக்கு போய் ஆரபாளையத்துல ஆளுக்கு 2 முட்டபரோட்டா & டபுள் ஆம்லேட் தின்னுட்டு, நேரா நாம்ம வீட்டுக்கு போய், மறுபடியும் நல்லா வீட்டு சாப்பாடு சாப்ட்டுட்டு, அம்மா கிட்ட ஒரு 50 ரூவா வாங்கி நம்ம கூட்டாளிய பஸ் எத்திவிட்டுட்டு வந்தேன்.

அதுக்கு அப்புரம் காலேஜ்ல எப்ப காசு தட்டுபாடுனாலும், இந்த 5 ரூவா டெக்னீக்க வச்சி ஒரு 2, 2.1/2 செமெஸ்டர ஓட்டுனோம்.அதுக்கு அப்புரம் இந்த டெக்னிக் எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சி.அதுக்கு அப்புறம் பயலுக ரொம்ப உஷ்ரா "மாப்பு 100 ரூவா குடுக்குரேன்.அப்புறமேட்டு கண்டிப்பா குடுத்துடுடா கன்டிசனா சொல்லிடுவாங்க"

இது மாதிரி யாருக்காவது 'உழைத்து உயர்த்த உத்தமர்கள் :-) ?' கொசுவத்தி இருந்தா சொல்லுங்க.

Thursday, February 23, 2006

IT அதிகாரம்

திருக்குறளின் 140 அதிகாரம் (IT அதிகாரம்னு ஒன்ன கண்டுபுச்சிடாங்கலாம்). என்னொட நண்பன் இந்தியாவுல இருந்து mail la சொன்னான்.

Bug கண்டுபுடித்தாரே ஒருத்தர் அவர் நாண
Debug செய்து விடல்.

Copy Paste செய்து வாழ்வாரே வாழ்வார்
மத்தவரெல்லாம் Code எழுதியே சாவார்.

எம்மொழியை மறத்தார்க்கும் Job உண்டாம்
Job இல்லயே 'C' மறத்தார்க்கு.

Logic & Systex இவ்விரண்டும் கண்ணென்பர்
Program செய் பவர்

எதுசெய்யார் ஆயினும் compile செய்க செய்யாக்கால்
பின்வரும் Syntex Error

எது தள்ளினும் Project ல் Requirement
தள்ளாமை மிக சிறப்பு

பிறர் Code நோக்கான் எவனோ
அவனே Techie Fundu

Voice Chat எனில் Skype Chatசெய்க இல்லயேல்
Voice Chat டாலின் Voice Chat டாமை நன்று

Project, Bench & E-Mail இம்மூன்றும்
Programmer வாழ்வில் தலை

சொன்னதுதான் சொன்னான், அதுல 1 மிஸ்ஸாவுது. யாரவது சொன்னா நல்லாருக்கும்

Wednesday, February 22, 2006

சுப்ரமணிய பாரதி

அடிக்கடி நமக்கு நாமே படித்துக்கொள்ள வேண்டிய மகாகவி பாரதியின் வரிகள்

தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்
மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ


- மகா கவி சுப்ரமணிய பாரதி






இந்த வரிகளை படிக்கும் போதோ, இல்லை எங்கோ யாரோ சொல்லும்போது, எனக்கு என் அம்மாவின் நியாபகம்தான் வரும். எனது மிகசிறு வயதில்[1 வகுப்பு], அம்மா இந்த வரிகளை சொல்லசொல்லுவார்கள், பிறகு வரிகளின் அர்த்தம் மனதில் பதியும் படி சொல்லுவார்கள்.

பாரதி என்ற மகா கவி எனக்கு அறிமுகம் ஆனது இப்படித்தான்.

அம்மாகிட்ட நேத்து தொலைபேசியதில் இருந்து, அவர்களின் நினைவாகவே இருந்தது.[பல நல்ல விசயங்களை என் சிறு வயதில் ஆசானாக சொல்லியது, பதின்ம வயதில் இருந்து நல்ல நண்பனாக இருப்பது... இப்படி பல நினைவுகள்]

என் அம்மாவின் நினைவுகளுடன்,
கார்த்திக்

Tuesday, February 21, 2006

நேத்து ராத்திரி




வழக்கம் போல இதுவும் ஒரு பொலம்பல் பதிவுதான். சரி ஒரு 3 வாரமா ஒக்கா மக்கா வேலை போடுவாங்கிடுச்சி. சரின்னு நேத்து எதாவது கொஞ்சம் நல்ல சமைச்சி சாப்பிடலாமுன்னு சொல்லிட்டு, சிக்கிரம் வீட்டுக்கு வந்து ஒரு ரேஞ்சா சமைக்க ஆரம்பிச்சேன். என்னோட ரூம்மேட் வந்து பாஸ் இன்னக்கி நான் சமைக்கிரேன், நான் வந்ததுல இருந்து நீயே சமைக்குற "so u take rest, i will take care of every thing. dont worry i am a good cook" னு சொன்னான்.

சரி பாதி வேலை ஆச்சு இனி ரசம் & குளம்பு கொதிக்குரது தானே பாக்கி இதுல போய் "he cant screw things" சொல்லிட்டு ஒகேடா "take care " நு தூங்கிடேன்.

ஒரு 10 மணி வாக்குல எந்திரிச்சி,நல்ல பசிக்குதே இவன் இன்னுமா சமைக்குறான்னு நினைச்சிகிட்டே "what's up buddy, is dinner ready" னு கேட்டேன்

என்னமோ 5 வருச ப்ரஜெக்ட்ட 5 நாள்ல முடிச்சவன் மாதிரி ஸ்டில் குடுத்தான். என்னடா ஆச்சினு கேட்டா "every thing is ready, just waiting for you dude" நு சொன்னான்.

சூப்பரப்புனு சொல்லிட்டு ஒருவாய் வச்சா .........

நன்பன் பாரபட்சமே இல்லாம ரசம் & சிக்கன் கிரேவில போட்ட

பொடி & பேஸ்ட் லிஸ்ட்

சாம்பார் & ரச பொடி, கரம் மசாலா, மிளகா பொடி, சிக்கன் மசாலா, ginger, garlic & tamarind paste, ப்ரிஜ்ல இருந்த சல்சா கொஞ்சம், உப்பு ரொம்ப போட்டதால 2 எலுமிச்சம் பழம் வேற

போடத பொடி & பேஸ்ட் லிஸ்ட்

பினாயில், டூத் பேஸ்ட், ஷேவிங் கீரிம், பல்லி உருண்டை,அழகு சாதன கீரிம்கள் & பாத் லிகுட்

இந்தியால இருந்து இந்த இம்சையன் வந்து 4 மாசம்தான் ஆச்சி. இவன திட்டி என்ன ஆகபோகுது.

எவன்டா இந்தியால பசங்க எல்லாம் சமயல் செய்யகூடாதுனு சொன்னனோ அவனை மனசுகுள்ள திட்டிகிட்டே McD ல தின்னுட்டு கம்முனு மறுபடியும் தூங்கிடேன்

நன்றி - agent 8860336 ஞான்ஸ்

நன்றி,



நமக்கு வந்த சந்தேகத்தை ஒக்கடுவாக வந்து தீர்த்துவைத்த agent 8860336 ஞான்ஸ்க்கு நன்றி, நன்றி, நன்றி. முதல் வேலையாக கடைக்கு போய், காசு கொடுத்து எம்பேர சொல்லி தேன்முட்டாய் வாங்கி சாப்பிடவும்.

பட்டைய போட்டச்சே. சாமி குத்தம் போய் 'அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்' ல எம்பதிவு தெரியுமா ?

இவான்
கார்த்திக்

பின்குறிப்பு

இங்கு தரமான, நயமான பதிவுகளை படிக்கலாம்.

அனைத்து பதிவுகளுமே 'மதுரை முட்டைபரோட்டா' போல சுவையாகவும் 'சாத்தூர் காரசேவு' போல மொறு மொறுப்பாகவும் இருக்கும் என்று உறுதியாக கூறுவேன்.

பதிவுகள் அப்படி இல்லாத பட்சத்தில், இதுதான்டா நல்ல பதிவு என்று சொல்லனும்[எப்படி மோசமாக இருந்தாலும்] அல்லது அது எலக்கிய பதிவாக கருதப்படும்.

Sunday, February 19, 2006

யாருனா பதில் சொல்லுங்க





என்னத்த சொல்ல கஷ்டபட்டு ஒரு பதிவு நானே சொந்தமா எழுதி மண்டபதுல வச்சேன்ப்பு. நமளோட 'எலக்கிய' தரம் வாய்ந்த ? பதிவயும் பாத்துட்டு கொஞ்ச பெரியவங்க நல்லா எழுதுறனு [சுயவிளம்பரம்னு வந்துட்டா] பாரட்டி பின்னூட்டத்துல வேற சொல்லிட்டங்க.

இதுல தலைகால் தெரியாமா ப்லொக்கே கதினு இருந்து எப்படா "அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" பகுதில வருமுன்னு பாக்குறேன், பாக்குறேன் வரமட்டேன்னு அடம் புடிக்குதுங்க .

எதுனா சாமி குத்தமா இருக்குமோ ?

இல்ல நம்ம பதிவுல உள் / வெளி / சைடு / ஆள எலக்கிய தரம் இல்லயா ?

இல்ல நம்ம பதிவு எல்லாம் பதிவே இல்லயா ?

இப்படி தனியா புலம்புற மாதிரி ஆகிபோச்சே !!!

யாரவது எனக்கு help ண்ணுங்க .

Saturday, February 18, 2006

இதயதிருடன் & பரமசிவன்




முன்னுரை

அப்படி இப்படினு மண்டபத்துல அதாப்பு தமிழ்மணத்தில் பதிந்து விட்டேன்,எதுக்குனா நம்மலோட பங்குகளிப்பும் தமிழ் சமுதயத்துக்கு வேனுமுன்னு 'எலக்கியவாதிகள்' கிட்ட இருந்து ஒரே வேண்டுதல்

ஆனால் என்னுடைய புது இடுகைகளை எப்படி வெளியிடடுவது என்று தெரியவில்லை. சரி ஆபிஸ் வேலைய ஆரம்பிக்கும் முன்னால் கொஞ்சம் முயற்சி செய்கிறேன். எத பத்தி சொல்லுரதுனு தெரியல.சரி நேத்து நான் பட்ட இம்சைய நீங்க யாரும் படகுடாதுங்குற நல்ல எண்ணதுல, என்னொட சோக கதைய சொல்லுறேன். நேத்து கைப்பு போட்ட 3D படத்தை பல அங்கிள்ல சாப்பாடு செய்ய மறத்து போய், மொறச்சி பாத்ததுல சத்தியமா வவுத்துபசிதான் வந்தது. சரினு ரெஸ்டரென்ட்டுல எப்பவுமே சுடவச்சிருக்குற இம்சைய தின்னுட்டு, வழக்கம்போல பாஷை தெரியாம ஹிந்தி டிகெட்டுகிட்ட பல்ல காட்டியே சமாளிச்சிட்டு, சும்மா வரம நமக்கு நாமே திட்டதுல வேட்டு வச்சிகிட்டேன்.


பாகம் - 1 இதயதிருடன்



வழக்கம் போல இதுவும் லாஜிக் இல்லாத காதல் கதை. வாணி விஸ்வநாத், அந்த கம்பீரம் அசர வைக்கிறது

கேள்விகள்

1)பார்பர் ஷாப்பில் தலையை கொடுத்துவிட்டு கண்களை மூடி நித்திரையில் இருக்கும் போது அவ்வப்போது அரைகுறை ஆடையில் வந்து முகத்தில் வாட்டர் பம்ப் செய்கிற காம்னா மட்டும் புத்துணர்ச்சி. ஆனால் இந்த ட்ரெஸ்சில் எந்த டிகெட்டு காலேஜ்க்கு வருதுனு சத்தியமா தெரியலப்பு. யாருகாச்சி தெரித்தால் கண்டிப்பா சொல்லவும்.

2)எதுக்கு எல்லா தமிழ் படத்துலயும் வாத்தியர், ப்ரொப்ரெஸ்சர் போன்ற மரியாதைக்கு உரிய கரெக்டர் எல்லாம் கிண்டல் பண்ணுறங்க.

3)இந்த அவுட் அன்ட் அவுட் காதல் கதையில் நாசரும்[பாவம் நல்ல நடிகர் வேற], அந்த தலை நரைத்த தொழில் அதிபரும் எதற்கு ரகசியமாக நடமாடுகிறார்கள் என்பதுதான் கடைசி வரைக்கும் புரியவேயில்லை.

4) அப்பு சந்தானம் இந்த இன்டர்வெல் மேட்டர தவிர வேற எதுவுமே தெரியாதா.முடியலப்பு சொல்லிடேன்.


அறிவுரை

1) என்னக்கு என்னமோ ஜெயம் ரவி = பயம் ரவி மாதிரி இருக்கு. பாத்துப்பு இப்படி படமா நடிச்சி உனகே ஆப்பு வச்சிகாத சொல்லிடேன்ப்பு.

2) ஞானசம்பந்தன் சார் நாம லெவல் என்ன. நம்ப போய் !!! [நம்ம பக்கத்துவீட்டுகாரரை ரொம்ப குத்தம் சொல்ல கூடாதுல்ல]

3) வைரமுத்து, கிரேசி மோகன், சுரேஷ் அர்ஸ், விக்ரம் தர்மா போன்ற பலமான பின்புலங்கள்!!!!! ம்ம்ம்ம்....

பாகம் - 2 பரமசிவன்

"குயில புடிச்சு கூண்டில் அடைச்சு கூவ சொல்லுகிற உலகம். மயில புடிச்சு கால உடைச்சு ஆட சொல்லுகிற உலகம்...."

இந்த நிலமை பாவபட்ட ரசிககண்மணிகளுக்கும் & அஜித்க்கும் தான். கதைய மண்டபத்துல எல்லாரும் அலசி, காயபோட்டுடதால அந்த ஜோக்கு நோ ஒன்ஸ்மோர். வாசு சித்தப்பு நீங்க நக்மா தொபுள்ல ஆம்லெட்டு போடதுக்கு அப்புரம் உங்க படம் தலைய வைககூடதுனு கொள்கை முடிவுலதான் இருந்தேன். அதை சமீபத்தில் உடச்சதுக்கு 'சந்திரமுகி' ல வலது கன்னத்தில் அறைசிங்க. மறுபடியும் இரக்கமே இல்லாம 'பரமசிவன்' ல இடதுகன்னத்துலயுமா. சத்தியமா முடியலப்பு சொல்லிடேன்.

கேள்விகள்

1)டைட்டில்பார்க்கிலருந்து போன் பேசிமுடிக்கும் முன் ஊட்டிக்கு வர்ர ரோடு எது ? கொஞ்சம் சொன்ன நல்ல இருக்கும். இல்ல அம்புட்டு நேரம் சார்ஜ் இருக்குற மொபைல் எதுப்பு ? காதலர்கள் நலன் கருதியவது ..

2)விவேக் காமெடி எல்லாம் இருக்குன்னு சொன்னங்க. கடைசி வரைக்கும் கானோம் ?


அறிவுரை

அஜித் நல்லா நடிக்கணும், அப்படினு இருக்குறப்ப சுதானமா பாத்துப்பு. த(றுத)ல மாதிரி படுத்தாப்பு. உன்னோட கரியர் பாத்து சொல்லிடேன்.

ஒரு ஆறுதல் என்னனா

'ஆறிலும் சாவு.. நூறிலும் சாவு.. ஆதி பாத்தால் அன்றே சாவு'னு என்னொட சகா சொன்னதாலும், அதன் ஒரிஜினல் தெலுங்கு படம் பாத்தால் தப்பிசேன்

Wednesday, February 15, 2006

நினைவுகள் - ராஜம் மேன்சன்




கார்த்திக்
ராஜம் மேன்சன்,
ரூம் # 22,
14, HMA தெரு,
திருஅல்லிகேனி,
சென்னை 5.

உலகத்தில் எந்த மூலைக்குப் போனாலும், எத்தனை வருடங்கள் ஆனாலும் என்னால் மறக்க முடியாத முகவரி.எனக்கு யதார்த்த வாழ்க்கையின் அத்தனை முகங்களையும் புரியவைத்த / காட்டிய முகவரி...இது சத்தியமா என்னோட சுயபுரணம் மட்டுமே. வேலை வெட்டி இல்லாதவர்கள் தொடரவும். போர் அடித்தால் மன்னிக்கவும்.

##################

அது ஒரு மிகக் குறுகிய சந்து.ஆனால் அதிலும் அசால்ட்ட கார் ஓட்டிகொன்டு வருவான் என்னோட மேன்சன்மேட் ராஜாமணி.[அவனை பத்தி பின்னால்]. அந்த தெருவில் பழைய & புதிய வீடுகள் எல்லாம் சமவிகித்தில் இருக்கும்,ஆனால் எல்லாம் மிகவும் சிறிய வீடுகள். அந்த சிறிய வீட்டில் எப்படி இத்தனை பேர் வசிக்கமுடியும் என்ற எனது ஆரம்ப கால ஆச்சரியம் விரைவில் காணமல் போனது. காலை நேரத்தில் மேன்சனுக்கு தண்ணி கொண்டு வரும் லாரி & மேன்சனுக்கு பின்னால் இருக்கும் வாழகாய் மண்டிக்கு லோடு கொண்டு வரும் லாரி மதிய, மாலை & இரவு நேரத்தில் விளக்கு கம்ப மண்ணின் மைத்தர்கள் என HMA தெரு களை கட்டியிருக்கும்.
###############
நான் வந்த புதிதில் இதை கவனிக்கவில்லை. அப்போ எல்லாம் என்னோட உலகம் எல்லாம் வேர.[JAVA & US]. ஆபிஸ், எதோ ஒரு மெஸ், Java Complete Reference புத்தகம். எப்படியோ கம்பெனியில் H1B விசா வேறு.[கால் தரையிலே இல்லை எனலாம்]. ஒரு சுபயோக சுபதினத்தில் கிளம்பவேன்டியதுதான் பாக்கி. கம்பெனிகாரன் வச்சான் ஒரு ஆப்பு. US போக இப்போதைக்கு முடியாதுன்னு, சரின்னு மனசை தேத்திக்கிட்டு இருந்தேன். என்னோட நன்பர்கள்கிட்ட, 2001ல கண்டிப்ப இந்த கார்த்தி US-ல இருப்பான்டானு சவால் விட்டுருதேன் பின்னால நடக்கபோற மேட்டர் தெரியாம. அந்த சமயத்தில் என்னொட நினைவுக்கு வந்த வசனம் - தன்னோட விடாமுயர்ச்சி & தன்னம்பிக்கையில் மனம் தளராத விக்ரமாதித்தன் மறுபடியும்... நான் அவனோட குரு இந்த மேட்டர்லனு, இதை என்னோட சகாகள் கிட்ட முதல் தடவை சொன்னேன். இப்பவும் எந்த மேட்டர்ல ஆப்பு ஆனாலும் எனக்குள் சொல்லும் வசனம் இதுதான். US போகவில்லை என்ட்றதும் வீட்டில் & ரிலேடிவ்ஸ் கிட்ட இருந்த 1 % மருவதியும் போச்.[இல்லைனாலும் மருவதி எல்லாம் இல்லை] & வந்தது இலவச ஆலோசனை ரம்பம். இந்த அடியில் இருந்து நான் தெரித்த பாடம் பல.

அதுக்கு அப்புரம் 01ல இருந்த கொஞ்ச ஆசையும் சுத்தமா நிரவிவிட்டது 911 சம்பவம். பின்னலயே வந்தது சூப்பர் ஆப்பு கம்பெனி மூடல் வைபவம். நம்மளை கண்டுகிரதுக்கு சுத்தமா ஆள் இல்லை. வேலை ஒன்னும் கிடைக்கவில்லை. எப்படியோ 2 மாசம் ஆச்சி. வந்தது சவுதிஏர்லைன்ஸ்ல வேலை Ad. எப்படியோ Aptitude, Attitude & Altitude இன்னும் இருக்குர எல்லா 'tude' ப்ரசஸ் எல்லாம் clear பண்ணி நம்ம technical ஏரியாவுல என்ட்ரிய குடுத்து அவன் கேட்ட கேள்விக்கு எல்லாம் என்னமோ Lawrence J. Ellison (Oracle corporation) ரேஞ்ச்க்கு பதில் சொல்லி, கடைசி ஆளை போய் பாத்த அவனும் அவன் பங்க்கு 10- 15 கேள்விய கேட்டு ' your profile is very impressive but your primary skillset is java not oracle.At this time we are looking for Oracle professionals.you would be given first preference for future jobs.thanks for your time ' னு சொல்லிடான்.
அடுத்த மாதம் அப்படி இப்படினு ஒரு இன்டர்வியுல எல்லாம் ஓகே ஆகி கடைசில ஜெர்மன் தெரியாத காரனத்தால் ரிஜெட்டு ஆனது.சரின்னு உக்கந்து யோசிச்சதுல வந்துச்சி யோசனை.ஜெர்மன் படிச்சி அடுத்த வேலைய வங்கிட்டுதான்டா அடுத்த பேச்சுனு சொல்லிட்டு விசாரிச்சி Maxmuller Bhavan[Goethe Institut]ல சேந்தாச்சு. நடுவால [ நம்ம சகா அவனும் மதுரைதான்] கமலகண்ணண் அவனோட அண்ணண் பாலசுப்ரமணியம் வேர இதுல கூட்டாளி ஆகிடாங்க. அப்புரம் மேன்சன் எல்லாம் ஜெர்மன் எலக்கியம்தான். மேன்சன்னே ரணகளம் ஆகிடுச்சி. ஆனா வேலை என்னமோ வரலை.
இப்படி போய்கிட்டு இருக்குரப்ப நமக்கு புது சகா வேர கிடச்சுடான். அவந்தான் Mr. ஏழ்மை. எப்படி வரம இருக்கும். அத பத்தி எல்லாம் கவலை படுற நிலைமைல இல்ல. கோர்ஸ் முடிச்ச நேரத்துல என்னோட சகா சேவியர்[ரூம் 29] காண்டக்டுல ஒரு ஜெர்மன் இன்டெர்வியு சிக்கிடுச்சி. அப்பத்தான் என்னோட இன்னுமொரு சகா & என்னோட பள்ளி சூப்பர் சினியர் லீயாசத் வேர கால உடச்சிகிட்டாரு.அது ஒரு பெரிய்ய சோககதை.வேலை வேர போச்சி. சரினு அவருக்கும் ஜெர்மன் எலக்கியதை சொல்லி, படிக்கவச்சி எல்லாருமா கடவுள் புண்ணியத்துல வேலை வாஙகியாச்சு.விசா பேப்பர் வரதுக்கு 5 நாள் இருக்கும் போது மருபடியும் ஆப்பு.இந்த மாதிரி அடுத்தடுத்து வரிசையா 4-5 ஆப்பு. சரி நமக்கும் வெளி நாடுக்கும் ஒத்துவராதுனு சொல்லிட்டு. வயித்துபொளப்புக்கு ஒரு சின்ன வேலைய்ய தேடிகிட்டேன்.
இந்த காலகட்டத்தில் சென்னைல இன்டர்வியுனாலே அது ஒரே நடைதான்.சகாகள் எல்லாம் பேப்பர்ல போட்டு இருக்குனு சொல்லிட்டு இப்படி நடத்தே போரயே கார்த்தி அப்படியும் ஒருத்தனும் கண்டுகரலயே !!!
இந்த காலகட்டத்தில் ரொம்ப பாப்புலர் டயலாக் '30 ரூபாய், 30 ரூபாய் டா குடுத்தா 3 நாள் கண்ணு முயிச்சி வேலை பார்பாண்டா இந்த கார்த்தி'

இந்த சில மாதத்தில் பணம் இல்லாமல் வாயைக் கட்டி, பல நேரத்தில் வயித்தை கட்டி நாட்களைத் தள்ளியது நான் அனுபவித்த முதல் ஏழ்மை
இப்பவும் நண்பர்கள் பேசிகிட்டா ராஜம் மேன்சன் பத்தி ஒரு வார்த்தை கன்டிபாக இருக்கும்.

Thursday, February 02, 2006

ஆனந்த் - ஆராய்ச்சி




ரிஜென்ட (சும்மா ஒரு 2 வாரமாதான்) அனந்த் அனந்த் நு ஒரு படம் பார்தேன். அதிலிருந்து எனக்கு பல உண்மைகள் தெரிந்தது.

பட கதை.

ருபா(கமலினி முகர்ஜி) அப்பா, அம்மா இல்லாத ஒரு பெண்.அவளுடைய குடும்பம் ஒரு விபத்தில் இறந்துபோகிறது.இதுக்கு காரணம் அனந்தோட(நாயகன்) அப்பா. ஒரு நாள் தண்ணீய போட்டு வண்டி ஓட்டி accident பன்னிடுரான்.

ருபாவின் காதலிக்கபட்ட திருமணம் ஒரு நியாயமாண (இருபக்கமும்?)காரணத்தால் நின்று போகிறது. இதை கவனிக்கும் ருபாவால் கவரபட்ட அனந்த் (நாயகன்) ருபாவின் வீட்டுக்கு குடி வருகிறான். மெல்ல மெல்ல ருபாவின் நண்பி(டிக்கெட் நல்லா இருக்கு)அப்புரம் ஒரு குட்டி பொண்ணு துனையுடன் ருபாவ காதலிக்கிரான்.ஒரு கட்டத்தில் ருபாவுக்கும் ஒகே தான். அச் உசுஅல் காதலில் ஊடல், பாடலுக்கு அப்புரம் காணமல் போகிரது.
இதுக்கு நடுவால hero வொட அம்மா வது ருபாவ வந்து பொண்ணு பாக்குரஙக.அனந்த் ருபா parents accidental death கு அவனோட அப்பாதான் காரணமுணு சொல்லுரான்
ஒரு லாஜிகல் discussion கு அப்புரம் happy என்டிங் தான். பாட்டு எல்லாம் நல்லா இருக்கு.
அட்வைஸ்
சப்டைடில் கூட பாருஙள்.
ஆராய்ச்சியின் கண்டுபுடிப்புகள இங்க லிஸ்ட் போட்டு குடுத்திருக்கேன். மேற்க்கொண்டு யாராவது அவுங்களோட கண்டுபுடிப்பிகள குடுத்தாலும், ஏத்துக்க தயாரா இருக்கேன்..
கேள்விகள்
1) கர்னடக சங்கிதம் எல்லாம் எதுக்கு குல்டி பாட்ட இருக்கு ?)
கண்டுபிடிப்புகள்
1) டிcகெட் ட பிக்கப்பு பன்னனுமுன்ன அதுக்கு ரொம்ப நேரத்தை ஒதுகனும்.
1அ) இருக்குர வேலை வெட்டி ய விட்டுப்புட்ட ரொம்ப நல்லது.
2) மான ரோசம் எல்லாம் பாக்ககுடாது.
2அ) டிக்கெட் என்ன வேலை சொன்னலும் இதுக்கு தன் வெயிட்டின்னு சொல்லனும்.
2ஆ) டிக்கெட் ப்ரெண்டு கும் நமக்கும் ஒரு நல்ல அலைவரிசை பில்டப்பு இருகணும்.
3) தண்ணிய்ய போட்டு டிக்கெட்ட போயி பாக்ககுடாது.
4) தம்மு, தண்ணீய போடுரதுக்கு முண்ணால் யாரும் நம்மளை பாக்கலைனு உறுதியா தெரிஜிகனும்.
5) டிக்கெட் வந்து பேசுனா ஒவர் பில்டப்பு கொடுக்ககுடாது. (ஒவர்பில்டப்பு உடம்புக்கு ஆகாது)
6) டிக்கெட் எவ்ளோ திட்டுனாலும், சட்டுன்னு அதை மறந்துட்டு, டிக்கெட் கிட்ட மறுபடியும் நட்பாக்கிக்கனும்.
7) டிக்கெட்டோட சுக / தூக்கத்தில் அக்கரையா இருக்கனும் / காட்டிகணும்.