Sunday, April 30, 2006

Ayrton Senna da Silva - 12

F - 1 உலகின் ஐகான், தனி தன்மை படைத்தவன், தனக்குவமை இல்லாத் தலைவனின் 12 வது ஆண்டு நினைவஞ்சலி.



Ayrton Senna Da Silva (March 21, 1960–May 1, 1994)




சிறு வயதில்




உலக புகழ் மஞ்சள் ஹெல்மட்






In Pit (களத்தில்)









வார்த்தைகள் இல்லை






*******

அடுத்து வந்த மொனாக்கோ ரேஸில் போல் பொசிஸ்சன் இடம் Ayrton Senna da Silva என்று எழுதப்பட்டு 2- வது இடத்தில் இருந்துதான் ரேஸ் தொடங்கப்பட்டது.

Saturday, April 29, 2006

Go Chelsea.. Go Blues






2 வது நேரடி முறையாக EPL எனப்படும் English Premier League சாம்பியன்ஷிப் ஐ வென்ற எனது அணியின் சிங்கங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

Stampford Bridge இல் கொண்டாட்டம்








தல பிராங் லாம்பார்ட்




ஜூன் மாதத்தில் வரும் உலகமே பார்க்கும் ஒரு விழாவாக, WorldCup Football 2006 திருவிழா வரும் நேரத்தில், இந்த மேட்சில் இங்கிலாந்தின் இளம் நம்பிக்கை நட்சத்திரம் ரூனே (Rooney) காயம் அடைத்தது சிறிது வருத்தமே.

Friday, April 28, 2006

என்னவள்

ஒரு கோடி பூக்கள் கொண்டு என் ஜோடி பூவை செய்தானோ ?





உன் விழிகளின் அருகினில் என் வானம்
விழிகளின் வெகு தொலைவினில் என் தூக்கம்
என் ஐந்து புலன்களில் ஏக்கம்

உன் பெயரை சொல்லி என் இதயத்தில் தித்திதேன்
உன் சுவாசத்தில் இன்று வாழ்கிறேன்
இது ஏன் என்று யோசித்தேன்

உன்னை சந்தித்தேன், உன் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல





சுவடின்றி என்னுடன் நடந்திடும் உன் பாதங்கள்
ஒலியின்றி என் உதடுகள் உன்னுடன் பேசும்
தனிமையில் பெரும் புயலென வெளிவரும் என் சுவாசம்
பசி நீர் தூக்கம் இல்லாமல் ஊயிர் வாழ்கின்ற மாயங்கள்
ஆழ் கடல் போல் அமைதியாய் இருந்திட்ட மனம்
இன்று துளி துளியாய் சிதறியதே.





என் இதயமே உன் பெயரை சொல்லி துடிக்கிறதே
ஐம்புலனும் என் மனமும் எனக்கெதிராய் செயல்படுதே
உன் சிரிப்பெனும் புயலில் என் மனம் தத்தி தடுமாறுதே
உன் நினைவு என்னை கத்தி இல்லாமல் கொல்லும்





இதழ் தாண்டாத வார்த்தைகள், இமை ஆடாத பார்வைகள்
கேட்காத ஓசைகள், இவை நான் கொன்ட மாற்றங்கள்
இதிலிருந்து மீள வழியுள்ளதா ?

Friday, April 21, 2006

மெய்யாலுமா

இன்போசிஸ் மற்றும் TCS இல் வேலை செய்யும் வாலிப வயோதிக அன்பர்களுக்கு ஒரு நற்செய்தி. உங்களுக்கு இன்னும் ஒரு தடவை கூட திருமணம்(?) நடக்கவில்லையா. நீங்கள் அதிஷ்டசாலிகள். உங்கள் கடை நடத்தும் இந்த சூப்பர் பம்பர் ரெடி. நீங்க ரெடியா ?

உங்கள் கடையிலே வேலை செய்யும், திருமணம் ஆகாத பெண்களுடன் ஒரு லைனில் செட் ஆகி அடிக்கடி இந்திய பொருளாதாரம் பற்றியும், உலக அமைதி குறித்தும், ப்ராஜெக்ட் பற்றி மட்டுமே அடிக்கடி ரெஸ்டாரன்ட், பீச் சினிமா தியேட்டர்களில் டீப் டிஸ்கசன் பண்ணுரீங்களா ?

நீங்கள் கல்யாணம் செஞ்சிகிட்டா உங்க கடைல இருந்து ஒரு லட்ச ரூவா கல்யாண மெய் பணமாகவும், எதோ ஒரு வெளிநாட்டு பயணமும் ஒரு B-Segment காரும் தாரங்களாம். இந்த அரிய வாய்ப்பு ஒரு தடவைதான் கிடைக்கும். போனா வராது. வாலிப வயோதிக அன்பர்களே முந்துங்க. காரு & மொய்பணத்தை அள்ளுங்க

மேல் விவரங்களுக்கு இங்க இடிங்கப்பு.

(http://www.outlookindia.com/full.asp?fodname=20060424&fname=Jobs+%28F%29&sid=1&pn=2,)

உங்களுக்கு கல்யாணம் ஆகி மொய் பணம் வந்ததும் , இந்த அன்பு தம்பிய மறக்காம கண்டுக்கோங்க. கல்யாணத்துல சாப்பாட்ட பாத்தி கட்டிட்டு நீங்க கொடுக்குற பணத்தையும் (கேஷ்,D.D, ஆன்லைன் ட்ரான்ஸ்பர் மட்டுமே) வாங்கிகிட்டு, அதோட போகம வெளிநாடு போகும் போது வந்து வழியும் அனுப்பி வாழ்த்துவேன்.(கட்அவுட் & போஸ்ட்டர் செலவுகள் எக்ஸ்ட்ரா)

கூட்டாளியின் பிரிவு

வெள்ளி கிழமை

அதிகாலை ஆப்ஷோர் கான்பெரன்ஸ் கால் !
காலை சிக்காகோ ஆபிஸ் !
அரக்க பரக்க வேலை !
மதியம் DownTown ஆபிஸ் ரிப்போட்டிங்க் !
ஈவினிங் கூட்டாளிகள் பிக்கப்பு !

முன்னிரவு 'பார்' இல் பார்ட்டி !
இனிமேல் கூட்டாளிக்கு இல்லை வேலி !
இன்று இது எங்கள் உலகம் !
உலகம் எங்கள் பாக்கெட்டிலே !
கால்கள் பறக்குது ராக்கெட்டிலே !
இரவு பொழுது எங்கள் பக்கம் !
விடிய விடிய கொண்டாடினோம் !

வீரன் என்ற படம் பார்த்துவிட்டு
தெலுங்கு, தமிழ் வுட் எல்லாம்
ஒரு கலவை அலசல் !


******

சனி கிழமை

காலை B2B Hub கான் கால் & வேலை !

மதியம் சியர்ஸ் டவர் !
மாலை இளவெயில் நேரம்
மிச்சிகன் லேக், அரட்டை !

எனோ தெரியவில்லை இபொழுதெல்லாம்
மிச்சிகன் லேக் வந்தால் தான் எதோ நிம்மதி !

பின்னிரவு குத்தாட்ட ஜாலி !
எங்கு நோக்கினும் கட்டழகு பெண்களின் புரட்சி !
அவர்களின் உடைகளில் பெரும் வரட்சி !
அதில் அப்பட்டமாய் தெரியும் திரட்சி !
பக்கத்தில் பாய் பிரன்ட் (பாடி கார்ட்) பார்த்து மிரட்சி !

எங்கேயும் காதை செவிடாக்கும் சங்கீதம் சந்தோஷம் !
இங்கேயும் பல ரவுண்டு உற்சாகம் !

உற்சாகம் வந்து சாத்திரங்கள் ஓடிவிட !
ஆசை நூறு வகை, பெண்கள் 4 வகை
என்று மனதில் பாடிக்கொண்டு !
வாழ்த்து விடு இந்த நிமிடத்தை
என்று நினைத்துகொண்டு !
கைகள் ஆறும் தட்டிக்கொள்ள !

காண்பவை கண்கொள்ளா காட்சி !
கொண்டவையோ இளமை கோலம் !
இரவு முழுக்க இன்ப மயம் !
ஆடிக் களைத்த கால்கள் கெஞ்ச !
தேடி ஒரு இடத்தை பிடித்து
பசிக்கு பல ஐய்ட்டங்கள் ஆர்டர் செய்து !

தத்து பித்து பழங்கதை பேசிக்கொண்டு !
நினைவுகள் தாய்நாடு நோக்கி ஓடிச்செல்ல !
வரம்பு இல்லாமல் செலவு செய்து
உயரப் பறந்து கொண்டாடினோம் !
பேசி முடியாத கதைகளை ஒதுக்கி விட்டு
அதிகாலை 5 மணிக்கு வீடு திரும்பினோம் !


******

ஞாயிறு

7 மணிக்கு குளித்து விட்டு முன்னிரவு
பின்னிரவு செய்த பாவங்களிருந்து விடுபட
அரோரா, லேம்பார்ட் கோவில்கள் தரிசனம் !

வந்ததும் கூட்டாளியின் கை வண்ணத்தில்
பிரியாணி, சிக்கன் 65 கடைசியாக !

பிரிவின் சோகம் தீர்க்க
அழகாய் இருக்கிறாய்
பயமாய் இருக்கிறது திரைப்படம்

கடைசி தடவையாக லக்கேஜ் & டீக்கெட் செக்கிங்
இலவசமாக அறிவுரைகள் :-) !
ஏர்போட்டில் டிராப் !

ஒத்த சிந்தனையுள்ள
கூட்டாளியின் பிரிவு
சோகம் தான் கண்டிப்பாக !

கூட்டாளி போற ஊர்
அரைகுறை ஆடை மேனி !
அங்கே இது ஒரு ஹாபி
கூட்டாளி நீ அனுபவி !


*******


வீரன்

வழக்கமான கரம் மசாலா கொஞ்சம் அதிகமாகவே சேர்க்கப்பட்ட படம். கதை ஒண்ணுமே இல்ல. மாஸ் எப்படி ஊரே நடுங்குற வில்லன் கிட்ட இருந்து, கரெக்ட்டு பண்ணுன டிக்கெட்டு தங்கச்சிய அள்ளிகினு போறாரு அம்புட்டுதான் கதை.

மாஸ் சின்ன வயசுல நிறைய காம்ளான், ஹார்லிக்ஸ் குடிச்சிருப்பார் போல, இல்லாட்டி எப்படி வில்லனோட அடியாட்கள் எல்லாம் 15 அடி பறந்து போய் விழமுடியும் ?

இந்த பைக் சேஸிங் MI-2 வோட கேவலமான காப்பி. வில்லன் சுட்டதும் மாஸ் போட்டிருக்கும் ஹெல்மட் மட்டும் பறக்குறதும், அத்தனை பேர் துப்பாக்கியால் சுட்டாலும் மாஸ் மட்டும் பைக் ஓட்டிகிட்டே இருக்குறதுலயும் & படம் முழுக்க வர்ற logic காமெடியில், நாங்க சிரிச்சதுல அடுத்த நாள் பக்கத்து வீட்டுகார Blonde அக்கா You young men seems to had lots of fun and party அப்படின்னு சொல்லுற மாதிரி ஆகிடுச்சி.


அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது.

பட ஒப்பனிங் நல்லா இருக்கு. டாவ தேடிக்கிட்டு ஹீரோ கிளப்புறப்ப அவங்க மதர் குத்தாட்டம் போட்டு, வீச்சருவாள Backpack ல பார்கிங் பண்ணும்போது சகா சொல்லுற மேட்டர் நம்ம சிந்தனை மாதிரியே இருக்கு(நமக்கு இந்த மாதிரி நமக்கு ஒரு மதர் இர்ந்தா வாழ்க்கை எப்பவவோ ஜில்பான்ஸ்சோட ஜிலோன்னு இருந்திருக்குமேப்பா)

படத்தின் ஆரம்பம் நாற்கோன காதல் கதை போன்று தோன்றினாலும் ஒரு 40 நிமிடத்தில் இது மற்றும் ஒரு முக்கோன காதல் கதைதான் என்பதை பாத்திரங்களின் குணாதிசியங்களும், சில வசனங்களும், காட்சியமைப்புக்களையும் பார்த்தே கண்டுகொள்ளலாம். தமிழ் கலாச்சார சினிமாவும்(?) இன்னும் ஜோடிகள் ஸ்வாபிங் போன்ற அடுத்த கட்டத்தை நோக்கி செல்லவில்லை என்பது கூடுதல் பலம் :-)

படம் இடைவேளை வரும் போது யார் சூப்பு வாங்க போறாங்க என்பதும் தெரிந்து விடும். அப்புறம் வழக்கம் போல சூப்பு வாங்கும் கேரக்டர் எப்படி சூப்பு வாங்குறார் என்பது மீதி கதை. எங்கே அந்த மேனேஜரும், சூப்பு கேரக்டரின் சுற்றங்களும் சூப்பை மாத்த்கிடுவாங்களென்னு ஒரு நிமிசம் யோசிக்க வைக்கிறாங்க அவ்வளவே.

ஹீரோ கடைசியில் காதல் பற்றி பேசும் போது கொஞ்சம் தலைய சொரிய வைச்சாலும், இதே மாதிரி வந்த பூவே உனக்காக படத்துல விஜய் பண்ணுன அளவுக்கு இல்லைங்கிறதால எங்க சபைல மன்னிப்பு கொடுத்துட்டோம் :-)

Saturday, April 15, 2006

பொருள் தேடும் வாழ்க்கையில்...

பெங்களூரை விட்டு சிக்காகோ வந்து ஒரு வருடம் ஆகி விட்டது. பெங்களூர் டிராப்பிக்கில் புகையை நுகர்ந்து, அந்த ரசாயன கரியை முகத்தில் பூசிக்கொண்டும் அலுவலகத்துக்கு செல்லும் பிரச்சனை இல்லை. காதலியின் அருகாமையை நினைவுபடுவதை போன்ற வசந்தகாலத்தின் இளமை அழகு, ரம்மியமான குளிர். தூசி, புகையில்லை. அறையின் ஜன்னலின் இருந்து வெளியே பார்த்தால் மிக எழிலாக, நாள் முழுவதும் பார்த்துகொண்டே இருந்தாலும் அலுக்காத மரம் செடிகள், அதனூடே தத்தி தத்தி நடை பழகும் வாத்துகூட்டம். நான் பெரிதும் மதிக்கும் பெர்சனல் ப்ரிடம், ஸ்பேஸ் இங்கு நிறைய இருக்கிறது. எல்லாம் நன்றாக தான் இருக்கிறது. ஆனால் மனதில் தான் ஏதோ வெறுமையான உணர்வு. மதுரையின் வேர்வை கசகசப்பில் இருந்த ஆனந்தம் இங்கு இல்லாதது போன்ற பிரமை. ஞாயிறு மதியம் தனியே கடந்த கால நினைவுகளுடன் நடை பழகும் லேக் ஷோர்க்கும் வந்து விட்டேன். காதினில் IPod வழங்கும் Kenny G & Brian Adams இசையை ரசிக்க முடியவில்லை

வாழ்க்கையே பொருள் தேடுவதற்கு தான் என்று முடிவு செய்த பிறகு, அந்த பொருளை திரைகடலோடி தேடும் மனிதர்களின் கூட்டத்தில் கலந்து விட்ட ஒரு சராசரி மனிதன் நான்.பெற்றோர்கள், நண்பர்கள் எங்கோ பல ஆயிரம் மைல் தூரத்தில் இருக்க நாம் மட்டும் இங்கு வந்து சேர நேர்ந்தது எதன் பொருட்டு ? நம்மிடம் மட்டும் நிறைய பணம் (நிறைய என்பதன் இலக்கு மாறிக் கொண்டே இருப்பதால் தான் பிரச்சனை என்று நினைக்கிறேன்) இருந்திருந்தால் இங்கு வந்திருக்க நேர்ந்திருக்காதே என்ற எண்ணமும் சில நேரங்களில் தோன்றும்.

நிறைய சம்பாதித்து விட்டு சீக்கிரமாக இங்கிருந்து சென்று விட வேண்டும். இது நமக்கான தேசம் அல்ல என்றும் நினைப்பேன். இப்படியே புலம்பிக் கொண்டு பல வருடங்களாக இங்கேயே இருக்கும் சில நண்பர்களின் முகங்களும் அப்பொழுது ஞாபகத்திற்கு வரும்.அதில் எனது திருமுகம் சேர்ந்து விடுமோ என்று சில சமயம் அச்சம் கொள்கிறேன். நாம் அப்படி இருந்து விடக் கூடாது என்றும் நினைத்துக் கொள்வேன்.

கல்லூரி முடித்து விட்டு வேலை தேடும் படலத்தில் இருந்த நேரத்தில் ஒரு 5000 ரூபாய் கிடைத்தால் போதும் என்று தோன்றியது. பிறகு 20000 சம்பளம் வேண்டும் என்று மனம் ஆசைப்பட்டது. 65000 ரூபாய் கிடைத்த பொழுதும், அடுத்த இலக்காக 120000 வேண்டும் என்று தோன்றியது. சம்பளம் அதற்கு மேலும் பெருகிய பொழுதும் தேவைகள் மட்டும் குறையவே இல்லை. போதும் என்ற எண்ணம் மனதிற்கு தோன்றுவதே கிடையாது. இங்கு வந்த பிறகு, நான் வேலை தேடியலைந்த காலகட்டத்தில் கனவிலும் நினைத்து பார்க்காத மாத சம்பளத்தில் இந்தியாவில் வேலை கிடைத்தும் அடுத்த இலக்குகளை நோக்கி மனம் சென்று கொண்டே இருக்கிறது.

பணமும் நிறைய வேண்டும். அதுவும் சீக்கிரமாக பெற வேண்டும் ? என்ன செய்யலாம் ? ஏறு விமானத்தில், இறங்கிடு அமெரிக்க திரு நாட்டில் என்ற தத்துவம் நிலைக்க பெற்ற மென்பொருள் துறையில் நான் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன ? இதோ இங்கே வந்து சேர்ந்து விட்டேன். ஆனால் பொருள் மட்டும் தான் வாழ்க்கையா ? எனக்கு புரியவில்லை.

EAI சம்பந்தமான வேலையில் இருப்பதால் இரவில் நம்மதியாக தூங்க கூட முடிவதில்லை. எந்த பிரச்சனை என்றாலும் உடனே கைகாட்டுவது ESB, EAI Bus ல எதோ Messaging , Pub/ Sub பிரச்சனை என்றுதான்.. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்று சொல்லுவது போல ஆகி விட்டது என்னுடைய கதை.சில வாரங்களுக்கு முன் நண்பர்களுடன் லாங் டிரைவ் சென்று, பழங்கதை பேசி சந்தோசமாக வேளையில் கடையில் இருந்து சர்வர்ல ஞாபகம் உடைந்துவிட்டது என்று பீப், மற்றும் தொலைபேசி அழைப்பு. போட்ட திட்டம் எல்லாம் அம்பேல். நண்பர்களிடம் வசவு வேறு.வாழ்க்கையா இது ?

காலேஜில் இருந்த போது ராக்கோழியாக இருக்க ஆரம்பித்து, பழகிய இந்த பழக்கம் வேலைக்கு சென்ற காலகட்டத்தில் அதிகம் ஆகியது. எனது நெருங்கிய கூட்டாளிகளே என்னுடன் ஒரு டீம் ஆக இருக்கும்போது வேலை செய்வதோ, நேரம் போவதோ தெரியாது.எனென்றால் எனக்கு நண்பர்களை தவிர்த்து தனிபட்ட வாழ்க்கை என்று ஒன்றும் கிடையாது. அல்லது கிடைத்தவைகளை கண்டுகொள்ள எனக்கு தெரியவில்லை. இதற்காக நான் வருத்தபட்டது கிடையாது.

பெங்களூரில் 10 மணி வரைக்கும் நன்றாக தூங்கி, 11 மணிக்ககுள் அலுவலக கான்டீன் சென்று ஒரு ஹெவியான காலை உணவு முடித்து விட்டு, ஒரு ஜூஸ்சை கையில் பிடித்துகொண்டு டெஸ்க்ல போய் லேப்டாப் திறந்து அமர்ந்தால் நாள் ஆரம்பிக்கும். வந்த மெயில்களுக்கு பொறுப்பான பதில் அனுப்பிவிட்டு, பக்கத்து டெஸ்க்ல இருந்து கொண்டு IM செய்ய பிடிக்காமல் எனது AP, UP நண்பர்களிடம் சென்று அவனது முந்தைய நாள் முன்னிரவு பெண்களூர் கதையை சிறிது நேரம் கேட்டுவிட்டு, லேப்டாப்ல தலைய விட்டா சாயந்தரம் ஒரு 5.30 மணிக்கு ஒரு பெல் அடிக்கும். கேன்டீன்ல போய் 2 சிக்கன் சான்ட்விச் ஒரு ஜூஸ். இன்னுமொரு ஜூஸ்சை கையில் எந்திகொண்டு கீழே இருக்கும் அலுவகல பார்க்குக்கு சென்றால் அங்கு எனது கூட்டாளிகள் ஆஜர். அங்கு வைத்து அலுவகத்தில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இது என்பது போன்ற சீரியஸ் கருத்தரங்குகள். புகை விடும் நண்பர்கள் சாக்கில் அலுவலக எதிரில் உள்ள டீக்கடையில் அமர்ந்து யார் யாருடன் செல்கிறார்கள் இல்லை, யார் யாருடைய ஸ்கூட்டிக்கு பின்னால் செல்கிறார்கள் என்ற டேட்டா அனலிடிக்ஸ். சபை கலைந்து மறுபடியும் லேப்டாப்ல தலைய விட்டா ஒரு 11 மணி போல அவுட் டூ டின்னர் ந்னு IM ஸ்டேட்டஸ் வச்சிட்டு கேன்டீன்ல போய் ஒரு பாத்தி கட்டி விவசாயம் பாத்துட்டு, காலை ஒரு 4.30 மணி வரைக்கும் வேலை. வாரக்கடைசி ஆனால் மதுரை பயணம், 2 நாள் அம்மாவின் அருகாமை, கோவில்கள், சிறிது ஓய்வு, சொந்த ஊரிலே இருக்கும் தோழர்களுடன் அரட்டை, என்று சுகமாக இருந்த வாழ்க்கை ஏனோ ஞாபகத்தில் வந்து போகிறது.


தமிழ் புத்தாண்டு, விஷு கனி போன்ற நன்னாளில் வீட்டுக்கு தொலை பேசினால், அம்மா இங்க நீ இல்லாம எனக்கு ஒரு மாதிரி இருக்குடா.. உம் முகத்தை பார்த்து நாள் ஆச்சிடா.. ஒரு படமாவது அனுப்புனா என்னடா ?. அப்படி என்னதான் வேலையோ எனக்கு தெரியல ? நீ எப்படிடா அங்க தனியா சமாளிக்கிற ? உனக்கு ஒன்னும் கஷ்டமா இல்லயா என்று கவலையுடன் பேசும் பொழுது கண்ணீர் எட்டி பார்க்கத் தான் செய்கிறது ? . 1 மணி நேரம் பேசினால் தான் மனம் ஆறுதல் அடைகிறது. அதே நினைவில் சிறிது நேரம் ஆழ்ந்து விட்டு எழுந்தால் மனதை ஏதோ பாரம் அழுத்துகிறது. ஆனாலும் பொருளை தேடி ஓடும் வாழ்க்கை ஓட்டத்தில் இதனை எல்லாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை. அம்மாவின் முகம் நினைவில் வந்து போகிறது. எப்பொழுது இந்தியாவுக்கு திரும்பிச்செல்வேன் ? என்ற எனது அடிமனதின் கேள்விக்கு பதில் தேடி களைத்து போய்விட்டேன்..

நாட்கள் மெதுவாக நகருவது போன்ற பிரமை. சில சமயம் வாழ்வின் பொருள் என்ன ? வாழ்க்கையில் எதை நோக்கி ஓடுகிறேன் ? எவ்வளவு தூரம் ஓடியிருக்கிறேன் ? இன்னும் எவ்வளவு தூரம் ?

ஒவ்வொருவர் வாழ்விலும் பொருள் குறித்து பல்வேறு தேவைகள். அதற்காக சில சமரசங்களை செய்ய கொள்ள வேண்டிய நிலை. சுகங்களை இழக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

இந்தியா பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெற்றிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காதே என்ற எண்ணம் தோன்றத் தான் செய்கிறது.

ம்.ம்.ம் என்ன செய்ய ?

Thursday, April 13, 2006

குல தெய்வமே






பூவே என் மனம் என்னும்
பூட்டை உடைக்கிறாய்..

உன் சுவாச பாதையில்
என் இதயம் இழக்கிறேன்..

உன் பெயரை சொல்லி
அதில் போதை கொள்கிறேன்..

உன் விழியசைவில் 100
காவியம் தோன்றிடுதே..

என் நினைவு தோன்றினால்
ஒரு துளி நீரை சிந்திடு..

ஒரு பார்வையால் நிரப்பிவிடு
துளி நேசத்தில் என்னை சேந்திடு
குல தெய்வமே என் குறை தீர்த்திடு..

ஒரு வார்த்தை சொல்லு.
நல்வார்த்தை சொன்னால்
'கொடி'யோடு வாழ்வேன்..


***


உன்னைக் காதலித்துக்
கொண்டிருக்கும்போது
நான் இறந்துபோவேனா
என்பது தெரியாது.

ஆனால்

நான் இறக்கும்போதும்
உன்னைக் காதலித்துக்
கொண்டிருப்பேன்
என்பது மட்டும் தெரியும்.


***



நான் வழிபட இந்த உலகத்தில்
எத்தனையோ கடவுள்கள்
இருக்கிறார்கள்..

நான் பின்பற்ற இந்த உலகத்தில்
எத்தனையோ மதங்கள்
இருக்கின்றன..

ஆனால்,

நான் காதலிக்க
இந்த உலகத்தில்
நீ மட்டும்தான் இருக்கிறாய்!


***



நீ எப்போதும்
தலையைக் குனிந்தே
வெட்கப்படுவதால்
உன் மதிப்புமிக்க
வெட்கத்தையெல்லாம்
இந்த பூமிதாய் மட்டுமே
தரிசிக்கிறாள்!

ஒரேயரு முறை
கொஞ்சம் உன் தலையை நிமிர்த்தி
வெட்கப்படேன்...





வெகுநாட்களாய்
உன் வெட்கத்தைத் தரிசிக்க
வானத்தில் தேவர்கள் காத்திருக்கிறார்கள்

***

என் தமிழ்ப் புத்தாண்டு எண்ணங்கள்

அனைவருக்கும் என் 'விய' தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த நாள் அன்னைக்கு எங்க வீட்டுல விஷு கணி பார்ப்பது அப்படின்னு ஒண்ணு கொண்டாடுவாங்க. இது எங்க வீட்டுல எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து நடக்கும் நிகழ்வு.

புதுவருடத்தின் முதல்நாளே சாமி படம், தேங்காய், வெத்தலை பாக்கு, முக்கனிகள், நவதானியங்கள் மற்றும் நகைகளும் பணமும் ஒரு பெரிய வெள்ளி தாம்பாளத்துல வச்சி ஒரு பெரிய நிலை கண்ணாடி முன்னால வைப்பார்கள்.



அதி காலையில் கண்களை மூடிக்கிட்டுதான் எழுப்புவாங்க நேராக கனி காணுதல் அந்த ஆண்டு முழுவதும் வளமையை கொடுக்கும்ன்னு அம்மா சொல்லுவாங்க. நல்ல படிப்பு, புத்தி, குணம் எல்லாம் வரணும்ன்னு சாமிகிட்ட வேண்டிகிட சொல்லுவாங்க.அப்புறம் குளிச்சிட்டு கோயிலுக்கு போறது எல்லாம் உண்டு.எனக்கு இந்த வருசம்தான் இப்படி விஷுகனி பார்க்காத தமிழ் புத்தாண்டு வருசம்.

இந்த சிறப்பு நாளன்று எல்லாருக்கும் வரும் நாட்கள் , வேண்டிய வரம் தரும் நாட்களாக அமைய சாமிகிட்ட வேண்டிகிறேன்.

Wednesday, April 12, 2006

St. Patricks Day

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்னு சூப்பரு மாதிரி டயலாக் எல்லாம் பேச மாட்டேன். நமக்கு கொஞ்சம் இல்ல ரொம்பவே சோம்பேறித்தனம் ஆகிபோச்சிங்க.. இந்த St. Patricks Day வந்து போய் இப்ப ஒரு 2 மாசம் ஆகிபோச்சி..








சரிப்பு அதுதான் எல்லாத்துக்கும் தெரியுமே இப்ப என்ன அதுகென்னு கேக்குறவங்களுக்கு. ஹி ஹி அது எனக்கும் தெரியுமுங்க.. ஆனா பாருங்க இப்பத்தான் அப்ப போட்டோ புடிச்சது எல்லாத்தையும் என்னோட லாப்டாப்க்கு மாத்துனேன்.. ஆர்வம் எல்லாம் ஒண்ணூம் இல்லைங்க.. அங்கன இடம் இல்லாம இருக்கு.. அதுவும் போக வசந்தம் வேற வந்துடுச்சி... மரம், செடி கொடி எல்லாம் இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா துளிர்க்க ஆரம்பிச்சி இருக்கு.. எங்க கடைல அத பாக்குறதுக்கு கொஞ்சம் நல்லா இருந்தது.. அதுவும் போக எங்க அம்மா வேற எதாவது போட்டோ இருந்தா அனுப்புடா. பாத்து நாள் ஆவுதுன்னு சொல்லி கிட்டே இருக்குறாங்க...என்ன பண்ணுறது. இங்க வந்ததுல இருந்து இப்படி படத்துலயும் போன்லயும் தான் வாழ்க்கை ஓடுது.. அவங்களே நேரா வர்ரதுக்குள்ள எதாவது படம் அனுப்பனும்.. இப்படி தலைக்கு மேல வேல இருக்குறதுனால இப்பத்தான் அந்த டிஜிகேம் பக்கம் போனேன்..




இதுகூட சிக்காகோ ஆட்டோ ஷோ படம் வேற கொஞ்சம் இருக்கு..
பொறுங்க எல்லாத்தையும் ஒரே தடவ போட மாட்டேன்.. அப்புறம் எப்படி பதிவு கணக்கு காட்டுறது (ஹி ஹி)





இந்த வெள்ளை கட்டடம் இருக்கே அதுதான் அமெரிக்காவுல இருக்குற பழமையான கட்டடத்துல ஒண்ணாம்..அப்படின்னு நான் எங்க கிராமத்துல இருந்து மொதல்தடவையா மஞ்ச பைய தூக்கிகிட்டு வந்தப்ப எங்க்கூட்டாளி ஒருத்தன் சொன்னான்.(அவனுக்கு எவன் சொன்னானோ).. அத கேட்டதுல இருந்து நான் ஒரு 5௬ பேருக்கு சொல்லிட்டேன். பின்ன நான் வந்ததுக்கு அப்புறம் அத்தன பேரு வந்துடாங்க.. இப்ப நானும் ஒரு சீனியர்தான்..இப்ப நீங்களும் ஒரு நாலு பேருக்கு சொல்லி என்னைய சீனியர் வளையத்துல கொஞ்சம் மேல தள்ளுங்க :-)







இந்த பெரிய்ய காவா இருக்கே அதுதான் மிச்சிகன் லேக்காம்.. இந்த தினத்துக்காகவே இத பச்சை கலரா மாத்தி இருக்குறாங்க..இதுதான் நமக்கு வீக் என்டு டாப்பு.. கவலைய மறக்கணும்ன்னா போதும். இங்கன வந்து பட்டரைய போட்டுவேன்.. சும்மா கடல் மாதிரி இருக்குற தண்ணியையும் ஆகாசத்தையும் பாத்துகிட்டே இருக்கலாம். குளிர் காலத்துலயே இப்படித்தான் பண்ணுவேன்.. இப்ப வசந்த காலம் வேற வந்துடுச்சி. அய்யா ராம்ஸ் இங்கதான் உமக்கு சிலை வைக்கலாம்ன்னு இருக்கேன். லொகேசன் ஒகேவா. பாத்து சொல்லு.. இதுக்காக நேர்ல பாக்க எல்லாம் டிக்கெட்டு குடுக்குற அளவுக்கு வசதி இல்ல :-(





இந்த நாள்ல காலைல நடக்குற பரேட் ரொம்ப நல்லா இருந்தது.. எல்லாம் எங்க சங்க கலரான பச்சை கலர்ல டிரஸ் பண்ணிகிட்டு ஒரே அலும்புதான்.. நல்லா இருந்தது.. இந்த நாள் ஐரிஷ்காரவங்களோடதாம். அத பத்தி அங்க இருக்குற ஒரு அம்மா சொன்னங்க.. (சாயந்தரம் நெட் ல பாத்த்கு இன்னும் தெரிஞ்சிகிட்டேன்). அவங்களுக்கு ஒரே சந்தோசம்.. பின்ன அவங்க விழாவ பாக்க ஒருத்தன் காலைலயே போனா.. இப்படியா நாள் அன்னைக்கு நல்லா போச்சி

Tuesday, April 11, 2006

வ.வா அறிக்கை வாசிப்பு

இப்படி பதிவு1 , பதிவு2 போட்டு என்னோட நிலமைய தெளிவா இருக்கும் போதே சொல்லி இருக்கேன்.

அதுக்கு பிறகும் சில புல்லுருவிகள் வ.வா.சங்கம் உடைந்துவிட்டது. பார்த்திபன் தலமையில் 3 வது அணி, என்று சில உடகங்களில் (அவர்களுக்கு சொந்தமான) மறுபடியும், மறுபடியும் பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதால் பல கடமைகளுக்கு இடையிலும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த? சிற்றுரையை ஆற்றும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளேன்.

***

கழக கண்மணிகளே,

வீட்டுக்கு போனதில் இருந்து வுட்டுல எதுத்த வீட்டு சுப்பரமணிய கானோம், பீர்க்கை வளர்ப்பது எப்படி, 2 in 1 ல என்ன பாட்டு கேட்டேன், கேசட் பதிவது எப்படி என்பது போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளை எழுதும் பதிவுலகின் மெகா ஸ்டார், எதடா எழுதுவது என்று யோசிக்கும் பதிவாளர்களுக்கு, இப்படியும் பதிவு போடலாம் என்று தனது பதிவால் உணர்த்தும் ஏழைகளின் ஏந்தலே...வாலிப சமுதாயத்தின் வங்காள விரிகுடா கைப்பு அவர்களே, குமர காவியம் படைத்துக்கொண்டிருக்கும், எனது அன்பு தோழன் கோவை கோபுரம் சிபி அவர்களே, சங்கத்தின் போர் வாளாக செயல்படும் அன்பில் அண்ணன் தேவ் அவர்களே, பொள்ளாச்சி / ஈரோடு தந்த மண்ணின் மைந்தன் விவசாயி இளா அவர்களே, இந்த பூவுலகிலே பிறந்த பயனை அடையும் வகையில் உழைக்கும் ஜொள்ளு பாண்டி அவர்களே, மகளிர் அணி தலைவி கீதா மேடம் அவர்களே, சங்கத்தின் செயல்புயல் பொன்ஸ் அவர்களே, இன்னும் கோடானுகோடி தொண்டர்களே, அனைவருக்கும் வணக்கம்.

கடந்த சில தினங்க்களாக சில உடகங்களில் வ.வா. சங்கம் உடைந்து விட்டதாக வரும் வதந்திகளை நம்பவேண்டாம் என்று முதலாவதாக கேட்டுகொள்ள விழைகிறேன். இந்த சில நாட்களில் என்னிந்த பரபரப்பு என்பதைப் பற்றிய ஆச்சர்ய கடலில் நான் மூழ்கி இருக்கிறேன்..
இதற்க்கு காரணம் இல்லாமல் இல்லை.. எங்கே தல போட்டியிடும் இடங்களில் எல்லாம் அமோகமாக ஆப்பு வாங்கி விடுவாரோ என்று மனதில் எழுந்த அச்சத்தாலும், கருத்து கனிப்பு முடிவுகள் சாதகமாக இல்லையே என்ற பயத்தாலும் இருக்கலாம். இதனால்தான் தங்களுக்கு ஆதரவாக நயன்தாரா பிரச்சாரம் செய்வதாக செய்தி பரப்புகிறார்கள். நீங்கள் ஒரு மலையாள பகவதியை வழிபட்டால், நாங்கள் உலகை தன் பொற்கரத்தால் காக்கும் ஏன்ஜலீனா அம்பாள், மாய சக்தி ஜெசிகா ஆல்பா ஆகியோரை அழைக்கவேண்டியது இருக்கும் என்று கூறிக்கொள்ள கடமைபட்டிருக்கிறேன்.

சங்கத்தின் மூத்த உறுப்பினர்களின் ஆதரவு இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்க முயலும் பார்த்திபன் அவர்களே, எங்கே முடிந்தால் அந்த ஆதரவு மெயில்களை காட்டவும்.. மகளிர்க்கு போதிய இடமளிக்க படவில்லை என்று அவதூறு பரப்புவர்களே நீங்கள் இது பற்றி மேலும் அறிய எங்க கூட்டாளி ஜொ.பாண்டியை அணுகவும்.

***

இந்த உண்மை நிலையை அறிந்து தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட்டு சட்டம் ஒழுங்கு பாதிக்காத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று மாநகர ஆணையாளர் சாட்டிலைட் பாண்டியன் கேட்டுகொண்டுள்ளார்.


***

யாருமே கேட்க மாட்டர்கள் என்பதால்

கேள்வி - பதில்


கே: இட்லி வடையைத் தாக்கியவர்கள் கைப்புள்ளயின் கைக் கூலிகளே என்ற வதந்தி குறிந்து.

ப: நீங்களே வதந்தி என்று சொல்லிவிட்டிர்கள். மேலும் என்னை போலவே கைப்பு அவர்களும் கடை வேலைகளில் சிக்கி அங்கங்கே பல ப்ராஜெக்ட் ஆப்புகளில் சிக்கி சின்னாப்பின்னமாகி கொண்டு இருப்பதால் வேறு யாருக்கும் இபோதைக்கு ஆப்பு வைக்கும் எண்ணம் இல்லை.

கே: தேவ் சங்க போர் வாளாக நியமிக்கப்பட்டு இருப்பதை பற்றி ?

ப: கூட்டாளி கடைல வேலை அதிகம் இல்லாம ஜிலோன்னு இருப்பார் போல. அது அவரின் கைப்புவின் அரசியல் பிரவேச பதிவில் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

கே: பெண்களுக்கு சங்கத்தில் உரிய முக்கியத்துவம் இல்லை என்ற குற்றச்சாட்டு பற்றி ?

ப: பெண்கள் நாட்டின் கண்கள். இதை எங்க சங்க 2 வது வேட்பாளர் பட்டியலில் காணலாம்.

கே: கட்டதுரை எங்க ?

ப: அதையும் நீங்களே கண்டுபுடிங்க.

கே: பார்த்திபன் உங்க சங்கத்தில் இணைய போவது பற்றி.

ப: அது கொள்கை கூட்டணியாக இருந்தால் வரவேற்பேன்.

கே: அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?

ப: ஸ்பிரிங் பிரேக்ல கனடா போகணும். கடைல புதுசா 5 C1 சிஸ்டம் டிசைன் பண்ணனும். இத பத்தி பதிவு எழுதணும்.

Saturday, April 08, 2006

'குடி' மகன்

என்ன ஒரு 2 வாரம் இருக்கும்ன்னு நினைக்குறேன், நம்ம பதிவு பக்கம் எட்டிப்பாத்து..இந்த 2 வாரம் நிஜமாகவே கொஞ்சம் பிஸி. கடைல வேலை செய்ய சொல்லிட்டாங்க..(நீ இல்லாம நல்லாத்தான் இருந்திச்சி, மறுபடியும் வந்துட்டயா). வேற வழி இல்ல :-( . படியளப்பவனே பகவான். முதல்ல இத எல்லாம் ஒரு பதிவா போடணுமான்னு யோசிச்சேன். சரி எதாவது எழுதுனா nostalgia ல இருந்து கவனத்தை மாத்துற மாதிரி இருக்கும்ன்னுதான் எழுதுறேன்.


*******

இது நான் காலேஜ் கடைசி வருசம் படிக்கும்போது நடந்தது. என்னோட ஜூனியர் ஆக்சிடென்ட்ல மாட்டுனது எங்க காலேஜ்ல எல்லாருக்கும் ரொம்ப ஷாக். என்னா பெர்சனலா பாத்தா அவன் தான் அடுத்த வருசம் எங்க காலேஜ் சேர்மன் ஆகவேண்டியது. எங்க டிபாட்மென்ட் வேற. அதுனால அன்னைக்கு மதியம் காலேஜ் போகல. எனக்கு மூட் வேற சரிய இல்ல. சரின்னு நானும் என்னோட பங்கும் ஒரு படத்துக்கு போய்ட்டு வந்தோம். சாயந்தரம் திரும்பி வந்தா எல்லாரும் அதையே பேசிக்கிட்டு இந்தாங்க. சரின்னு என்னோட இன்னோரு கூட்டாளி ரூம்க்கு போனோம். அவன் பேரு குட்டி. (எல்லாம் பட்டபேரு தான். நிஜ பேர சொன்னா என்ன கொன்னுடுவான்)

என்னைக்கும் இல்லாம அவன் கொஞ்சம் சோகமா இருந்தான். அதுக்கு ஒரு காரணம் இருக்கு.(அத பத்தி நான் இங்க சொல்ல மாட்டேன்.) அவனும் எங்க ஆஸ்தான தோஸ்து மாலிபுவும் ஏற்கனவே பயங்கரமான ஆலோசனைல இருந்தாங்க. குட்டிக்கு எம் மேல சரியான மரியாதை இருக்கு. நான் சொன்ன கேட்டுகுவான். சரின்னு அவங்க ஆலோசனைய கொஞ்ச நேரம் நிப்பாட்டிட்டு நானும் அவனும் ஒரு விசயமா கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தேன்.

திடிர்ன்னு என்ன நினைச்சான்னு தெரியல, கார்த்தி நீ இன்னைக்கு குடிச்சே ஆகணும்ன்னு சொல்லிட்டான். சரி சும்மா வழக்கம் போல உளற்ரான்னு சும்மா இருந்தேன். அவன் கூட மைசூர்சான்டலும், மாமாவும் (எல்லாம் பட்டபேருதான்) சேந்துகிட்டானுக. சண்முகம் ஒருத்தந்தான் எம்மேல நம்பிகையா இருந்தான், நான் குடிக்கமாட்டேன்ன்னு. வழக்கமா எனக்கு சப்போட்டா இருக்குற மெஸ் சீனி அண்ணன் கூட இன்னைக்கி சப்போர்ட் பண்ணல..

அடுத்த 1 மணி நேர சண்டைல நான் ரூம்ல இருக்குற எல்லா தண்ணிலயும் நல்லா குளிச்சேன்.அன்னைக்கு குடிக்கலைன்னு எம்மேல குட்டிக்கு கொஞ்சம் கோவம்தான். சும்மா ஒரு வாரத்துக்கு சொல்லிகிட்டே இருந்தான்.

அன்னைக்கு நான் ஏன் குடிக்கலைன்னு எனக்கு சத்தியமா தெரியாது.ஆனா ஒரு கட்டத்துல சரி போனா போகுது ஒரு 5 ml வது குடிச்சா என்னன்னு எனக்கு ஒரு கட்டத்துல தோணுனது உண்மைதான்.

ஆனா நான் எதுக்கு குடிக்கமாட்டேன்னு சண்முகம் ஒரு காரணம் சொன்னான். குட்டி எதுக்கு நான் கண்டிப்பா குடிக்கணும்ன்னு ஒரு காரணம் சொன்னான். என்னை பொறுத்த வரைக்கும் எது சரி / தப்புன்னு இந்த நிமிசம் வரைக்கும் தெரியல.


*******




போன வாரம் எங்க VP கூட ஒரு பார்ட்டி இருந்தது. எங்க VP ரொம்ப நாளா 2 பேரும் சேந்து ஒரு நாள் அவங்க ஊர்ல காய்ச்சி விக்கிற இடத்துக்கு போகலாம், அது ரொம்ப நல்லா இருக்கும்ன்னு சொல்லிகிட்டே இருந்தாரு, நாந்தான் இப்ப அப்ப ந்னு இழுத்தடிச்சிகிட்டே இருந்தேன். பார்ட்டினா ஒண்ணும் நிறைய பேருல்லாம் இல்ல. நான், VP அப்புறம் ஒரு 5 - 6 SDM அவ்வளவுதான். எங்க VP நான் என்னமோ கடமையா வேலை செய்யிர மாதிரி மத்த SDM கிட்ட எல்லாம் அளந்து விட்டுக்கிட்டு இருந்தாரு. எல்லாரும் வாய்ல ஈ போறதுகூட தெரியாம கேட்டுக்கிட்டு இருந்தோம்.

முதல்ல ஆர்டர் பண்ணும் போது எனக்கு உடம்பு சரியில்ல ஒண்ணும் வேணாம்ன்னு சொன்னேன்.ஆனா சாப்பாட்டுல ரொம்ப decent ட்டா பாத்தி கட்டிக்கிட்டு இருந்தேன் எவனும் ஒண்ணும் சொல்லல. அப்பாலிக்கா எல்லாரும் ஜோதில இருக்கும் போது ஆட்டத்துல இஸ்த்துவிட்டுடாங்க.சரி ரொம்ப பண்ணுனா VP டென்சன் ஆகிட்டான்னு நானும் சரின்னு சொல்லிடேன். ஆட்டத்துல குதிச்சி Tequila (100% agave) 4 straight ஷாட் அடிச்சேன்.

அதுக்கு அப்புறம் ஒரு அரைமணி நேரத்துல என்ன நடந்ததுன்னு தெரியல. அடுத்த நாளும் ஒரு மாதிரியாதான் இருந்திச்சி. நல்ல நேரம் ஊர்ல பத்திரமா கொண்டுவந்து விட்டுடாங்க.

காரணம் ஒண்ணும் பெருசா இல்லங்க. நமக்கு கடைல ஒரு சீட்ட விட்டு இன்னும் ஒரு சீட்டுக்கு மாத்திட்டாங்க.


*******

என்ன இப்படி சீட்டு மாறும்போது நம்மளயும் ஒரு மனுசனா மதிச்சி, கார்த்தி நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்ப... நம்ம சாமிய கும்புட்டுக..எங்க போறதுன்னாலும் தென்னாடுடைய சிவனே போற்றி ந்னு சொல்லு.. அந்த சாமி உன்னைய பாத்துக்கும்., அப்படின்னு சொல்லுற அம்மா இப்ப வாழ்த்து சொல்ல பக்கத்துல இல்லைங்கிற வெறுமையும்

எவ்வளவு சொதப்புனாலும், கார்த்தி நீ இங்க இருக்கவேண்டியவனே இல்லடா.. நீ பாக்குற வேலைக்கு நீ கலக்க வேண்டிய இடமே வேறன்னு சந்தோஷம், துக்கம், நம்ம வாழ்கைல எல்லாம இருந்த மாமா, பங்கு, கூட்டாளிக கொண்டாட இப்ப பக்கத்துல இல்லைங்கறது, எல்லாத்தையும் நினைச்சா கண்ணுல தண்ணிதான் வருது.